குற்றத்தின் பின்னனி யார்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 18,509 
 

நல்லாதார் பட்டி எனும் ஊரின் புளியமரத்தடியில், தினாவும்-தீபிகாவும், நீண்ட நேர விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

நீ சந்தேகப் பட்றடா……நான் அவ்ளோதான் சொல்வேன், என்றபடி பேச்சை நிறுத்தினாள் தீபிகா.

அப்பறம் ஏன் நீ எனக்கு முன்ன மாதிரி போன் பண்றது இல்லை? க்ளாஸ்ல அடிக்கடி இருக்க மாட்டேங்கற? உம் சொல்லு தீபி, என்றவாறு தினா தன் வாயை மூடுகின்றான்.

நீ சொல்றது சரிதான், அதுக்காக நான் ஜேம்ஸ் கூட சேர்ந்து சுத்தறேனு சந்தேகப்படற நீ? அவன் ஜஸ்ட் ஃப்ரண்டு அவ்ளோதான். வீட்டில முன்ன மாதிரி இல்லடா, அம்மா பயங்கரமா நோட் பண்றாங்க அதான் மெஸேஜ் பண்றது, போன் பேசறதும் குறைச்சுக்கிட்டேன். க்ளாஸ் விட்டு நான் லைப்ரரி தான் போறேன், நீ சந்தேகிக்கற மாதிரி எவன் கூடயுமில்லடா…..

பொய் சொல்லாத தீபி! நீயும், ஜேம்சும் பைக்ல போனத குமார் என்கிட்ட சொல்லிட்டான்.

ஓஹோ அப்படியா! ஆமா போனேன். அவசரமா ஹாஸ்பிட்டலுக்கு போகறதுக்காக நின்றிருந்தப்போ, ஜேம்ஸ் வந்தான். அதான் அவன் கூட ஏறிப் போனேன். அது தப்புங்கறயா சொல்லிட்டுப் போ….. ரொம்ப சந்தோஷம்டா தினா….சந்தோஷம்….விடு!

அதுக்கில்ல தீபி…. குமார் சொன்னதாஆஆஆல……!

உம்ம்ம்ம்….ஹீம்….. அவன் சொல்லி நீ நம்பற…! இதுதான் நீ இந்த மூணு வருசத்துல என்னை காதலிச்ச லட்சணமாக்கும் போடா…டேய்….போடா…..

ஸாரி…தீபி..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….

நோ! இதுக்குமேல நமக்குள்ள ஒன்னுமில்லடா சரியா…… போதும் விட்டிடு…ஓகே…..பைய் பைய்!

ஹேய்…….ஹேய்….தீபி!

தினா கத்துவதை அலட்சியப்படுத்திக் கொண்டு, தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்திக்கிட்டு அவளின் வில்வாதனூர் கிராமத்தை நோகி சென்றுவிட்டாள் தீபிகா.

***

ஈரோடு அரசு கல்லூரியின் வாயில் முன்பு, இரைச்சல்களோடு வாலிபர்கள் கூட்டம். இக்கூட்டத்தின் நடுவில், தினாவும் ,ஜேம்சும் இரத்தக் காயங்களுடன், ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்க, அவர்களை குழுமியிருந்த சகாக்கள் விலக்கி இழுத்து கொண்டிருந்தனர்.

டேய் ஜேம்ஸ்… சின்ன வயசுல இருந்து கூடவே சுத்திட்டு, இப்போ இப்புடி பண்ணிட்டல…. விடமாட்டன்டா, உன்னை கொலை செய்யாம விடமாட்டேன்டா…. முதுகுல குத்ற துரோகி…. என்றவாற கர்ஜித்தான் தினா.

பின்பு சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்துவிட்டது.

***

ஜேம்சும், தினாவும் பால்ய வயது தொட்டே நண்பர்கள். இவர்களின் மத்தியில் தற்போது தீபிகாதான் முள்ளம் பன்றியின் முட்களாய்………

தீபிகா-தினா வெவேறு கிராமத்திலிருந்து, இரயில் மூலம் தினமும் ஈரோட்டு அரசு கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் காதல், ஒரு அழகிய இரயில் பயணக் காதல். மூன்று வருடக் காதல்.

அன்பின் மிகுதி, தினா தீபியை சந்தேகிக்கின்றான். தீபிகா ஜேம்சுடன் சகஜமான நட்பைக் கொண்டிருந்தாலும், அங்கு சில வழி மாற்றங்கள் இருக்கவே செய்தது.

ஒரு மாதம் கழிந்தது…..

***

கிருஷ்ணன், தினாவைச் சந்தித்து, தீபிகா-ஜேம்ஸ் இருவரும் அடிக்கடி பார்க்கில் இருப்பதாகவும். நேற்று முன்தினம் சனிக் கிழமை இருவரும், எங்கள் லாட்ஜீக்கு வந்ததாகவும், அங்கு அவர்கள் சல்லாபம் புரிந்ததாகவும் தொடராய் உரைத்தான்.

டேய்….! என்னடா சொல்ற என் தீபீயா….. என கிருஷ்ணனின் சட்டையினை ஆத்திரத்தோடும், தயக்கத்தோடும் புடித்தான் தினா.

நான் ஒன்னும் பொய் சொல்லுலடா, லாட்ஜ்ல நான் பார்ட் டைம் ஒர்க் பண்றேன்ல, அப்படி நான் ஒர்க்ல இருக்கறப்போதான், அவங்க உள்ள வந்தாங்க. அவங்க என்னைய கவனிக்கல. ஆனா, நான் அவங்கள பார்த்துட்டேன்… ஸோ அப்படியேய் பின்னடியே போனேன். அவங்க ரூம் நம்பர் முப்பத்திரெண்டுல, ஜன்னல் வழிய காமிரா செட் பண்ணி வீடியோ எடுத்திருக்கேன்டா…..தினா….

என்னட பார்க்கற…..

எங்க லாட்ஜ்ல இது சாதாரனம். காலேஜ் பொண்ணுகளுகள இப்புடி ரூம் கொடுத்து, அத லாட்ஜ் வொர்க்கர்ஸ விட்டே வீடியோ எடுத்து காசு பார்க்கறது….. இதுல போலீஸ் ரெய்டு அப்டி இப்புடினு எவனுயம் வந்தா, எங்க ஓனர் பெட்டி, குட்டினு கொடுத்து மடக்கிடுவாரு….!

ஆனாட தினா, நீ உண்மையா காதலிக்கற….. இந்த ஒன்னுக்காகத்தான்டா சந்தேகப்பட்டு அவங்க பின்னாடி போனேன். பார்த்த இப்படி பண்ணிட்டு இருந்தாங்க…. அதான் உன்னிட்ட காட்டனும் நீ அவள நல்ல நாலு வார்த்தை கேட்கனும்னுதாண்ட நா வீடியோ பண்னேன்டா மச்சி….. நான் இதை யார்கிட்டயும் காட்டலடா…..

என்னட தினா, இன்னும் சந்தேகம்னா இந்த பாருடாவென கிருஷ்ணா தன் செல்போனை நீட்ட, தினா அதனை தட்டி விட்டு முகத்தினையும் திருப்பிக் கொண்டான்.

தினாவின் கண்களில் நீர் தேக்கம் திறந்துவிடப்பட்டது. துரோகம், அவனை துளைத்தெடுத்தது.

தினாவின் சந்தேகத்தால் அவனை வெறுத்திட்ட தீபி, இப்படி மாறிப்போனது உண்மையே. தீபி அதனை சரியென்றே உணர்ந்திட்டால். இதற்கு ஜேம்சின் பெரும் ஆசை வார்த்தைகளும் ஒரு அழுத்தமான காரணம்.

ஜேம்ஸ் ஒரு மேட்டுக்குடி….. தினா ஒரு நடுத்தர வர்க்கம்!….

***

நம்பிக்கை துரோகம் தாங்க முடியவில்லை தினாவுக்கு….!

மூன்று வருடக் காதல்…. அவளின் ஒவ்வொரு அன்புப் பரிசினையும் உடைத்து நொறுக்கினான் தினா….!

தினா….! தீபிகாவிற்காக ஆசையோடு ஒரு மனை இடத்தை, தன் தங்க அரைஞண் கயிற்றை விற்று வாங்கிக் கொடுத்திருந்தான் அன்புப் பெருக்கில். தீபியின் பெயரிலயே அதனை பதிவு செய்திருந்தான். தனது வருங்கால மனைவிக்கு அவன் இப்படி ஒரு நல்ல பரிசினை பெரும் முயற்சி எடுத்து பெற்று தந்தான்.

ஆனால்….

இவள் இப்படி செய்திட்டாளே எனும் ஆத்திர உணர்வு, தினாவினை கொலை செய்யவே தூண்டிவிட்டது. ஆரம்பத்தில் தற்கொலை என்ற தனது மனநிலையினை மாற்றி, கொலை என்று துணிந்தான் தினா.,.

தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, இரவு 11;30 மணிக்கு வில்வாதனூர் நோக்கி செல்லும் போது, தனது வண்டி புளியமரத்தருகில் நின்றது. என்னவென புரியா தினா, வண்டியை விட்டு கீழிறங்கி பார்த்த பொழுத்து, சோக் அடைத்திருந்தது. அதனை சரி செய்திட்ட தினா, தன் பைக்கில் ஏற முயன்ற போது, அவன் பின்னால் இருந்து தென்பட்ட வாகன வெளிச்சத்தால் ,தன் முகத்தை பின்புறமாக திருப்பினான் தினா……!

அந்த நேரம், திடீரென, கூரிய அரிவாள் ஒன்று, தினாவின் முதுகில் உள்நுழைந்து வெளியேறியது. பின்பு, கழுத்தில், இடுப்பில் என தொடர்ந்து வெட்டுக்கள் விழ, இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து, அந்த கணமே இறைப்பைத் தழுவினான் தினா….!

இரத்தம் தோய்ந்த அரிவாளை, தூக்கி எறிந்துவிட்டு தங்கள் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தனர், கிருஷ்ணாவும், அவனது கூட்டாளி சுந்தரும்.

***

ஆறு மாதங்கள் உருண்டோடியாகிவிட்டது.

தீபிகாவின் அம்மாவும், அப்பாவும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்கள்.

செய்தது நாங்கதான் சார். என் மகளோட நடத்தை ரொம்ப நாளாவே சரியில்லைங்க. அக்கம் பக்கத்துல இருக்கறவங்க பேச்செல்லாம் சகிச்சுக்க முடியல. நாங்களும் அவகிட்ட ரொம்ப சொல்லி பார்த்தோம். ஆனா அவ எங்களை மதிக்கவே இல்லை. பாவம் அந்த தினா தம்பி, அவனை இவள்தான் கொலை செய்திருக்கா சார். அதான் எங்க மனசு பொறுக்க முடியாம, பெத்த மகள்னாளும் பரவாயில்லைனு, அவளுக்கு சாப்பாட்டுல விசத்தை கலந்து கொலை பண்ணினோம் சார்.

என்றவாறு, தீபிகா கொலை குறித்து, அவளது பெற்றோர்கள் வாக்கு மூலம் கொடுத்து, ஒப்புக் கொண்டனர்.

இப்படி ஒரு மோசமானவளை பெற்ற துயரத்தில் இருவரும் துணிந்து இப்படி தன் மகளையே கொலை செய்துவிட்டனர். இன்று தீபிகாவின் பெற்றோர்கள் தண்டனை கைதிகளாக சிறையில் வாழ்க்கையினை தொடங்கிவிட்டார்கள்.

***

இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஜேம்ஸ் காவலர்களால் கைது செய்யப்பட்டான்.

தனது உடலை வைத்து, கிருஷ்ணாவினை தூண்டி தினாவை கொலை செய்தாள் தீபி. மேலும் ஜேம்ஸ் உடனான தனது உறவு இவனுக்கு தெரிந்துவிட்டது என்றறிந்து, தீபிகா மெல்ல இப்படி ஒரு செயல் திட்டம் வகுத்துள்ளாள். அதாவது, கிருஷ்ணாவிற்கு ஆசைகாட்டி தினாவை முடிப்பது.

பின்னர் ஜேம்ஸை வைத்து, கிருஷ்ணாவை முடிப்பதென. தீபிகாவின் திட்டப்படி அவள் இருவரையும் கொலை செய்துவிடுகிறாள். பின்னர் அவளின் போக்கு காசிற்க்காக ஜேம்சுடனும், இன்னும் சிலருடனும் நட்பு என்ற போர்வையில் விலை மாதுவாக ஆகிவிடுகிறாள்.

தினா கொலை குறித்தும், அதன் பின்னர் நடைபெற்ற கிருஷ்ணாவின் கொலை குறித்தும் காவலர்கள் விசாரனையில் சுந்தர் கைது செய்யப்படுகிறான். இவன்மூலமே ஜேம்சும் கைது செய்யப்படுகிறான். இவர்கள் இருவரின் வாக்குமூலங்களிலிருந்து, அடுத்ததாக தீபிகாவினை நோக்கி நகர்ந்து வழக்கு. இந்த சூழலில்தான் தீபிகா அவளது பெற்றோர்களால் கொலை செய்யப்படுகிறாள்.

***

காம இச்சைகளுக்காக அலைந்த மாது அடிமையான ஜேம்ஸ் இப்படி கொலைகாரன் ஆகிவிட்டு, தண்டனை பெற்றுவருகிறான்.

தனது நண்பனுக்காக, வெறும் மது அடிமையான சுந்தரும் இன்று குற்றத்தின் முக்கிய நபராக உருவாகி, சிறையில் தள்ளப்பட்டுவிட்டான்.

தன்னுடைய சுகபோகங்களுக்காக, பிறரை, அதுவும் உண்மையாக நேசித்தவனையே கொலை செய்த தீய பிறப்பான தீபிகாவினை, அழித்து சமூக கேட்டுகளை களைந்த தீபிகாவின் பெற்றோர்களும், நீதியின் முன்னால் குற்றவாளிகளாக பார்க்கப்பட்டு, பாவப் பரிகாரம் தேடிக் கொண்டுள்ளனர் சிறைவாசத்தில்.

இவர்களெல்லாம் இப்படி இருக்க. மூளை கோளாறால் பாதிக்கப்பட்டு தினாவின் அப்பா சுதீஷ்வரன் மருத்துவமனை வாழ்க்கையினை மேற்க்கொண்டுள்ளார். தினா கொலை செய்யப்பட்ட சில தினங்களிலயே, அவனின் அம்மா பரமேஸ்வரி, துக்கத்தாலே மடிந்துவிட்டால். இதன் எதிரொலியாக, சுதீஷ்வரன் இன்று மனநலம் பாதிக்கப்பட்டவராக.

ஒட்டுமொத்த சமூகத்தில், தனியொருவர் செய்யும் தீங்கு இப்படி சுற்றியுள்ளவர்களையும் பொசுக்கிவிடுகின்றது. அதில் குற்றம் இழைத்தவரும் தண்டிக்கப்படுகிறார்கள். பலி பாவம் அறியாதோரும் அழிக்கப்படுகிறார்கள். அன்பின் மிகைதியினால் ஏற்படுகின்ற சந்தேகத்தின் திசை எப்படியெல்லாமோ மாறிவிட்டது. சதைத் தேடலுக்காக, புனிதமான காதலை கருவியாக மாற்றப்படுதலின் முடிவு இப்படித்தான் ஏதோ ஒரு பெரும் சோக நிகழ்வினை நிகழ்த்திவிடுகின்றது. அது உடன் நடைபெறலாம், இல்லையேல் காலம் தாழ்ந்து நடைபெறலாம்.

ஏதோ ஒரு சிறு புள்ளியில் தொடங்கி, இப்படி பலரினை காவு வாங்கிய இந்த நிகழ்வுகளின், குற்றப் பின்னனியாக யாரைக் கூறுவது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *