கலைந்த கனவு…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 26,010 
 

காதலில் மயங்கி ராஜா மார்பில் சாய்ந்திருந்தாள் சம்யுகி.எந்த சிந்தனையும் இல்லாமல் ஏதோவொரு அமைதி கிடைத்ததாக உள்ளுணர்வு சொன்னது.

நீண்ட மூச்சை இழுத்து விட்டவளை …

கண்களால் மேய்ந்த ராஜா என்ன ? என்றான்!

பதிலை இளமுறுவலாக கொடுத்தவள் கண்களை இறுகமூடிக்கொண்டாள்.

அவளுக்குள் இருக்கும் இந்த அமைதி அவனுக்கும் ஏற்பட்டிருக்குமா? அல்லது தான் ஆசைப்பட்ட பெண் தன் மார்பில் என்ற மனோநிலையில் இருக்கிறானா?

அல்லது …. அல்லது….இந்த நிமிடம் சந்தோஷம் அவ்வளவுதான் என்று யோசிப்பானோ?

இத்தகைய சிந்தனையோட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக தனக்குள் ஓடவிட்டவளின் அமைதி இருந்த இடம் காணாமல் ஓடியது. ஏதோ தப்புச்செய்துவிட்டதாக ஆழ்மனம் அடித்துச் சொல்லியது.என்ன தப்பு? இந்தக் காலத்தில் இதெல்லாம் சாதாரணம் இல்லையா? என்று தன்னைதானே சமாதானம் செய்தவளை ,விடாப்பிடியாக குற்றம் செய்துவிட்ட உணர்வு உந்த விர் என்று எழுந்தாள்.எந்தவித மாற்றமும் இன்றி ராஜா தொலைக்காட்சியில் ஹிந்திப்படம் ஒன்றை சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

என்ன மனுஷன் இவன் எந்த உணர்வுகளையும் ஒருதுளியேனும் முகத்தில் காட்டாது தொடர்ந்து தன் வேலையில் எப்படி இவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்க முடியுது?சீ …என அழுத்துக் கொண்டே குளியறையில் நுலைந்தவள்……

நிலைக்கண்ணாடியில் பிரதிபலித்த தனது முகத்தைப் உற்றுப்பார்த்தாள் ! யாவரும் வியக்கும் அழகிதான்.எல்லாவற்றையும் அளந்து படைத்திருந்தான் பிரமன்.கொஞ்சம் உயரமாக இருந்திருக்கலாம். இப்படி தனக்குத்தானே பலமுறை இரசித்திருக்கிறாள்.”நீங்க நான் பார்த்த போது இருந்த அழகில் இல்லை …அழகு நிலையில்ல என்று சொன்னதுதான் ஞாபகம் வருது,ஆனாலும் Ok தான்…என்று முகத்தில் சலனமே இல்லாமல் சொன்னான் ராஜா.” அந்த நிமிடம் சுர் என்று ஏதோ வலித்தது .ஆனாலும் அவன் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு என் வாழ்வியல் முறை வேறு என்று தனக்குத்தானே சமாதானம் செய்த நினைவு கண்களை கலங்கவைத்தது இன்று.ஏன் இப்படி அன்புக்கு ஏங்கிறாய் சம்யுகி ?உன்னுடைய அன்பை அவன் புரிந்துள்ளான் என்று நம்புகிறாயா ?
என்று பேதைபோல தனக்குத்தானே கேள்வி கேட்டு மனமுடைந்தாள்.

குளிர்ந்த தண்ணீரைத் தலையில் பிடித்துக்கொண்டு கண்களை மூடினாள் சம்யுகி……

நீங்க இந்தச்சேலையில் ரொம்ப அழகாக இருக்கிறீங்க..மூன்று குழந்தைக்கு அம்மா என்று யாருமே சொல்ல மாட்டாங்க …என்று கம்பீரமாக கோட்சூட்டில் இருந்த ராஜா கண்நிறைந்த காதலுடன் கண்பார்த்துச்சொன்னான்.அவன் கண்களை நேரே நோக்கியவள் தன்னையறியாது உடல் சூடேறுவதையும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருவமல்லா உருண்டை உருள்வதை உணர்ந்தாள்.

ஆனால் கடவுளே ….இது என்ன அநியாயம் என்று தன்னைத்தேன கேள்வி கேட்டுக்கொண்டே கால்மேல்கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உட்காந்தாள்.ஆனால் விடாக்கண்டனாக தொடர்ந்தான் ராஜா…

இந்த முடியை உங்க ஞாபகமாக வைச்சிருக்கேன் !

என்றான் சினிமா நாயகன் போல..

எதுக்கு ? என்றால் சுரத்தையேயில்லாமல்…சம்யுகி

தப்பு பன்ற.. என்றது அதே ஆழ்மனம்.ஆனாலும் தனக்கு அந்த வார்த்தைகள் சந்தோஷத்தை கொடுக்கின்றன.என்றுமே இல்லாத பரவசத்தை ஏற்படுத்துகின்றன உடம்பெல்லாம் மின்சாரம் பரவியது போல ஏதோ….மனம் வேண்டும் வேண்டும் என்றது எதனால் ?

வேறு யாரும் சொல்லியிருந்தால் பாயும் புலியாக மாறியிருப்பாள் ஆனால் இரண்டு நாள் சந்தித்தவன்,அதிலும் அதிகமாக பேசக்கூட இல்லை அப்படிப்பட்டவன் திருமணமான பெண் என்றும் பாராது தாறுமாறாக புகழ்றான்,எனக்கேன் போபம் வரல்ல ..அதிகபட்சம் கோபம் வந்ததாக நடிக்க கூட முடியல்லையே ..எனத் தன்னைத்தானே நொந்து கொண்டவள் அதற்குமேல் வார்த்தைகள் இதழ்களில் சிறைப்பட்டதே தவிர ஒலியைப்பெற வலுவற்றதாக இருந்தன.
இனிதாக ஆசிரியருக்கான பட்டமளிப்பு விழா நடந்து முடிந்தது.ராஜாவுடன் இணைந்து நடந்தாள் சம்யுகி .ஆயிரம் கண்கள் தம்மை நோட்டம் விடுவதை உணர்ந்த போதும் பெருமையாக உணர்ந்தாள் சம்யுகி.

என்ன பெண் நான் …

ராஜா திருமணம் செய்யாதவன்.ஆனாலும் சமூகத்துடன் தொடர்புடைய டாக்டர் தொழிலில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளவன்.நான் மட்டும் என்ன ? கணவன் மூன்று குழந்தைகள் சகிதம், குழந்தைகள் உளவியல் ஆலோசகராக வெளிநாட்டில் தொழில் புரிபவள் .அப்படி இருந்தும் எம் இருவருக்கும் ஏன் இது தப்பாகத் தெரியவில்லை?

ராஜா பெண்கள் பின்னே அலைபவன் அல்ல.!ஆனால் ஒரு நிமிடம் எந்தப் பெண்ணும் கண்களால் அளவிடும் அழகுக்கும் ஆளுமைக்கும் உரியவனே. அப்படிப்பட்டவன் என் மீது நாட்டம் செலுத்த காரணம் என்ன?

யோசித்த படியே பேருந்தின் இருக்கையில் ராஜாவின்அருகேஅமர்ந்தாள் .அமைதியாக இருவரும் இருந்த போதும் ஆயிரம்கதைகளை அவள் மனம் பேசியது.

காதல் உண்மையானதா?அதற்கு கண் இல்லை என்பது உண்மையா ?

அப்படித்தானே இருக்க வேண்டும்!சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக வாழும் ஒருவன் திடீரென முன் பின் தெரியாத அதுவும் திருமணமான பெண் மீது காதல் மொழி பேசுகிறான்.

ஏன்?

சில சமயம் கதைகளிலும் சினிமாவிலும் வருவது போல காமமாக இருக்குமோ .உடல் எல்லாம் குளிர்ந்து வியர்ந்தது.விருட்டென திரும்பியவள்… எதுவுமே அறியாதவனாக குழந்தை முகத்துடன் யன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை பார்த்ததும் சீ …அப்படியெல்லாம் கீழ்த்தரமானவன் இல்லை என சமாதானம் செய்து கொண்டாள்.

காலவோட்டத்தில் எட்டேயிருந்த இரு மனிதவுள்ளங்கள் கேள்விபதில் போராட்டங்களைத் தாண்டியும் இணைந்து கொண்டன.

எத்தனையோ தடவை கணவனுக்கு துரோகம் செய்கிறேனா என தனக்குத்தானே கேள்வி கேட்டவள் , பெற்றோரின் பணத்தேவைக்கு பலிகடாகவாக மாறிய நான் திருமணச் சந்தையில் விற்பனை செய்ப்பட்டேன்.ஆனால் வாங்கியவன் அநியாயத்துக்கு அப்பாவி.என்னை பாதுகாப்பதை விட அவனையும் சேர்த்து பாதுகாக்கும் வேலை எனக்கு.அறிவுரை சொல்வதும் குடும்ப நிர்வாகத்தை திட்டமிடுவதும் ,வேகமான வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப வேகமாக ஓட வேண்டிய கட்டாயமும் .அதிலும்அவனையும் தூக்கிக்கொண்டு ஓட வேண்டிய நிர்பந்த சூழல். எதையும் சுயமாக முடிவெடுக்க முடியாது குழந்தை போல என் கைகளை கடனாக கேட்பவனது அப்பாவித்தனம் சுமையாக அழுத்துவதை உணர்ந்தாள் சம்யுகி. மாறாக என் மனைவி என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதை சம்யுகியால் தொடர்ந்து ஏற்கமுடியவில்லை.மூன்று குழந்தைகளுடன் மனதுக்குள் அழுது அழுது நடித்து வாழ்த காலங்கள் பத்துவருடத்தை கடந்துவிட்டன.ஆனால் உடலில் சிலிர்ப்பில்லா இல்லற வாழ்வை ஜடமாக வாழ்ந்தாள்.தன்னை இயந்திரமாக மாற்றி ஓடத்தொடங்கியவள் தனது தோழியின் ஆசிரியருக்கான பட்டமளிப்பு விழாவில் ராஜா என்ற ஆண்மகன் மூலம் அந்த இளமைக்கால உணர்வலைகளை உணர்ந்தாள்.
என் வாழ்வின் அர்த்தம் என்ன ?எல்லாவற்றையும் முழுங்கி நிறைவேறாத ஆசைகள் கனவுகளுடன் இறந்து போவதா?என் கலாச்சாரத்தில் உள்ள ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை நான் தாண்டிவிட்டேனா?அப்படிச்சொல்ல முடியாதே..

மனிதன் வாழ்வை வளப்படுத்த தோன்றிய இதிகாச புராணங்கள் ,மனித கலாச்சாரத்தின் சிறந்த கண்ணாடியாக விளங்கிய சங்க இலக்கியங்கள் எல்லாவற்றிலும் அகம் சார்ந்த வாழ்வியலை எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளதே.அதனை மறந்தது அல்லது மறுத்தடிப்பது நமது தமிழ் சமூகமே.காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப கலாச்சார விளக்கம் சொல்கிறது.ஆனால் வாழ்வியலின் வேகம் மனித உணர்வுகளை சிதைப்பதை யார் உணர்கிறார்கள்?
என் வெளிநாட்டுத்தோழி சொல்வது போல” உன் கணவன் ,உன் குழந்தைகள் இதையெல்லாம் தாண்டியது “நான்”

நான் பூரணமாகவில்லையென்றால் சிதைவது நானாகவே இருக்குமே தவிர உன்….அல்ல
வளைப்பின்னலுக்குள் சிக்காதே தனியே உனக்கென்ற பகுதியை ஒதுக்கு அதற்கான திறப்பை நீயே வைத்திரு அது முழுக்க முழுக்க “உனக்கான சுவர்க்கபுரி”.எவ்வளவு அழகான வார்த்தை.நானும் வாழப்போகிறேன் என தனக்குத்தானே கூறிக்கொண்டவள் ,

தனக்கான கவிதை, கதை,குழந்தைகள் ,இயற்கை என்ற சின்னச்சின்ன சந்தோஷங்களுடன் ராஜாவையும் தனது மனதின் அற்புத அறையில் பத்திரப்படுத்தினாள்.

காலங்கள் ஆறுமாதகாலத்தை கடந்த போது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றவள் ராஜாவைப் பார்ப்பதுக்காக தனியே அவனது பகுதிக்கு வந்திருக்கிறாள்.எல்லை கடந்த அன்புடன் அரவணைத்துக் கொண்டவன் மார்பில் சாய்ந்திருந்த போதே குரங்கு குணம் அவளுக்குள் தாவிப்பாய்ந்து தவிக்கவைக்கிறது.எத்தனை மணிநேரம் குளிப்பது என அழுத்தவாறே உடலைத்துவட்டியவள் எந்தவித புத்துணர்ச்சியும் இன்றி ஆடைமாற்றி வெளியே வந்தாள்.அதே இடத்தில் ராஜா…

ராஜா….ம் எவ்வளவு நேரம் T.V பார்ப்பாய்…

தலையை திருப்பியவன்,வெளியே போய் சாப்பிடலாம் என்றான்!

பதிலுக்கு காத்திராமல் குளியறைக்குள் புகுந்துகொண்டான்.

தட்டில்லுள்ள மசாலா தோசையை கிள்ளிக்கொண்டு…

ராஜா…

சொல்லுங்க…!

என்னை Love பன்றியா..?

இல்ல!

என்றான் சலனமேயில்லாமல்..

என்ன என்ன.. என்றாள் சம்யுகி பதட்டத்துடன்..

என்ன?

இல்லையா?

ஆமாம்.. என்றான் ராஜா!

அப்படியென்றால் என்னுடன் பழகியது,பேசுவது எல்லாம்?

ஒரு ஈர்ப்பு..என்றான் ராஜா

சும்மா காதல் அது இது என்று கனவு கானாதீங்க!

படிச்சவங்க வெளிநாட்டில் இருக்கிறீங்க..இதெல்லாம் புரியாமல் என்ன காதல்..அது இது என்று அழுத்துக்கொண்டவனை ,கண்வெட்டாது ஆத்திரத்துடன் நோக்கினாள் சம்யுகி.

உனக்கு பெண் என்றா இளிச்ச வாயா ..பார்ப்பீங்க காதல் வசனம் பேசுவீங்க உங்க அன்பை நிஜம் என்று நம்பி எங்கள் துன்பங்களுக்கு துணையாகத் தகுதிவாய்ந்த ஆண்மகன் என நம்பி தோள் சாய்கையில் ,உங்கள் சுகங்களுக்கு வடிகாலாக எங்களை பயன்படுத்திவிட்டு காதலா..என்று அறியா மொழி பேசுவீங்க..

ஒன்று நாங்க அழுது புலம்பனும்..
அல்லது தற்கொலைபன்னனும்..

என்னடா…என்றாள் ஆவேசமாக சம்யுகி

சீ…உங்களிடம் எப்ப காதலிக்கறதாக சொன்னேன்..நீங்களாக கற்பனை செய்தா நான் என்ன பன்றது?

அப்படியென்றால், என்னை என்னை என் அன்புக்கு சாட்சியாக உனக்குத் தந்தது?

என்ன பதினாறு வயதா உங்களுக்கு …..? சும்மா எமோர்சனல்ல உளறாதீங்க! காசு கொடுத்தா யாரும் வருவாங்க என்றான் விடுக்கென்று!

அதற்குமேல் அழுகையை அடக்கமுடியாது பொது இடம் என்று பாராது குமுறி அழுதாள் சம்யுகி.
சீ..எல்லாரும் பார்க்கிறாங்க சாதாரண பட்டிக்காட்டுப் பொண்ணு நீங்க..உங்களைப்போய்..
வாங்க போகலாம் என்று கையைப்பிடித்தவன் கையை உதறித்தள்ளியவள்.

ராஜா நீ ஆண்மகன் என்று அடையாளப்படுத்தவிட்டாய் ஆனால் நான் பட்டிக்காடு அல்ல என்பதை நீயும் புரியனும்..

குழப்பமாக பார்த்தான் ராஜா..

தனது கைக்தொலைபேசியை எடுத்தவள் அதில் பதிவாகியிருந்த ஒளிப்படத்தையும்,அவனால் பேசப்பட்ட காதல்வார்த்தைகளையும் காண்பித்தாள்.வெளிறிய முகத்துடன் வார்த்தையின்றி தடுமாறியவனை ஏளனமாக நோக்கியவள் பெண்கள் என்றும் பட்டிக்காடும் அல்ல கோழைகளும் அல்ல நீங்க பத்தடி பாய்ந்தா நாங்க இருபதடி பாயும் உலகத்தை கத்துகிட்டு வருகிறோம்.இந்தப் பழைய பஞ்சாங்க கதைகளை பேசி எங்களை மடக்கி விட்டதாக நினைக்கிறீங்க.ஆனால் அன்பு என்ற ஒன்றில் தடுமாறும் நாங்கள் அழுதுகொண்டு மூலையில் இருப்போம் என்று நீ நினைத்தது தப்பு.என்னைப்போன்ற பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நான் வாழ ஆசைப்படுகிறேன்.
புரியவில்லையா?

என்னை ஏமாற்றிய உனக்கு வாழ்நாளில் எந்தப் பெண்ணுடனும் தொடர்பு வரக்கூடாது.அதாவது இந்த சாட்சியங்களை நிஜம் என்ற தலைப்பில் இனையத்தளங்களிலும், யூட்டூப்பிலும், முகநூல்களிலும் பதிவு செய்ப்போகிறேன்.

எனக்கான வாழ்வு முடிந்து விட்டது .ஆனால் என் பெண்ணுக்கும் பெண் சமூகத்துக்கும் விழிப்புணர்வு வருவதற்காக என்னையே அர்ப்பணிக்கிறேன்..

என்று சொல்லிக் கொண்டு நிமிர்ந்த நடையுடன் சென்றவளை கண்கொட்டாது பார்த்தான் ராஜா..

Print Friendly, PDF & Email

1 thought on “கலைந்த கனவு…

  1. அய்யா சாமி…. தயவு செய்து நற்சிந்தனைகள் உண்டாகக்கூடிய கதைகளை வெளியிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *