பிரசுரங்கள்
இந்த இணைய தளத்தின் வாயிலாக உங்கள் படைப்புகளை எல்லோரும் படித்து மகிழும்படி உயர்ந்த தரத்துடன், எளிதான தேடுதல் வசதியுடன், பல்வேறு வகையாக தொகுக்கப்பட்டு வாசகர்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
கதைப்பதிவு பகுதியில் உங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரியுடன் எங்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
************
கேள்வி, பதில்
சிறுகதைகளை நான் எப்படி அனுப்புவது?
- முதலில், கதையின் உரிமையை தக்க நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். அந்த உரிமையை எங்களுக்கு மாற்றி எழுதி தர வேண்டியது இல்லை.
- எங்களுடைய தள செயல்பாடுகள், உரிமைகள், மற்றும் கோட்பாடுகள் அனைத்தையும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
- மின்னஞ்சல் வழியாக உங்கள் கதையை எங்களுக்கு அனுப்பவும். மறக்காமல் கதை ஆசிரியர் பெயர், தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கதை தலைப்பு ஆகியவற்றை குறிப்பிடுங்கள்.
- இதற்கு முன்பு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது வலைபடிவதிலோ உங்கள் படைப்புகள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால், அதனை குறிப்பிடவும்.
************
சிறுகதைகள் வலைதளத்தின் குறிக்கோள் என்ன?
- சிறுகதைகளுக்கு மட்டும் ஒருதளத்தை வழங்கவும்.
- எல்லோரும் படித்து மகிழும்படி உயர்ந்த தரத்துடன் வழங்கவும்.
- எளிதான தேடுதல் வசதியுடன் வழங்கவும்.
- பல்வேறு வகையாக தொகுக்கப்பட்டு வாசகர்களுக்கு வழங்கவும்.
- நிறைய வாசகர்களுக்கு சென்று அடையும் வாய்ப்பை வழங்கவும்.
************
சிறுகதைகள் வலைதளத்தின் சிறப்புகள் என்ன?
- ஆசிரியர் பற்றி அறிந்து கொள்ள தனி பகுதி.
- சிறப்பு கதை பகுதியில் உங்கள் கதை இடம் பெற வாய்ப்பு.
- சிறந்த வகையில் உங்கள் கதை தொகுப்பதால், நிறைய வாசகரிடம் உங்கள் கதை சென்றடைய வாய்ப்பு.
- பிரிண்ட் செய்து படிக்கும் வசதி.
- கதையை வாசகர் விருப்பபடி வரிசை படுத்துதல்.
- Facebook, Twitter, Telegram, Tumblr போன்ற சோஸியல் மீடியா வழியாக வாசகர்களுக்கு சிறுகதையை சேர்ப்பது.
- செய்திமடல் மூலமாக வாசகர்களை கதைகள் படிக்க வைத்தல்.
- YouTube வழியாக உங்கள் கதையை ஒலிவடிவத்தில் கேட்கும் வாய்ப்பு.
- மற்றும் பல..
எங்கள் தளத்தை ஒரு நாளில் தொரையிரமாக 1200-1600 வாசகர்கள் பார்வையிடுகிறார்கள்.
எங்கள் தளத்தை பற்றி விகடன் மற்றும் குங்குமம் இதழ்களில் பாராட்டி எழுதி உள்ளனர்.
************
புதிய எழுத்தாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா?
- இந்த வலையின் முக்கிய நோக்கமே புதிய எழுதாளர்களுக்கு தளம் அமைத்து கொடுப்பது தான்.
- உங்களின் கதை தரத்தை மட்டுமே எங்கள் ஆய்வு குழு மதிப்பிடும். இருந்தாலும், நீங்கள் மற்ற கதை ஆசிரியர்களுடன் போட்டியட வேண்டி இருக்கும்.
- அதனால், உங்கள் கதையின் தரத்தை ஒன்றுக்கு இரண்டு முறை ஆய்வு செய்யவும்.
************
கதை சிறுகதைகள் தளத்தில் பிரசுரம் ஆகி உள்ளதா என்பதை அறிவது எப்படி?
- உங்களுக்கு ஈமெயில் வழியாக தெரிவிக்கப்படும்.
- கதையை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
************
கதை எத்தனை வாக்கியத்துடன் இருக்க வேண்டும்?
- இத்தளம் சிறுகதைகளுக்கு மட்டுமே.
- எந்த ஒரு விதிமுறை இல்லை, ஆசிரியரின் கற்பனைக்கு உட்பட்டது.
************
வலைபதிவில் கதையை பிரசுரிப்பதால் ஆசிரியரின் உரிமை பாதுகாக்கப்படுமா?
- கதை ஆசிரியர்கள் முறைப்படி உரிமையை பதிவு செய்து இருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் எழாது.
- இத்தளம் அத்தகைய பாதுகாப்பை தர இயலாது.
- நீங்கள் ஒரு வக்கீலை பார்த்து பேசுவது நல்லது.
************
ஏதேனும் சந்தேகம் இருந்தால் யாரை தொடர்ப்பு கொள்வது?
- கேள்வி, பதில் மற்றும் பிற பகுதிகளை நன்றாக படித்து விட்டு, இன்னும் சந்தேகம் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
- எங்களுடைய மின்னஞ்சல் முகவரி:
support@sirukathaigal.comsirukathaigal@outlook.com.
************