மது மாது எது…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 3,597 
 

“அய்யய்யோ எவ்வளவு இரத்தம்? இது வேணும்னு நான் செய்ததில்லை. அய்யோ, இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கத்தினான் விஜய்.

கீதாவின் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவள் கையை வைத்து இரத்தத்தைத் தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். விஜய் எறிந்த கண்னாடி கிளாஸ் உடைந்து சிதறிக் கிடந்தது.

“கீதா நீ ஏன் நான் குடித்துக் கொண்டிருக்கும் போது வந்து எனக்கு அட்வைஸ்செய்யவேண்டும், போய்விடு” என்றான். அவள் தலையில் வடியும் இரத்தத்தை நிறுத்த, தன் பையிலிருந்து கைத்துண்டை எடுத்து காயம் பட்ட இடத்தை இறுக்கக் கட்டினாள்.

“நேற்றுக் கூட இனி மேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணினே விஜய். என்னை விரட்டி விரட்டிக் காதலித்து விட்டு, உங்களைத் தவிர இன்னொருவரை நினைத்துப் பார்க்க முடியாது என்ற நிலைக்கு நான் வந்த பிறகு இப்படிக் குடித்து உங்களையே அழித்துக் கொள்கிறீர்களே! இது சரி தானா?”

“கீதா இப்போது விவாதம் பண்ண நேரமில்லை. உன் தலையில் திரும்பவும் இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. சீக்கிரம் டாக்டரிடம் போ.” என்று போதையில் கத்தினான் விஜய். “நீங்கள் குடித்துக் குடித்து உங்களையே அழித்துக் கொள்ளும் போது நான் இரத்தத்தைச் சிந்தியே என்னை அழித்துக் கொள்கிறேன், விஜய்.” அவளும் பதிலுக்குக் கத்தினாள்.

”கீதா நான் உனக்கு ஏற்றவன் இல்லை. நான் ஒருசாக்கடை. நீயோ தூய வான் நிலா. நம் இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. உன்னை மறக்க முடியாமல் தான் நான் குடிக்க ஆரம்பித்தேன். இப்போது நிறுத்த முடியாமல் தவிக்கிறேன். என்னை மறந்துவிடு. யாராவது நல்லவன் ஒருவனை திருமணம் செய்து கொள்.”

“ஏன் விஜய்? ஏன் அப்படி சொல்கிறீர்கள்? என்னிடம் என்ன குறை கண்டீர்கள், விஜய்?

“என் அன்பின் அடைக்கலம் நீ! குறை உன்னிடம் இல்லை. என்னிடம் தான் கண்மணி. நான் மது மயக்கத்தில் தெரியாமல் ஒரு தவறு செய்து விட்டேன். ஒரு பெண்ணைத் தொட்டுப் பழகி விட்டேன்.”

“……………………………”

“கற்பு பெண்களுக்கு மட்டும் தானா? இருவருக்கும் பொது என்று தானே நாம் அடிக்ககடி பேசுவோம். இப்போது நானும் கற்பிழந்தவனே! நான் எப்படி உன் வாழ்க்கைக்குத் துணையாக முடியும்?” என்று அழவே ஆரம்பித்து விட்டான் விஜய்.

“விஜய்! நீங்கள் உண்மையை மறைக்காமல் உங்கள் தவறுக்காக வந்துகிறீர்கள். தண்டிக்க வேண்டும் என்று நினைக்கும் முன் மன்னிக்க முடியுமா என்று தானே பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் இந்த மது தானே காரணம். இந்த மதுவிலிருந்து நீங்கள் விடுதலைப் பெற்றாலேபோதுமானது.” என்று சொல்லியபடியே அவள் மயங்கி விழ, “நோ… கீதா..நோ நீ வாழ வேண்டும்… நாம் வாழ வேண்டும்” என கத்தினான். தடுமாறிய படியே அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *