காதல் பாப்பா!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 13,487 
 

‘காலேஜ்லயே டாப் ஸ்கோரர்… கவுன்சிலிங்ல சென்னை காலேஜா செலெக்ட் பண்ணு… அங்கதான் ஸ்கோப் அதிகம்… நல்ல எக்ஸ்போஸர் கிடைக்கும்’னு எக்கச்சக்கமா நல்ல உள்ளங்களோட அட்வைஸ்!

அதே போல, சென்னை காலேஜை செலெக்ட் பண்ணி, பயபக்தியா குலசாமியைக் கும்பிட்டு, முதல் நாள் காலேஜுக்குப் போனேன்.

கிளாஸ்ல என்டரானதுமே சிரிச்ச முகமா ஒரு பொண்ணு ”ஹலோ”ன்னுச்சு.

”ஹாய்”னு நான் சொன்னதும், ”ம்… ப்ரீத்தி சொல்லு”ன்னா.

நானும் எல்.கே.ஜி-யில ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனதுல இருந்து, இப்ப எலெக்ட்ரிக் டிரெய்ன்ல வந்தது வரை என் வரலாறு புவியியலை மொத்தமாச் சொல்லி முடிச்சேன்.

”இல்லடா செல்லம்… இங்க ஏதோ ஒரு பொண்ணு முக்கா மணி நேரமா மொக்க போட்டுக்கிட்டு இருக்கு. ஒரு நிமிஷம் இரு”ன்னு சொல்லிட்டு, ”என்ன வேணும்?”னா என்னைப் பார்த்து.

அப்பதான் தெரிஞ்சது இவ்ளோ நேரமா என்உயிர்த் தோழின்னு நான் நினைச்ச பொண்ணு அவளுயிர்த் தோழன்கிட்ட மொபைல்ல கடலை போட்டுட்டு இருந்திருக்கா. ஃபர்ஸ்ட் பால்லயே பெவிலியனுக்கு அனுப்பிச்சிட்டாளேன்னு கடுப்பாகிட்டேன்.

அதுக்கப்புறம் போனை வெச்சுட்டு என்கிட்ட பாச மழை பொழிஞ்சுது பொண்ணு. ஆனா, நாம கொஞ்சம் உஷாரா சைலன்ஸர்ஃபிட் பண்ணிட்டோம்ல. அனுபவம்தான்.

”இன்னிக்கு கேன்டீன்ல என்னோட ட்ரீட்.’னு சொன்னா. சீனியர்ஸ்கிட்ட எல்லாம் சி.ஐ.டி. கணக்கா விசாரிச்சு, கேன்டீன்ல பாவ்பாஜிதான் பெஸ்ட்னு முடிவு பண்ணியாச்சு. ”இப்ப இருக்கிற ஹீரோயின்ஸ் யாரும் நம்ம அளவுக்கு கியூட்டா இல்லல்ல”ன்னு மொக்க போட்டுட்டு இருந்தவளை திடீர்னு ஆளைக் காணோம். வெளியில வந்து பார்த்தா, தவுசண்ட் வாட்ஸ் பிரகாசத்துலபல்சர்ல அவ ஆளோடு போயிட்டிருக்கா.

‘அடிப் பாதகி… இந்நேரத்துக்கு கேன்டீன்போய் இருந்தா நானாச்சும் லஞ்ச்சை முடிச்சிருப்பேனே’ன்னு கொலைப் பட்டினியோடு கிளாசுக்குப்போனா, சிரிச்சுக்கிட்டே வெல்கம் சொல்லுது பொண்ணு. எக்கச்சக்கமா வெட்கப்படுற மாதிரி பில்டப் கொடுத் துக்கிட்டே ”நீ அவனைப் பாத்தியா?”ன்னு கேட்டா.

‘எல்லோரும் பைக்ல போனா அவங்க முகத்தை ஷால்ல மூடிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீதான் உனக்கு, உன் ஆளுக்கு, அந்த பைக்குக்குன்னு எல்லாத்தையும் ஷால்ல கவர் பண்ணிட்டியே. அப்புறம் எங்கிட்டு?’னு மனசுக்குள்ளநினைச்சுக் கிட்டே ”ம்ஹ§ம்”னேன்.

நான் பார்க்கலைன்னு சொன்னதும் எக்கச்சக்க பில்டப். ”அவன்தான் என் பாய் ஃப்ரெண்ட். அஜீத்ல பாதி… ஷாரூக்ல மீதி”ன்னு ஆரம்பிச்சா. விதி யேன்னு உம் கொட்டிக்கிட்டே கேட்டா, ”சரி சரி… நீ இவ்ளோ இன்ட்ரெஸ்ட்டா இருக்கிறதால நான் அவனோட போட்டோ கொண்டுவர் றேன்’னு கமிட் ஆனாங்க மேடம்.

மறுநாள் கிளாஸ் போரடிக்குதுதேனு, அவகிட்ட ”போட்டோ எடுத்துட்டு வந்தியா?”ன்னு கேட்டேன்.

”எல்லா போட்டோலயும் ஸ்மார்ட்டாவே இருக்கானா… நான் கொஞ்சம் பொசஸிவ்”னு சிரிச்சவ, அந்தப் பையன் அஞ்சாப்பு படிக்கும் போது குறவன் வேஷம் போட்ட போட்டோவை எடுத்துக்காண்பிச் சுட்டு, குறுகுறுன்னு என்னையே பார்த்தா. மேடம் என் ரியாக்ஷனை நோட் பண்றாங்களாம்.

ஆக்சுவலா, அந்தக் குறவன் வேஷத்தையும்மீறி கொடுமையா இருந்தான் அவன். இவ மனசுகஷ்டப்படக் கூடாதேன்னு ”சூப்பர் செலெக்ஷன்பா”னு சொன்னேன். மனசுக்குள்ளே, ‘உங்க வீட்லயே இதைவிட தவுசண்ட் டைம் பெட்டரா ஒரு பையன் பார்ப் பாங்க’ன்னு நினைச்சதைச் சொல்ல முடியுமா?

”பொறாமையா இருக்கா?”ன்னு போட்டோவுக்கு நெட்டி முறிச்சா… திருஷ்டிபட்டுடக் கூடாதாம். அவனே திருஷ்டி பொம்மை மாதிரிதான் இருந்தான்.

கூடப் பிறந்த அண்ணனையே அபூர்வமாத்தான் ‘அண்ணா’னு கூப்பிட்டுப் பழக்கம் நமக்கு. ஆனா, அந்தப் பையனைப்பத்திப் பேசும்போதெல்லாம், ”உன் அண் ணனைக் கேக்க மாட்டியா? உங்க அண்ணன் இப்படிப் பண்ணிட் டான்” அது இதுன்னு ஒரே கொலைக் குத்து.

ஒருநாள் லேப்ல இருந்தோம்… சைடுல என்னடா சைலன்ட்டா இருக்காளேன்னு திரும்பிப் பார்த்தா, அவ கண்ணுல கரகரன்னு தண்ணி. ”என்னாச்சுடி பிரின்ட் அவுட்புட் வரலையா? நான் பாக்கிறேன்”னு பதறினேன்.

”ஆமா, என் லைஃப்போட அவுட்புட்டே எப்படி வரப்போகுதுன்னு தெரியல!”ன்னு ஒரு தத்துவம் வேற.

”அது என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குது… அதுக்கும் எனக்கும் சண்டை!”ன்னு கண்ணைக் கசக்குனா.

”அதுன்னா எது? உங்க வீட்டு நாய்க் குட்டியா?”ன்னு குழப்பமாக் கேட்டேன்.

”ம்.. என்னோட செல்லக் குட்டி!”ங்கிறா. வெட்கமாம். ”நேத்து குட்நைட் மெசேஜே அது அனுப்பல”ன்னு ஒரே அழுகை.

”எப்ப கடைசியாப் பேசுனான்?”னு கேட்டா, ”ம்.. நேத்து நைட் பன்னண்டு மணிக்கு”ன்னு ஒரு இழுவை வேற.
”அடிப் பாவி, அதுக்கு மேல எங்கடி நைட்? அதான் விடிஞ்சு டுமே”ன்னு கடுப்பாகிட்டேன்..

அப்போ லேப்ல மேம் வந்து, ”கேர்ள்ஸ் செமஸ்டர் ரிசல்ட்வந்து டுச்சு. செக் பண்ணிக்கோங்க”ன்னு சொன்னாங்க. இவ இருக்கிறமூடுல எங்க ரிசல்ட் பார்க்கப் போறா… நாமளே பார்க்கலாம்னு பார்த்தா, என்னுயிர்த் தோழி 3 அரியர்ஸ்.

சங்கடமா விஷயத்தைச் சொன்னா, கெக்கேபிக்கேனு சிரிக்கிறா. ”என்னடி ஆச்சு?”ன்னு கேட்டேன். ”ஃபெஸ்டிவல் டைம்னு மெசேஜ் டெலிவர் ஆகலை… இப்பதான் டெலி வரி ஆச்சு. நெட்வொர்க் கிடைக் காம இருந்து இப்பதான் உங்க அண்ணன்கிட்ட பேசினேன்”னு ஜாலியாக் குதிக்கிறா.

”அப்ப அரியர்ஸ்?”னு கேட்டா… ”ஐயே! இதெல்லாம் ஒரு விஷயமா? நீ இன்னும் வளரணும் பாசு!”ன்னு சொல்றா கூலா.

இந்தக் கொடுமையெல்லாம்விட பெரிய கொடுமை அவளுக்கு வர்ற மெசேஜ்களை என்னைப் படிக்கச் சொல்றது. ”பாரேன், எவ்ளோ ஸ்வீட்டா இருக்கு, என் மேல அவனுக்கு அவ்ளோ பாசம்”னு ஃபீல் பண்ணும் பொண்ணு. ‘வெயிட் பண்ணுடி பொண்டாட்டி’ன்னு இருக்கும் அந்த மெசேஜ். வீட்ல இருக்கிற பாட்டி யாராச்சும் டி போட்டுக் கூப்பிட்டாலே எகிறியடிச்சுச் சண்டைக்குப் போவா… இப்ப ‘ச்சோ ஸ்வீட்’டாம்.

அந்த எஸ்.எம்.எஸ். படிக்கிறதைவிடக் கொடுமை எதுவும் இல்லை. பக்குவமா மொபைலைக் கொடுத்து, நான் ஒரு மெசேஜ் படிக் கிறதுக்குள்ளே அவன் பத்து மெசேஜ் அனுப்புவான். ”உன் மேலதான் அவனுக்கு எவ்வளவு பாசம்!”னு பில்டப் கொடுத்து அந்த டார்ச்சர்ல இருந்து கழட்டிக்கிட்டேன்.

மறுநாள் ஒரு 200 பக்க நோட்டு கொண்டுவந்தா. நோட்டு முழுக்க எஸ்.எம்.எஸ். கல்யாணம் முடிச்சப்பறம் அவங்க பசங்களுக்கு எடுத் துக் காட்டுறதுக்காம். ”ஆ… அதுக்காக நீங்க மீட் பண்ணதுல இருந்து இன்னிக்கு வரை ஷேர் பண்ணிக்கிட்ட எல்லா எஸ்.எம்.எஸ்-களையும் இதுல எழுதியிருக்கியா?”ன்னு கேட்டேன்.

”சீச்சீ… இதெல்லாம் நேத்து நைட் மட்டும் அனுப்பிச்ச மெசே ஜஸ்”னு ஒரு பதில் வரும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கலை.

இன்னொரு விஷயம் தெரியுமா? லவ் பண்ற காலேஜ் பொண்ணுங்க யாரை வேணும்னாலும் விசாரிச்சுக்கோங்க… லவ்னு கமிட் ஆகி ஒரு மாசம்கூட இருக்காது. ஆனா, அதுக்குள்ள அந்த ரெண்டு பேருக்கும் ஒரு குட்டிப் பாப்பா பிறந்து எல்.கே.ஜி. படிச்சுட்டு இருக்கும். எல்லாம் கற்பனைதான்.

அந்தப் பையன்கிட்ட பேசும்போது, ”குட்டிப் பாப்பா ஸ்கூல்ல இருந்து வந்துட்டாளா? அம்மாவைக் கேட்டாளா?”ன்னு கேள்வி வேற கேட்பாங்க.

ஏன்தான் இப்படிக் கிறுக்குப் பிடிச்சு இருக்காங்கங்கிற மாதிரி ரியாக்ஷன் கொடுத்தோம்னா, அவ்ளோதான்… ‘நீ இன்னும் வளரணும் தங்கச்சி’ன்னு அட்வைஸ்தான் கிடைக்கும்.

செமஸ்டர் லீவுல ஊருக்குப் போய் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லோர்கிட் டயும் ஒரு அட்டென்டன்ஸ் போட்டு நம்ம காலேஜ் செல் கதைகளை எல்லாம் சோகமாச் சொல்லி முடிச்சேன். அவங்களாவது இதை டீல் பண்ண ஏதும் யோசனை சொல்வாங்களானு ஓர் ஆதங்கம்தான்.

கோரஸா வந்தது ஒரே ரிப்ளை… ”நாங்கள்லாம் யூத்தும்மா. காலேஜ்னா அப்படித்தான் இருக்கும். அப்படி இருந்தாத்தான் அது காலேஜ். இதெல்லாம் வேண்டாம்னா, நீ கரஸ்லதான் டிகிரி முடிக்க ணும்”னு ஆளாளுக்கு அவங்க மொபைல்ல கடலை போட ஆரம்பிச் சுட்டாங்க.

செங்கல்பட்டைத் தாண்டியும் செல் தன் சேட்டையைத் தொட ரும்னு தெரியாத நானெல்லாம் டுடோரியல் காலேஜ்ல படிக்கக்கூட லாயக்கில்லைனு அப்பீட் ஆகிட்டேன்.

யப்பா… காதல் புனிதமானதா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா, காதலர்களுக்கு நண்பர்களா இருக்கிறது கொடுமையானது பாசு. எங்களை மாதிரி அனுபவசாலிக்குத்தான் அது புரியும்.

இப்போ ஏர்டெல், ஏர்செல், பி.எஸ்.என்.எல்., வோடஃபோன் புண்ணியத்துல கட்டாயமா எல்லா லவ்வர்சுக்கும் கற்பனையில் ஒரு பாப்பா இருக்கு. ஆனா, அந்த பாப்பாவோட கதிதான் என்னாகும்னு புரியலை!

– ஆகஸ்ட், 2009

Print Friendly, PDF & Email

1 thought on “காதல் பாப்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *