செங்கமலம்..!

 

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

” என்னடி..! உண்மையா..? ” – சேதி சொன்ன அந்த சிறுமியை அந்த இருட்டிலும் கூர்மையாகப் பார்த்தேன்.

” ஆமாக்கா.! அந்தக் குருட்டு செங்கமலம் பேருந்து நிலையத்துல ஆள் அரவமில்லாத இடத்துல வழக்கம் போல படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தது. அந்த ரௌடி கோபால் நைசா வந்து அதோட வாயைப் பொத்தி தூக்கிட்டுப் போய்….” அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.

” வாடி !…” என்று சிறுமியை இழுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

தான் தினம் படுத்துறங்கும் இடத்தில் செங்கமலம் இடிந்து…… தலை கலைந்து, ஆடைகள் குலைந்து,முகம், கை, கால்களிலெல்லாம் நகக்கீறல்கள். அலங்கோலமாக அமர்ந்திருந்தாள் .

பார்க்கவே பகீரென்றது.

” என்னடி ஆச்சு..? ” பதறி உலுக்கினேன்.

” ஓ…. ஒன்னும் ஆகல…” – உடைந்து வந்தாலும் குரல் நிதானமாக வந்தது.

” கோவாலு உன்னை கற்பழிச்சானாமே..?!..”

” அ…. ஆமாம்…! ”

” வா… போலீஸ்ல சொல்லுவோம்..! ”

” வேணாம்..! ”

” பயப்படுறீயா…?! ”

” இல்லே..”

” பின்னே..? ”

” நடந்தது நடந்ததுதானே….! போலீஸ்ல சொன்னா மட்டும் அது இல்லேன்னு ஆயிடுமா..?”

” செங்கமலம்…! ”

” சொல்றதைக் கேளு ககா. இதுனால வயித்துல சுமை வந்தாலும் பெத்துக்க நான் தயாராய் இருக்கேன். காரணம்…? கண்ணில்லாத எனக்கு அந்தக் குழந்தை கண்ணா இருக்கும். எப்படியோ கஷ்டப்பட்டு அதை வளர்ந்துட்டா நான் நோய் நொடியாய்க் கிடந்தால் அது சம்பாதிச்சு வந்து சோறு போடும். எனக்கும் ஒரு குடும்பம் வந்திடுமில்ல..” முடித்தாள்.

” செங்கமலம். ! ” நெஞ்சு துடிக்க அவளை இழுத்து அணைத்தேன்.

அவள் இதமாக சாய்ந்தாள்.

கெட்டதையும் நல்லதாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அப்படி ஆனால்…. இவளைக் காப்பாற்றி பேறு காலம் பார்க்க வேண்டும்.! – எனக்குள் தாய்மை சுரந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மகன் செல்வம் வீட்டை விட்டு வேகமாக வெளியேற... இதயத்தை எடுத்து மிதித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். 'என்ன கேள்வி ! என்ன வலி !' நினைக்க நினைக்க..... முகமெங்கும் முத்து முத்தாக வியர்வை. சிவகாமி கணவர் வலி உணர்ந்து அருகில் வந்தாள். ''நம்ம ...
மேலும் கதையை படிக்க...
உங்களுக்குப் பேரளத்தாரைத் தெரியாது. அவர் எங்கள் கிராமத்து ஆசாரி. அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் பேரளம். எப்படியோ எங்கள் புளியங்குடி கிராமத்தில் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் குடியேறி....வாழ்ந்து வருவதால் அந்தப் பெயர். அவர் சொந்தப் பெயர் கிராமத்தில் சத்தியமாக யாருக்கும் தெரியாது. அறுபத்தைந்தைத் தாண்டிய ...
மேலும் கதையை படிக்க...
' அறுபது வயதில் ஒருவருக்குத் திருமணம் ! அதுவும் இரண்டாவது திருமணம், மறுமணம் !! ' - கேட்கவே உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது. அதே சமயம். .. அவர்.... அப்பாவின் நண்பர் என்பதால் எனக்கும் பழக்கம், நெருக்கம், உலகம் தெரிந்தவர். அவரா இப்படி. ..?! ...
மேலும் கதையை படிக்க...
சுரேஷ் ஒரு முடிவிற்கு வந்தவனாய் துணிக்கடையில் ஏறி..... பையுடன் இறங்கினான். வீட்டிற்கு வந்ததும், ''நாளை உனக்கு என் பிறந்த நாள் பரிசு !'' மனைவியிடம் நீட்டினான். மலர்ச்சியுடன் வாங்கிப் பிரித்த பவிஷா முகம் சுருங்கியது. ''என்னங்க...! புடவையா ?'' பரிதாபமாகப் பார்த்தாள். ''ஆமாம். ஏன் கட்டிக்க மாட்டியா ...
மேலும் கதையை படிக்க...
சரியாய்க் காலை மணி 7.00க்கெல்லாம் அந்த முதியோர் காப்பக வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பங்கஜம். வயது 82. வற்றிய உடல். சுருக்கங்கள் விழுந்த முகம். நீண்டு தொங்கும் தொல்லைக் காதுகள். சாயம் போன தொளதொள ஜாக்கெட். துவைத்துக் கட்டிய சுமாரான நூல் ...
மேலும் கதையை படிக்க...
வினைப் பிரதி…..!
தவறுதலான தவறுகள்…!
அப்பாவின் நண்பர்…!
அழகு!
மாரி! – முத்து! – மாணிக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)