இந்திராவும் சந்திராவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 7,355 
 

மதியழகன்- மாலதி தம்பதிகளுக்கு திருமணம் நடந்து ஐந்துவருடங்களாகியும் பிள்ளைகள் கிடைக்கவில்லை. அவர்கள் பிடிக்காத விரதங்கள் இல்லை

போகாத கோயில்கள், சுற்றாத அரச மரங்கள் இல்லை. ஒரு குழந்தையைச் சுவீகாhரம் ஏடுத்து வளர்க்கக், கூட சிந்தித்தார்கள், ஆனால் அதை அவர்களின் பெற்றோர் விரும்பவில்லை. கடைசியாக அவர்கள் மீது இறைவன் கருணை காட்டியதால் தானோ என்னவோ அவர்களுக்கு இரட்டைப் பெண்; குழந்தைகள்; பிறந்தன. அக்குழந்தைகளில் முதலில பிறந்தவள் இந்திரா. கால் மணி நேரத்துக்குப் பின்னர் பிறந்தவள் சந்திரா.

இரு குழந்தைகளினது முக தோற்றத்தில் அவ்வளவு வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் வளர்ந்த இருவரும் வடதுருவம் தென் துருவம் போன்று மாறுபட்ட குணம் உள்ளவர்கள்;. இந்திரா நேர்மறைச் ( Positive Thinking ) சிந்தனையுள்ளவள். எதைச் செய்ப்போனாலும் நல்லதே நடக்கும் என்ற சிந்தனையோடே செயற்படுவாள். சந்திரா எதிர்மறைச் (Negative Thainking) சிந்தனையுள்ளவள் எதையும் செய்யும் போது தயக்கத்தோடே செய்வாள். மற்றவர்கள் செய்வதில் எதிலும் குறை கண்டு பிடிப்பாள். ;சந்திராவுக்கு தன்னில் நம்பிக்கை குறைவு.

இதற்கு எதிர்மாறாக எடுத்த காரியம்; வெற்றி பெறும் என்ற எண்ணம் கொண்டவள் இந்திரா எதிலும் துணிந்து செயற்படுவாள். சந்திரா அப்படியில்லை. எதைச் செய்ய முன்னரே ஒரு தயக்கம். இந்திராவை ஒரு காரியத்தையும் செய்ய விடமாட்டாள். எதாவது ஒரு காரணம் சொல்லி செய்யவிடாமல் தடுத்து விடுவாள். அதனால் எதையும் செய்யும்; போது சந்திராவுக்குத் தெரியாமல் இந்திரா செய்து முடித்துவிடுவாள்.

கதிரையில் மௌனமாக தலைமேல் கையை வைத்தபடி அமர்ந்திருந்த சந்திராவை பார்த்ததும் இந்திராவுக்கு தன் தங்கைக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது, அது தான் கவலையொடு பேசாமல் இருக்கிறாள் என்று தோன்றிற்று. சந்திராவின மனநிலையைப அவலாள் புரிந்து கொள்வது கடினம்.

“ ஏன் சந்திரா என்ன விஷயம்? ஒன்றும் பேசாமல் ஏதோ கப்பல் கவுண்ட மாதிரி இருக்கிறாய்.”? இந்திரா தன் தங்கையைக் கேட்டாள்.

“ ஒன்றுமில்லை அக்கா. எனக்கு மூன்று நாட்களில நான் வி;ண்ணப்பித்த வேலைக்கு இன்டர்வியூவுக்கு வரும்படி கூப்பிட்டிருக்கிறரார்கள். இன்டர்வியூவுக்குப் போவதா, அல்லது போகாமல் விடுவதா என்று யோசித்துக் கொண்டிருக்கி;றன்” என்றாள் சந்திரா.

“எந்தக் கொம்பெனியில் இருந்து இன்டர்வியூவுக்கு உன்னை அழைத்திருக்கிறார்கள்”?

“ ஒரு பிரபல்யமான ஜோன்சன் அண்ட் பென்;சன் மார்க்கட்டிங் கொம்;பெனியில் இருந்து எனக்குப போன் வந்தது.”

“அடடா அது பெரிய அமெரிக்கன் கொம்பெனி ஆச்சே. உலகம் முழுவம் அந்தக் கொம்பெனிக்கு பல கிளைகள் உண்டு. அதன் தலமையகம் நியூயோர்க்கில். நீ படிச்சு பட்டம் பெற்றது என்னைப்போல் சர்வதேச பிஸ்னஸ் மார்க்கட்டிங் துறையில்;. நீ செய்த புரோஜெக்ட் கூட சர்வதேச சந்தைபடுத்தும் முறையொடு தொடர்புள்ளது. அது தான் அவர்கள உன்னை இன்டர்வியூவுக்கு கூப்பிட்டிருக்கிறார்கள். உனக்கு வேலைகிடைக்க நல்ல வாய்ப்புண்டு. அதோடை உண்டை புரொபசரிடமிருந்து நீ செய்த புரோஜெக்ட்டுக்கு கிடைத்த நல்ல சேர்ட்டிபிக்கட்டும் வைத்திருக்கிறாய்;”, இந்திரா தங்கையை ஊக்குவித்தாள்.

“நான் இண்டர்வியூவுக்குப் போவதா விடுவதா என யொசிக்கிறேன் அக்கா” தயக்கத்தோடு சந்திரா பதில் சொன்னாள்.

“பிறகு ஏன் இதுக்கு யோசிக்கிறாய்? தயங்காமல் போகவேண்டியதுதானே” இந்திரா தங்கையை ஊக்கப்டுத்தினாள். அவளுக்குத் தெரியும் தன் தங்கையின் குணம். எதிலும் தன் தங்கைக்கு நம்பிக்கை இல்லை என்பது. எத்தனையோ நல்ல சந்தர்ப்பங்கள் அவளுக்கு கிடைத்தும் அவளது நம்பிக்கையின்மை அவளுக்கு வேலை கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

“அதில்லை அக்கா நான் இன்டர்வியூவுக்குப் போக இருக்கும் வேலைக்கு சம்பளம் அதிகம். அமெரிக்காவுக்கும் ஒரு வருடம் ஸ்கொலர்சிப்பில் அனுப்புவார்கள். அதை விட பல சலுகைகள் உண்டு. என்னைவிட அதிகம் படித்து பட்டம் பெற்று, ஏம.;பி.ஏ செய்தவர்களும், அனுபவம் வாய்ந்தவர்களும் இண்டர்வியூவுக்கு வரக் கூடுமல்லவா? நான் ஏன் என் நேரத்தை செலவழித்துப் போய் வேலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைவான்? அதாலை தான் யோசிக்pறன் அக்கா.” சந்திரா வழமைபோல் நம்பிக்கை இல்லாது பதில் சொன்னாள்.

“ஏன் அப்படி சிந்திக்கிறாய். படித்துப் பட்டம் பல பெற்றிருந்தால் மட்டும் போதாது சந்திரா. பேச்சுத் திறமை, தோற்றம், ஆக்கபூர்வமாகவும் புதுமையாகவும் சிந்திக்கக் கூடியத் திறமை, தன்னம்பிக்கை ஆகியவை தான் முக்கியம். உனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நீ இன்டாவியூவுக்குப் போ. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சிந்தித்து நம்பிக்கையொடு பதில் சொல். நிட்சயம் வேலை உனக்குக் கிடைக்கும்” என்றாள் இந்திரா.

சந்திரா பதில் சொல்லவில்லை. தன் தங்கை தான் எடுக்கும் காரியம் எதுவும் நல்லதாக நடக்காது என்று எப்போதும் நினைக்கும் போக்கு உள்ளவள்.. மற்றவர்கள் செய்யும் செயல்களில் எப்போதும் பிழை கண்டுபிடிப்பதில் அவளுக்கு ஒரு மனதிருப்தி. பல சந்தர்ப்பங்களில் அவளுக்கிடைத்த வேலைக்கான இன்டாவியூவுக்குப் பொகாமல் அவளுடைய எதிமறையான சிந்தனையால் வேலை கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை இழந்தவள். தங்கையின் போக்கை மாற்ற இந்திரா எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. தன் தங்கை ஒரு பிடிவாதக்காரி என்று இந்திராவுக்குத் தெரியும். ஆனால் பெற்றோரை விட தன்மேல் அவளுக்கு அன்பும் நம்பிக்கை இருக்கிறது என்பதும் இந்திராவுக்குத் தெரியும்.

இந்திரா தொடர்நது தங்கையை இன்டர்வியூவுக்கு போகச் சொல்லி தினமும் வற்புறுத்தி வந்தாள். அவளது நச்சரிப்பைத் தாங்க முடியாமல் ஒரு பாடாக சந்திரா இன்டர்வியூவுக்குப் போகச் சம்மதித்தாள். சீராக ஆடை அணிந்து, கவரச்சியான தோற்றத்தோடு தன் தங்கையை தன்னோடு இன்டர்வியூவுக்குப் அழைத்துச் சென்றாள் இந்திரா. இந்திரா அவளோடு கூடவே போக காரணம் சந்திரா இன்டர்வியூவுக்குப போகிறேன் என்று தனக்கு வாக்கு கொடுத்து விட்டு வேறு எங்கையாவது போய் வந்துவிடுவாளோ என்ற சந்தேகம் இந்திராவுக்கு. தன் தங்கையின போக்கில் எப்படியாவது மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இந்திரா செயற்பட்டாள்.

********

சந்திராவோடு இன்டர்வியூவுக்கு வந்திருந்தவர்களில் இருவர் ஆண்களும் இரு பெண்களும் இருந்தார்கள். அவர்களின் இன்டர்வியூ ஒவ்வொருத்தருக்கும் அரை மணித்தியாலங்களுக்குள் முடிந்ததை இந்திராவால் அவதானிக்கமுடிந்தது. சந்திராவின் இன்டர்வியூ முடிவவைதற்கு சுமார் ஒரு மணித்தியாலம் வரை சென்றது இந்திராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்திரா இன்டர்வியூ நடந்த அறையை விட்டு புன்முறுவலோடு வெளியே வந்தாள்.

“என்னடி சந்திரா எப்படி இருந்தது இன்டர்வியூ. அவர்கள் கேட்ட கேள்விகள். எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில்களை நம்பிக்கையோடு சொன்னியா”?இ இந்திரா ஆவலுடன் தங்கையைக் கேட்டாள்.

“ஏதோ கேட்டதுக்கு சற்று சிந்தித்து பதில் சொன்னேன் அக்கா. இனி என்னைத் தேர்வு செய்வது, செய்யாதது அவர்கள் விருப்பம்” என்றாள் அலுப்போடு சந்திரா.

“அது சரி அப்படி என்ன கேள்விகள் ஒரு மணித்தியாலம் கேட்டார்கள்?”

இந்திரா தங்கையைக் கேட்டாள்.

“என்னை ஒரு பின்னடைந்த தீவுக்கு அனுப்பி பல வகையான சப்பாத்துக்களை அத்தீவு மக்களுக்கு மார்க்கட் செய்தால் அதை வாங்குவத்ற்க மார்க்கட் இருக்கிறதா என்று கண்டு அறிந்து ஒரு அறிககை சமர்ப்பிகக்ச் சொன்னால் எப்படி நான் அதை அணுகுவேன் என்பது தான் அவர்கள் கேட்ட கேள்வி”.

“நல்லாய் சிந்தித்து பதில் சொல்ல வேண்டிய வேண்டிய கேள்விதான். அது சரி அத்ற்க நீ சொன்ன பதில் என்ன?”

“அத்தீவு மக்கள் பற்றிய விபரம் , விருப்பு வேறுப்புகள் ஆகியவற்றைத் தந்திருந்தார்கள்”.

“அவர்கள் தந்த விபரத்தில் அத்தீவு மக்களைப் பற்றி என்ன குறிப்பிட்டிருந்தார்கள்”? இந்திரா ஆவலுடன் தங்கையைக் கேட்டாள்.

“அத்தீவு மக்கள் பூர்வ குடிமக்களாம். வெளி நாடுகளொடு தோடர்பு இல்லாது வாழ்பவரகளாம். பழமையான பழக்க வழங்கங்களை கடை பிடிப்பவார்களாம்.

புதுமையை விரும்பாதவர்களாம். சோழம் , அன்னாசி, திராட்சை, மரவெளி போன்ற பல விதமான பழவகைகளையும் பயிரகளையும் பயிரிட்டு வாழ்வதுதான் அவர்கள் வாழ்க்கை”;. இதுதான் அக்கா அவ்கள் தந்த சிறு குறிப்பு அக்கா.

“சிந்திக்க வைக்க வேண்டிய கேள்வியைத் தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு நீ என்ன பதில் சொன்னாய் சந்திரா ?”

“பழமையான பழக்க வழக்ங்களை அவர்கள் கொணடிருந்தபடியால் சப்பாத்து அல்லது செருப்பை அணிவதையோ அவ்ரகள் விரும்பாதவ்ரகளாக இருக்லாமல்லவா. அப்படி விரும்பினாலும் சிறு தொiகியனரே சப்பாத்தை அணிய விருப்பப்படுவார்கள். ஆகவே சப்பாத்தை சந்தைபடுததப்து போதுமான கஸ்டமர்ஸ் அஙகு இருக்கமாட்hரகள் அல்லவா அக்கா”.

“சரியாகத் தான் சிந்தித்தாய். அதற்குப் பதிலாக வேறு எதற்கு சநதை படுத்துபடுத்தாலாம்.”

“அவர்கள் தந்த குறிப்புகளின் படி அத்தீவு மக்கள் சோழம், அன்னாசி, அப்பிள் மற்றுமு; பழவகைகளை அவர்கள் பயரிட்டு உண்பதால், அவைறறை பதன் செய்யது டின்களில் பக் செய்து அவைகளுக்கு மாரக்கட் உள்ள வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதோடு அதற்கான தொழிற்சாலை ஒன்றை அத்தீவில் நிறுவி அத்தீவுவாசிகளை வேலை அமர்த்தினால் அவர்களின் பொருளாதாரம் உயரலாம். ஆதனால் படிப்படியாக காலணி பாவிக்கும் முறையை அவர்களுக்குக் கற்றக் கொடுக்லாம். இது தான் நான் சொன்ன பதில் அக்கா”

“நல்ல துறையில் அவரகள் உனக்குத் தந்த விபரங்களை வைத்து நம்பிக்கையான பதில் கொடுத்திருக்கிறாய். பார்த்தாயா சந்தரா உனக்குள் புதைந்து கிடக்கும் சிந்திக்கக் கூடிய திறமையை. நீ தான் அந்தத் திறமையை முடக்கிவைத்து எதையும் செய்யமுடியாது என்ற எப்பவும் நினைத்து செயல் படுகிறாய். ஆதில் இருந்து நீ மாறவேண்டும்’”இ இந்திரா தன் தங்கையைப் பாராட்டினாள்.

“ஏதோ அக்கா நான் செய்;;த சர்வதேச சந்தை புரேஜெக்டில் இது போன்ற ஒரு குறிப்பிட்ட கேஸ் ஸ்டடி பற்றி படித்தது என் நினைவுக்கு வந்தது. அதனால் எனக்கு நம்பிக்கையொடு பதில் சொல்ல முடிந்தது.

“உன் பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள்”?

“என்னை இண்டர்வியூ செய்த மூவருக்கும்; என்; பதில் திருப்தியாக இருந்தது என்பதை அவர்களின முகத்தில் தோன்றிய புன்னகையில் இருந்து எனக்குத் தெரிந்தது அக்கா”.

“அப்படியா?. சந்திரா நிட்சயம் உனக்கு அவர்கள் வேலை தருவார்கள் என்கிறது என மனம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லுகிறன் இது உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். நீ உன் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். நீ வாழக்கையில் முன்னெற வேண்டுமானால் நெகடிவ்வாக சிந்திப்பதை கைவிடு“ என்றாள் இந்திரா

“சரி அக்கா நீ சொன்ன படி என்னை படிப்படியாக மாற்றிக கொள்ளுகிறன்.. என்னை இந்த இன்டர்வியுவுக்கு வற்புறுத்தி கூட்டிவந்ததுக்கு நன்றி” என்று இந்திராவுக்கு நன்றி தெரிவித்தாள சந்திரா.

இண்டர்வியுவுக்கு போய் வந்த ஒரு கிழமைக்குள் ஜோன்சன் அண்ட் பென்;சன் கொம்பெனியில் இருந்து சந்திரா வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டதாக நியமனக் கடிதம் வந்தது. படிப்படியாக பொசிட்டிவ்வாக சிந்திக்க சந்திரா தன்னை மாற்றிக் கொண்டாள். மற்றவர்கள் மேல் குறை கண்டுபிடிப்பதைத் தவிர்த்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *