அதிர்ச்சி வைத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 9,506 
 

“உமா!…..சூடா ஒரு கப் காப்பி! ..””என்று மாமா குரல் கொடுத்தார்.

“உமா காப்பியைக் கொடுத்து விட்டு வருவதற்குள்,வசந்தியின் குரல்!

“அண்ணி!…காலேஜூக்கு நேரமாச்சு…….இன்னுமா டிபன் முடியலே?…”

“ வசந்தி!…..எனக்கும் ஆபிஸுக்கு நேரமாச்சு….காலை நேரத்திலே நீங்க யாராவது ஒருத்தர் ஒத்தாசை செய்தா சீக்கிரம் டிபன் வேலையை முடிச்சிடலாம்…”.”

அதைக் கேட்டுக் கொண்டே வந்த மாமியார் “என்னடி!.ஜாடை பேசறே?…..சமையலறைக்கு நான் வந்து உனக்கு ஒத்தாசை செய்ய வேண்டுமாக்கும்?””

“அத்தே!….காலை நேரத்திலே அவரும் நானும் ஆபிஸுக்குப் போகவேண்டும். வசந்தியும் காலேஜுக்குப் போக வேண்டும். அதற்காகத் தான் சொன்னேன்…””

“ பேச்சுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே….ஏதோ உங்கம்மா…..நீ வீட்டு வேலையெல்லாம் நல்லா நீ செய்வேனு சொன்னா…அதை நம்பித் தான் உன்னை முரளிக்குக் கட்டி வச்சேன்!..நீ என்னடானா .ஒம்பது மணிக்கே நீட்டா டிரஸ் செய்திட்டு வெளியே கிளம்ப பாக்கிறே?..”..”

“டேய்! முரளி நீயே வந்து உன் பொண்டாட்டியை கேளு!…..”.”

அம்மா சொன்னவுடன் உடனே அந்த இடத்திற்கு முரளி வந்தான்.

“உமா!…இனிமே வீட்டிலே அம்மா என்ன சொல்லறாங்களோ அதை நீ முதலில் செய்து விட்டு அப்புறமா வேறு வேலையைப் பாரு!…..””

“சரிங்க… அம்மா வீட்டு வேலைகள் எல்லாத்திற்கும் நான் தான் பொறுப்பு என்று சொல்லறாங்க!..நாளையிலிருந்து இனிமே வீட்டிலே எல்லா வேலையும் நானே செய்திடறேன்!……””

அதன் பின் தான் மாமியார் கல்யாணி ஹாலில் தெம்பாக உட்கார்ந்து கொண்டு, அன்றைய பேப்பரை எடுத்துப் பிரித்தாள்.

மறுநாள். .கல்யாணி ரூமிற்குள் கோபமாக நுழைந்தான் முரளி.

“அம்மா!..நான் உமாவைக் கட்டிக் கொண்டதே அவ வாங்கற நாற்பதாயிர ரூபாய் சம்பளத்திற்குத் தான்!… வீட்டு வேலைக்கு நீ கொஞ்சம் ஒத்தாசை செய்தா குறைஞ்சா நீ போயிடுவே? ….இப்ப அவ என்ன செய்திட்டா தெரியுமா?…வீட்டு வேலைக்கு நேரம் பத்தாதுனு . ஆபிஸ் வேலையை ரிசைன் பண்ணிட்டா!…கொஞ்சம் வசதியா இருக்கலாமென்ற எல்லோருடையஆசையிலும் நீ இப்ப மண்ணைப் போட்டிட்டே!….”..”

– பொதிகைச் சாரல் ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *