ஜெயந்தி சங்கர்

 

சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் எண்ணற்ற சிறுகதைகள் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. ஈரம், நுடம், நாலேகால் டாலர், தையல், தம்மக்கள் போன்ற இவருடைய எண்ணற்ற சிறுகதைகள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 1 குறுநாவல் தொகுப்பு, 1 சீனக் கவிதைகள் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ள இவரது சீனக் கவிதைத் தொகுப்பு நூலான ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ 2009ல் நல்லி – திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருதைப் பெற்றது. ‘நியாயங்கள் பொதுவானவை’ என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த ‘அரிமா சக்தி விருது 2006’ சிறப்புப் பரிசு, ‘மனப்பிரிகை’ நாவலுக்கு – அரிமா சக்தி 2008 (சிறப்பு) விருது உள்ளிட்ட பல பரிசுகள் மற்றும் விருதுகள் வாங்கியுள்ளார்.  சிறுகதைத் தொகுப்பான ‘பின் சீட்’ ‘சிங்கப்பூர் இலக்கிய விருது – 2008’க்கும் ‘திரைகடலோடி’ சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2010க்கும் தேர்வாகின. பல்வேறு மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர் உலகளாவிய பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றுள்ளார். சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. 1995 முதல் எழுதி வரும் இவரது ஆக்கங்கள் வேறு மொழியில், குறிப்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு காணவிருக்கின்றன.

பிரசுரமான நூல்கள்

சிறுகதைகள்

1.    நாலேகால் டாலர் (2005)
2.    பின் சீட் (2006)
3.    நியாயங்கள் பொதுவானவை (2006)
4.    மனுஷி (2007)
5.    திரைகடலோடி (2008)
6.    தூரத்தே  தெரியும் வான்விளிம்பு (2010)

நாவல்கள்

7.    வாழ்ந்து பார்க்கலாம் வா (2006)
8.    நெய்தல் (2007)
9.    மனப்பிரிகை (2008)
10.    குவியம் (2009)
11.    திரிந்தலையும் திணைகள் (2012)

குறுநாவல் தொகுப்பு

12.    முடிவிலும் ஒன்று தொடரலாம் (2005)

கட்டுரைகள்

13.    ஏழாம் சுவை (2005)
14.    பெருஞ்சுவருக்குப் பின்னே  (2006)
15.    சிங்கப்பூர் வாங்க (2006)
16.    ச்சிங் மிங் (2009)
17.    கனவிலே ஒரு சிங்கம் (2010)

மொழிபெயர்ப்பு + தொகுப்பு

18.    மிதந்திடும் சுயபிரதிமைகள் – சீனக் கவிதைகள் (2007)
19.    என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி – சீனத்துச் சிறுகதைகள் (2011)

நூல் மொழிபெயர்ப்பு

20.    சூரியனுக்கு சுப்ரபாதம் (2007)

வாழ்க்கை வரலாறு

21.    இசையும் வாழ்க்கையும் (2007)

சிறுவர் இலக்கியம் (மொழிபெயர்ப்பு)

22.    மீன் குளம் – சிறார் சீனக்கதைகள் (2008)

Anthologies 

1) வானவில் கூட்டம்
2) புதிய காளி
3) கனலும் எரிமலையும்
4) சுடும் நிலவு
5) பிரியத்தின் சிறகுகள்
6) வேறொரு மனவெளி
7) முகங்கள்
8)  இரவு

வெளிநாடுகளில் பெற்ற பரிசுகள்/விருதுகள்/அங்கீகாரங்கள்

  • 2009 கல்கி 28-12-08ல் பிரசுரமான சிறுகதை ‘புதிய அவதாரம்’ இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிசம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது.
  • 2008 (ஏப்ரல் 30 அன்று சிங்கப்பூரில் நடந்தேறிய நிகழ்வில்) உரையாற்றிய மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர் சை. பீர் முகமது ‘ஈரம்’ சிறுகதையைச் சிலாகித்துப் பேசிவிட்டு, ‘இருபத்தைந்தாண்டுகளில் எழுதப்படாத ஆகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை’ என்றார்.
  • 2008 – கனடாவின் – தமிழ் இலக்கியத் தோட்டத்தின்  ‘இயல் விருது’ நடுவர் குழுவில் இடம் பெற்றமை
  • 2009 ‘மனப்பிரிகை’ நாவலுக்கு – அரிமா சக்தி 2008 விருது அளிக்கப்பட்டது.
  • 2009 ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ நூலுக்கு நல்லி – திசையெட்டும் இலக்கிய விருது 2009′
  • 2008 சிங்கப்பூர் இலக்கிய விருது – 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான ‘பின் சீட்’ தேர்வானது.
  • 2007 – ‘தமிழ் நேயம்’ அமைப்பின் பத்தாவது தொகுதியான ‘சுடும் நிலவு’ல் ‘வீடு’ சிறுகதை தேர்வு/பிரசுரம்
  • 2007 – 2006ஆம் வருடம் பிரசுரமான ‘நியாயங்கள் பொதுவானவை’ என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த ‘அரிமா சக்தி விருது 2006’ல் – சிறப்புப் பரிசு பெற்றது.
  • சிறுகதை எழுதித்தரச் சொல்லி அழைப்பு – திரைகடலோடி – ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2007
  • 2006 – ‘தமிழ் நேயம்’ அமைப்பின் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் ‘சொல்லாத சொல்’ என்ற சிறுகதை முதல் தகுதி. ‘கனலும் எரிமலை’ என்ற ஒன்பதாவது தொகுதியில் பிரசுரம்.
  • 2005 – அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் ‘சேவை’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2005 – பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் ‘தமிழ் நேயம்’ சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி – ‘கடைசிக் கடிதம்’ என்ற சிறுகதை முதல் தகுதி – அமைப்பின் எட்டாவது தொகுதியான ‘புதிய காளி’யில் பிரசுரம்.
  • சிறுகதை எழுதித்தரச் சொல்லி அழைப்பு – நாலேகால் டாலர் – கல்வி தீபாவளி மலர் 2004

சிங்கப்பூரில் பெற்ற பரிசுகள்/விருதுகள்/அங்கீகாரங்கள்

  • 2010 ‘திரைகடலோடி’ சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2010 க்குத் தேர்வு
  • 2008 சிங்கப்பூர் இலக்கிய விருது – 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான ‘பின் சீட்’ தேர்வானது.
  • 2006 – சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று மாத ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ இயக்கத்தில் related reading பிரிவில் ‘நாலேகால் டாலர்’ சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டது.
  • 2005 – தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது கௌரவக் குறிப்பு – ‘வேண்டியது வேறில்லை’ (குறுநாவல்) – நான்காமிடம்
  • 2005 – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா ) ‘மழலைச்சொல் கேளாதவர்’ என்ற சிறுகதை ஊக்கப்பரிசு.
  • 2004 – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் – ‘முத்தமிழ் விழா’ மற்றும் ‘தமிழ் முரசு’ ஏற்பாட்டில் ‘வளர் தமிழ் இயக்கத்தின்’ ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் ‘பொம்மை’ சிறுகதை இரண்டாம் பரிசு
  • 2001 – சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய ‘குறுநாவல்’ போட்டியில் ‘குயவன்’ என்ற முதல் (தங்கப்) பரிசு
  • 2001 – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதை ‘நொண்டி’ (நுடம்) இரண்டாம் பரிசு.
  • 2000 – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிலப்பதிகாரப் போட்டியில் ஆறுதல் பரிசு.
  • 1998 – சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
  • 1990களின் இறுதி – ‘தெளிவு’, ‘கீரை’ போன்ற சிறுகதைகள் ஆறுதல் பரிசுகள் பெற்று சிங்கை வானொலியில் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பட்டிருக்கின்றன.

ஆக்கங்கள் பிரசுரமான ஊடகங்கள்

  • வெளிநாட்டு அச்சூடகங்கள் – அமுதசுரபி, கல்கி, கல்கி தீபாவளிமலர், உயிர்மை, காலச்சுவடு, வார்த்தை, உயிர் எழுத்து, மணல் வீடு, கனவு, புதியபார்வை, கலைமகள், இந்தியா டுடே, ஆனந்தவிகடன் தீபாவளிமலர், அவள் விகடன், த தமிழ் டைம்ஸ், ஊடறு, பெண்ணே நீ, அம்ருதா, தென்றல், வடக்குவாசல், தென்றல் முல்லை, ஃபெட்னா இதழ், இனிய நந்தவனம், மஞ்சரி, சிநேகிதி, முல்லைச்சரம், இருவாட்சி பொங்கல் மலர், காற்றுவெளி, அநங்கம், திசையெட்டும், மலேசிய நண்பன், தமிழ்நேசன், மக்கள் ஓசை, மக்கள் குரல், இனிய உதயம், தாமரை, மௌனம், அகநாழிகை, காலகட்டம், நவீன விருட்சம்,
  • மின் ஊடகங்கள் – திண்ணை, பதிவுகள், சமாச்சார்,  திசைகள், சங்கமம், தமிழோவியம், சிக்கிமுக்கி, வல்லமை, உயிரோசை, சொல்வனம், செல்லினம், வல்லினம், தங்கமீன்
  • உள்நாட்டு அச்சூடகங்கள் – தமிழ்முரசு, சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர், நாம், சிரங்கூன் டைம்ஸ், இனி

உரைகள்

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குவாலலம்பூரில் நடந்த சிறுகதைக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்ட போது ‘அயலில் தமிழிலக்கியம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை சிறந்த கவனத்தைப் பெற்றது.
  • 31-10-09 அன்று ‘Under Covers’ சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நடந்த பெண் படைப்பாளிகள் கூட்டத்தில் தமிழரல்லாதோர் இருந்த அரங்கில் தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் மற்றும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆங்கிலத்தில் ஆற்றிய ‘Scars so similar and yet so different’ என்ற உரை.
  • 4-01-09 அன்று இலக்கிய வட்டத்தில் ஆற்றிய ‘நவீன தமிழிலக்கியத்தில் பேசுபொருள்’ என்ற தலைப்பிலான உரை.

நேர்காணல்கள்

  • சொல்வனம் இணைய இதழுக்காக மலேசியாவைச் சேர்ந்த கே.பாலமுருகன், ‘சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்’ என்ற இ-நேர்காணல்.
  • இனிய நந்தவனம் அச்சிதழுக்காக இதழாசிரியர் சந்திரசேகர் நேரில் வந்து (திருச்சியில்) எடுத்த பேட்டி
  • தமிழோவியம் இணைய இதழுக்காக திருமலை கொழுந்து நடத்திய விரிவான இ-நேர்காணல்
  • நிலாசாரல் இணைய இதழுக்காக கவிஞர் மதுமிதா எடுத்த பேட்டி

இதர இலக்கிய ஈடுபாடுகள்

  • சிங்கப்பூரின் மாணவர்களுக்கான சொற்களம் போட்டிகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் நடுவராகப் பணியாற்றியது
  • எழுத்தார்வம் கொண்ட 30 பேருக்கு நடத்திய சிங்கப்பூர் தேசிய புத்தக வாரியத்தின் NBDCS (National Book Development Council of Singapore ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு – 1Oct2011&1Nov2011
  • சிங்கப்பூர் தேசியல் கலைகள் மன்றம் ஏற்பாடு செய்த முதியோர் இல்லங்களுக்குச் சென்று முதியோருடன் கலந்துரையாடி ஒரு சிறுகதை புனையும் pasSAGES என்ற  projectல் முக்கிய பங்கேற்பு.  எழுதப்பட்ட சிறுகதை – கோடாரித் தைலம். ஆங்கிலத்திலும் கதாசிரியராலேயே மொழிபெயர்க்கப்பட்டது.

****************************

ஜெயந்தி சங்கர்
jeyathisankar@gmail.com
SENJA GREEN
Blk 633C, # 06 -139
Senja Road,
Singapore 673633
http://jeyanthisankar.wordpress.com

****************************