இன்வாய்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 6,355 
 

இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே.

காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை போய்விட்டு வந்து விடலாம் என்கிற நினைவு தாங்கி நேற்று இரவு தூங்கிப்போனது தான். ஆனால் காலையில் எழும்போது வழக்கமான சோம்பலும் மிதமிஞ்சிப்போன மன முறுகலும் கைகோர்த்துக் கொள்ள எழுந்திரிக்க 7.15 ஆகிப்போகிறது. வயது தான் காரணம் போலும், இதற்கெல்லாமுமாய் சங்கரவேல் சார் வீட்டிற்குபோய் போய் வந்ததினத்தில் இப்படியெல்லாம் இருந்தி ருக்கவில்லை, இவன், முத்து, மணி மற்றும் நண்பர்கள் இருவர் என ஒரு பணி நிமித்தமாய் சென்றிருந்தார்கள்.

இரவு எட்டுமணிஇருக்கலாம்இவர்கள்அனைவரும் திருநெல்வேலி பஸ் டாண்டிற்குசென்றுஇறங்குகிற போது/இவனுக்கானால்ந ல்ல தூக்கக்கலக்கம். நேற்றிரவு லேட்டாகத் தூங்கியது.இன்று இரவு இரண்டுமணியாகிப்போனது தூங்குவதற்கு பார்த்துக்கொண்டிருந்த டீ வியில் மனம் அள்ளுகிற நல்ல பாடல் களாய் அமைந்து போக திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டி ருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சரி போதும் படுக்கலாம் என நினைக்கையில் மணியைப்பார்க்கிறான், இரண்டெனச் சொல்லிச் செல்கிறது கடிகாரம். அந்த பாத்திப்பு இப்போது திருநெல்வேலி பஸ்டாண்டில்/

இவன் தான் இப்படி என நினைத்தால் மற்ற நால்வரில் இரண்டு பேர் இப்படி த்தான் இருந்தார்கள்.கேட்டதில் அவரவர்கள் ஒரு கதை சொன்னார்கள்.சரி போய் விட்டுப்போகிறது,டீ சாப்பிட்டால் கலைந் து போகும் தூக்கம் என்கிற நினைப்புடனும்,மற்றவர்களை டீ சொல் லச் சொல்லி விட்டு சங்கரவேல் சாரு க்கு போன் பண்ணி விட்டு வந்தான்.அப்படியே வாருங்கள் நான் ரொம்ப முக்கிய வேலையாய் இருக்கிறேன் எனச்சொல்லி வீட்டின் முகவரியைச் சொன்னார். ரயில்வே லைன் தாண்டி ஒன்று அல்லது ஒண்ணரை கிலோ மீட்டர் தூரமாவது நடந்திருப்பார்கள்.

ஒருவர் பின்னால் ஒருவராகத்தான் சென்று கொண்டிருந்தார் கள்.மணிதான்முன்னால்சென்றான்,கருப்புக்கலர்பேண்ட்வெள்ளைக் கலர் சட்டைஅனிய ஆவனுக்கு இன்னும் பிடித்திருக்கிறது போலும். நன்றாகவே இருந்தான், கிங்காங் டெய்லரிடமே இன்னும் துணிகள் தைப்பதாகச் சொல்கிறான், அதுவே எனக்கு பொருந்தி ப் போகிறது எனவுமாய் சொன்னான்.

ஆனால் முத்து ரெடிமேட் பேண்ட் சர்ட்டே எனக்கு பொருத்தமாய் இருக் கிறது என்றான்,அவன் அது தவிர்த்து வேறெதுவும் அணிந்து இவன் பார்த்ததில்லை.இவன் இரண்டும் கலந்து வைத்திருந் தான். ஊடு,ஊடாய் டீசர்ட்டுக ள் அணிந்து கொள்வான் யார் மனதும் புண்படாதவாறும் யார் கண்ணையும் உறுத்தாதவாறுமாய்

மற்ற நணபர்களின் உடை கையிருப்புபற்றி எந்தத்தகவலும் இவனி டம் இல்லைஎன்கிறபோதும் அவர்கள் உடுத்து உடை இவனை கவர்ந்திருந்திருக்கிறது எப்போதுமே.எந்தக்கலர் என்றா லும் பளிச்சென்கிறதாய் இருக்கும் அவர்களின் தேர்ந்தெடுப்பு

ஜீன்ஸ்,டீசர்ட்இவனுக்குஏனோ சமீப காலங்களில் பிடித்துப் போன உடையாய்

ரயில்வே லைனில் தண்டவாளத்தைஒட்டிக் கொட்டப்பட்டிருந்த கற்கள் முண்டு முண்டாயும்,அடுக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது போலவுமாய்

மணி தான் ரொம்பவும் கால் வலிக்கிறது என கொஞ்சம் நின்று போகலாம் என்றான்,கையோடு கொண்டு போயிருந்த சேவை ஆளுக்கு கொஞ்சமாய் நின்று கொண்டிருந்த வேலையில் சாப்பிட்டார்கள்.

அப்பொழுதான் உருவாக ஆரம்பித்திருந்தபுது ஏரியா போலும் அது. ஆங்காங்கே வீடுகள் முளைத்தும் உருவாகியும் கொண்டிருந்தன. சிலவைகள்பாதிஉருதாங்கியும்,இன்னும்சிலவைபேஸ்மட்டத்தோடு மட்டுமாய் நின்று காட்சிப் பட்டவையாய்

முத்துதான் சொன்னான்,ஆள் நடமாட்டம் இன்னும் சரியா இல்லாத காட்டுப்பாதை இது.நம்ம இப்பிடி இங்க உக்காந்திருக் குறது சரியில்ல, அப்பிடியே பைய நடப்போம் என

அவன் சொன்னால் கேட்டு விட வேண்டும், சரியான முன் கோபி அவன், பஸ்டாண்ட் டீக்கடையில் அவனது அருகாமையாய் நின்ற ஒருவன் யதேச்சையாய் உரசிவிட்டதற்கு அவனது சட்டையை எட்டிப் பிடித்து விட்டான், அப்புறம் இவர்களெல்லாம் சேர்ந்து சமாதானம் செய்ய வேண்டியதாகிப் போனது. வந்த இடத்தில் என்ன வேண்டிக் கிடக்கிறது கோபம்.இங்கே இவர்கள் அமர்ந்தி ருக்கிற இந்த வேளையில் கூட ஆளை கூட்டி வந்து விடலாம் கோப இலக்குக்கு உள்ளானவன். வந்த வேளை மறந்து இப்படி ஒன்றை தூக்கிசுமக்கிற மன அழுத்தம் கூடிவிட்ட பொழுதாய் என்ன கொடுமை இது

டீக் கடைக்காரர்தான் சப்தம் போட்டார்.தம்பிகளா ஆயிரம் இருந்தாலும் அவன் உள்ளூர்க்காரன் மதிப்பா டீயக்குடிச்சிட்டு இந்த யெடத்த காலி பண் ணீருங்க,ஆமாம்,,,என அவர் போட்ட சப்தத்தை ஒட்டி முத்துவை வம்படியாய் இழுத்துவந்தார்கள்.

இவர்கள்அனைவரும்வரும்பொழுதுசட்டை முறுக்குப் பட்டவன் யாருக்கோ போன் பண்ணிக் கொண்டிருந்தான்.

நடந்த ரசாபாசத்தை சங்கரவேல் சாரிடம் சொன்னபொழுது ”அட விடுங்கப் பா,இது ஒரு பெரிய விஷயம்ன்னு” எனச்சொல்லிவிட்டு அவர்தான் ரயில்வே லைன் பாதையையும் சொன்னார். இப் பக்கம் என்றால் யாரும் வம்புக்கு வர அஞ்சுவார்கள் எனவுமாய் சொன்னார்.

ஒன்னுக்கு இருப்பது போல இவனைகூட்டிகொண்டு போன நண்பன் ”விடு இவன் இப்படித்தான்,இதற்குத்தான் இவனிடம் நான் தேவைக்கு மட்டும் பேசி பழகிக்கொள்கிறேன்,அதிகமாய் வைத்துக் கொள்வதில்லை. இவனை சரி செய்யுங்கள் அல்லது இவன் நட்பை துறந்து விடுங்கள்,முதலில் ரொம்ப நேரமாய் இங்கு நின்று பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.போகிற வருகிற ஒன்றிரண்டு பேர்களும் சந்தேகமாய் பார்க்கிறார்கள்.முதலில் சங்கரவேல் சார் வீட்டைதேடிச்செல்வோம்,அப்புறமாய்பேசிக்கொள்வோம்பிறவற்றை. நாம் பேசிக் கொள்ள நேரமும்,காலமும் இல்லாமலா போய்விட்டது? வாருங்கள் எழுந்து”,,,, என கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு போனா ன்.

சங்கரவேல் சார் ஏதோ வேலையில் முனைப்பாகஇருந்தார். சின்ன தானவீடுதான்.கட்டியிருந்தவிதத்தில்அழகாகஇருந்தது.வழக்கமான வராண்டா,ஹால்,கிச்சன்,பாத்ரூம்தான்,ஆனால்கட்டியிருந்தவிதமும் வீட்டை அழகுபடுத்தி காண்பித்த விதமும் மிகவும் அழகாக வும்,பாந்தமாகவும்

”ஐந்து பேர்தானே ,இருங்கள் இரவு இங்கேயே, டிபனுக்குச்சொல்லி விடுகிறேன் எனஎங்களைஅமரவைத்து விட்டு சட்டையை மாட்டி கொண்டு சென்றார், சென்ற ஐந்து நிமிடத்தில் திரும்பியவர் மூன்றாம் வீட்டுப்பையனிடம் சொல்லியிருக்கிறேன்,இன்னும் அரை மணியில் வந்து விடும் டிபன்”,என பேச ஆரம்பித்தார்கள்.

ஆங்கில பேராசிரிரான அவர் தமிழ் வெகு அழகாய் பேசியது ஒரு இனிய முரணாகவே/ அப்பொழுதான் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஒரு இயக்க தன்னார்வத் தொண்டர்களாயும் பொறுப்பில் இருந்தவர் களாயுமாய்இருந்தவர்கள்அனைவருமாய்சந்தித்து பேசிக் கொண்ட நிகழ்வும் அது அமைந்தது எனச் சொல்லலாம்,அவருடன் பேசி முடித்து தூங்குகையில் இரவு மணி இரண்டாவது இருக்கலாம்,

மணி தூங்கினானா அல்லது எப்பொழுது காலை ஐந்தாகும் என காத்திருந் தானா எனத் தெரியவில்லை. இவர்கள் அனைவரையும் எழுப்பிக் கொண்டு பஸ்டாண்ட்வந்தான்.

இவர்கள் டீசாப்பிட்டு முடிக்கவும் சாத்தூர் செல்கிற பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது.ஏற்கனவே ஐந்து நிமிடம் தாமதம் நீங்கள் வேறு என தலையில் அடித்துக்கொள்கிறார் டிரைவர் கைகாட்டி நிற்கசொன்ன இவர்களைப் பார்த்து.

அப்புறமாய்அவர்களுடன் நின்றிருந்த சங்கரவேல் சாரைப் பார்த் ததும் பஸ்சை நிறுத்துவிட்டு இறங்கி வணக்கம் சொல்கிறவராய் ஆகிப் போகிறார். சங்கர வேல் சார் டிரைவரிடம் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை.பஸ் ஏறியதி லிருந்து சாத்தூர் சென்று இறங்கும் வரை இவர்கள் மேல் வைத்த மரியாதை யான நடத்தையை டிரைவர் விலக்கிக் கொள்ளவே இல்லை. சாத்தூரில் இறங்கியதும் இவர்களுக்கு டீ வாங்கிக்கொடுத்த டிரைவர் தனது படிப்பு,ஊர், வேலை,,,,,, ,,எனஎல்லாம் சொன்னார்.சங்கரவேல் சார்தான் எனது வழிகாட்டி அவர் எது சொன்னாலும்,செய்தாலும் சரியாக இருக்கும் என்றார்.

மெலிதாய் சுழியிட்ட நினைவுகளின் நடப்புகள் முடிந்து போன பத்து வருடங்களை சொல்லிச் சென்றது.

இவன் ஒரு திட்டம் வைத்திருந்தான் சமீப நாட்களாக/அதிகாலை நான்கு மணிக்குஎழுந்துகுளித்து விட்டு ஊருக்குள்ளாய் சுற்றி வருகிற திட்டம்தான் அது. அந்தத்திட்டத்தின் வரை படத்தில் ஏதாவது தவறோ அல்லது கரும் புள்ளியோ விழுந்துவிட்டால் இப்படியாய் பஸ்பிரயாணம் மேற்க் கொள்வதுண்டு.

வேறெங்குமாய் அதிக தூரமெல்லாம் இல்லை,அல்லதுஅவ்வாறு போய் வந்து பழக்கமுமில்லை.மதுரை வரை போவான் அல்லது திருமங்கலம்வரை சென்று ஏதாவது சென்று ஏதாவது ஒரு கடையில் டீ சாப்பிட்டு விட்டு திரும்பி வருவான்.

மதுரை, திருமங்கலம், விருதுநகர்,,,,,,,,,இதுதான் அவனது வரைபடம். மிஞ்சிப் போனால் என் நினைத்து இதுவரை திருநெல்வேலி போனதில்லை.அது பழைய நினைவு,பழைய நாட்காட்டி,பழைய சந்தோஷம் என்கிற அளவிலாய் முடிந்து போனது .

சங்கர வேல் சாரிடமும்,நண்பர்கள் முத்து,மணி மற்றவர்களிடமும் எப்பொழு தாவது பேசிக் கொள்வான்.சமீபமாக பழைய நண்பர் ஒருவரை பாலவனத்த தில் பார்க்க நேர்ந்தது.போஸ்ட் ஆபீஸில் வேலைபார்க்கிறேன் மாமா என்றா ர்,அவர் அப்படித்தான் இயக்கபழக்கத்தில் விட்ட வேர்களின் துளிகளில் தளைத்த ஒரு உறவு.

”ஒரு வாரமாய் இந்தப்பக்கம்தான் இன்ஸ்பெக்‌ஷன்,போய் வந்து கொண்டிருக்கிறேன்.பெரியவ காலேஜ் கடைசி வருஷமும், சின்ன வன் பத்தாம் வகுப் பும் படிக்கிறாங்க என்றவர் இவனது குடும்ப விஷயம் பற்றியுமாய் அறிந்து கொண்டு டீக்கடைக்கு கூட்டிப் போகிறார். அன்று குடித்த டீயின் சுவை இன்னும் அவரது நினைவு போலவே மனதில் ஒட்டிக்கிடப்பதாக என ஒரு ஒரு வாரம் கழித்து அதே பாலவனத்தில் அவரை பார்க்க நேர்ந்த போது சொல்கையில் சிரித்துக்கொண்டார். கூடவே ”மாமா எனக்கு ஒரு ஆசை,ஒரு ரெண்டு நாளு லீவு கீவு போடுங்க,ரெண்டு பேரும் அவுங்கவுங்க குடும்பம் புள்ளகுட்டிகளோட எங்கயாவது டூர் போயிட்டு வருவோம் மாமா” எனச் சொல்லவும் தவறவில்லை.இந்த அன்பு போதுமே,இனி சுற்றுலா எதற்கு என பேசியவனாய் நண்பரையும் அவரது பேச்சையும், கடந்த நாள் ஒரு மாலைப்பொழுதாய் இருந்தது.

வீட்டில் வந்து மனைவியிடம் சொன்னபோது இதெல்லாம் ஒரு மென்தீற்றலானநினைவுகளும்,நனவுகளுமேஎன்றார்.இது போலான நினைவுகளும் நனைவுகளும் தாங்கி மட்டுமல்ல, அதிகாலை யின்சுகந்தமும்,மென்உலகமும் பார்க்க நன்றாக இருந்திருக்கிறது. அதிகாலையின் பரபரப்பு காண்பித்து இயங்கும் டீக்கடைகள் அப்பொழுதான் திறக்க ஆரம்பித்திருக்கும் ஒன்றிரண்டு ஹோட்ட ல்கள்,தூங்கி வழியும் விடுதிகள் மென் தூக்கமும் அது அற்று மாய் காட்சிபடுகிற 24 மணி நேர ஆஸ்பத்திரிகள்,சௌகரியமாய் இயங் கும் பரபரப்பற்ற சாலை துரிதகதி காட்டிதன் வியாபாரத்திற்கு பிள்ளையார் சுழியிட்டுக்கொண்டிருக்கும் காய்கறிமார்க்கெட், தெரு வோர கோயில்கள் என கலந்து கட்டிய கலவையாய் தென்படுகி றவைகளை பார்க்கவாவது ஒரு தடவை போய் வரவேண்டும் அதிகாலைப் பயணம் என நினைக்கிறான்.

இப்போது நாகர்கோயிலில் இருக்கிற இவனது நண்பனின் செயல்களை இவன் பரிகசித்த காலங்கள் உண்டு.நண்பன் மதுரையில் இருக்கையில் மதுரையில் பஸ்ஸேறி மதுரை என டிக்கெட் எடுப்பா னாம்.கேட்டால் பக்கத்து ஊர்வரைப்போய் அப்படியே அதே பஸ்சில் திரும்பி வருகிற பாக்கியம் பெற்றவனாய் இருக்கிறேன் என்பான். நல்லது உன் ரசனையும் உள்மனதின் அதீதமும் இருக்கட்டும் அப்படியே பழுதாகிப் போகாமல் என அவனைப் பார்க்க நேர்கிற ஒரு ஒரு கணமும் சொல்வதுண்டு.

அதிகாலை முதல் பஸ்க்கிளம்புவதற்கு அரை மணி முன்பாய் பஸ்டாண்ட் சென்று டீக்கடையில் டீக்கிளாஸை பிடித்துக்கொண்டு பஸ்ஸின் டயர்கள், அதனுள்ளாய் பொதிந்திருக்கும் இரும்பு டிஸ்க்,டிஸ்கில் ஆரஞ்சுச் சுளை போல் காணப்படுகிற ஓட்டைகள், நட்டுகள் அதில் படிந்திருக்கிற அழுக்கு, எண்ணெய்ப்பிசுக்கு டயரின் வரிகளில் தங்கியிருக்கிற தூசு,என ஆரம்பித்து பஸ்சின் முன்புற,பின்புற படிக்கட்டுகள் டிரைவர் கண்டக்டர், அவர்களின் உடை,பஸ்ஸினுள்ளாய் அமர்ந்திருகிற ஆழகாலமான மனிதர்கள், பஸ்ஸின் ஜன்னல்கள்,பெயிண்ட் உதிர்ந்து உருவம் காட்டும் அதன் மென் இருப்பு எனது தாண்டி பேருந்தின் இருக்கைகள் அது போர்த்தியிருக்கும் கலர், பேருந்தினுள்ளாய் ஒட்டப்பட்டிருக்கும் மைக்கா,காவல் தூண்களாய் நிற்கிற சில்வர் கம்பிகள், கைபிடி,,,,,,, ,,

அனைத்தும் கடந்துமாய் பஸ்சினுள்ளும் பயணப்படுகிற உனது பார்வை பேருந்தின் வட்டக்கட்டைபிடிக்கிற டிரைவரி லிருந்து பின்புறமாய் கடைசியில் இருக்கிற கண்டக்டர் சீட்வரை யார்,யார் எங்கெங்கு அமர்ந்தால் நன்றாக இருக்கும்,இருக்கைகளின் கலருக்கு ஏற்றாற் போல் அதன்பக்கவாட்டுக்கம்பிகளுக்கு எந்த கலர் அடித்தால் நன்றாக இருக்கும் எனவும் லூசாக்கி தடதடக்கிற சில்வர்கம்பிகளின் அதிர்விற்கேற்ற படியோ அல்லது பேருந்தினுள் பாடுகிற பாடலுக்கேற்ற படியோ அதிர்கிற நட்டுக்களின் ஆட்டம் அதனடியிலாய் துள்ளிக்கிடக்கிற மணல் துகள்கள் என எல்லாவற்றிலுமாய் பதிந்து படர்கிற உனது பார்வையின் பதிவும் அதன் மீதான எண்ணப்படர்வும்உடன் கைகோர்த்துக் கொள்கிற காலை உன்னை ஆக்ரமித்திருக்கிறது என்பதாய் நினைக்கிறேன். என அவனிடம் திரும்பவு மாய் சொன்ன ஒரு தினத்தில் வாயேன் நீயும் ஒரு நாள் போய்விட்டு வரலாம் அப்படியே என்றான்.

அன்று அப்படிச் சொன்னவனைஆறு மாதங்கள்கழித்து அவனது திருமண ப் பத்திரிக்கையுடன் சந்திக்க முடிந்தது,நாகர்கோயில் பெண், திருமணம் முடித்து அநேகமாய் அங்கேயே போய்விடுவேன் மாமனாரின் கம்பெனியை கவனிக்க என்றான்.பத்திரிக்கை கொடு க்க வந்த அன்று மிக முக்கியமாய் அவன் சொல்ல்லி விட்டுப் போனது இன்னும் மனம் தங்கியிருப்பதாக.” என்ன செரமம் வந்தா லும் அதிகாலை பிரயாணத்த விட்டுறாத” என்றான்.இல்லை விட வில்லை என்று அவனுடனாய் பேச நேர்கிற நாட்களில் அல்லது சந்திக்கிற பொழுதுகளில் சொல்லுவான்இப்படிச்சொல்லுவான் இவன்.

இப்பொழுது கூட அவன் சொன்னபடிபடியா அல்லது தற்செயலா, இல்லை திட்டமிட்டா எனத்தெரியாமலேயே பஸ்டாண்டில் வந்து நிற்கிறான். எப்பொழுதும் டீக்குடிக்கிற அதே டீக்கடை, இவனைப் பார்த்ததும் சிரித்து விடுகிற டீக்கடைக்காரர். அதே கடையில் டீக்குடிக்கிற டிரைவர் கண்டக்டர்,பஸ்டாண்டின் அதிகாலைச் சோம்பல்,நியூஸ்பேப்பர்க்கடை என இத்தியாதி,இத்தியாதி யாய் பார்வை படர்ந்த வேளையில் பஸ்டாண்டின் தென் மூலையிலிருந்த கட்டணக்கழிப்பறையைஒட்டியசந்திலிருந்துசின்னதானசக்கரங்கள் பொருத் தப்பட்ட தள்ளுவண்டியில் அமர்ந்திருந்தப் பிச்சைக்கார னை தள்ளி வந்த வள் பஸ்ஸின் பின் படிக்கட்டு ஓரமாய் நிறுத்துகிறாள்.

சின்னதான நடை மேடை போல் நாற்சதுரமாய் இருந்த தள்ளு வண்டியிலிருந்து இறங்கிய வயதான பிச்சைக்காரன் தனது தள் ளாத உடல்தாங்கி வண்டியிலிருந்து கையூன்றி இறங்கி பஸ்சி ன் படிக்கட்டுகளில்ஏறுகிறான். மொன் னையான கைகளும், முடமாகி விட்ட கால்களும் கண்முன் பட பஸ் ஸின் படிக்கட்டிகளில் கையூன்றி ஏறியவனை கைதாங்கி ஏற்றி விடுகிறாள் அவனது மனைவி.

கைகளே கால்களாய் அவனும்,உடன் துணையாய் அவளுமாய் நின்றிருந்த இரண்டு பேரின் பக்கத்தில் அழுக்காய் நின்றிருந்த ஒரு பெண்பிள்ளையும் அவர்களோடு மூவரும் டவுன் பஸ்ஸிற்குள்ளாய் ஏறவும் பஸ்கிளம்பவும் சரியாக இருந்தது. பஸ்டாண்ட்டின் வாசல் கடக்கையில் டீக்கடையில் நின் றிருந்த வேகம் மட்டுப்பட்ட பஸ்ஸினுள்ளாய் ஏறிகொள்கிறவனாய் இவனும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *