“சே…ஏன் இப்படி எட்டு கிலோமீட்டர் ரெண்டு மூட்டைகளை கைநோக சுமந்துகிட்டு வந்து கொடுத்துட்டு,ஒரு வாய் டீக்கூட குடிக்காம ,சொல்லாம கொள்ளாம ஒடனும்…அவளுகிட்ட எவ்வளவு சங்கதி மனசுவிட்டு பேசனும்னு நினைச்சேன் ..ஓடிப்போயிட்டாளே…செல்போனில் தொடர்பு கொண்டாள் ..எதிர்முனை பிஸி என்றது.அவள் மனம் நோக ஏதும் சொன்னோமா நினைவை பின்னோக்கிசெலுத்தினாள்.
பிரபல தொலைக்காட்சியில் ‘சண்டையில்லா சன்டே சமையல்’நிகழ்ச்சி ஒ ளிபரப்பாகிக் கொண்டிருந்தது.நோட்டும் கையுமாக அமர்ந்து ரெசிபிக்களை குறிப்பெடுத்தக்கொண்டிருந்தாள் ராதா.
மார்க்கெட்டுக்கு போயிருக்குற கணவன் வந்ததும் சுடச்சுட சமைக்கச்சொல்லி ஒருபிடிபிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்க,சரியாக காலிங்பெல் ஒலித்தது .
கதவு திறந்தாள்,நின்றது அவளது பால்ய சிநேகிதி வாணி.!,கிராமத்திலிருந்து வந்திருந்தாள்.
இரண்டு பை நிறைய சுமந்துவந்ததை புடலை,அவரை,பீர்க்கை,காவளி என கடைபரப்பினாள் வாணி.
‘இதையெல்லாம் ஏன்டி சுமந்துகிட்டு திரியற இதையெல்லாம் இங்க யார் சாப்பிடறா.நாங்க இப்ப சாப்பிடறதை எல்லாம் கிராமத்துல உள்ளநீங்க கற்பனை கூட பண்ண முடியாது ?’_ஏளனமாக சொல்லியபடியே ‘இருடி டீ போட்டு எடுத்து வரேன் என்று அடுக்களைக்கு சென்றாள் ராதா.
அடுத்த ஐந்தாவது நிமிடங்களில் அவள் டீக்குவளையோடு கூடத்துக்கு வந்த போது வாணியைக்காணவில்லை..’எங்க போனா இவ ..சொல்லாம போற ரகமில்லியே..யோசனையோடு அவளது செல்போனுக்கு தொடர்பு கொண்டாள்.’தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக’அறிவித்தது.
அடச்சே சலிப்புடன் ரெசிபி நோட்டை எடுத்தவள் வாணி ஓடியதன் காரணம் புரிபட வீடே அதிர சிரித்தாள்.ரெசிபி நோட்டில் ‘கோழி சூப் ‘என்பதற்கு பதிலாக ‘தோழி சூப் ‘என்று தவறுதலாம தலைப்பு கொடுத்திருந்தாள்.
தொடர்புடைய சிறுகதைகள்
"ஐயா,இது போலீஸ் ஸ்டேஷனுங்களா...எம்மவனை காப்பாத்துங்கய்யா...'வெட்டியா ஊரை சுத்திசுத்திவர்றீயே..படிப்புக்கேத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைக்குற வேலைக்கு போயேன்'னு சத்தம் போட்டேன்..அதுக்காக கோவிச்சிகிட்டு 200அடி உயர செல்போன் டவர்ல ஏறி கீழே விழுந்து சாகப்போறேன்னு அடம் பண்றான்...உடனே கிளம்பி வாங்கய்யா"பதட்டத்தில் அதற்கு மேல் வார்த்தை ...
மேலும் கதையை படிக்க...
"ஆண்டவா...இன்னைக்கும் கால்வயித்து கஞ்சிக்கு பங்கம் வராம பக்கத்துணையா இருந்து காப்பாத்துப்பா..!"வானத்தை பார்த்து கும்பிட்டபடியே கோணிப்பையை கக்கத்தில் இடுக்கியபடியே நடந்தார் நடேசன்.
நாலு மா சொந்த வயலை சொத்தாக கொண்ட சிறுவிவசாயி அவர்.ஆண்டவன் புண்ணியத்தில் 'தின அறுவடை'யில் அரைவயிற்று கஞ்சி குடிக்க வழிகோலியது அவரது ...
மேலும் கதையை படிக்க...
"அங்கேயே..நில்லுங்க...வீட்டுக்குள்ள நுழையாதீங்க..எத்தனை தடவை சொன்னாலும் காதுலயே போட்டுக்க மாட்டேங்கறீங்களே ஏன்?..போங்க ....போய் குளிச்சிட்டு நிலைப்படியை தாண்டி உள்ளே காலெடுத்து வைங்க..."என்று இரைந்தாள் இன்பவள்ளி.
"ஏம்மா.!..அப்பாவை குளிச்சிட்டுதான் உள்ளே வரனும்னு சொல்ற..?"கேட்ட மகனிடம்.."ம்...நம்ம பண்ணைக் காட்டுல இன்னிக்கு அறுவடையில்ல...அங்க போயிட்டு வர்றாரு..அங்க வேலைபார்க்குற கீழ்சாதி ...
மேலும் கதையை படிக்க...
'ஆற்றங்கரை மேட்டினிலே....அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை'...காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய...தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு.
பாதியிலேயே பாடலை நிறுத்தி விட்டு அறிவிப்பாளர் "நேயர்களே..ஒரு முக்கிய அறிவிப்பு...நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு ...
மேலும் கதையை படிக்க...
அவன் பொட்டுப்பொட்டாய் நெற்றியில் துளிர்த்த வியர்வையை அழுத்தித் துடைத்தான்.
அடர்ந்த புதராய் வளர்ந்து செம்பட்டை பாரித்த மீசையில் வழிந்த வியர்வை,வெடித்து பிளவுபட்டிருந்த உதடுகள் வழியாக ஊடுருவி உப்புக்கரித்தது.
அவனுக்கு அந்த சுவை புதிது...அந்த சூழ்நிலை புதிது..இப்போதும் கண்கள் இருட்டத்தான் செய்கிறது...ஆனால் அது நியாயமான பசி ...
மேலும் கதையை படிக்க...
"வணக்கம்..வருண்.!..எப்ப சென்னையிலிருந்து வந்தாப்ல...என்ன 'சினிபீல்டு'ல நுழைஞ்சிட்டீங்களா.!?நாங்களும் தியேட்டர்ல கலர்கலரா பேப்பர் துகள்களை பறக்கவிட்டுகிட்டு..எங்க ஊரு இயக்குனர் தந்த படைப்புன்னு காலரை தூக்கிவிட்டு அலைய ஆசைப்பட மாட்டோமா.!?"என்றான் டைலர் சிவா.
"என்னப்பா செய்யறது..எட்டு வருசமா போராடற எங்க மாமாவே இப்பதான் கையில'ஸ்கிரிப்ட்'டோட கம்பெனி கம்பெனியா ...
மேலும் கதையை படிக்க...
குரு ஞானசம்பந்தர் உயர்நிலைப்பள்ளி .பிரார்த்தனை மண்டபத்தில் நடுநாயகமாக நின்றான் கபிலன்.
ஒலிப்பேழையிலிருந்து உருக்கொண்டு தவழ்ந்து வந்த தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவடைந்தவுடன் மாணவத்தலைவன் தலைமையாசிரியருக்கு முகமண் கூறி ஒரு குறிப்பேட்டை தந்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பினான்.
"மாணவ மணிகளே.!..காலாண்டுத்தேர்வு வரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நடுநாயகமாக இருந்த ...
மேலும் கதையை படிக்க...
"என்னப்பா...வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே..."பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து.
இன்னும் சிலநாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.அதன் பொருட்டு வாக்குகேட்டு வரும் வேட்பாளரை வரவேற்க நாட்டாமையின் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள் அனைவரும்.
"ஐயா..வேற்பாளர் வந்துகிட்டிருக்காருங்க..தெரு முனையில் ...
மேலும் கதையை படிக்க...
"சீக்கிரம் அஞ்சலி..மணியாகிட்டு இருக்கு"இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அமர்ந்தபடியே பரபரத்தான் மனோகரன்.
வாண்டுகள் அமுதனும்,அகிலனும் கூட ஏறியாகிவிட்டது..வீட்டைப்பூட்டிக்கொண்டு பின் சீட்டில் தொற்றிக்கொண்டாள் அஞ்சலி.
கோடை விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரபல சர்க்கஸ் கலைநிகழ்ச்சியை காண செல்கிறார்கள் மனோகரன் குடும்பத்தினர்.
மனோகரனுக்கு நகரின் பல ...
மேலும் கதையை படிக்க...
"நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா.?இருபத்திரெண்டு வருச காலமாச்சு..நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..!..இத்தனை வருசமும் குடியும் குடித்தனமுமாகத்தான் இருக்கீங்க...ஆனா இவ்வளவு காலமா இல்லாம இப்ப ஊர்வம்பு வாசல்தேடி வந்து நிக்குது...அக்கம் பக்கம் இளக்காரமா பார்க்கறாங்க ...என்ன பண்ணீங்க ...
மேலும் கதையை படிக்க...