மறந்தவனின் திட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 22,849 
 

இராணுவத்தில் மன நல மருத்துவராக பணி புரிந்து சலித்துப்போய் வெளி உலக மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய விரும்பி விருப்ப ஓய்வு பெற்று வெளி வந்த டாக்டர் கணேசுக்கு அரசாங்கத்தால் ஒரு இடம் சகாய விலைக்கு கிடைக்கப்பெற்று மருத்துவமனையை கட்டினார். இருந்தாலும் அந்த இடத்தில் அரசாங்க மந்திரிகளும்,அதிகாரிகளுமே இருந்ததால் நான்கு கிலோ மீட்டர் தள்ளி நகரத்துக்குள் ஒரு கிளினிக் வைத்து மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை நோயாளிகளை கவனித்து வந்தார்.

இரவு மணி பத்துக்கு மேல் இருக்கும்!.வேற யாராவது வெளிய நிக்கிறாங்களா? கேட்டதற்கு டாக்டர் ஒரு பேஷண்ட் மட்டும் இருக்காரு, சா¢ வரச்சொல். கை கழுவும் எண்ணத்தை தள்ளிப்போட்டு வரப்போகும் பேஷண்டை கவனிக்க தயாரானார்.

வந்தவர் எதுவும் பேசாமல் டாகடா¢ன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். வயது சுமார் நாற்பதுக்கு மேல் இருக்கும். சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்க டாக்டர்தனே? இந்த கேள்வி டாக்டரை சுவாரசியப்படுத்தியது. யெஸ் நான் டாக்டர்தான், உங்களுக்கு என்ன பிரச்சினை? டாக்டர் கொஞ்ச நாளா எனக்கு எல்லாமே மறந்து போகுது. இப்ப கூட நான் எதுக்கு இங்க வந்தேன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

ராம் இவர் கூட யாராவது வந்திருக்காங்களா?உள்ளே எட்டிப்பார்த்த வார்டு பாய் ஒருத்தர் வந்து இவரை உட்கார வச்சுட்டு இப்ப வந்திடறேன்னு போனாரு, இது வரைக்கும்
காணல. டாக்டர் கணேசன் யோசனையாய் எதிரில் உட்கார்ந்திருந்த நோயாளியை பார்த்தார்.

நீங்க யார் கூட வந்தீங்கன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? தெரியல டாக்டர் நான் உட்கார்ந்துட்டு இருந்தேன். உள்ளே கை காண்பிச்சாங்க அப்படியே வந்தேன்.ஆமா நான் எதுக்கு இங்க வந்திருக்கேன்?

டாக்டர் வாட்சை பார்த்தார் மணி பதினொன்றை தொட இன்னும் பத்து விநாடிகள் இருந்தன. வீடு போக வேண்டும். இந்த கிளினிக் வேலையே இப்படித்தான். அதுவும் மனோதத்துவம் என்றால் இது போன்ற தொல்லைகள் வந்துகொண்டே இருக்கும். சோர்ந்து போன மனசை நிதானப்படுத்திக்கொண்டார்.

ஒரு கப் காப்பி குடிக்கிறீங்களா? சரி என தலையாட்ட மீண்டும் ராம் அழைக்கப்பட்டு ஒரு கப் காப்பி வந்தவருக்கு கொடுத்தார். வந்தவர் அதை குடித்துவிட்டு தேங்க்ஸ் என்று
வார்த்தையை உதிர்த்துவிட்டு நீங்க டாக்டர் தானே? என்று மீண்டும் கேட்க ராம் பேந்த பேந்த விழித்தான்.

நம்ம ஹாஸ்பிடல்ல இவரை கொண்டு போய் அட்மிசன் பண்ணிடு, காலையில் மத்ததெல்லாம் பார்த்துக்கலாம். கொட்டாவி விட்டவாறு கிளம்பினார்.

மறு நாள் இவரின் மருத்துவமனையில் மற்ற நோயாளிகளை பார்த்துவிட்டு அறைக்கு வந்த உட்கார்ந்த் போதுதான் நேற்று இரவு வந்திருந்த நோயாளியின் ஞாபகம் வந்தது.

செகரட்டரியை அழைத்து நேத்தி இராத்திரி ஒரு பேஷ்ண்ட் வந்திருந்தாங்களே? அவங்க எங்க இருக்காங்க?செகரட்டரி திரும்பி நர்சை பார்த்து ஏதோ கேட்டு டாக்டர் அவரை
நம்ப புது பில்டிங் கீழ் ரூம்ல அட்மிட் போட்டிருக்கோம். உடனே கிளம்பினார் அந்த பேஷ்ண்ட்டை பார்க்க.

உள்ளே அமைதியாய் உட்கார்ந்திருந்தார் “குட்மார்னிங்க்”. திரும்பியவர் “குட்மார்னிங்க்”என்று சொல்லிவிட்டு ஆமா நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்?

சும்மாதான் எனது விருந்தாளியாக வந்திருக்கீங்க, சாபிட்டாச்சா? சாப்பிட்டேன், காலையில குளிச்சு ரெடியாயிருக்கீங்க?டாக்டர் ஏதோ தோணுச்சு குளிச்சு வெளிய வந்தேன், இட்டிலி கொண்டு வந்தாங்க, சாப்பிட்டேன். “குட்” இப்ப சொல்லுங்க உங்க பேர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?என்னைய ஏதோ சொல்லி கூப்பிடறது மனசுக்கு தெரியுது, ஆனா என்ன சொல்லி கூப்பிட்டாங்கன்னு தெரியமாட்டேங்குது. சரி உங்க்ளோட யார் இருக்காங்கன்னு ஏதாவது ஞாபகம் வருதா? டாக்டர் என் கூட யாரோ இருந்தாங்கன்னு மனசுக்கு தெரியுது ஆனா யாருன்னு ஞாபகம் வரமாட்டேங்குது.!அப்படியா? என்றவர் ஒரு கையில் ஒரு பத்தகத்தை எடுக்க முயற்சிக்க அது கை தவ்றி கீழே விழப்போனது.அந்த நோயாளி உடனே பாய்ந்து அந்த புத்தகத்தை பிடித்து டாக்டர் கையில் கொடுத்தார். “தேங்க்ஸ்” நீங்க ரெஸ்ட் எடுங்க, சொல்லிவிட்டு அப்படியே வெளியே கொஞ்சம் உலாத்திட்டு வாங்க, காலையில நீங்க சாப்பிட்டது போதுமா இருந்த்தா, இல்லையின்னா மறுபடி ஏதாச்சும் கொண்டு வரசொல்லாவா?வேணாம் டாக்டர் இட்லி சாப்பிட்டதே இன்னும் வயித்துல இருக்குது.

“நர்ஸ்” கூப்பிட,உள்ளே வந்த நர்சிடம் இவருக்கு மதியம் நான் சொல்ற மாத்திரையை கொடுங்க.யாராவது அவரை தேடி வந்தாங்கன்னா இருக்கச்சொல்லுங்க.ராம் வந்துட்டானா? சார் என்று உள்ளே வந்தவனிடம் இராத்திரி இவரை எப்படி கூட்டிட்டு வந்தே? நம்ப ஆம்புலன்சை வரச்சொல்லி இங்க கூட்டிட்டு வந்துட்டேன்.கூட்டிட்டு வரும்போதாவது, இல்ல, அதுக்கப்புறமாவது யாராவது இவரை கேட்டுட்டு வந்தாங்களா?

இல்லையென்று தலையாட்டினான்.சரி இவரை கவனிச்சுங்குங்க சொல்லிவிட்டு தன் அறைக்கு விரைந்தார்.

அறைக்குள் அவரது சீட்டுக்கு எதிரில் ஒருவர் இவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார்.இவரை கண்டவுடன் எழுந்து ஐ’ம் சியாம்சுந்தர், நேத்து என்னோட பிரதரை உங்க கிளினிக்குல விட்டுட்டு போய்ட்டு வரதுக்குள்ள அவரை உங்க ஹாஸ்பிடல்ல அட்மிசன் போட்டுட்டீங்க, சாரி உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்துட்டோம்.

சொன்னவருக்கு, இட்’ஸ் ஆல்ரைட் அதெனாலென்ன? ஆமா அவருக்கு எப்பத்தலயிருந்து இந்த பிரச்சனை? கொஞ்ச நாளாவே இந்த பிரச்சனை இருக்குது டாகடர். நான் அதுக்காகத்தான் உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணலான்னு அன்னைக்கு இவரையும் கூட்டிட்டு வந்தேன். அதுக்குள்ள என் கம்பெனியில இருந்து போன் வந்துடுச்சு, நீங்க கூப்பிடறதுக்குள்ள் வந்துடலாம்னு போயிட்டு வர்றதுகுல்ல இங்க வந்துட்டாரு.

இவரை இங்க வச்சு பாக்கறீங்களா? இல்ல வீட்டுக்கு கூப்பிட்டு போய்ட்டு அப்புறமா வந்து பாக்கறீங்களா? நோ டாக்டர் அவருக்கு கிளீயர் ஆகற வரைக்கும் இங்கேயே இருக்கட்டும், தேவையான பீஸை இப்பவே கட்டிடறேன். ஓ.கே பில் செக்சன்ல பணத்தை கட்டிடுங்க, சொல்லிவிட்டு சாரி நான் கொஞ்சம் வெளியே போகணும் சொல்லி கிளம்பியவரிடம் ஷ்யூர் டாக்டர், “தேங்யூ” சியாம்சுந்தர் பில் செக்சனை நோக்கி விரைந்தான்.

ஒரு வாரம் ஓடியிருக்கும், இரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் இருக்கும் எதிரில் ஒரு மத்திய மந்திரி வீட்டில் பரபரப்பு.அவரை யாரோ கொலை செய்துவிட்டதாகவும், போலீஸ் உள்ளே வரவும் போகவும் இருந்தது. ஹாஸ்பிடலில் நல்ல தூக்க கலக்கத்திலிருந்த நர்ஸிடம் வார்டு பாய் ராம் விலா வாரியாக சொல்லிக்கொண்டு அந்த தூக்க கலக்கத்தை விரட்டிக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் உள்ளே வந்த சியாம் சுந்தர் இவர்கள் அனைவரும் சுற்றி பேசிக்கொண்டிருப்பதை பார்த்து என்ன் சிஸ்டர்? எல்லோரும் பரபரப்பா
பேசிக்கிட்டிர்ய்க்கீங்க? நம்ம ஹாஸ்பிடல் எதிர்ல ஒரு மந்திரிய கொலை செஞ்சுட்டாங்களாம். அதுதான் ஒரே பரபரப்பாயிருக்கு.அப்படியா! ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு எப்படி கொன்னாங்களாம்?தூங்கிட்டு இருக்கும்போது சுட்டுட்டாங்களாம்.சுவாரசியமாய் பதில் சொன்னாள் அந்த நர்ஸ். சரிங்க சிஸ்டர் நான் பிரதரை பார்த்துட்டு கிளம்பறேன் விடை பெற்றான்.

மறு நாள் பேப்பரில் “மந்திரி சுடப்பட்டார்” உடனடியாக மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி வந்திருந்தது.அனேகமாக அவர் இறந்திருக்கலாம் அரசாங்கம் அதை மறைத்து வைத்துள்ளது என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். குறிப்பாக வார்டு பாய் ராமுவுக்கும், அங்குள்ள நர்ஸ்களுக்கும் அதுதான் முக்கியமான பேச்சு.

இந்த களேபரங்கள் ஓய்ந்து ஓரிரு நாட்கள் ஓடியிருந்தது. சியாம் சுந்தரின் சகோதரர் ஓரளவு தெளிவாகிவிட்டதாக தோன்றியது. தன் பெயர் ராஜேஸ் என்று ஞாபகம் வந்துவிட்டதாகவும், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்கள் வருவதாக தெரிவித்தான்.சியாம் டாக்டரை பார்க்க விரைந்தான்.

ரொம்ப “தேங்க்ஸ்” டாக்டர் என் பிரதர் இப்ப ரெடியாயிட்டார், அதனால டிஸ்சார்ஜ் பண்ணி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்னு இருக்கேன்.தாராளமா போகலாம் என்று செகரட்டரியிடம் சொல்லி கணக்கை முடிக்க சொன்னார். சியாம் சுந்தர் தன் சகோதரனை கூட்டிக்கொண்டு வெளி வந்த பொழுது இன்ஸ்பெக்டரும்,கூட நான்கைந்து காவலர்களும் அவர்கள் இருவரையும் கைது செய்வதாக தெரிவித்தனர்.

சியாம் சுந்தர் வாட் இன்ஸ்பெக்டர்? எதுக்காக எங்களை கைது பண்ணறீங்க?நான் இந்த சமூகத்துல பெரிய அந்தஸ்துல இருக்கறவன்,சீறினான். கூல் மிஸ்டர் சியாம் சுந்தர், உங்க பிரதரும் நீங்களும் எதுக்காக இந்த ஹாஸ்பிடல்ல அட்மிசன் வாங்கினீங்கன்னு எங்களுக்கு தெரியும். உங்க பிரதருக்கு எந்த வியாதியும் கிடையாதுங்கறதும் எங்களுக்கு தெரியும். சத்தமில்லாமல் வந்தா நாகரிகமா கூட்டிட்டு போயிடறோம்.

டாக்டர் கணேசன் இராணுவத்திலிருந்து வெளியே வந்தாலும், அந்த இரவில் “எனக்கு ஞாபகம் இல்லை” என்று ஒருவன் வந்ததும், அவனை ஒருவன் கொண்டு வந்து வேண்டுமென்றே விட்டு சென்றதும் டாகடரின் மூளைக்கு சந்தேகத்தை உண்டு பண்ணின என்றாலும் அதை உறுதி செய்ய காலை இவன் எழுந்து யார் உதவியும் இன்றி குளித்து உடை மாற்றி தயாராகியதும் இல்லாமல் காலையில் இட்லி சாபிட்டதை இரு முறை அழுத்தி சொன்னதையும், டாக்டர் வேண்டுமென்றே தவற விட்ட புத்தகத்தை பாய்ந்து சென்று பிடித்து கொடுத்ததையும் உறுதி செய்து கொண்டார்.

இவன் ஆரோக்கியமானவன்.நாடகமாடுகிறான் என்று. எதற்காக இந்த நாடகம் என்று போலீஸ் உதவியுடன் கண்காணிக்க ,மந்திரிக்கு குறி வைப்பதை தெரிந்துகொண்ட போலீஸ் மந்திரியை பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்ய, இது தெரியாமல், இவன் வெறும் தலையணையை சுட்டுவிட்டு மருத்துவமனையில் வந்து பதுங்கிகொண்டான். மந்திரி இறந்துவிட்டாரா என்பதை தெரிந்து கொள்ளவே சியாம் சுந்தர் அன்று மருத்துவமனை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்துள்ளான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *