அது ஒரு தனி மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,791 
 

திருமணஞ்சேரி ஐயனார் குளத்தின் வடக்கு கரையில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த அந்த தென்னை மரம் எதிர்க்கரை ஐயனாரையும் எப்போதாவது மட்டுமே காற்றுக்காக கதவைத் திறந்தால் பெருமாளையும் தான் பேச்சுத்துணைக்கு அழைக்க வேண்டும் ! வீட்டுக்கு வீடு குழாய், கிணறு, பம்ப் செட், பாத்ரூம் என்றhகிவிட்ட பிறகு என்னைத் தவிர யார் இந்த ஐயனார் குளத்துக்கு வந்துவிடப் போகிறhர்கள் ? நான் கூடத்தான் இந்த குளத்தில் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளவா வருகிறேன் ? அந்த தென்னை மரம்… முப்பது நாற்பது வருடமாக அதே இடத்தில் தனியாக நின்று கொண்டிருக்கிறதே… அதற்காகத்தான்… இனம் தெரியாத ஒரு பிணைப்பு… ஒரு பிடிப்பு .. ஏனோ, எப்படியோ ஏற்பட்டு விட்டது. குளத்தில் இறங்கி அந்த ஒற்றை மரத்தின் நிழலாவது என் மேல் நன்றhக ஒன்றும்படி… அதன் நிழலில் நான் தெரியாதபடி… அப்படி நின்று விடுவதில் ஒரு ஆறுதல்.. ஆறுதலா ? அது எங்களுக்கு ஏது ? அந்த மரத்தின் பக்கத்தில் கூட ஒரு தென்னம் பிள்ளை இருந்து யாரோ அதை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் நன்றhய் வளர்த்து விட்டார்களாம்… ஆமாம்… எனக்குக்கூடதான்… நான் முகங்கூட அறியாத அண்ணன் ஒருவனை துhரத்து உறவினர் யாரோ எடுத்துப் போய் வளர்த்து மாப்பிள்ளையாக்கிக் கொண்டு விடவில்லையா ? எப்படியோ நாங்கள் இருவரும். அந்த மரமும் நானுந்தான் எல்லா வகையிலும் ஒன்றhகி விட்டோம்… எனக்காவது அம்மா என்று பெயருக்கு… பெயருக்குத்தான் ஒருத்தி உண்டு… கருவில் தோன்றிய வுடனேயே அம்மாவை தனிமரமாக்கிவிட்டுப் பெண்ணாகவும் பிறந்து விட்டால் சீராடிச் செல்லமாக வாழ முடியுமா.

நான் பாயை விட்டு எழுந்திருக்கு முன்னமே அம்மா பட்டாமணியார் வீட்டு அடுப்பை மூட்டச் சென்று விட வேண்டும்… இரவு அம்மா அலுத்துக் களைத்துத் திரும்பும் போது பெரும்பாலும் துhங்கி விடுவேன்.. பசி வேளையில் மட்டுமே பட்டாமணியார் வீட்டுக்கு ஓடி பழையதோ மிச்சம் மீதியோ விழுங்கிவிட்டு பள்ளிக்கூடமோ, வீடோ ஓடிப் போய் விட வேண்டும்… அப்பனையே விழுங்கி விட்டவளுக்கு வேறு என்ன கிடைக்கும். ?

என் கையை எடுத்துக் என் கண்ணை ஒத்தி யாரோ ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பதற்காகவே முதல் படியாக என் கையில் சாக்கையும் பிரம்பையும், ஏற்றி விடத் துடித்தாள். பாவம் அம்மா.. நானும் பெண்ணாக இல்லாம பாழும் தென்னை மரமாகவே இருந்திருந்தால் அவளுக்கு இந்தக் கவலை இல்லை ! அம்மாவின் கவலை என் மனதில் மூட்டிய உறுதியால் விரைவிலேயே ஒரு செகண்டரி கிரேடு டீச்சர் ஆனேன்.

என்னைப் பொறுத்தவரையில் கல்யாணத்துக்கு அவசரமில்லை என்றhலும் அம்மாவின் அச்சம் என்னைத் தனி மரமாக விட்டு விட்டுப் போய் விடக் கூடாதே என்று அவசரம் அவசரமாக கல்யாண ஏற்பாட்டில் முனைந்தாள். நானும் மறுக்கவில்லை. அம்மாவின் கடிதம் பார்த்து மூன்று நாள் லீவில் கிராமத்துக்குப் புறப்பட்டேன். யாரோ பெண் பார்க்க வருகிறhர்களாம், பார்த்து விட்டுப் போகட்டும். அதை விட என் ஆசை தென்னை மரத்தைப் பார்த்து பல மாதங்களாகி விட்டதே என்றுதான் புறப்பட்டேன்.

பெண் பார்க்கும் படலம் நடந்தது. சென்னையில் பாங்கில் ஏதோ நல்ல வேலை என்று சொன்னார்கள். ஏது என்ன என்று நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. எல்லாம் பட்டாமணியாரின் உறவினர் ஒருவரின் ஏற்பாடாம். பையன் வாயைத் திறக்கவில்லை தவறு… திறக்க விடவில்லை… வேலை சம்பள விவரம் அவருடைய பாட்டியோ, யாரோ தான் பதில் சொல்லி வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் கொண்டு கொடுத்து சம்பந்தம் முடிக்க வந்தவர்களாகத் தெரியவில்லை… ஏதோ சென்னைக்குப் புறப்பட்டவர்களைப், போலத்தான் தோன்றியது. போயும், போயும் இப்படிப்பட்ட மனிதர்கள் தாமா கிடைக்க வேண்டும் ? ஆத்திரத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். சமையல் காரியின் பெண் என்பதையே மறந்துவிட்டு சீர்வரிசைகள் அடுக்கிக் கொண்டே போனார்கள். சாப்பாட்டு செலவில்லாததால், அம்மா சேர்த்து வைத்ததும், என் சம்பளத்தில் செலவுபோக மீதியும் அவர்கள் ஆசையை ஈடுகட்டப் போதுமானதாகயில்லை. அந்தப் பாட்டி சொன்னதுதான் என் ஆத்திரத்தை வெடிக்க வைத்துவிட்டது. அவள் சொன்னாள், “போனால் போகட்டும்னுதான் நாலு ஆம்பிளைகளோடு சேர்ந்து ஒண்ணா வேலை செய்தாலும், பரவாயில்லைன்னு வந்தோம் அஞ்சு சவரனிலே இன்னொரு சங்கிலியும் இல்லைன்னா…” என் சம்பளத்துக்காகவே ஆசைப்பட்டு வந்து விட்டு அதையே குறையாகக் கூறி, அபராதம் விதிக்கும் அளவு அவள் பேச்சு எனக்கு அவமானதாக இருந்தது. குமறிய மனம் வார்த்தைகளில் வெடித்தது. “கெட் அவுட் போங்க வெளியே ! எனக்கு கல்யாணமும் வேண்டாம்… ஒரு கருமாதியும் வேண்டாம்…” நான் விர்ரென்று உள்ளே வந்துவிட்டேன். அம்மா சிலையாகிவிட்டாள்… நியாயம் தெரிந்த பட்டாமணியார் கூட ஒன்று பேசவில்லை…

“அடங்காப் பிடாரி…” “வாயாடி” “குடும்பத்துக்கு லாயக்கில்லை”, “வேலை செய்ய லாயக்கில்லை”, “வேலை செய்யற கர்வம்” என்ற அர்ச்சனைகளை தொடர்ந்து “வேறு என்ன உள் மர்மமோ ?” என்று முடித்து விட்டுக் கிளம்பினர். இப்படி ஆளுக்கு ஒன்றhக உதிர்த்து தங்கள் ஆத்திரத்தையும் அவமானத்தையும் சரிக் கட்டிக் கொண்டனர் !

பின்னால் தான் எங்களுக்குத் தெரிந்தது அவன் பாங்க் காண்டீனில் ஸர்வராம் !

ஊருக்கு உடனே கிளம்புமுன் ஐயனார் குளத்துக்கும் போனேன். அங்கே மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்த மருதுமுத்து சொன்னான். “யாரோ மந்திரி வந்து வன மகோத்சவம் என்று ஒரு மரத்தை அந்த தென்னை மரத்தின் பக்கத்தில் நடுவதாக இருந்தார்களாம், ஏனோ விழா நின்று விட்டதாம்… பாவம் இதில் கூடவா ஒற்றுமை!”

நான் சென்னைக்குத் திரும்பி விட்டேன்.

சென்னைக்கு வந்தது முதல் என் முழு கவனத்தையும் என் முன்னேற்றத்தில் செலுத்தினேன். மேலும் மேலும் படித்தேன்… பி.யூ.சி., பி.ஏ., என்று மளமள வென்று முடித்தேன். பத்தே வருடங்களில் பள்ளி ஆசிரியை என்ற நிலைமாறி கல்லுhரிப் பேராசிரியை என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டேன்.

ஊரிலிருந்து என் உதவிக்கு வந்த அம்மாவைக் கேட்டேன். “ஏன் மா நம்ப ஐயனார் கோயில் தென்னை மரமும் என்னைப் போல் வளர்ந்திருக்கிறதா ?” என்று,

“ஆமாம் நீயும் போய் அதன் பக்கத்திலே நில்லு… அளந்து பாக்கறேன்… நீயும் உன் மரமும்” அம்மாவுக்கு அந்த மரத்தைக் கண்டாலே பிடிக்காது. எஸ்.எஸ்.எல்.ஸி. டீச்சராக இருந்த போதே நடக்காத கல்யாணம் அரைக் கிழவியாகிவிட்ட பிறகா நடக்கப் போகிறது ? என்ற ஏமாற்றத்தின் எதிரொலி அது… மேலும் எங்களை முதலில் பார்க்க வந்தவர்கள் தங்களால் முடிந்தவரை வதந்திகளைப் பரப்பி கல்யாணப் பேச்சுகள் கூட நடக்காமல் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். கைநிறைய சம்பாதித்தாலும், காலேஜ; டீச்சரானாலும் தனியே உயர்ந்தால் தனி மரம் தானே ?

எந்தத் தனிமரமானாலும் பலஹீனமானால் காற்றடிக்கும் போது வளையாமல் இருக்க முடியுமா ? அப்படித்தான் எங்கள் கல்லுhரி ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் ஆராவமுதன் என்று அழகான பெயர்… உருவமுந்தான்… நடுத்தர வயது… நல்ல சிவப்பு நிறம்… வெடவெடவென்ற மெல்லிய உடல்… வெள்ளைவெளேர் என்று வடநாட்டு மார்வாடிக் கச்சம்… ஜிப்பா தங்கப் பிரேம் மூக்குக் கண்ணாடி… சங்கீதத்தை தோற்கடிக்கும் பேச்சு… எவரும் வியக்கும் விசாலமான அறிவு… பல மொழி இலக்கியப் புலமை… கல்லுhரி மாணவர் முதல் ஆளுங் கட்சி அமைச்சர் வரை நல்ல மதிப்பு.

நிலம் நீச்சுக்காகக் குடும்பத்தைத் திருச்சியிலே விட்டு ஆர்வம் காரணமாக சென்னையிலே பணி புரிந்த அவர் எனக்குத் தக்கத் துணையானார். கல்லூரியிலும், சந்திக்கும் போதெல்லாம் பேசினோம்;… பேச்செல்லாம் இலக்கிய மணம் தான். கம்பனையும் மில்டனையும் பாரதியையும், ஷெல்லியையும், காளிதாசனையும், துளசியையும், அலசுவார். ஒருமுறை அவரிடம் நான் என் ஆசைத் தென்னை மரத்தை பற்றிச் சொன்னேன். எனக்கும் அந்த தனி மரத்துக்கும் உள்ள ஒற்றுமையைச் சொன்னேன்.

அவர் சொன்னார், “நீ தனி மரம், ஆனால் நான் பெரிய தோப்பில் தனியான மரம்” என்று ! பாவம். அவர் மனைவி படிக்காதவளாம்… அசடாம்… முசுடும் முன்கோபியுமாம்… அவளிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த வேலையை வெளியூரில் தேர்ந்தெடுத்தாராம்… பணக்கார உறவுப்பெண்… கட்டாயக் கல்யாணம்… படிக்க உதவியவர்கள்… மறுக்க முடியவில்லை. எங்கள் வீட்டுக்குக் கூட ஓரிரு முறை வருவார். அவரைப் பார்த்தவுடன் அம்மாவின் ஏக்கம் எல்லாம், “கல்யாணமாகாதவராக இருந்திருக்கக் கூடாதா ?” என்பதுதான்.

இது அம்மாவின் ஏக்கம் மட்டும்தானா ?

நான் அன்று பாங்க் காண்டீன் ப்யூனை விரட்டியதைச் சொன்ன போது சொன்னார், “பெண்ணான உனக்கிருந்த தைரியம் அன்று எனக்கு இல்லாமல் போய் விட்டதே ! படிக்கக் கொடுத்த கடனை வேலை செய்து அடைத்திருக்கலாமே !”

அன்று மட்டும் என்ன இன்றும் கூடத்தான் அவருக்கு எங்கே தைரியம் வரப் போகிறது ?

சிங்கப்பூரில் நடந்த ஆசியப் பேராசிரியர் மகாநாட்டுக்கு நானும் அவரோடு போனேன், அவர் சிபாரிசுதான். கிளம்புவதற்கு முன் அம்மாவிடம் மட்டும் சொன்னாள், “இரண்டாம் தாரமானாலும் பாதகம் இல்லை, ஒரு மஞ்சள் கயிறை அவர் கையால் கட்டி விடச் சொல்… இல்லாவிட்டால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமாகி விடும்.” இதை அம்மா சொல்ல வேண்டியதில்லை. நெருங்கிய நண்பர்களே கூட எங்களைக் கண்டும் காணாமலும், கிணடலாகவும், கேலியாகவும், பேசி வருவது அவருக்கும், தெரியாதா ? அவரே துணிந்து ஒரு முடிவு எடுக்காத போது பெண்… நான் என்ன செய்ய முடியும் ?

மாநாட்டுக்கு சென்ற நாங்கள் ஓட்டலில் ஒரு அறையில் தங்கினோம். மாநாட்டிலும் எங்கள் பேச்சு ஒன்றை ஒன்று தழுவியதாகவே இருக்கும்படி அமைத்துக் கொண்டோம். மாநாட்டுப் பிரதிநிதிகள் எங்களைக் கணவன் மனைவி என்றே நினைத்தார்கள். பேசினார்கள்… அவர் அதை மறுக்கவில்லை. அவருடைய இள முறுவலால் என்னை நாணவைத்தார். அந்த நேரங்களில் என் நினைவுகள் “ஜிவ்” வென்று எங்கோ பறக்கும். கன்னம் சிவக்கும்… தலைகவிழும் இப்படித்தான் புது மணப்பெண்கள் இருப்பார்களோ ? ஆனால் ஏனோ அவரிடம் இந்த மாறுதல்கள் இல்லையே ! உண்மையாகச் சொல்வதானால் ஒரு மனைவி தன் கணவனுக்குக் செய்யும் பணிவிடைகளில் எதையுமே குறைக்கவில்லை. காலையில் பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்துக் கொடுப்பது முதல் இரவில் படுக்கைத் தட்டிப் போடுவது வரை எல்லாம் செய்தேன். விரும்பி சந்தோஷமாகச் செய்தேன், ஊர் திரும்பியவுடனாவது ஓரிருவர் முன்னிலையிலாவது ஒரு கயிறு கட்டி விடமாட்டாரா ? என்று தான் நினைத்தேன். அந்த நம்பிக்கை வளரும் வகையில் தான் அவரும் ஏதேதோ சொன்னார்.

ஊர் திரும்பியவுடன் யாரோ சொன்னார்கள்,. வி.சி. யாகவோ, நாமினேஷன் எம்.எல்.சி. யாக்கி கல்வி மந்திரியாகவோ போடப் போவதாக.. அவரை விட அதிகம் மகிழ்ந்தவள் நான் தான் ! திறமைக்கேற்ற பதவி என்று பெருமிதம் அடைந்தேன், ஆகாசத்தில் மிதந்தேன், ஆகாசத்தில் மிதக்க முடியுமோ ? நான் தான் ஒற்றை தென்னை மரத்தோடு ஒன்றி வளர்ந்ததவளாயிற்றே… விழுந்தேன்… கீழே விழுந்தேன்…

உயர் பதவி வாய்ப்பு வரும்போது அதற்கு தன்னைத் தகுதி உடையவராக்கிக் கொள்ளவேண்டுமாம். பனை மரத்திலிருந்து பால் சாப்பிடக் கூடாதாம். இதுவரை அவர் பால் தான் சாப்பிட்டாரா ? குடிகாரர் ஆயிரம் ஆயிரம் மாணவர்கட்கு வழிகாட்டியாக இருக்கும்போது இல்லாத ஒழுக்கம் இப்போது வந்து விட்டதாம், கிடைக்கப் போகும் பதவிக்காக அவர் சிருஷ்டித்துக் கொள்ளும் தகுதிகளில் நான் மட்டும்தான் தடையா ? எங்கள் பழக்கத்தால் இதுவரை அதிக லாபம் அடைந்தவர் என்னவோ அவர் தான் ! என் உடலாலும், அறிவாற்றலாலும் நான் செய்திருக்கும் சேவையை உதவியை… நானே சொல்லிக் காட்டக் கூடாது தான்… மொழி வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற அவர் நுhலில் என் சிந்தனைகள் சொற்பமா, அற்பமா ? ஏன் அவர் ஆடம்பரச் செலவுகட்குக்கூட ஆயிரம் மாயிரம் கொடுத்திருக்கிறேன். ஆனால் எனக்குக் கிடைத்தது அவதுhறுகள்… வம்புப் பேச்சுகள்… ஏளனப் பார்வைகள்… இவை தாம்… இவற்றுக்கிடையில் கிடைத்த சிறு ஆறுதல்… என் மனதுள் ஓங்கி விஸ்வரூபம் எடுத்திருந்த தனி மரக் குரல் சற்று தணிந்தது தான்.

ஆனால் அவரிடம் பதவி ஆசை ஏற்படுத்தி விட்ட மாறுதல். அடே கடவுளே ! இதயத்தைக் கொன்று இப்படி ஒரு வாழ்வா ? நேரில் வரநேரமில்லையாம்… காலேஜ; ப்யூனை விட்டு ‘போன்‘ செய்யச் சொல்லி விட்டார் ! பொதுப் பணியில் இருப்பவர் அப்பழுக்கின்றி, சந்தேகத்துக்கு இடம் கொடுக்காமல் உலவ வேண்டுமாம்… நான் கனவு கண்ட மஞ்சள் பத்திரிகையை தான் இவரால் தடுத்து விட முடிந்தது. ஆனால் சிங்கப்பூர் நிருபர் எழுதிய மஞ்சள் பத்திரிகை மர்மங்களை இவர் எப்படி மறைத்து விட முடியும் !

குடிகாரர் குடித்தனக்காரராகி விட்டார். முசுட்டு மனைவியை அழைத்து வந்து முத்தியால்பேட்டையில் குடியேறி விட்டார். அவரை நான் அதிகம் தெரிந்தவராகக் காட்டிக்கொள்ளக் கூடாதாம்… அவர் மனைவியிடம் மட்டுமல்ல… இனி கல்லுhரியிலும் வெளியிலும், கூடத் தான்… இவையெல்லாங்கூட மன்னித்து விடலாம்… துh… குமட்டுகிறது நினைக்கவே கூசும் இதை எப்படியோ சொல்லி அனுப்பி விட்டாரே… அவரே சிபாரிசு செய்கிறhராம்.. கோயம்புத்துhரில் நண்பராம்… பெருஞ் செல்வராம்… கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமாம். “கன்னிங் ஹிப்பகிராட்.. இவனை விட அந்த காண்டின் சர்வர் எவ்வளவோ மேல் !” அப்படியே நேரில்… தூ முகத்தை பார்த்தா… போனில் கூப்பிட்டு காரித் துப்பி விட்டேன் !

ஒரே வாரத்தில் எனக்கு திருநெல்வேலிக்கு மாற்றலாகி விட்டது… எல்லாம் அந்த எதிர்கால வி.சி. அல்லது எம்.எல்.சி. வேலைதான் !.. எனக்கென்ன இனிமேல் நான் வேலையையே ராஜிfனாமாச் செய்துவிட்டு கிராமத்துக்கு வந்து விட்டேன். இந்தப் புண்ணியவான்களுக்கு இன்னும் பதவி வந்ததோ அவ்வளவுதான்.

என்னாலலேயே தாங்க முடியாத அதிர்ச்சியை என் அம்மாவால் எப்படி தாங்க முடியும் ? நாசமாப் போறவன்… நாசமாக்கி விட்டானே… நன்னா இருப்பானா ? பழி பாவங்கட்கு அஞ்சாத அவரா அம்மாவின் சாபத்துக்கு ஆளாகப் போகிறhர், சுமை தாங்கிக் கல் கூட சுக்கு நுhறhகி விடுமே… சுக்காகிவிட்ட அம்மாவையும் சாம்பலாக்கி இதே குளத்தில் கரைத்து விட்டேன்…

இனிமேல் எனக்கு யார் உறவு மண்ணை வெட்டிப் போட்டுமுட்டுக் கொடுக்க முயன்றும் எப்போது விழுவோம் ! என்று ஆடிக் கொண்டே இருக்கிறதே அந்த மரம் தான்… அந்த மரம் அப்படியே விழுந்து என்னையும் சேர்த்து இந்தக் குளத்தடியில் புதைத்து விடக் கூடாதா ?

இன்னும் இந்த மண்ணில், புழுதிக் காற்றில் எத்தனை நாள் நிற்க வேண்டுமோ ? இனிமேலா அதற்கு துணை கிடைக்கப்போகிறது ?

அது ஒரு தனி மரம்… ! நான் மட்டும்… ?

– ஜூலை 28 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *