மழை-காதல்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 19,520 
 

கவிஞர்களுக்கும் காதலர்களுக்கும் மழை என்றாலே தனி உற்சாகம் தான்… மழை பெய்யும் போதெல்லாம் , பூமியின் மீது மேகங்களுக்கு இருக்கும் காதலின் காரணத்தால் பூமியை மேகம் இன்பத்தில் திளைக்க வைப்பது போன்ற காட்சி தான் கற்பனைக்கு வருகிறது… அந்த மழை தரும் குளிர்ச்சியில் தன் குஞ்சுகளோடு குருவி கூட்டம் ஒன்று தன் கூட்டில் ஆர்பாரிப்பது எவ்வளவு அழகு…அந்த குருவி கூடு அமைந்த மரத்தின் இலைகளில் இருந்து சொட்டு சொட்டாக மழை துளி பட்டு தெறிக்கும் இயற்கை எவ்வளவு அழகு…பட்டு தெறிக்கும் அந்த சாரல்கள் ஜன்னல் ஓரம் நின்று கொண்டு தேநீர் அருந்தும் என் மீது படும் போது என்னுள் பரவும் பரவசம் எவ்வளவு அழகு… பூமி-மேகம் இவற்றிற்கிடையான காதல் எத்தனை அழகான விஷயங்களுக்கு வித்திடுகிறது… எவ்வளவு அழகான காதல்… எவ்வளவு அழகானது காதல்…

இன்னொரு தேநீர் கோப்பையுடன் பக்கத்தில் வந்து என் தோளில் சாய்ந்து நின்றாள் அபிநயா…

“எவ்வளவு அழகா இருக்கு பாரு தமிழ்… அந்த மேகம்… இந்த மண் வாசன… அதோ அந்த குருவி கூடு… அதுங்க கத்துர சத்தம்…

அந்த எலைங்கள பாரேன்… எவ்ளவு அழகா மழ பட்டு பட்டு தெரிக்கிதுன்னு… எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு இந்த கிளைமேட்…”

“நானும் அதே தான் நெனச்சிட்டு இருந்தேன்”

“எனக்கு தெரியும்… கொஞ்சம் நகந்து நில்லு டா… சாரல் மேல படுதுல்ல”

“ஏன்… இது அழகா தெரியலயா…?”

“அழகா தான் இருக்கு… இந்த அழகால என் அழகு கணவனுக்கு ஒடம்புக்கு ஏதாவது வந்துட்டா? சோ ஐ டோன்ட் லைக் திஸ் ப்யூடி…”

அமைதியாக சிரித்து கொண்டேன்…

“மழை பெய்யும் போதெல்லாம் நீ உன் காதல ஓபன் பண்ண அந்த நாள் தான் ஞாபகம் வருது தமிழ் … ”

அந்த நாள்…

பூங்காவில் அவளுக்காக காத்து கொண்டிருந்தேன்… அவள் தொலைபேசி அழைப்பு வந்தது… என் சிரிப்பே காட்டிக்கொடுக்கிறது அவள் அழைப்பை பார்க்கயில்…

“தமிழ்… ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு டா… ஒன் த வே…”

“ஒண்ணும் அவசரம் இல்ல அபி… வா…”

அழைப்பை துண்டித்து விட்டு சுற்றி பார்த்தேன்… நான் அமர்ந்திருந்த இடத்தின் பக்கத்தில் செடி ஒன்று இருந்தது… அதில் கொத்து கொத்தாய் பூத்திருந்த மஞ்சள் பூக்களின் அழகு கண்களை பறித்தது… ஏனோ தெரியவில்லை அவற்றை பார்க்கும் போதெல்லாம் மனதினுள் ஒரு வித பரவசம் எழுகிறது… காரணம் அவற்றின் அழகா , இல்லை என் ரசனையா என்று விளங்கவில்லை…. அவளை பார்க்கும் போது ஏற்படும் அதே பரவசம்… ஆம்… அதே தான்… என்னை அறியாமல் என் மனம் அவளுக்காக ஏங்குகிறது… அவள் அணைப்பிற்காக துடிக்கிறது… காதல் வந்தால் கண்ணும் மண்ணும் தெரியாது என்பார்கள்… ஆனால் இந்த காதல் தான் என் கற்பனையை விதை போட்டு வளர்க்கிறது… ஆசை பட்டு ஏற்று கொண்டது தான்… இன்னும் அவளிடம் வெளிபடையாக சொல்ல வில்லை… பயம் என்று இல்லை… அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியும் முன் எதையும் சொல்ல வேண்டாம் என்று எண்ணுகிறேன்…

“என்ன கவிஞரே… ரொம்ப நேரம் காக்க வெச்சிட்டேனா…?”

“வா அபி… அப்படிலாம் ஒண்ணுமில்ல”

“சரி சரி… உனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்துர்க்கேன்… என்னன்னு கண்டு புடிச்சா தரேன்… இல்லனா நானே வெச்சிப்பேன்…”

“நா. முத்துக்குமார் – பட்டாம்பூச்சி விற்பவன் புக்?”

ஆச்சரியத்தில் ஆழ்ந்தால்…

“எப்படி தமிழ்?”

“ஹ ஹா… நீ கால் பண்ணப்போ பக்கத்துல மணி கூண்டு சத்தம் கேட்டுது… இப்போ மணி 5.10 P M … இங்கேர்ந்து 10 நிமிஷம் தூரத்துல ஒரே ஒரு மணி கூண்டு தான் இருக்கு… போன வாரம் தான் அந்த மணி கூண்டு பக்கத்துல இருக்க புக் ஷாப் போய் இருந்தேன்…நீ இந்த பூங்கா வுக்கு வர்ரதுக்கு அங்க போக வேண்டிய அவசியமே இல்ல… அது மட்டும் இல்லாம முந்தாநேத்து தான் உன் கிட்ட “பட்டாம் பூச்சி விற்பவன்” வாங்கணும்னு சொல்லி இருந்தேன்… அதன் கெஸ் பன்னேன்…”

“அடேங்கப்பா… அறிவாளி தான் தமிழ் நீ…”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல”

“தன்னடகத்த கொஞ்சம் தள்ளி வெய்… இந்தா நீ கேட்ட கவிதை தொகுப்பு…”

“நன்றி அபி”

“இருக்கட்டும்… மேகம் வேற கருப்பா இருக்கே.. மழ வார பொதுன்னு நெனைக்கிறேன்…”

“கவிஞர்க்ளுக்கும் காதலர்களுக்கும் மழைனாலே தனி உற்சாகம் தான்…”

“இங்க கவிஞன் நீ இருக்க… காதலர்கள் யாரும் என் கண்ணுக்கு படலையே…”

சிரித்து கொண்டேன்…

“ஏன் சிரிக்கிற?”

“சொல்றேன்… அந்த பூக்கள பாரேன்… அழகா இருக்குல… ”

“ஆமா தமிழ்… ரொம்ப அழகா இருக்கு… கவிதை யோசிச்சிருக்கியா? ”

“ஹ்ம்ம்”

“இதுக்கும் நா கேட்ட கேள்விக்கும் என்ன சம்மந்தம்?”

“இருக்கு…”

“கவிதை சொல்லு…”

“தேனெடுக்கும் வித்தை தெரியாததாலோ என்னவோ…

பூக்களின் மீதான என் காதல் பூக்களுக்கு தெரியாமலே போகிறது…”

வெக்கதில் முகத்தை திருப்பி கொண்டால்… புரிந்து விட்டது போலும்…

“என்ன ஆச்சு அபி… நா ஏதாவது தப்பா சொல்லிட்டேனா…?”

அவசர பட்டு விட்டேனோ என்று தோன்றியது…

“இல்லை தமிழ்…”

“கவிதை பிடிக்கலையா?”

“தேனெடுக்கும் வித்தை தெரியாதவங்களுக்கு கூட பூக்கள் மீது காதல் வரும்னு பூவுக்கு சொல்லாம எப்படி தெரியும்… ?”

என்ன பேசுவதென்று தெரியவில்லை…. 2 நிமிட அமைதிக்கு பிறகு மழை ஜோ என்று பிடித்து கொண்டது… அபியும் நானும் ஒரு மரத்தடியில் ஓடி நின்று கொண்டோம்… நனைந்து விட்டோம்… அவள் கண்களில் கண்ணீர் வந்தது… கொட்டும் மழையிலும் அது நன்றாகவே எனக்கு தெரிந்தது…

“அபி… தேனெடுக்க தான் தெரியாது… ஆனா கடைசி வரிக்கும் உனக்கு தோள்கொடுக்க தெரியும்… இதையும் கவிதையா சொல்றானே, கற்பனையா இருக்குமோனு நெனைக்காத… இப்போ பேச போறதுல்லாம் நிஜம்…”

“என்ன தமிழ் சொல்ல போற?” அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது…

“என்ன அறியாம எனக்குள்ள ஒரு இன்பம், உன்னோடு இருக்கும் போது.. உன் பேச்ச கேக்கும் போதெல்லாம் எனக்குள்ள ஏதோ பரவசம் ஏற்படுது…

நம்ம ரெண்டு பேரும் நடந்து போகும் போது “அவ கைய புடிச்சிக்கிட்டு நடந்து போ”னு மனசு சொல்லுது…மன கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் என் மனசு உன் தோளுக்காக ஏங்குது…துக்கம் வந்தாலும்,சந்தோஷம் வந்தாலும் முதல்ல உன் ஞாபகம் தான் வருது…

மொத்ததுல நீ என் கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் என் வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்த அடஞ்சிட்ட திருப்தி ஏற்படுது…

ஐ லவ் யு அபி…

அதிர்ச்சியில் உறைந்து போனால்…

“என்ன ஒரு மனுசனுக்கு காதலையும் நட்பையும் பிரிச்சு பாக்க தெரியாதானு கேக்காத… பிரிச்சு பாத்ததாள தான் வித்யாசம் தெரிஞ்சிது… எனக்கு உன் மேல இருக்குறது வெறும் நட்பு இல்லன்னு…”

பேசிட்டு இருக்கும் போது திடீரென்று என்னை கட்டி அணைத்து கொண்டால்… அவள் அணைப்பில் காதல் தெரிந்தது…

இன்று

“நீ நேரவே சொல்லிர்க்கலாம் தமிழ்… உன்னோட கவிதை போராட்டம் தாங்க முடியல… ஆனா எப்படியோ பேசி பேசி மயக்கிட்டட… ஃப்ராட்” மழை சாரலை பிடித்து என் மேலே தெலித்தால்… நான் பதிலுக்கு தெளித்தேன்….

“எனக்கு மழைய பார்த்தாலே ஒரு பக்கம் அதிர்ச்சியாவும் ,ஒரு பக்கம் எல்லை கடந்த சந்தோசமாவும் இருக்கு…”

“ஏன் அதிர்ச்சியா இருக்கு?”

“இருக்காதா பின்ன? சாதாரண காரியமா அபி பண்ண அன்னைக்கு?”

அன்று

நானும் அபியும் வேலை முடித்து விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தோம்… மாலை 7 மணி இருக்கும்… வானம் இடி இடித்து கொண்டு மழை பெய்வது போல் இருந்தது… மழைக்கு முன் அவளை வீடு சேர்க்க வேண்டும் என்று விரைந்தேன்… பயத்தில் என்னை இறுக்கி பிடித்து கொண்டால்… ஆனால் “பார்த்து போ… பொறுமையா ஓட்டு” என்றெல்லாம் சொல்லவே மாட்டாள்…முதல் காரணம் அவள் பின்னால் அமர்ந்திருக்கிறாள்… நான் எந்த நிலையிலும் கவனம் சிதறி விட மாட்டேன் என்பது அவளுக்கு தெரியும்… இரண்டாவது காரணம் அவள் அணைப்பிற்காகவும் தான் நான் வேகமாக செல்கிறேன் என்பது அவளுக்கு தெரியும்… காதலில் திளைத்து கொண்டிருந்தது மழைக்கு பிடிக்கவில்லை போலும்… பிடித்து கொண்டது…. பஸ் ஸ்டாப் அடைந்து ஒதுங்குவதற்குள் முழுவதுமாக நினைந்து விட்டோம்…

அவள் மழையில் நினைந்திர்ந்தது ஒரு விதத்தில் கவலையாக இருந்தாலும், அவள் அழகு அந்த கவலையை போக்கியது…

“தமிழ்.. நீ நெறைய நெனஞ்சிட்ட டா…கிட்ட வா… தொடச்சி விட்ரென்…”

அருகில் சென்றேன்…

“தலைய கொஞ்சம் சாயி டா…”

சாய்ந்து கொடுத்தேன்… அவள் கண்கள்… அவற்றை நேரில் பார்க்கும் போது ஒரு நொடி சுக மின்சாரம் மனதில் பாய்கிறது…

இமைகள்… பட்டாம்பூச்சி சிறகடிப்பது போல அசைகின்றன…

அவள் விடும் மூச்சுக்காற்று… அரிய பொக்கிஷம் என தோன்றுகிறது…

அவள் உதடுகள்… பனிவிழும் காலயில் பூத்திருந்த மலர் போலவும், மழை துளிகள் அந்த பனி போலவும் தெரிந்தன…

“கவிஞரே… ரசிச்சது போதும்…” வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது…

அடடா என்ன அழகு… சிறிது நேரம் ரசித்து விட்டு சுய நினைவிற்கு வந்தேன்…

“சரி டைம் ஆகுது… நீ ஆட்டோ ல போய்டு அபி… நான் மழ நின்னதும் வீட்டுக்கு கெளம்புறேன்… ”

“சரி தமிழ்… மழ விட்டதும் ஜாக்ரதையா போய் சேறு…”

“சரி… இரு ஆட்டோ கூப்டு வரேன்…” அவளை விட்டு பிரியா மனசு விரும்பவில்லை தான்… இருந்தாலும் அவள் சீக்கிரம் வீட்டிற்கு சென்று சேர வேண்டும் என்று, ஆசைகளை கட்டு படுத்தி கொண்டு ஆட்டோ அழைக்க சென்றேன்… மழையில் சாலை சரியாக தெரியவில்லை… கண்களில் மழை நீர் அடித்து கொண்டு இருந்தது… சாலையை கடக்கையில் “தமிழ்” என்று அபி கத்தும் சத்தம் கேட்டு திரும்புவதற்க்குள், 5 மீட்டர் தூரத்தில், 50 கிலோமீட்டர் வேகத்தில் கார் என்னை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது… வாழ்வின் கடைசி 5 நொடிகள் என தோன்றிவிட்டது… சுற்றி அனைத்தும் நிசப்தம் ஆகின…எண்ணங்கள் ஓடின…

“தமிழ்… அம்மா கைல ஒரு வாய் வாங்கிட்டு போடா…”

“தமிழ்…உன் முதல் புத்தகத்த படிச்சிட்டு சங்கரன் ஸார் ப்ரைஸ் பன்னாரு டா… “யு ஆர் வெறி லக்கி சிதம்பரம், டு ஹாவ் அ சன் லைக் தமிழ்”னு சொன்னாரு…”

“தமிழ்… ஐ லவ் யு டா… ”

“டேய் மச்சா… நீ தான் டா என் நண்பன்…”

மரணத்தை ஏற்று கொள்வதை தவிர வேறு வாய்ப்பு எதுவும் எனக்கு தோன்றவில்லை… இமைகளை மூட முயன்ற போது திடீர் என்று நான் போத் என்று கீழே விழுந்தேன்… அபி தள்ளிய வேகத்தில்… என்ன நடக்கிறது என்று புரியவில்லை… 2 மீட்டர் மட்டுமே இடைவெளி இருந்தது அவளுக்கும் அந்த காருக்கும்…

“தமிழ்… என் கைய பிடிச்சிக்கோ டா…”

“கொஞ்சம் பக்கத்துல வா தமிழ்… வேணுமா வேணாமா…”

“தமிழ், தமிழ், தமிழ்….”

அவள் கண்களை இறுக்கி கொண்டால்… நான் கண்கள் திறந்திருந்தும் எண்ணங்கள் எதுவும் ஓடவில்லை…

சட்டென்று அந்த டிரைவர் அடித்த பிரேக்கில் அரை மீட்டர் தூரத்தில் அபி பக்க வாட்டில் திரும்பி நாங்கள் நின்று கொண்டிருந்த பஸ் ஸ்டாப் மீது மோதி நின்றது…

அபி என்னிடம் ஓடி வந்து

“தமிழ்… என்ன டா ஆச்சு… அடி எதுவும் படலையே… பாத்து போக சொன்னேன்ல… கேர்ஃபுல்லா ரோட் க்ராஸ் பண்ண மாட்டியா… கொஞ்ச நேரத்துல உசுறே போய்டுச்சி டா…” அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது…

என் கண்களில் கண்ணீரோடு,

“அபி…. என்ன காப்பாத்த உன் உயிரயே குடுக்க துணிஞ்சிட்டியா…?”

“அத விடு தமிழ்…நீ நல்ல இருக்கல… ”

“உனக்கு ஏதாவது ஆகி இருந்தா?”

மௌனமாக இருந்தால்…

இன்று

“எந்த தைரியத்துல அபி நீ வந்து அந்த கார் முன்னாடி நின்ன? ஒரு செகண்ட் கலங்கிட்டேன் தெரியுமா…

உனக்கு ஏதாவது ஆகி இருந்தா?”

மௌனமாக இருந்தாள்… தேநீர் கோப்பை காலியானது… மழை ஓய்ந்தது…

குருவிகள் ஆசுவாச பட்டன… இலைகள் குளித்து முடித்து தெளிவாக இருந்தது… எங்கள் அழகிய நினைவுகள் மட்டும் மனதில் நின்று கொண்டே இருந்தன… அழியாமல்… எவ்வளவு அழகான காதல்… எவ்வளவு அழகானது காதல்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *