அவங்க வயித்தெரிச்சல் நம்மே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 3,313 
 

நாஷ்டா முடித்து விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்கு கிளம்பிணான் சரவணன்.

மெயின் ரோடு தாண்டும் போது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி ‘ஸ்பாட்டிலேயே’ இறந்து விட்டான்.

விஷயம் தெரிந்து ஓடி வந்தாள் தேவி.

தரையில் ரத்த வெள்ள்த்தில் விழுந்து கிடைக்கும் சரவணனைப் பார்த்ததும் அவள் மயக்கமாய் கீழே விழுந்து விட்டாள்.

அவள் தன் நிலைக்கு வரவே இரண்டு நாளாயிற்று.

பதினெட்டு வயதில் பெரிய பெண் ராணீயும்,ஒன்பது வயதில் சின்ன பெண் ராதாவும் தான் சர வணன் தேவிக்கு வைத்து விட்டுப் போன சொத்து.

அவளுக்கு உற்றார் உறவினர் என்று யாரும் இல்லை.‘இன்சூரன்சில்’ இருந்து வந்த பணத்தில் பெரிய பெண் ராணீயை உறவில் ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டு,தேவி நாலு வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்து,தன் இரண்டாவது பெண் ராதாவுடன் தன் காலத்தை கழித்து வந்தாள்.

ராணீ கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடத்தில் அந்த சம்மந்தி அம்மா மிகவும் பேராசை பிடி த்தவள் என்பது தேவிக்கு அப்புறம் தான் தெரிய வந்தது.

தன் மருமகளை அடிக்கடி உங்க அம்மா கிட்டேப் போ ‘இதை கேட்டு வாங்கி வா’,’அதை கேட் டு வாங்கி வா’,என்று நச்சரிக்க ஆரம்பித்தாள்.தேவியும் கடனோ,உடனோ வாங்கி தன் பெண்ணுக்கு அவள் மாமியார் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து வந்தாள் தேவி.

‘பர’ ‘பர’ வென்று வேலைகளை பண்ணிக்கொண்டு இருந்தாள் தேவி.

”என்ன அவசர அவசரமா வேலை பண்றே தேவி.எங்காச்சும் அவசரமா நீ வெளியே போவணு மா”என்று கேட்டாள் தேவி வேலே செஞ்சு வந்த வீட்டுக்கார அம்மா.

”ஆமாம்மா,என் மொத பொண்ணே கல்யாணம் கட்டிக் கொடுத்த இடத்லே,அவ மாமியார் தீபா வளிக்கு மருமவனுக்கு பட்டு வேஷ்டியும்,என் பொண்ணுக்கு பட்டுச் சேலையும் வாங்கணும்ன்னு கண் டிப்பா சொல்லி இருக்காங்க.நான் மத்த மூனு வீட்லெயும் வேலே எல்லாம் செஞ்சு முடிச்சுட்டு,அப்பு றமா பணத்துக்கு ஏற்பாடு பண்ணீ கிட்டு சாயங்காலம் கடைக்கு போவணும்மா” என்று சொன்னாள் தேவி.

மத்த மூனு வீட்டிலே எல்லா வேலையையும் செஞ்சு முடிச்சு,தேவி பணத்தை ஏற்பாடு பண் ணிக் கொண்டு விட்டு சின்ன பெண் ராதாவையும் கூட்டிக்கொண்டு டி.நகரில் இருக்கும் ஒரு புடவை கடைக்குப் போய் பெரிய மகளுக்கு பட்டு சேலை,மருமகனுக்கு பட்டு வேஷ்டி,சம்மந்திக்கும், அவங்க புருஷனுக்கும் ஜவுளி,தனக்கும் ராதாவுக்கும் துணிமணிகள் எல்லாம் எடுத்து முடிக்கும் வேளைக்கு மணி ஒன்பது அடித்து விட்டது.

ஆறு ‘ப்லாஸ்டிக்’ பைகளையும் கையில் பிடித்துக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தாள்தேவி.

‘பஸ் ஸ்டாண்டுக்கு’ வேகமாக வந்து தான் போக வேண்டிய இடத்துக்கு ‘பஸ்’ வந்தவுடன்,ராதா வை அழைத்துக் கொண்டு அந்த பஸ்ஸில் ஏறினாள்.பஸ் காலியாக இருக்கவே அவர்களுக்கு ஜன்னல் ஓர ‘சீட்’ டில் உட்கார இடம் கிடைத்தது.

இருவரும் உட்கார்ந்துக் கொண்டார்கள்.

‘ஆறு ப்லாஸ்டிக்’ பைகளை’ சீட்டில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு,கண்டக்டரிடம் டிக்கட் வாங்கினாள் தேவி.

அன்று பூராவும் நாலு வீட்டிலே ஓடி,ஓடி,வேலை பண்ண அலுப்பு தேவிக்கு.’பஸ்’ஸில் ‘சில்’ லென்று அவள் முகத்திலே காற்று வீசவே அவள் கொஞ்சம் கண் அசந்து விட்டாள்.

கண்டக்டர் குரல் கொடுக்கவே தூங்கிக் கொண்டு இருந்த தேவி, அவசர அவசரமாக தன் ‘ப்லா ஸ்டிக்’பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு,ராதாவையும் கூட்டிக்கொண்டு ‘பஸ்’ஸை விட்டு வேக மாக கீழே இறங்கினாள்.

இவர்கள் இறங்கியவுடன் ‘பஸ்’ கிளம்பிப் போய் விட்டது.

கைகளில் இருந்த ‘ப்லாஸ்டிக்’ பைகளைப் பார்த்த தேவிக்கு தூக்கி வாரிப் போட்டது.

தேவி கைகளில் எல்லா ‘ப்லாஸ்டிக் பைகளும் இருந்தன.ஆனா பெரிய பெண்ணுக்கு வாங்கின பட்டு சேலை ‘ப்லாஸ்டிக்’ பை மட்டும் அவ கையிலே இல்லை.
அவளுக்கு உலகமே இருண்டு விட்டது.

சின்ன பெண் ராதாவை கண்டபடி திட்டினாள் தேவி.

சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

ராதாவையும் கூட்டிக் கொண்டு பின்னால் வந்த பஸ்ஸில் ஓடிப் போய் ஏறினாள் தேவி.இரண்டு ‘ஸ்டாப்’ தள்ளி தான் ‘பஸ் டெர்மினஸ்’.‘நாம ‘பஸ் டெர்மினஸ்’ வந்து பஸ் நின்னதும் உடனே இறங்கி ஓடிப் போய் அந்த சேலைப் பையைத் தேடிப் பார்க்க்லாம்’ என்று எண்ணினாள் தேவி.

“பஸ் டர்மினஸ்’ வந்தது.

தேவி பஸ்ஸை விட்டு வேகமாக கீழே இறங்கி ராதாவையும் அழைத்துக் கொண்டு,ஐந்து ‘ப்லா ஸ்டிக்’ பைகளையும் எடுத்துக் கொண்டு,அவள் முன்னம் வந்த ஏறி வந்த பஸ் எங்கே இருக்கிறது என்று தேட ஆரம்பித்தாள்.

எல்லோரும் இறங்கி பஸ் காலியாக ஆகி விடவே கண்டக்டர் மணி எழுந்து போய் டிரைவரிடம் பேசப் போனான்.

எழுந்தவன் கண்களில் ஒரு ‘பிலாஸ்டிக் பை’ கண்ணில் பட்டது.எடுத்துப் பார்த்தான் மணி. அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.ஒரு பட்டு சேலை ‘பள’ ‘பள’ என்று பஸ் வெளிச்ச்த்தில் மின்னிக் கொண்டு இருந்தது.

யோஜனை பண்ணினான் மணி.

’நம்ம ‘ஆளு’ இந்த தீபாவளிக்கு பட்டு ஒரு சேலைக் கேட்டிருந்தாளே. இந்த பட்டு புடவையை குடுத்து சமாளிச்சு விடலாம்’ என்று எண்ணி சந்தோஷப் பட்டான் மணி.
‘பிலாஸ்டிக்’ பையை அக்குளில் இடுக்கிக்கொண்டான்.பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினான்.

‘டயம் பூத்துக்கு’ ஓடினான் மணி.

அவன் ‘ஆளு’ ரோஜா அவனுக்காக அங்கு இருந்த ஒரு ‘கான்க்ரீட் சீட்டில்’ காத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தான் மணி.

மணி அவளிடம் ஓடிப் போய் “இந்தா ‘டார்லிங்க்’ நீ கேட்ட பட்டுச் சேலை.கொஞ்ச நேரம் இரு. நான் ஒரு பத்து நொடிலே ஓடி வந்திடறேன்” என்று சொல்லி ரோஜாவிடம் அவன் அக்குளில் வைத்து இருந்த ‘ப்லஸ்டிக்’ பையை நீட்டினான்.

ரோஜா மணி கொடுத்த பட்டுப் புடவையைப் பிரித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“வாடி சீக்கிரமா மூதேவி.நாம வந்த பஸ் எதுன்னு சீக்கிரமா பாரு.நாம் தொலைச்ச ‘ப்லாஸ்டிக்’ பை கிடைக்குமோ,கிடைக்காதோ” என்று கத்திக் கொண்டே ஓடினாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ”அம்மா இது தான் நாம் வந்த பஸ்” என்று கத்தினாள் ராதா.

”ஓடு,ஓடு,சீக்கிரமா ஏறி போய் நம்ம புடவை பை இருக்குதான்னு பார்” என்று சொல்லிக் கொ ண்டு ஓடினாள் ராதாவுடன் ஓடினாள் தேவி.

அவர்கள் இருவரும் தன்னுடைய ‘ஆள்’ வந்த பஸ்ஸூக்கு ஓடிப் போய் ஏறினதைப் பார்த்தாள் ரோஜா.

‘இந்த பஸ் ‘நம்ம ஆள்’ வந்த பஸ் ஆச்சே.என்ன தேடறாங்க இவங்க’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள் ரோஜா.

‘பஸ்’ பூராத்தையும் தேடி விட்டு வெறும் கையோடு இறங்கினார்கள் தேவியும் ராதாவும்.

”எந்த படுபாவியோ எடுத்துக்கிட்டு போயிட்டான் ராதா.நம்ம ‘ப்லாஸ்டிக்’ பை கிடைக்கலையே” என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள் தேவி.

அந்த அம்மா அழுவதைப் பார்தத ரோஜா அவளிடம் போய் மெல்ல விசாரித்தாள்.

தேவி தான் ‘பஸ்’ ஏறினதில் இருந்து இப்ப வரை நடந்த கதையை அழுது கொண்டே ரோஜா விடம் சொன்னாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் தேவி “அம்மா,அந்த பட்டுப் புடவையை மட்டும் இந்த தீபாவளிக்கு என் சம்மந்தி அம்மா கிட்ட நான் தரலேன்னா,அவங்க என் பொண்ணை தள்ளி கூட வச்சுடுவாங்க. அவ்வளவு பொல்லாத பொம்பளேம்மா அந்த அம்மா” என்று சொல்லும் போது அவள் அழுகை இன் னும் அதிகமாயிற்று.

ரோஜாவுக்கு அந்த அம்மா அழுவதைப் பார்க்க சகிக்கவில்லை.அவள் வருத்தப் பட்டாள்.

ரோஜா ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.

“அம்மா நீங்க யாரோ.நான் யாரோ.நீங்க படற வேதனையே என்னாலே பாக்க முடியலே. நீங்க தவறா நினைச்சுக்கலேன்னா,இந்த பட்டுப் புடவையை எடுத்து கிட்டு போய் உங்க சம்மந்தி அம்மா கிட்டே குடுங்க” என்று சொல்லி தன் ‘ஆள்’ தனக்கு கொடுத்த புடவையை தேவியிடம் நீட்டினாள் ரோஜா.

புடவையை வாங்கிக் கொண்டு விளக்கு வெளிச்சத்தில் பார்த்த தேவி “அம்மா,இந்த புடவை தாங்க நாங்க வாங்கின புடவைம்மா. உங்களுக்கு ரொம்ப நன்றிம்மா. உங்களுக்கு கோடி புண்ணீயம்மா இந்த புடவையே நான் எடுத்துக் கிட்டு போய் அந்த சம்மந்தி அம்மா கிட்டே குடுத்தேனா,என் பொ ண்ணுக்கு ஒன்னும் ஆவாது” என்று சந்தோஷத்தில் சொல்லி ரோஜாவின் காலை தொடப் போனாள் தேவி.

உடனே ரோஜா “நீங்க வயசிலெ ரொம்ப பெரியவங்க.என் காலேல்லாம் விழாதீங்க”என்று சொல்லி தேவியின் தோளை தொட்டு எழுப்பினாள்.

தேவி மறுபடியும் ரோஜாவுக்கு தன் நன்றியை சொல்லி விட்டு,ராதாவை அழைத்து கொண்டு கடைசி ‘பஸ்’ஸில் ஏற ஓடிப் போனாள்.

தன் ‘ஆள்’ வந்தவுடன் நடந்ததை எல்லாம் சொன்னாள் ரோஜா.

பேச்சை மாற்றப் பார்த்தான் மணி.

அவன் உள் மனம் புழுங்கியது.

’நாம இன்னும் கொஞ்ச முன்னம் வந்திருந்தா,அந்த அம்மா என்னே அடையளம் கண்டு பிடிச்சு விட்டிருப்பாங்க.நம்ம சாயம் அப்போ வெளுத்து போயிருக்கும்.நல்ல வேளை. கடவுள் தான் நம் மை காப்பாத்தி இருக்காரு’என்று எண்ணி மனதில் சந்தோஷப் பட்டான் மணி.

தன் ‘ஆளுடன்’ ‘ஜல்சா’ பண்ண நினைத்து,ரோஜாவை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஹோட்டலுக்கு பறந்தான் அந்த ‘சாயம்’ வெளுக்காத கண்டக்டர் மணி.
ஹோட்டலுக்கு வந்ததும் தனக்கும் ரோஜாவுக்கும் சாப்பிட ஆர்டர் பண்ணினான் மணி.

சர்வர் டேபிளில் ஆர்டர் பண்ணவற்றை கொண்டு வந்து வைத்தான்.

சாப்பிடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தா ரோஜா.

“என்ன என்னையே பார்த்துக் கிட்டு இருக்கே ரோஜா” என்று சந்தேகத்துடன் கேட்டான் மணி.

”இதோ பார் மணி, நான் சொல்றேன்னு நீ தப்பா மட்டும் எடுத்தாதே. நானும் வேலை செய்றேன். நீயும் வேலை செய்றே. நமக்கு பணத்திற்கு குறைவே இல்லே. நாம ரெண்டு பேரும் இந்த உலகத்திலே நல்ல குடிமக்களாய் வாழ்ந்து வரணும் என்கிறது தான் என் ஆசை” என்று சொல்லி நிறுத்தினாள் ரோஜா.

தன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தான் மணி.

கொஞ்ச நேரம் ஆனதும் ஹோட்டல் என்று கூடப் பார்க்காமல் எழுந்து அவள் தலையில் தன் கையை வைத்தான் மணி.

”என்னை மன்னிச்சிடு ரோஜா. நான் செஞ்ச இந்த தப்பு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும். நான் இன்னிலே இருந்து முழுசா மாறி ஒரு நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்து காட்டறேன் இனிமே நான் எந்த ‘பாசஞ்சர்’ பொருளையும் தொடக் கூட மாட்டேன். உன் மேலே சத்தியமா இதை நான் சொல்றேன்” என்று அவன் சொல்லும் போது அவன் கண்களில் நீர் முட்டியது.

உடனே ரோஜா “நான் உன்னே பூரணமா நம்பறேன் ‘டார்லிங்க்’. ஏழைங்க கஷ்டப்பட்ட சொத்தை நாம எடுத்துக்கிட்டா, அவங்க வயத்தெரிச்சல் நம்மே நிச்சியமா தாக்கும். நாம சம்பாதிச்சு வர பணத்லே நாம சந்தோஷமாக வாழ்ந்து கிட்டு வரலாம்.சரியா” என்று சொல்லி மணியின் கையை பிடித்தாள்.

மணியின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணிர் ரோஜா கை மேல் விழுந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *