பிராக்ஸிமா-பி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 20,893 
 

ஆகஸ்ட் 24, 2016

இந்திய விஞ்ஞானிகள் அளவில்லா மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினர்.. ஆம், நம் பூமியைப் போல் ஒரு கிரகம் உண்டு என்று அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் அறிந்ததை இன்று அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிப் படுத்திய நாள். துல்லியமான இலக்கையும் அறிந்தாகி விட்டது..

இஸ்ரோவின்(ISRO) இரகசிய ஆராய்ச்சியில் தூரத்தில் உள்ள கிரகங்களுக்குச் செல்லும் விண்கலம் தயாரிப்பதில் வெகுவாக முன்னேற்றம் அடைந்து கிட்டத்தட்ட தயார் நிலையில் இருப்பதில் கூடுதல் சந்தோஷம்… இது போன்ற தூரப் பயணத்தைத் தாங்கும் திறன் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள மக்களுக்கு அதிகம் உள்ளது என்பதும் அவர்கள் ஆராய்ச்சியில் அறிந்தது. சமீபத்தில் ஆப்ரிக்கா சென்ற இந்தியப் பிரதமர், அவர்கள் நாட்டு மக்களை இதுபோன்ற நெடுந்தூர விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளவும் இரகசிய ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகி இருந்தது.

முதல் கட்டத் தேர்வாக ஐம்பது ஆப்ரிக்கப் பழங்குடியை சேர்ந்த பதினைந்து வயது உள்ள சிறுவர் சிறுமிகள் இந்தியா வந்து, பெங்களுரில் உள்ள பயிற்சி நிலையம் அடைந்தனர்.. இவர்களில் நால்வர் தேர்வு செய்து பயிற்சியில் ஈடுபடுத்தப் பட்டு அடுத்த ஆண்டுக்குள் இவர்களில் இருவர் விண்கலத்தில் பயணம் செய்யத் தயார் ஆவர். (இவை மிக இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது, யாரிடமும் சொல்லி விடாதீர்கள். சொன்னால் ஒரு சமுதாயக் கொந்தளிப் ஏற்படும் இங்கு)

முதல் முறையாக இந்திய பட்ஜெட்டை ஜனவரி மாதம் அறிவித்த பின், இந்தியாவின் மிகப் பெரிய முயற்சியான விண்வெளி வெகுதூரப் பயணத்தின் ஆறிவிப்பை வெளியிட பாரதப் பிரதமர் தயாரானார். அனைத்துக் கட்சித் தலைவர்களும், இந்திய ஊடகங்களும், நிறம்பிய அரங்கில் ஆப்ரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சூலூவும், சோலோவும் நம் இந்திய விண்கலத்தில், ‘பிராக்ஸிமா-பி‘ செல்ல இருக்கும் தகவலை அறிவித்தார்… அனைத்துத் தரப்பினரும் கை தட்டி வரவேற்க, மனதுள் நல்ல அவல் கிடைத்தது என சந்தோஷப் பட்டனர்…

அடுத்த சில நாட்களில் நாடு அமளி துமளிப் பட்டது.. எப்படி நம் நாட்டவரை அனுப்பாமல் வெளி நாட்டவரை அனுப்பலாம் என்ற முதல் கேள்வியில் ஆரம்பித்து, ஒவ்வொரு ஜாதி/மதத்தினரும் அவர் ஜாதி/மதக்காரரை அனுப்பக் கோரிக்கை எழுப்பியதுடன் இதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.. ஜாதி நம்பிக்கை இல்லாதவர்களும் அவர்கள் ஆட்களை அனுப்ப வேண்டும் என்று போராடத் துவங்கினர்..

முக நூலிலும், ட்விட்டரிலும் வாள்வீசி வீரியமாகச் சண்டை நடந்தது.. இந்தியா இருக்கும் நிலையில் இது தேவையா என்ற வினாவும் எழுப்பப் பட்டது.. யாருக்கும் ஒரு சரித்திர நிகழ்வின் முன்னோடி அது என அன்று புரிந்திருக்க வாய்ப்பில்லை…

உலக நாடுகளும் இந்தியா அவர்களை முந்திக் கொண்டதில் கடுப்பாகி அவர்கள் பங்குக்கு ஏசினர். பாகிஸ்தான் காஷ்மீரில் தரும் குடச்சலை கூடுதலாக்கினர்.. சீனாவும் சிக்கல் கொடுத்தனர்.

இதற்கிடையில்…

சூலுவும், சோலோவும் இதைப் பற்றி எதுவும் தெரியாமல், இரகசிய இடத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.. அவர்கள் உலக சாதன புரிய இருக்கிறார்கள் என அறிந்திருந்தார்கள்.. நீண்ட நாட்கள் அவர்களால் தனிமையும், குறைந்த அளவு உணவில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனும் இருந்தது. அதை மேலும் வலுப் படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு விண்கலத்தில் உள்ள உணவைத் தவிர வேறு எதையும் உண்ணக் கூடாது எனவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

விண்கலத்தைப் பற்றிய அடிப்படையும், தேவையான தகவலும் போதிக்கப் பட்டது..

அவர்கள் ஆட்டோ ஸ்லீப்பில் இருந்து கொண்டு பயணம் செய்வார்கள்.. அவர்களுக்குத் தேவையான உயிர் சத்துக்கள் ஊசி மூலம் நரம்பு வழி செலுத்தப் படும்.. குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை விழித்து, ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் ஆட்டோ ஸ்லீப் மோடிற்கு (Auto Sleep Mode) செல்வர்.. மிக நவீன விண்கலம், ஒளியின் இருபது சதவிகித வேகத்தில் செல்லக் கூடியது தயார் நிலையில்..
****

ஆகஸ்ட், 24 2017.

‘பிராக்ஸிமா-பி‘ இருப்பது உறுதி செய்யப்பட்டு ஓராண்டு நிறைவான நாள்… இஸ்ரோவின் தும்பா விண்கல ஏவுதளத்திலிருந்து விண்கலம் ‘ஆப்ரிக்கா‘ புறப்படத் தயார் நிலை.. ஆப்ரிக்கா நாட்டினர் பயணம் செல்வதால் விண்கலத்துக்கு ‘ஆப்ரிக்கா‘ எனப் பெயர் சூட்டியது இஸ்ரோ. சூலுவும், சோலோவும் சுற்றியிருந்தவர்களுக்கு கை ஆட்டி விட்டு விண்கலம் உள்ளே சென்றனர்… அவர் நாட்டைச் சேர்ந்த சுமார் நூறு நபர்களும், இந்தியாவின் முக்கிய பதவி வகிப்பவர்களும், விஞ்ஞானிகளும் சூழ்ந்திருக்க, மற்ற நாட்டினரும் தொலைக் காட்சியில் பார்த்திருக்க…

9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 கௌண்ட் டௌன் முடிய விண்கலம் வானத்தில் வர்ண ஜாலமிட்டு ‘பிராக்ஸிமா பி‘ நோக்கிப் பயணம் துவங்கியது…

துல்லிய கணிப்பால் எந்தவித தடங்கலும் இல்லாமல் பயணம் செல்ல சூலுவும், சோலோவும் தாங்கள் நலமாக இருப்பதாகத் தகவல் அனுப்பினர்.. இரண்டு நாட்கள் கலத்தில் உள்ள எல்லா உபகரணங்களும் சரியாக இயங்குகிறதா என உறுதி செய்த பிறகு அவர்கள் ஆட்டோ ஸ்லீப் மோடுக்கு மாறினர்…

தொடர்ந்து அவர்கள் பயணம், பெங்களூர் தரை நிலையத்திலிருந்து கண் காணிக்கப் பட்டது.. அனைத்தும் எதிர் பார்த்தபடி இருந்தது… எந்தச் சிக்கலும் இல்லை…
****

அக்டோபர்,2 2027 சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு…

இன்னும் சில நாட்களில் விண்கலம் பிராக்ஸிமா-பி சென்று அடையும் நேரம் நெருங்கிவிட்டது..

இஸ்ரோவின் முக்கிய விஞ்ஞானி, தலைமை விஞ்ஞானியின் முன் தயங்கித் தயங்கி…

“ஐயா ஒரு சிறு பிரச்சினை… எதோ சதி நடந்திருக்கிறது..“

“என்ன..?“

“பிராக்ஸிமாவில் இறங்கினால் திரும்பிவர இயலாமல் ஏதோ மாற்றம் செய்யப் பட்டுள்ளது“

திடுக்கிட்டவர் “இது எப்படி சாத்தியம்? நாம் எல்லாம் சரி பார்த்து அல்லவா.. அனுப்பினோம்? “

“இல்லை இது நாம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என வேண்டுமென்றே யாரோ தாமதமாகத் தவறு உண்டு பண்ண வைத்துள்ளனர் (Delayed Error Inducer). நான் எல்லாம் சரியாக இயங்குகிறதா என்று சரி பார்க்கும் போது தெரிய வந்தது “

பதட்டமான தலைமை விஞ்ஞானி உயர் மட்டக் குழுவைக் கூட்டி ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்.. “நாம் வேறு நாட்டு பிரஜையை நம் கலத்தில் அனுப்பியுள்ளோம் அவர்கள் பத்திரமாகத் திரும்ப வேண்டியது நம் கடமை.. ஆதலால் அவர்களுக்குத் தகவல் தெரிவித்து விண்கலத்தை பூமிக்குத் திருப்பக் கட்டளை பிறப்பியுங்கள்.. நம் முயற்சி தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை அவர்கள் உயிர் வாழ்வதுதான் முக்கியம்“ என்றார் நிலயத்தின் தலைவர் திரு.பிரம்மா..

சூலுவுக்கும், சோலோவுக்கும் இதில் விருப்பம் இல்லையென்றாலும் இதை மீற முடியாதலால், சென்ற வேலை நிறைவேறாமல் திரும்புவதில் மிக வருத்தம் கொண்டனர்…

அக்டோபர் 15, 2027, விண்கலம் பூமி நோக்கிப் பயணம் தொடங்கியது..
****

அக்டோபர் 15, 2027 முதல் – டிசம்பர் 31, 2036 வரை(9 ஆண்டுகளுக்கு மேல்)
இந்திய வல்லரசின் அசுர முன்னேற்றத்தைப் பொறுக்க முடியாத சில நாடுகளாலும், மேலும் பல உள் நாட்டு, வெளி நாடுகளில் ஏற்பட்ட புகைச்சல்களாலும், நாடுகளுக்கிடையே சில சண்டைகள் உருவாகி பெரிய போராக மாறிக் கொண்டிருந்தது… 2035-ஆம் ஆண்டு அவை உச்ச கட்டத்தை அடைந்தது… ஒருவித அதி நவீன போர் கருவியால் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும், மனிதர்களால் உருவாக்கப் பட்ட அனைத்தும் மர்மமான முறையில் அழிக்கப் பட்டது… டிசம்பர் 31 அன்று பூமி, மனிதனும் மனிதச் சுவடும் அற்றதாகிவிட்டது..

வீண் வெளியிலிருந்து ஆட்டோ ஸ்லீப்பில் இருந்து கண்விழித்தபோது ஜனவரி, 15, 2037-ல் சூலுவுக்கும் சோலோவுக்கும் ஒரு பெரிய ஜோதி பூமியில் தோன்றி மறைவது தெரிந்தது.
****

ஆகஸ்ட் 24, 2037 சரியாக ‘பிராக்ஸிமா-பி‘ இருப்பது உறுதி செய்து இருபத்தியோரு ஆண்டுகள் முடிவடைந்த நாள்..

சூலுவும், சோலோவும் இருந்த விண்கலம் ஆப்ரிக்கக் காட்டின் இடையே ஒரு ஏரியில் வந்திறங்கியது..

சுற்றிலும் காடு, சில விலங்குகள்.. மனித நடமாட்டமே இல்லை..

விண்கலப் பயண உடைகளைக் களைந்தவுடன், அவர்கள் மிகக் குறைந்த அளவு ஆடையே அணிந்திருந்தனர்…

அவர்கள் இருவரும் காட்டைச் சுற்றிப் பார்க்க, சோலோவுக்குப் பசித்தது..

அங்கே கண்ட ஒரு மரத்தில் உள்ள கனியை காண்பித்துப் பறித்துத் தரக் கேட்க, சூலு “நாம் விண்கலத்தில் உள்ள உணவுதான் உண்ண வேண்டும் வேறு எதுவும் உண்ணக் கூடாது.. இது நம்மை அனுப்பியவரின் கட்டளை“ என,

இப்பொழு நாம் விண்கலம் உள்ளே செல்ல இயலாது.. எனக்கு மிகவும் பசிக்கிறது, பறித்துத் தா… என்று சோலோ அடம் பிடித்தாள்.

சூலுவும் வேறு வழியில்லாமல் ஒரு பழத்தைப் பறித்துக் கொடுத்து, தானும் அந்த ஆப்பிள் பழத்தை எடுத்துக் கடித்தான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *