இரவும் இசையும்

11
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 17,087 
 

யாரும் இல்லாத இரவு. துணைக்கு நிலவும் இல்லாத அமாவாசை இரவு. ஓடும் நதி அப்படியே அசைவன்றி நின்றால்? அது போல் ஏறி விழும் ஆனைக்கோட்டை மானிப்பாய் வீதி. இனந்தெரியாத பயமும் இன்பமும் ஒன்றே சூழ்ந்த இரவு 1 மணி. 80 Km/hல் என் அறைக்கு அவசரமாய் சென்று கொண்டிருந்தேன். என் pulsarஇன் சத்தம், அதன் வெளிச்சம், இவை மட்டுமே வீதியை நிரப்பியது.

“சனியன்”. ஒரு நாய் குறுக்கே. bike தடம்புரண்டது. சிறிது நேரம் கழித்து கண்திறந்தேன். நெற்றி, கையில் இரத்தம் வழிவதை உணர முடிந்தது. கைபேசி, bike இன் head light இரண்டும் சுக்கு நூறாய் உடைந்துவிட்டது. சதுரங்கஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் காய்கள் போல், வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வெரு தொங்கலில் இருந்தது. என் சட்டையை கிழித்து காயத்துக்கு கட்டுப்போட முயன்றேன், ஆனால் காயம் எங்கே, இரத்தம் எங்கிருந்து வழிகிறது என்று அந்த இருட்டில் தெரியவேயில்லை. மெதுவாக எழுந்து அருகில் இருந்த வீட்டுக்குச்சென்றேன்.

“ஐயா” “வீட்டில யாராவது இருக்கீங்களா?” “accident ஆயிடுச்சு, இரத்தம் வழியிது”. இருந்த வலியில் ஒருதடவை கத்திக் கூப்பிடுவதற்க்கே, சாதரணமாக நூறு தடவை கூப்பிடும் சக்தி தேவைப்பட்டது (நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி), ஆனால் நூறுதடவைக்கு மேல் கூப்பிட்டிருப்பேன். வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ நாய் மட்டும் இல்லை என்பது உறுதியானது. அந்த சிறிய gateஐ ஏறிக்குதித்து கதவைத் தட்டினேன். யாரும் வரவில்லை, பின் வீட்டைச்சுற்றி சென்று ஒவ்வெரு அறை யன்னல்களையும் தட்டினேன். அறைகளுக்குள்ளும் யாரும் இருப்பது போலும் தெரியவில்லை.வீட்டில் யாரும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தேன். சற்று தலையை சுற்றிக்கொண்டுவர களைத்து வாசலில் வந்து இருந்து விட்டேன் (முடியல்ல).

சடார் என்று வீட்டின் அத்தனை மின்குமிழ்களும் ஒரே நேரத்தில் எரிந்தன, வானத்தின் நட்சத்திரங்கள் பின்தள்ளப்பட்டன. என்மேல் இருந்த இரத்தத்தைப் பார்த்து பயந்துவிட்டேன். அப்பொழுது வீட்டில் யாரோ phoneஇல் கதைக்கும் சத்தம் கேட்டது.
“hello hello ஏய் யாரோ கள்ளங்கள் வந்திருக்காங்க, வீடு முழுக்க சுத்தி நிக்கிறாங்க, எல்லா கதவு யன்னல்களையும் தட்டுறாங்க, ஒரு அஞ்சு ஆறு பேர் இருப்பாங்க, பயமா இருக்கடி, உடனே போலீஸ்க்கு போன் பண்ணு”

“போலீஸ்லாம் வேணாங்க, நான் ஒரு ஆள்தான் வீடு முழுக்க சுத்தி சுத்தி தட்டினன், வைரகோயிலடில bike accident ஆயிடுச்சு, நாய் குறுக்க வந்து, first aid ஏதாவது இருக்கா”

மௌனம்.

“நான் எப்பிடி நம்புறது?” அவள் கேட்டாள்.

“யன்னலால பாருங்க, ஒரே இரத்தமா இருக்கு”

“அது paintஆ இருக்கும், நீ யன்னலுக்கால மயக்க மருந்தடிச்சா, துவக்க காட்டினா”

“துவக்கா…ஐயோ கத்தி கூட எடுத்திட்டு வரல்லங்க”

“என்ன எடுத்துட்டு வரல்லையா?”

“இல்லைன்னு சொன்னங்க, சரி அப்ப ambulanceகு phone போடுங்க, please”

“ambulance number இல்லை”

“diaryகள்ள இருக்கும்”

“எனக்கு diary எழுதிற பழக்கம் இல்லை”

“அம்மாமாமாமாமாமாமா…”

“வேணும்ன்னா netல search பண்ணலாம்”

“very good, thank you, அப்பிடியே அந்த frienda போலீஸ்க்கு சொல்லவேண்டாம்னு சொல்லுங்க”

அப்புறம் அவ friendகூட பேசினாள்.

“ஏய் அவன் திருடன்ல்லாம் இல்ல, ஏதோ accident ஆயிடுச்சாம், நீ போலீஸ்கு சொல்லிட்டியா?”

“இல்லடி”

“இல்லையா? இவ்வளவு நேரம் என்னடி செய்திட்டு இருந்தாய்”

“அது கனவுன்னு நினைச்சு திருப்பி படுத்திட்டன், sorryடி”

“தூங்குமூஞ்சி, எருமைமாடு”

“sorry sorryடி…ஆனா எதுக்கும் நீ கதவு திறக்காத”

“நான் திறக்கல்ல, ambulanceக்குத்தான் call பண்ணபோறன், நீ முழிச்சிரு, தேவைனா அடிக்கிறன்”

“Ah okayடி, ambulance number இருக்கா?”

“ஏன் உன்கிட்ட இருக்கா? இல்லைல, மூடிட்டு phoneஅ வை, தூக்கத்தில பொறந்தது”

கதவுக்கு வெளில அவகதைக்கிறத கேட்டிட்டே சிரிச்சுட்டு நின்னன். அந்த குரல், அதில இருந்த ஈரம். அவ எப்பிடி இருப்பான்ற கற்பனை…அ…என் உடம்பில காயம் இருக்கின்றதோ, இரத்தம் வருதின்றதோ, அட அதெல்லாம் மறந்திடுச்சு.

“சொல்லிட்டன், பதினஞ்சு நிமிசத்தில வந்திடுவாங்க, ஆனா கோயிலடிக்கு, அங்க ஏதாவது bike accident பட்டுக்கிடந்தா, ambulanceஅ விட்டு இறங்க சொல்லி இருக்கன், இல்ல அவங்க போலீஸகூப்பிடுவாங்க, so நீ திருடன்னா இப்பையே போயிடு”

“என் செல்ல pulsar கோயிலடில கொறட்டை விட்டுத் தூங்குது…I’m waiting…first aid box இருந்தா தாங்களன்”

தும்புத்தடில boxஅ கொழுவி ஒளிஞ்சு நின்னு யன்னலுக்கால நீட்டினா.

“கொஞ்சம் தண்ணி தர்ரீங்களா?”

அதுவும் அதே மாதிரித்தான்.
நானும் காயத்த clean பண்ணி கட்டுப்போட்டுகொண்டிருந்தன், அவ சத்தமே இல்லை. ஆனா கொஞ்ச நேரத்தில ஒரு flaskஅயும், cup & saucerஐயும் bagல போட்டு தும்புத்தடில நீட்டினா.

“திருடனுக்கு teaஆ?”

“ஒரு வேளை நீ திருடனா இல்லாட்டி, அந்த பாவம் எனக்கு எதுக்கு?”

“hmm thank you, நீங்க குடிகல்ல?”

“நானும் குடிச்சிட்டுத்தான் இருக்கன்”

“Cheers” சொல்லி கதவில cupஅ தட்டினன். ஒரு நாப்பத்தஞ்சு second எந்த சத்தமும் இல்லை, அது நாப்பத்தஞ்சு second மாதிரியும் இல்லை, ஐஞ்சு நிமிஷம் மாதிரி இருந்திச்சு, ஆனா அதுக்கு பிறகு, அவளும் cupஅ கதவில தட்டின சத்தம் கேட்டிச்சு, saucerஓட அவள் வளையல்கள் தட்டின சத்தமும்.
மெல்லமா கதை குடுத்தன், ஏதோ ஒரு தைரியம்.

“உங்க பெயர் என்ன? என் பெயர் கஜன்”

“hello யாருன்னு தெரியாதவங்க கிட்டல்லாம் பெயர் சொல்லகூடாது”

“சின்ன வயசுல உங்க அம்மா சொன்னாங்களா?”

“இல்லை, அப்பா சொன்னாரு”

“ஓ… வீட்டில அம்மா அப்பா இல்ல?”

“ஏன் இல்லை, அப்பா அம்மா தூங்கிட்டு இருக்காங்க”

“இவ்வளவு சத்தம் கேட்டுமா?”

“அது…அ…அ..தூக்கமாத்திரை போட்டு தூங்கிட்டு இருக்காங்க”

“இந்த மாதிரி பொண்ண பெத்தா தூக்கமாத்திரை போட்டாத்தான் தூக்கம் வரும்”

“என்ன?”

“இல்லை very good mummy daddyனு சொன்னன்”

“சரி நீங்க யாருன்னு சொல்ல வேண்டாம், நீங்க யாரா இருக்கணும்னு ஆசைபடுரீங்கலோ அவங்கள நினைச்சு பதில் சொல்லுங்க, okay?”

“என்ன bore அடிக்குதா?”

இல்லை, உன் குரல கேக்கனும்னு ஆசையா இருக்குன்னு சொல்ல நினைச்சன், but அந்தளவு தைரியம் வரல்ல.

“இல்லை வலிக்குதுங்க, ஆடிப்பாடி வேலை செய்ஞ்சான்னு சொல்லுவாங்கல்ல, நான் இருக்க நிலைமைக்கு ஆட முடியாது, உங்க குரலுக்கெல்லாம் பாடினா முடியாது”

“Hello திருடன் sir என்ன கலாய்க்கிரீங்களா…சரி பதில் சொல்றன், என் பெயரு அனுஷ்கா”

“ஐயோ நான் உங்க பெரிய fanங்க, தேவசேனால்லாம் chanceஏ இல்ல”

“hello அனுஷ்கா செட்டி இல்ல”

“அனுஷ்கா ஷர்மாவா”

“ஷங்கர்…அனுஷ்கா ஷங்கர்”

“அவங்க என்ன செய்யிறாங்க, sorry நீங்க என்ன செய்யிறீங்க?”

“seeker, சித்தார் வாசிப்பன், இசையமைப்பாளர், அம்மா”

“கல்யாணம் ஆயிட்டுதா”

“ஆமா, இரண்டு பசங்க, 6 வயசும், 2 வயசும்”

“hello அவங்களுக்கு இல்லை, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

மௌனம். மௌனம் சம்மதமா? மனசு பதறிச்சு

“உங்களுக்கு கல்யாணம் ஆகல்லத்தானேங்க”

இப்ப மௌனம் சம்மதம்

“சரி உங்களுக்கு புடிச்ச நிறம்?”

“தெரியாது”

“ஆ?”

“அவங்களப் பத்தி எல்லாம் தெரியும், but புடிச்ச நிறம் தெரியாது”

“அப்பாடா, characterஅ விட்டு வெளிய வந்திடீங்களா, சரி சொல்லுங்க, அவங்கள ஏன் அவ்வளவு புடிக்கும், இசையாலையா”

“இல்லை, 2012 டெல்லி rape அப்ப அவங்க அத எதிர்த்து போராடினாங்க, ஒரு சிறுமியா அவங்க எப்பிடி பாலியல் துஷ்பிரயோகம் அனுபவிசாங்கன்னு தைரியமா வெளில சொன்னாங்க, இசையோட வேலையே மௌனத்த உடைக்கிறதுதான்…சரி நான் ஒன்னு உங்கள கேக்கிறன், அந்த rape பண்ணுப்பட்ட பொண்ணோட பெயர் என்ன?”

நான் மௌனமா இருந்தன், சரித்திரத்தில கொன்னுகுவிச்சவன்களோட பெயரெல்லாம் தெரியும், ஆனா அவங்க கொன்னவன்களோட பெயர சொல்லித்தராத இந்த கல்வி முறைல படிச்சத நினைச்சு வெட்கமா இருந்திச்சு.

“தெரியாதிங்க”

“கவலைப்படாதீங்க, சட்டப்படி ஒரு rape victimஓட பெயர வெளியிட முடியாது”

“அது சரிதானேங்க, வெளில தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு அவமானம் தானே”

“என்னடா அவமானம்?”

அவள் அம்மன் இருக்கிற சிங்கத்தோட கர்ஜனை மாதிரி இருந்திச்சு.

“இப்ப நீ இந்த கதவ உடைச்சு வந்து என் கைய வெட்டி என் வளையல திருடிட்டு போனான்னா, நாளைக்கு என் பெயர் paperல வரும், ஆனா நீ என்ன rape பண்ணிட்டு போனா வராது, ஏன்?”

“ஏங்க அம்மா மேல சத்தியமா நான் திருடனும் இல்ல, உங்கள rape பண்ணவும் வரல்ல”

“இருண்டுளையும் நீ தானே கெட்டவன், நான் என்ன தப்பு பண்ணன், நான் எதுக்கு அவமானமா யோசிக்கணும்”

“ஆனா இந்த சமுதாயத்த மாத்த time எடுக்கும்”

“நான் சமுதாயத்த மாத்த try பண்ணல்ல, I’m a teacher, ஒவ்வொருத்தனா மாத்த try பண்றன், இப்ப உங்கள மாத்த try பண்றன், நீங்க ஒரு rape பண்ணுப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணிப்பீங்களா?”

இப்ப நான் சொன்னா அது வெறும் hypotheticalஆன answerஅ இருக்கும்னு தோணிச்சு, ஏன்னா நானும் இந்த முட்டாள் சமுதயாத்தோட அங்கம்தான், ஆனா நான் சொல்றதுக்கு வேற இருந்திச்சு.

“அது தெரியாது, ஆனா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறன், I Love You”

ஒரு ஒரு நிமிஷம் அவ மௌனமா நின்னா.

“சரி என்ன பத்து பேர் rape பண்ணிட்டாங்க அப்ப கல்யாணம் பண்ணிப்பியா?”

அதுவரைக்கும் hypotheticalஅ இருந்த அந்த கேள்வி, அவள அந்த இடத்தில வைச்சு யோசிக்கும் போது உசிர எரிச்சிச்சு, அன்புக்கு மட்டும்தான் அறியாமைய அகற்ற ஆற்றல் இருகின்னு தெரிஞ்ச்சிச்சு.

“பண்ணிபங்க”

ஒரு கதவு மட்டும்தான் நடுவுல, காலம் தூரம்லாம் கரைஞ்சு போச்சு. புதுசா பூத்த பூவாசம் காத்தில கலந்திச்சு.

“சரி கல்யாணம் பத்தி பேசினம், நீங்க அப்புறமா முடிவு சொல்லுங்க, ஆனா பொண்ணுபார்க்க வரும் போது இந்த வீணைல்லாம் வாசிப்பாங்களே, அதுமாதிரி நீங்க சித்தார் வாசிங்களன்”

பத்து நிமிஷம் அவ மூச்சுவிடுற சத்தம் கூட இல்ல, அப்புறமா அந்த ராகம், பைரவி ராகம், ஜோதா அக்பர் படத்தில, ஹிர்திக் ஐஸ்வர்யாவ சபைல இருந்து பார்க்க போகேக்க வர்ர ராகம், மெது மெதுவா துடிப்பு கூடிட்டு போகும். மெய்மறந்து நின்னன். சாகப்போற நேரத்தில காதில நம்ம நேசமானவன்களோட குரல், அதே நேரம் முடியப்போற இதயத்துடிப்பு, அதுமாதிரி அந்த இசைல வந்து கலந்திச்சு ambulance சத்தம்.

“ஏங்க ambulance வந்திடுச்சு, இப்பயாச்சும் கதவ திறப்பீங்களா?”

“நீங்களே பொய்யா ஒரு ambulance ready பண்ணி இருந்தா”

“அம்மா james bondஉ ஆள விடு, இன்னும் ஐஞ்சு நிமிஷம் இருந்தா எனக்கே நான் திருடனோன்ற சந்தேகம் வந்திடும், நான் வாறன்”

கேட்காமலே gate keyய எறிஞ்சாள், அதுல ஒரு heart shape போட்ட keytag இடுந்திச்சு. ஒரு வாரம் கழிச்சு dischargeஆன கையோட அவ வீட்டு வாசல்ல போய் நின்னன். அவளுக்காக காத்திருந்தன். என் கையில என் bike key, அதுல அவ heart keytag.

Anoushka Shankar- https://en.wikipedia.org/wiki/Anoushka_Shankar

Print Friendly, PDF & Email

11 thoughts on “இரவும் இசையும்

  1. Straight’ahh கதைக்குள்ள வந்துடிங்க. Feel good story. Best of luck.

    1. தத்துவஞானி ஓஷோ அவர்கள் தம் சொற்பொழிவுகளுக்கு நடுவில் அனேக நைகைச்சுவைகளைப் பயன்படுத்துவார். அது ஏன் என்று கேட்ட போது, அவர் கூறினார், சிரிக்கும் போது மனிதனின் மனம் விரிவடைகிறது, அவன் ஆணவம் தளர்கிறது, அந்த இடைவெளியை பயன்படுத்தி அவன் ஆத்மாவைத் தொடவே நான் நகைச்சுவைகளை பயன்படுத்துகிறேன் என்று.

      என் வாசகர்களின் நெஞ்சைத்தொடவும் நானும் அவரிடமிருந்து அறியாமல் இதைக்கற்றிருக்க வேண்டும். உங்கள் கருத்து அதை புரியசெய்தது.

      மிக்க நன்றி தோழரே.

      Life is a “Cosmic Joke”

    1. sorryங்க, இந்த கதைய வாசிச்சு கமெண்ட் போடுவாங்களின்னு நான் எதிர்பார்க்கல்ல, அதனால இந்த பக்கம் நிறைய நாள் வரல்ல…இவ்வளவு தாமதமா reply பண்றதுக்கு மன்னிச்சிடுங்க.ரோம்ப நன்றிங்க.

      தாரளமா எடுங்க, எனக்கு பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு, நன்றி.

      இது என் ஈமெயில்-gajanthansriskandarajah@gmail.com

      மேற்கொண்டு எதாவது கதைக்க விரும்பினா, நீங்க தொடர்பு கொள்ளலாம்.

      இது என் page-“ஓஷோ சிறிரதி கவிதைகள்” .search barல “@oshosrirathi”னு அடிசிங்கன்னா வரும், sorry இதுல link paste பண்ண விடுதில்ல

      நன்றி

    2. நண்பரே, என் நண்பர் ஒருவரும் இக்கதையை குறும்படமாக எடுக்கக் கேட்கின்றார், தாங்கள் கொஞ்சம் விரைவில் (இம்மாத முடிவுக்குள்) தொடர்புகொள்ளவும், நன்றி,

    1. Sorryங்க, கமெண்ட் வரும்னு நான் எதிர்பார்க்கல்ல, அதனால இந்த பக்கம் வரல்ல, தாமதமா ரிப்ளை பண்றதுக்கு மன்னிச்சிடுங்க…ரொம்ப நன்றிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *