ஊழ்வினை உறுத்தும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 14,148 
 

துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில் அவன் அப்படி செய்திருக்ககூடாது தான் இருந்தாலும் யார் செய்த புண்ணியமோ ஏன் முற்பிறவியில் அவன் செய்த புண்ணியமாக கூட இருக்கலாம் ஒருவேளை தெறித்த தோட்ட கூட அவன் காதருகே “டேய் நவுருடா” என்றதோ யார் கண்டார்கள்! காலில் சுருங்கெற்று கடிக்க, குனிந்தவன் அன்று எதிரில் நிற்பவனை பரலோகம் அனுப்பி வைத்தான். வைத்தவன் குறி தப்பியது, இது அடிக்கடி பரம்பொருளுக்கே நடக்கும்போது இவனுக்கு நடவாதா? என்ன!. துப்பாக்கியின் முனையில் இருந்து வெளிப்பட்ட அந்த சூட்டின் புகைச்சல் தான் இப்போது எய்தவனின் நெஞ்சிலும் புகைகிறது.

அது ஒரு நடையாளர் பூங்கா ஏரிகறையின் ஓரத்தில் அமைந்துள்ள அந்த பூங்காவில் சுமார் இருவது வருடங்களுக்கு முன்பு மும்மாரி மழையினால் ஏரியில் தண்ணீர் வழிந்தோடும் மேட்டுகுடிகள் படகு சவாரி செய்வார்கள் பூர்வகுடிகள் அங்கே மீன் பிடித்து அவர்களை வேடிக்கை பார்ப்பார்கள் யார் கண்பட்டதோ இல்லை கண்படவில்லை மனிதனின் கால்பட்டுவிட்டதுஇருபது ஆண்டுகளில் ஏரி மயானமானது புதர் மண்ட தொடங்கியது கயவர்கள் அடைகலம் அடைந்தார்கள் வடமதுரையின் கோவா லாஸ்விகாஸ் எல்லாம் அந்த பூங்கா தான் கஞ்சா தொடங்கி கேட்டது கிடைக்காதது என்று எதுவும் அங்கில்லை இருந்தும் சில வேடிக்கை மனிதர்கள் வாடிக்கையாக நடைபோடுவதுண்டு ஆகயால் அந்த மாலைவேளையின் அவ்வபோது இப்படி சில சம்பவங்கள் நடப்பதுண்டு அதை தவறாமல் இவர்கள் இருவரும் பார்த்து ரசிப்பதுண்டு.

“என்னடா இது! இப்பலாம் இங்க அடிக்கடி இப்படி நடக்குது” என்றான் தேவா.

“ஆமா டா இங்க என்னமோ பன்றாய்ங்கடா! என்னானு நம்ம கண்டுபிடிக்கிறோம்” என்றான் சித்தார்த்.

“இது நமக்கு தேவ இல்லாத வேலை”

“வேலையே இல்லாமா தான சுத்திட்டு இருக்கோம் அதுக்கு இந்த வேலைய பாப்போம்” என நக்கலாக சொன்னான் சித்தார்த்.

அடுத்த நாள் காலை சித்தார்த் மட்டும் சென்று நோட்டமிட்டான். எட்டு மணி நேர தேடலுக்கு பிறகு அவர்களின் திட்டங்களை ஒருவாறு அறிந்து கொண்டான். அதை தேவாவிடமும் கூறினான். ஆனால் அவன் அதற்கு உடன்படவில்லை. உரையாடல் நீண்டது.

“டேய் நம்ம எவ்வளவு கஷ்டத்துல இருக்கோம்னு உனக்கே தெரியும்

உனக்கு அப்பா இல்ல எனக்கு இருந்தும் பிரயோஜனமில்ல நம்ம தான் இனி எல்லா பாத்துகனும்

அவய்ங்க நாளகழிச்சு வைரத்த கடத்த போறாய்ங்க இத மட்டும் நம்ம அடிச்சோம்னா!” என வெறி கொண்டவன் போல பேசினான் சித்தார்த்.

“டேய் சித்தா! ஏன்டா உன் புத்தி இப்படி போய்ருச்சு நம்ம பட்டதாரிகள்டா

அதுமட்டுமில்லாம இதலாம் தப்பு! மாட்டுனா நம்மள செதில் செதிலா செதச்சுருவாய்ங்க” என்று நொந்துகொண்டே சொன்னான் தேவா.

“ஆமா நம்ம பட்டதாரிகள் தான் வேலைகிடைக்காத பட்டாதாரிகள் உனக்கு நியாபகமிருக்கா வேலை கிடைக்காம நீ மெக்கானிக்கல் படிச்சும் இரும்பு பட்டறைக்கு போன நான் நூறு ரூவா சம்பளத்துக்கு ஜல்லி அள்ளி போடுற வேலைக்கு போனேன்”

“ம்ஹூம் எனக்கு சரியா படலை”

இப்போது மிகவும் நிதானமாக சொல்ல தொடங்கினான் சித்தார்த் “இங்க பாரு ரொம்ப நல்லவனா இருக்காத, முடிஞ்சா நாலு எதிரிகள சம்பாரி அப்துல் கலாம எல்லோரும் மறந்துட்டாங்க ஆனா காந்திய இன்னும் நியாபகம் வச்சுருகாங்க தெரியும்ல

நல்லது மட்டும் செய்ய நான் ஒன்னும் புத்தனுமில்ல நீ இயேசுவுமில்ல ஏன் அவுங்க ரெண்டு பேரும் கூட நல்லவங்க இல்ல ஏன் தெரியுமா அவங்களுக்கு அடுத்தவன் கஷ்டபடுறத பார்க்க ரொம்ப பிடிக்கும் கஷ்டபடுறத பாக்குறது கடவுளே இல்ல தான!

இப்பலாம் தப்பு பண்ணமா இருக்குறது தான் ரொம்ப தப்பு தேவா! ஏன்ன ரொம்ப நல்லவனாயிருந்த பொய்யா நடிகிறானு சொல்றாய்ங்க

நல்லவனா இருந்தா சில விஷயத்துக்கு பயபடனும் ஆன கெட்டவனா இருந்தா எதுக்கும் பயப்பட தேவயில்ல

கடைசியா ஒன்னு சொல்றேன் நூறு வருஷம் நல்லவனா வாழ்ந்து கஷ்டபடுறதுக்கு ஒரு நாள் கெட்டவனா கெத்தா வாழ்ந்து செத்துரலாம்” என போதனையை முடித்த துறவியை போல பெருமூச்சுவிட்டான் சித்தார்த்.

தேவனின் மௌனம் தெடர்ந்து நீடித்தது அந்த மௌனம் சம்மததிற்கான அறிகுறியாக தெரியவில்லை ஆனால் சரியென்று கூறினான் அதைகேட்டு ஞானம் பெற்றவன் போல துள்ளி குதித்தான்.

“இது தப்பு இருந்தாலும் உனக்காக நம்ம நட்புக்காக” என்றான் தேவன்.

அந்த நாளும் வந்தது அதே பூங்கா நடையாளர்கள் வரதனது குறைந்திருந்தது சரியாக மாலை ஆறு மணி இருக்கும் இருட்ட தொடங்கியது. இரண்டு நபர்கள் மட்டும் தான் அவர்களை எளிதாக சமாளித்துவிடாலாம் என்று வைரத்தை கடத்தபோகும் ஏரியின் புதர் மண்டிய இடத்தை காட்டினான் சித்தார்த் அங்கு தான் இருவரும் சந்திப்பார்கள் என்று உறுதியாக கூறினான் இருவரும் பிரிந்து சென்று மறைந்தார்கள். பணபெட்டியும் வைரத்தை வைத்திருக்கும் பையையும் இருவரும் பரஸ்பரம் மாற்றி கொள்வார்கள். பணபெட்டியை வைத்திருப்பவனை நீ பார்த்துக்கொள் இன்னொருவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முடிவு செய்தார்கள்.

பொருள் இடம் மாறியது கைக்குலுக்கி பிரியும் போது சட்டென ஒரு சத்தம் வைர பையை வாங்கியவன் சுருண்டு விழுந்தான் இரண்டு பையையும் களவாடி ஓட்டம் பிடித்தான் இன்னொருவன்.

இருவருக்கும் பேரதிர்ச்சி இருந்தும் முடிவில் மாற்றமில்லை போட்டிக்கு ஒருத்தன் மட்டும் தான் என்று இருவரும் அவன் மீது பாய்ந்து அவன் முகவாய்கட்டையை பதம் பார்த்தார்கள்.

இருவரும் ஆளுக்கொரு பையை எடுத்து கொண்டு நடந்தார்கள் ‘தப்பித்தோம்’ என்று நினைத்து கொஞ்சம் நடையின் வேகத்தை குறைத்தார்கள். ஆனால் விதி வலியது அல்லவா! கடத்தல்காரன் சுருண்டு விழ செய்தவன் வேகாமாக தாவி தேவன் மீது விழுந்தான் உடனே சுதாரித்து பையை சித்தார்த்திடம் தூக்கிபோட்டான். சித்தார்த் தடுக்க வரும்போது முகவாய்கட்டையில் அடிவாங்கியவன் வலி தாங்காமல் ஓடி வந்தான் அவனை பார்த்து இவன் ஓட்டம் பிடிக்க அவனை துரத்தி கொண்டு இவன் ஓடினான்.

இப்போது வசமாக தான் மாட்டிக்கொண்டான் தேவன்.

“இந்தா உன் நண்பனுக்கு போன் போட்டு வர சொல்லு! பொருளோட” என்றான் போலிஸ்காரன். ஆம் அவன் போலிஸ்காரன் தான் இங்கு நடக்கும் பல விளையாட்டுகளில் சில விளையாட்டுகள் அவன் விளையாடியது தான். பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள் அரசு கொடுக்கும் சொற்ப சம்பளம் பத்துமா!.

அழைப்பை ஏற்று கொண்ட சித்தார்த் “டேய் ! தப்பிச்சிட்டுயா எங்க இருக்க” என்று படபடவென பொறிந்தான்.

போலிஸ்காரன் குறுக்கிட்டு “அவன் எனகிட்ட தான்டா இருக்கான் ஒழுங்கு மரியாதையா அத கொடுத்துரு இல்ல உன் நண்பன் என் கையால செத்துருவான்”

எதிர்முனையில் பதில் இல்லை மறுபடியும் கேட்டபோதும் நீண்ட அமைதி சட்டென “சாரிடா நண்பா” என்று துண்டித்தான்.

அந்த பதிலை இருவருமே எதிர்பார்க்கவில்லை. போலிஸ்காரனுக்கு கோபம் தலைக்கேறியது. “அவனுக்கு ரொம்ப தான் பேராசை” என்று தூப்பாக்கியை அவன் மார்பில் அழுத்தினான். மறுபடியும் சித்தார்த்தை அழைத்தபோது முற்றிலுமாக அனைக்கப்பட்டிருந்தது. போலிஸ்காரனுக்கு ஜிவ்வென்றேறியது ஜீவதாரண்யம்.

துப்பாக்கியின் முனை இப்போது தேவன் நெற்றியில் முத்தம் கொடுத்து கொண்டிருந்தது எப்போது அது தன் அன்பு பரிசை தரபோகிறதென்ன அவனுக்குள் அப்படி ஒரு ஆவல் அது இந்த புவி வாழ்கையின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாய் இருக்கலாம். போலிஸ்காரனின் விரல்கள் இப்போது அந்த டிரிகரை தழுவி கொண்டிருந்தது எப்போது நம்மை தெறிக்கவிடுவார்கள் என ஆவலோடு காத்திருந்தன தோட்டாக்கள் அச்சமயம் செல்லொளி கேட்டது தேவனின் கைப்பேசி அது அம்மா என்று பச்சையும் சிவப்பும் ஆர்பரித்தன.

“உன் அம்மா தான் எங்க என்னனு கேட்டா வெளில இருக்கேன் இப்போதைக்கு வரமுடியாதுனு சொல்லு” என்றான் போலிஸ்காரன்.

“ம்ஹும்” என தலையை வேகமாக ஆட்டினான்.

துப்பாக்கியின் கைப்பிடி முனையால் ஓங்கி மூக்கில் விட்டான் சில் உடைந்தது. “ஒழுங்கா பேசு என போனை காதில் வைத்தான்”

“மா!” என தழுதழுத்த குரலில் கூறும்போதே அவன் தாய் பதறிவிட்டாள்.

“என்னப்பா ஒரு மாறியா பேசுற”

“ஒன்னுமில்லமா இங்க ஒரு வேலையா இருக்கேன் வர லேட்டாகும் நீ தூங்கு”

“சரி பா சரி பா, ஏன்பா நீ சாப்டியா!”

அழுகை பீறிட்டு வந்தது வாய்விட்டு அழ வாய் துடித்தது ஆனால் நெற்றியில் வைத்த துப்பாக்கி இப்போது அவன் தொண்டைகுழியில் சொருக பட்டிருந்தது.

“ம்ம் சாப்டேன் மா நல்லா சாப்டேன்”

“சரி பா சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு, நான் போன வச்சுற்றேன்”

துப்பாக்கி மெல்ல மேல் ஏறியது. அவனால் வெறியை அடக்கமுடியவில்லை சித்தார்த்தனின் குரல் ரீங்காரமாக ஒலித்து கொண்டிருந்தது. இப்போது அது உச்சத்தை அடைந்தது.

ஓங்கி அவன் அடிவயிற்றில் ஒரு உதைவிட்டு சாவுடா என வெறிபிடித்தவன் போல கத்திக்கெண்டே டிரிகரை அழுத்த ஆயத்தமானான். சரியாக புள்ளி பதிமூன்று விநாடிகள் தான் இருக்கும் தோட்டா விடுதலையாவதற்கு அதற்குள் ஒரு குரல் குறுக்கிட்டது.

“ஏய் அவன ஒன்னு பண்ணாத விட்டுரு”

குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான் போலிஸ்காரன்.

“ஓ நீயா! இவன விடமுடியாது இவன என் கையால கொல்லனும் இவன கொன்னுட்டு இவன் கூட்டாளிய கண்டுபிடிச்சு அவன அடிச்சே கொல்லனும்”

“சொன்ன கேளு!” என்றான் சித்தார்தை துரத்தி கொண்டு ஓடியவன்.

“போடாங்” என தன் நாக்கை துறுத்தி கொண்டு மீண்டும் தயாரானான் இப்போது தோட்டாவிற்கு ஆனந்த களிப்பு.

“வேனாம்டா வேனாம்டா” என கத்தி கொண்டிருந்தவன் திடிரென பாய்ந்து வாசகம் மீது விழுந்தான். யாரோ பின்னே நின்று குறுக்கிலே எத்தியிருக்க வேண்டும் பாவம் ஆஎனக் கத்தி கொண்டே விழுந்தான். துப்பாக்கியின் சத்தம் மட்டும் கேட்டது அந்த சத்தத்திற்கு பின் ஒரு அமைதி தோட்டா எதிரே இருந்த மரத்தை துளைத்து நின்றது. மூவரும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து விழுந்தார்கள்.

போலிஸ்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை இவனை துரத்தி கொண்டு போன தனது கூட்டாளி இவனிடம் வசமாக மாட்டியதையும் இவர்களின் பிரம்ம ரகசியத்தையும் மூன்றாம் கண்களில் படம் பிடித்தது மட்டுமில்லாமல் அவன் அசந்த நேரம் அவன் ஆறாம் விரலான துப்பாக்கியையும் கைப்பற்றியது அவனுக்கு தெரியாதல்லவா. தெரிந்தாலும் இனி எந்த பயனும் இல்லை தானே.

பரிசேயர்களால் சிலுவையில் அறைந்த இயேசு துளைத்த ஆணிகளை பிடுங்கி எறிந்து கிழே குதித்தது போல தேவன் குதித்தெழுந்தான். அச்சமயம் ஒரே எக்களாச்சிரிப்பொலி துப்பாக்கியை நீட்டி பிடித்தவாரே “என்ன நண்பா நல்லாருக்கியா!” என்றான் சித்தா.

“இரண்டே சேகன்ட் தான்…. லேட் ஆகிருந்துச்சு மொத்தமா முடிஞ்சிருக்கும்”

“விடுடா அதான் தப்பிச்சிடோம்ல” என்று சொல்லிக்கொண்டே வாசகம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தேவனிடம் கொடுத்தான். கண்களில் பொறி பறந்த போலிஸ்காரனையும் அவன் கூட்டாளியையும் பார்த்து “ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க ! அனுபவிங்க” என்று கூறிவிட்டு சித்தார்த் தேவன் தோள் மேல் கைபோட்டு நடக்கலானான்.

“டேய் இத வச்சு என்னடா பண்ணப்போறாம்” என்று கவ்விய குரலில் கேட்டான் தேவன்.

“தெரிலயே”

“பேசாமா நல்ல போலிஸ்கிட்ட போய் கொடுத்துருவோமா

இல்ல நம்மளே ஆட்டைய போட்டுருவோமா” என பரபரப்பான குரலில் சொன்னான் தேவன்.

“யோசிப்போம்”

“நல்லவேளை எந்த சாமி புண்ணியமோ தப்பிச்சோம்” என்றான் தேவன்.

“போன ஜென்மத்துல நீ செஞ்ச புண்ணியமா தான் இருக்கும்” என்று கலகலவென்று சிரித்தான் சித்தார்த். அந்த சிரிப்பொலி அந்த இரவையே குதூகலமாக்கியது.
“ஹா ஹா” என்று சிரித்து கொண்டே சித்தார்த் முனுமுனுத்தான்.

‘ஊழிற்பெருவலி யாவுள’.

Print Friendly, PDF & Email

1 thought on “ஊழ்வினை உறுத்தும்

  1. கதை பரபரவென்று போகிறது.
    பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *