வேட்டை ஆரம்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 20,063 
 

அன்று மாலை சரியாக மணி ஆறு. நான் டீ.நகரில் உள்ள அந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்தேன்.

“சுரேஷ் உங்களை டாக்டர் அழைக்கிறார் என்று நர்சின் குரல் கேட்டதும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தேன். டாக்டர் இளமையாக சற்று வழுக்கையோடு இருந்தார்”.

” சொல்லுங்கள் என்ன பிரச்சனை”

டாக்டர் நான் ஒரு வாரத்துக்கு முன் வேலை நிமித்தமாக கோவை சென்றிருந்தேன், அங்கு பேருந்தை விட்டு இறங்கும்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று என் மேல் மோதி விட்டது, அப்போ அவ்வளவா எனக்கு வலி தெரியவில்லை, ஆனால் ரெண்டு நாளாக முதுகில் வின் விண்ணுன்னு வலி உயிர் போகுது டாக்டர் என்றேன் அவஸ்தையுடன்.

“கொஞ்சம் கட்டிலில் வந்து படுங்க, நான் இப்ப தொடர இடத்துல வலி இருக்குதா என்று என்னுடைய நடு முதுகை அழுத்தினார்”.

ஐயோ டாக்டர் அங்கதான் என்று கத்தினேன். ஒரு வழியாக பரிசோதனைகளை முடித்தார்.

டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லையே என்றேன்

“பயப்படற மாதிரி ஒன்னும் இல்லை, நான் எழுதி கொடுக்குற டெஸ்டுகளை நம்ம ஹாஸ்பிடல் லாபிலேயே எடுத்துடுங்க , வலி குறைய மாத்திரையும் எழுதி தரேன். ஒரு வாரம் கழித்து என்னை வந்து பாருங்கள்”.

நான் அவர் கூறிய டெஸ்டுகளை எடுத்து விட்டு ஒரு வாரம் கழித்து வந்து வாங்கி கொள்கிறேன் என்று கிளம்பினேன்.

என்னுடைய வீட்டை அடைந்தபோது மணி எட்டு அக்கியிருந்தது. அப்பா எப்பவும்போல் வாசலில் வெத்தலை போட்டுக்கொண்டிருந்தார். அம்மா அந்த காலத்து மனுசி, அப்பா கிழித்த கோட்டை தாண்ட மாட்டாள். எனக்கு இரண்டு தங்கைகள், மூத்தவள் சாந்தி bsc இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள், கடைக்குட்டி கோமதி பத்தாவது படிக்கிறது.

“சாந்தி அங்க என்னடி பண்ணற, நான் ஒருத்தி சமையல் அறையில் தனியாளாக வெந்து கொண்டிருக்கிறேன், உனக்கு அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுவோம்னு தோணுதா, என்று புலம்பி கொண்டிருந்தாள்”.

அண்ணா வந்தாச்சு அண்ணா வந்தாச்சு என்று ரெண்டு வாண்டுகளும் அம்மாவின் காதில் விழ வேண்டும் என்று கத்தினார்கள்.

ஆமாண்டி பொல்லாத அண்ணன் என்று அம்மா கூறுவது கேட்டது.

சாந்தி கொஞ்சம் காப்பி கொண்டு வா, ஒரே தலைவலியா இருக்கு என்று சோபாவில் அமர்ந்தேன்.

“டேய் சுரேஷ் சாந்திக்கு ஒரு நல்ல ஜாதகம் வந்திருக்குடா, மாப்பிள்ளை பாங்கில் வேலை செய்கிறாராம், நம்ம தரகர் போட்டோ கொடுத்திருக்கார் என்று அம்மா போட்டோவை என்னிடம் நீட்டினாள்”.

“போட்டோவில் அந்த இளைஞன் அழகாக சிறிது கொண்டிருந்தான். சாந்தி உனக்கு பையன பிடிச்சிருக்கா”

போங்கண்ணா என்று வெட்கப்பட்டு உள்ளே ஓடினாள். அம்மா ரொம்ப பெரிய இடமா இருக்கும் போலிருக்கே நம்மளால முடியுமா

“தலையை அடமானம் வைத்தாவது முடிச்சிடணும்டா என்றால் அம்மா உறுதியுடன்”. யார் தலையை என்றுதான் தெரியவில்லை,

மறுநாள் அலுவலகத்தில் வேலை பெண்டு நிமிர்ந்தது. மத்திய இடைவேளையின் பொழுது அம்மாவிடமிருந்து போன் வந்தது.

“டேய் சுரேஷ் மாப்பிள்ளை வீட்டுல வர சனிக்கிழமை பெண் பார்க்க வருகிறார்களாம், நீ ஆபீஸ்க்கு லீவு சொல்லிடு, அப்புறம் கடைசி நேரத்துல கால வாரிடாதே”, என்றாள்.

சாந்தி பட்டு புடவையில் தேவதை போல் இருந்தாள். காரின் ஹாரன் சத்தம் கேட்டதும் நன் வாசலுக்கு விரைந்தேன்.

“இவன்தான் எங்க பையன் சுகுமார் என்று மாப்பிள்ளையின் அப்பா அறிமுகப்படலத்தை தொடங்கினார். மாப்பிள்ளை லட்சணமாக இருந்தான்”.

இவ என் பொண்ணு கவிதா என்றதும் நான் அவளை பார்த்து பிரமித்து போனேன்.

பிரம்மன் செதுக்கிய ஓவியம் போலிருந்தாள். அவளுடைய கண்களில் ஒருவித கவர்ச்சி இருந்தது, கூர்மையான நாசி, செர்ரி பழம் போல உதடுகள், அவளுடைய வளைவுகள் எந்த ஒரு ஆண் மகனையும் சாய்த்து விடும் .

என் தங்கைதான் இதுவரை அழகு என்று நினைத்திருந்தேன், அந்த நினைப்பில் மண் விழுந்தது. என்னால் அவளிடமிருந்து பார்வையை எடுக்க முடியவில்லை.

என்ன உங்க பையன் எதுவுமே பேச மாட்டேங்கறார் என்று மாப்பிள்ளையின் அப்பா கேட்ட பொழுதுதான் நன் தன்னிலைக்கு வந்தேன்.

“மாப்பிள்ளை எங்க வேலை பாக்குறார்”

அப்பா இப்பாவது வாயை திறந்தீங்களே என்றாள் கவிதா குறும்பாக, அவள் குரலும் கூட அழகாக இருந்தது. சாந்தியை அனைவருக்கும் புடித்துவிட்டது.

எனக்கு உங்க தங்கச்சியை ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனால் என்னுடைய தங்கைக்கு நல்ல வரன் இன்னும் அமையல. உங்களுக்கு விருப்பம்னா என்னோட தங்கையை உங்க வீட்டு மருமகளா ஏத்துப்பீங்களா? என்று மாப்பிள்ளை பையன் கேட்டதும்,

அண்ணா உனக்கு கொஞ்சம் கூட வெவஸ்த்தையே இல்லை, என்று கவிதா சிணுங்கினாள்.

உங்க தங்கச்சிக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் என்றேன் கவிதாவை பார்த்தபடி, கவிதாவை போல ஒரு பெண் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று நினைத்து கொண்டேன்.

ஒரே மேடையில் தன்னுடைய பையனுக்கும் பொண்ணுக்கும் திருமணம் நடந்ததில் அம்மாவுக்கு ரெட்டிப்பு சந்தோசம்.

அன்று எங்கள் முதல் இரவு. நான் கவிதாவுக்கு காத்திருக்க தொடங்கினேன்.

கவிதா பால் சொம்போடு உள்ளே நுழைந்தாள், என் காலில் விழ முயன்றவளை நான் தூக்கினேன்.

கவிதா உனக்கு என்ன பிடிச்சிருக்கா என்றதும்

பிடிக்காமத்தான் உங்களுக்கு கழுத்தை நீட்டினேனா என்று வெட்கத்துடன் தலை குனிந்தாள்.

கவிதா நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா

ஆமா கல்யாணம் அனா புதுசுல எல்லாரும் இப்படித்தான் சொல்விங்க, அப்பறம் உங்களுக்கு அலுத்து போய்டும் என்றாள்.

இல்லம்மா நான் கொஞ்சம் வித்யாசமானவன் இன்னிக்கு சொன்னதுதான் என்னைக்கும் என்று அவளை அணைத்தேன், அதற்குமேல் அவளை நான் பேச விடவில்லை.

எங்களுக்கு திருமணம் ஆகி அதற்குள் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓடி கொண்டிருந்தது.

அன்று அலுவலகத்தில் பிசியாக இருந்த நேரம், எனக்கு அந்த போன் வந்தது.

“சார் நாங்க சுகந்தம் கிளினிக்கிலிருந்து பேசறோம், என்ன சார் எவ்வளவு தரம் உங்களுக்கு போன் பண்றது, உங்க ரிப்போர்ட்டை வந்து வாங்கிக்கோங்க சார், டாக்டர் எங்களை சத்தம் போடறார்.”

அப்போதுதான் சில மாதங்களுக்கு முன், சுகந்தம் கிளினிக் போனது நினைவுக்கு வந்தது. அதற்கப்புறம் எனக்கு முதுகு வலி இல்லாததால் சுத்தமாக மறந்தே போயிருந்தேன்.

என்னுடைய பழைய போனை கோமதியிடம் கொடுத்தது தப்பாக போய்விட்டது, அந்த வாண்டு எங்காவது தொலைத்திருக்கும்.

சாரி சார், இன்னிக்கு வந்து வாங்கி கொள்கிறேன் என்று போனை வைத்தேன்

நான் சுகந்தம் கிளினிக் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். சுரேஷ் நீங்க போகலாம் என்றதும் நான் டாக்டரின் அறைக்குள் நுழைந்தேன்.

“படிச்சவங்க நீங்களே இவ்வளவு அஜாக்ரதையா இருக்கலாமா, ரிப்போர்ட் வாங்க இவ்வளவு தாமதம் ஏன் என்று உள்ளே நுழைந்ததும் டாக்டர் கடிந்து கொண்டார். “

சாரி டாக்டர் எனக்கு திடிர்னு கல்யாணம் நடந்து முடிஞ்சிடிச்சு, அதான் என்று அசடு வழிந்தேன்

டாக்டரின் நீண்ட மௌனம் என்னை உறுத்தியது,

“டாக்டர் ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே எல்லாம் நார்மல் தானே”

சுரேஷ் மனசை தேத்திக்கோங்க, நான் சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீங்க அதிர்ச்சி அடைய கூடாது என்றதும் எனக்கு அடி வயிற்றில் கிலி உண்டானது.

“சாரி சுரேஷ் நீங்க ஒரு குழந்தைக்கு தந்தையாகும் தகுதியை இழந்துவிட்டிர்கள்”.

டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க, எனக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது

“டோன்ட் ஒர்ரி, என்னோட நண்பர் பெங்களுருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நியூரோ சர்ஜனாக உள்ளார், உங்கள் ரிபோர்ட்ஸை ஏற்கனவே அவருக்கு அனுப்பிட்டேன். நிச்சயமாக எதாவது தீர்வு கிடைக்கும், நம்பிக்கையோடு இருங்கள்”

நாட்கள் வேகமாக ஓடியது, எங்களுக்கு திருமணமாகி அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது.

அன்று நான் அலுவலகத்தில் பிசியாக இருந்த நேரம், கவிதாவிடம் இருந்து போன் வந்தது.

“ஏங்க கடவுள் கண் திறந்துட்டாருங்க”, என்ற அவள் குரலில் என்றுமில்லாத ஒரு உற்சாகம்.

“கவிதா சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லும்மா, எனக்கு நிறைய வேலை இருக்குது”

நீங்க அப்பாவாக போறீங்க என்று அவள் சொன்னதும் எனக்கு உற்சாகத்தில் ஆபீஸ் என்றும் பாராமல் கவிதா என்ன சொல்ற என்று கத்திவிட்டேன்

ஆமாங்க, நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என்று போனை வைத்தாள்.

என் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. எப்படி இது சாத்தியம், ஆபீசில் வேலை ஓடவில்லை.அன்று மாலை நான் சுகந்தம் கிளினிக் செல்வது என்று தீர்மானித்தேன்,

சுரேஷ் நீங்க மனசை போட்டு குழப்பிக்க தேவையில்லை, அட் டைம்ஸ் அதிசயமாக இப்படி நடக்க வாய்ப்புண்டு என்ற டாக்டரின் பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை.

அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை, தந்தையாக போகிறேன் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும், மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. என்னோடைய நிலைமை எந்த ஒரு ஆண் மகனுக்கும் வரக்கூடாது.

என்னங்க தூங்கலியா என்றாள் கவிதா

நீங்க முன்ன மாதிரி இல்ல, ஆபீஸ்ல எதாவது பிரச்னையா, நான் உண்டாயிருக்கேன் என்று தெரிந்தும் நீங்க என்கூட பேசாம மௌனமா இருக்கறது எனக்கு எவ்வளவு சங்கடமா இருக்கு தெரியுமா என்று அழ ஆரம்பித்தாள்.

கவிதா அழதாம்மா, ஆபீஸ்ல ஒரு பிரச்சனை அதன் என்று அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டேன். எனக்கு அப்போதுதான் கவிதாவின் வயிற்றிலிருந்த அந்த காயம் கண்ணில் பட்டது, கவிதா என்னம்மா இது காயம், மருந்து எதாவது போடறதுதானே என்றேன்.

“கொஞ்ச நாளாவே இருக்குங்க, டாக்டர்கிட்ட காமிக்கண்ணும்” என்று என் மடியில் சாய்ந்தாள். அவள் உடலில் பல இடங்களில் அங்கங்கே கீறல்கள் இருந்தது என் மனதிற்குள் பல சந்தேகங்களை கிளப்பியது.

கவிதாவை சந்தேகிக்க என் மனம் இடம் தரவில்லை, கவிதாவை சந்தேகப்படுவது என் தாயை சந்தேகப்படுவதற்கு சமம் என்று தோன்றியது.

எனக்கு தூக்கம் வரவில்லை, எழுந்து வெளியே வந்தேன். மனதை அமைதிப்படுத்த சில சமயங்களில் நான் புகை பிடிப்பதுண்டு. பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தேன்.

சட்டென்று மனதில் அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. இரண்டு மாதத்துக்கு முன் கவிதா தன்னுடைய சினேகிதி ராதாவின் பெண் குழந்தைக்கு பிறந்து நாள் என்று சென்றிருந்தாள். அன்று அவள் வருவதற்கு இரவு பத்து மணி ஆகிவிட்டது. எனக்கு தெரிந்து அவளுக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது, ராதாவை தவிர. என்னுடைய குழப்பத்திற்கான விடை ராதாவிடம் தான் கிடைக்கும் என்று தோன்றியது.

மறுநாள் மாலை பெசன்ட் நகரிலுள்ள ராதாவின் வீட்டை அடைந்தேன். வீடா அது ஒரு சிறிய அரண்மனைபோல் இருந்தது.

“வாங்க என்ன இவ்வளவு தூரம்” என்ற ராதாவின் கேள்விக்கு ஏற்கனவே யோசித்து வைத்திருந்த மாதிரி, ஆபீஸ் வேலையாக வந்தேன் என்று சமாளித்தேன்.

சாரி என்னால உங்க பொண்ணு பர்த்டே பார்ட்டிக்கு வர முடியவில்லை, என்னோட சின்ன ப்ரெசென்ட் என்று அவளிடம் அந்த கிப்ட்டை கொடுத்தேன்.

“கவிதா எப்படி இருக்கா”

“நல்ல இருக்கா, எங்க உங்க குழந்தையை காணும்”

“என்னோட மச்சினர்கூட பார்க்குக்கு போயிருக்கா”, என்று அவள் கூறி கொண்டிருக்கும்போதே அந்த இளைஞன் குழந்தையோடு உள்ளே நுழைந்தான்.

திலிப் நம்ம பாப்பா பர்த்டே பார்ட்டிக்கு வந்தாங்கல்ல என்னோட தோழி கவிதா, அவங்களோட கணவர் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.

என்னை பார்த்ததும் திலீப்பின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது, அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு நழுவினான். இவனிடம் ஏதோ தப்பு இருக்கிறது என்று மனதிற்குள் தோன்றியது.

அன்றிரவு நான் ராதா வீட்டிற்கு சென்றதை கவிதாவிடம் கூறியவுடன், எப்படிங்க இருக்கா என்று ஆர்வமாக கேட்டாள்

“கவிதா அன்னிக்கு ஏன் அவ்வளவு லேட்டா வந்தே “

“அன்னிக்கு ராதா வீட்லயே என்னோட கைப்பையை மறந்து வச்சிட்டேங்க, பாதி தூரம் வந்ததும்தான் தெரிந்தது, திரும்பி போய் எடுத்து வர நேரம் ஆயிருச்சு. “.

“பாவம்க அந்த திலிப் பையன்தான் என்னோட கைப்பையை தேடி எடுத்து கொடுத்தான், சொல்ல சொல்ல கேட்காம கூல் ட்ரிங்க்ஸ் வேற கொடுத்தான்”

” எனக்கு பொறி தட்டியது, கவிதா நீ போனபோது ராதா இல்லையா” .

“இல்லிங்க நான் போனபோது அந்த பையன தவிர யாருமே இல்ல? என்னமோ தெரியலீங்க கூல் ட்ரிங்க்ஸ் குடிச்ச உடனே தலையை சுத்துறமாதிரி இருந்திச்சு, அப்படியே சோபாவில் உட்கார்ந்துட்டேன். அதுக்கப்புறம் அந்த பையன் தண்ணி தெளிச்சதும்தான் எனக்கு நேரம் ஆனதே தெரிந்தது.”

“உங்ககிட்ட சொன்னா நீங்க திட்டுவீங்கன்னுதான் சொல்லல”

எனக்கு புரிந்தது, கவிதா அவளுக்கே தெரியாமல் களங்கப்பட்டிருக்கிறாள். நெஞ்சம் பதறியது, என் மனைவியின் கற்பை சூறையாடியவனை அவ்வளவு எளிதாக விட எனக்கு மனமில்லை. இரவு முழுவதும் யோசித்து கடைசியில் அந்த முடிவுக்கு வந்தேன்.

உங்களுக்கு இந்த நேரத்தில் பாண்டியனை பற்றி கூறியே ஆக வேண்டும். பாண்டியன் என்னுடைய கல்லூரி நண்பன். இன்றும் என்னுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்து கொள்பவன். பாண்டியனுக்கு படிப்பு அவ்வளவாக ஏறவில்லை, அதனால் ஒரு ஆட்டோமொபைல் ஷாப் வைத்து வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்கிறான். கொஞ்சம் கரடு முரடான ஆள், எனக்காக எது வேண்டுமானாலும் செய்வான்.

அன்று மாலை அந்த பாருக்குள் நானும் பாண்டியனும் அமர்ந்திருந்தோம்.

“என்னடா சுரேஷ் பார்த்து ரொம்ப நாளாச்சு, எப்படியிருக்க, உன்னோட மனைவி எப்படி இருங்காங்க”

நன் மௌனமாக இருந்தேன், எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருந்தது. பாண்டியனிடம் நான் எதையும் மறைத்ததில்லை, ஆனால் இந்த விஷத்தை எப்படி சொல்வது என்று தயக்கமாக இருந்தது.

“டேய் சுரேஷ் என்ன பிரச்சனை, நீ இப்படி அமைதியா இருந்து நான் பார்த்ததே இல்லையே, எதுவா இருந்தாலும் சொல்லு, நான் இருக்கிறேன்”

எனக்கும் யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினேன். அவன் முகத்தில் பலவிதமான மாறுதல்கள்.

“ராஸ்கல் என்ன தைரியம், டேய் சுரேஷ் அந்த நாயை விட கூடாதுடா” என்று மேஜையை ஓங்கி குத்தினான்.

என்னுடைய திட்டத்தை அவனிடம் கூறினேன்.

“சுரேஷ் நீ சொல்வதுதான் சரி, இதுதான் அந்த மிருகத்துக்கு சரியான தண்டனை”

பாண்டியன் அதன் பிறகு செயலில் இறங்கினான். எங்கள் திட்டப்படி திலீபனை பாண்டியன் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வந்தான்.

ப்ளீஸ் என்னை விட்டுடுங்க தெரியாம பண்ணிட்டேன், என்று பாண்டியன் கொடுத்த டிரீட்மென்டில் உண்மையை ஒப்பு கொண்டான்.

அப்போது மாரி உள்ளே நுழைந்தான். மாரி பாண்டியனின் நண்பன், அரசாங்க ஆஸ்பத்திரியில் கம்பௌண்டராக உள்ளான்.

வா மாரி இவன்தான் பையன், வேலைய கச்சிதமா முடிச்சிரு என்று மாரிக்கு ஆர்டர் போட்டுவிட்டு என்னையும் வெளியே தள்ளி பாண்டியன் அந்த ரூம் கதவை சாத்தினான்.

பாண்டி மாரி கரெக்டா வேலையே செஞ்சி முடிப்பானா என்றேன்.

“நம்ம மாரி பத்தி என்ன நினைச்ச, டாக்டருக்கும் மேல, அவன் கை வச்சான்னா சக்ஸஸ் தான், அவ்வளவு கச்சிதமா சொன்ன வேலைய முடிப்பான்.”

கதவு திறந்து மாரி வெளியே வந்தான், பாண்டி பையன் இனிமே டம்மி, நான் வரேன் எதாவது வேலை இருந்த சொல்லிஅனுப்பு என்று கிளம்பினான்.

“சுரேஷ் இவன் இனிமேல் எந்த ஒரு பெண்ணையும் தொட முடியாது, நம்ம மாரியோட கைராசி அப்படி என்று சிரித்தான்”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *