கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 30, 2012
பார்வையிட்டோர்: 51,129 
 

” கிரிங்க்க்க் !!!!!!!”, கூவிய கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்டினான் கணேசன் .

ஐந்தரை மணி காட்டியது கடிகாரம், சோம்பலை விரட்ட பிராயத்தன பட்டான் அவன். குளிர் வேறு அவனை மேலும் சோதித்தது. வேலை நிமித்தமாக அலுவலகத்துக்கு இன்று சிறிது முன்னரே கிளம்ப வேண்டியதை நினைத்து நொந்தான் கணேசன். எப்பொழுதும் கிளம்பும் ஒன்பது மணி புகை வண்டியை தவிர்த்து ஏழரை மணிக்கு வரும் வண்டியை பிடிக்க வேண்டி இருந்தது . ஆகவே சோம்பலை விரட்டிவிட்டு குளிக்க கிளம்பினான். இந்த இடைவெளியில் கணேசனை பற்றி கொஞ்சம் , கொஞ்சம் இரக்க சுபாவமும் நற்பண்புகளும் கொண்ட அவன் ஒரு கம்பெனியில் கணக்கு பிள்ளை வேலை பார்க்கிறான். இன்று சம்பள நாள் ஆதலால் பணியாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்ய சிறிது முன்னரே கிளம்புகிறான்.

மணி சரியாக ஏழரை , ரயில்நிலையத்தில் கூட்டமும் அதிகம் இல்லை.
” டீ , காபி …, டீ , காபி …” , “இட்லி, வடை…, இட்லி, வடை.. ” சத்தங்களுக்கு நடுவினில் கிளம்பிய ரயிலை பிடிக்க ஓடிய கணேசன், லாவகமாக கம்பியை பற்றி மேலேறினான் .

அவன் ஏறிய பெட்டியில் அதிக கூட்டம் இல்லை . எனவே ஜன்னலை ஒட்டிய ஒரு இருக்கையில் அமர்ந்தான் கணேசன். தான் இருந்த பெட்டியினை ஒரு நோட்டம் விட்டவன் , பெட்டியின் மூலையில் கதவை ஒட்டிய இருக்கையில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அவன் எதிரே ஒரு சிறுவனும் அமர்ந்து இருந்ததை கண்டான் .சற்றே விநோதமாக இருந்தது அவர்களின் நடவடிக்கை . அந்த ஆண் பேசிகொண்டே இருந்தான் , ஆனால் அந்த சிறுவன் ஒரு பதிலும் சொல்லமாலே வெறித்து பார்த்தவாறு இருந்தான் .திடீர் என்று அந்த சிறுவன் தலையை வேகமாக ஆட்டினான், இதனால் சந்தேகம் அடைந்த கணேசன் அவர்களை நோக்கி சென்றான் .

நடக்கும் வேளையில் அவன் மன ஓட்டம் பல விஷயங்களை யோசித்தது. ஒரு வேளை அந்த குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாமோ எனவும் எண்ணியது .

அவர்களை நெருங்கியவன் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த ஆணை பார்த்து சிநேகமாய் ஒரு புன்னகை பூத்தான்.

திரும்பி புன்னகைத்தவன் ” ஹலோ சார், நான் மாறன் ” என்றான்.

“ஹலோ சார்,நான் கணேசன் , யார் இந்த சிறுவன் , உங்கள் மகனா ?

“இல்லை சார் , தனியாக அமர்ந்து இருக்கிறான் , தம்பி எங்கே உன் அம்மா ?, என்று கேட்டால் , சரியான பதில் சொல்ல மாட்டேங்கிறான் ”

கணேசன் சிறுவனை பார்த்து ,” தம்பி உன் பேர் என்னப்பா? என கேட்டான்.

“100 ” நிலைகுத்திய பார்வையுடன் சிறுவன் .

அவன் பதில் சற்றே விநோதமாக இருக்கவும் , அவனை பார்த்து கணேசன் , ” உன்னோட அப்பா அம்மா எங்கேப்பா?” என்று கேட்டான்.

“100 ”

“நீ எங்கே போகணும்பா”

“100 ”

சற்றே விநோதமாக இருந்தது சிறுவனின் பதில், கணேசனை தனியாக அழைத்தான் மாறன் . கதவோரமாக சென்ற இருவரும் பேச ஆரம்பித்தனர் .

“சார் ,ரொம்ப நேரமா இந்த பையனை பார்த்துட்டு தான் வரேன் . அவன் தனியா தான் இருக்கான். நானும் இத்தனை நேரம் கேட்டு பாத்துட்டேன் , அவன் எந்த கேள்வி கேட்டாலும் நூறு , நூறுனே பதில் சொலிட்டு இருக்கான் .” என்றான் மாறன் .

” ” பயண சீட்டு பரிசோதகரிடம் , சொல்லி இருக்கலாமே சார் நீங்கள் ?”,

“இந்த பெட்டிக்கு பரிசோதகர் யாரும் இன்னும் வரவில்லை”என்றான் மாறன்.

“இந்த பெட்டிக்கு பரிசோதகர் யாரும் இன்னும் வரவில்லை”,கரகரப்புடன் சிறுவன் அமர்ந்து இருந்த திசையில் இருந்து வந்தது குரல்
அதிர்ச்சிக்குள்ளான கணேசன் பெட்டியில் இருந்த கண்ணாடியை பார்க்க , கண்ணாடி சிறுவனின் பிம்பத்தை பிரதிபலிக்காமல் இருந்ததை கண்டு , சிறுவன் இருந்த திசையை திரும்பி பார்த்தான் .

நீல நிறத்தில் அந்த சிறுவன் தெரியவும் , மாறனை திரும்பி பார்க்க , மாறனும் நீல நிறத்தில் இருப்பதை கண்டான். தன்னை யாரோ தள்ளியதை போல் உணர்ந்தான் .

“101 ” என்று அந்த சிறுவன் சொல்லும் பொது கணேசன் நியூட்டனின் இயற்பியல் விதியான ஈர்ப்பு விசையை அனுபவபூர்வமாக உணர்ந்தான்.கண்கள் இருட்டிய போது , ரயிலின் கடைசி பெட்டி அவனை கடந்ததை உணர்ந்தான்.

” கிரிங்க்க்க் !!!!!!!”, கூவிய கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்டினான் சுரேஷ் .

Print Friendly, PDF & Email

5 thoughts on “ஏழரை

  1. ஒரு சிறிய தவறு .
    ” கிரிங்க்க்க் !!!!!!!”, கூவிய கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்டினான் கணேசன் .-முதல் வரி
    ” கிரிங்க்க்க் !!!!!!!”, கூவிய கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்டினான் சுரேஷ் .கடைசி வரி
    பெயர் மாறி விட்டது

    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *