வரியில்லா வருமானம்

 

‘இடது கைக்குத் தெரியாமல், வலது கையால் கொடுப்பது தர்மம்’ என்றார் இயேசு நாதர்.

ஆனால், இடது கைக்குத் தெரியாமல் வலது கை யால் லஞ்சம் வாங்குவதில், இயேசு நாதரையும் மிஞ்சக் கூடியவர்கள் இன்று உலகத்தில் பெருகி வருகின்றனர்.

யுத்தத்தில், எல்லாவற்றிற்கும் பஞ்சம் வந்தது. ஆனால், லஞ்சம் வாங்குவது மட்டும், பஞ்சமில்லாது வளர்ந்து வருகிறது.

லஞ்சம் வாங்கும் சிலர், “நான் அவரிடம் வாங்கியதை , லஞ்சம் என்று எப்படிச் சொல்ல முடியும்? நான் செய்த உதவிக்காக, அவர் எனக்கு அளித்த சன்மானம் இது” என்று கூறலாம். நேரான வழியில் காரியத்தைச் செய்து, பலபேர் அறியப் பெறுவது சன்மானம். அதற்கு மதிப்பு உண்டு. ஆனால், இரகசியமான வழியில், முறை தவறிக் காரியம் செய்து இரகசியமாகவே பணம் பெறு வதை, எப்படிச் சன்மானம் என்று சொல்ல முடியும்? “ஹோட்டல் மானேஜருக்கு நான் எட்டணாக் கொடுத் தேன். அவர் எனக்கு, இலவசமாகச் சாப்பாடு போட்டார்” என்பது போலத்தான் இது இருக்கிறது.

“உள்ளே அதிகாரியைப் பார்க்க வேண்டுமா? அப்படி யானால் என் கையில் எட்டணாவை வை. சமயம் பார்த்து உள்ளே தள்ளி விடுகிறேன்” என்கிறான் டபேதார்.

அதிகாரியைப் பார்ப்பதற்குக்கூடப் பணம். சுவாமி தரிசனத்துக்குக் கூட, இரண்டணா நாலணாதான். ஆனால் அதிகாரியைப் பார்க்கவோ எட்டணா!

ஒரு பெரிய கம்பெனி. அங்கு இருக்கும் சாமான் களைச் சுலபமாகப் பெறுவது கடினம். ஆனால், சாமான் கள் வியாபாரம் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. நேரான வழியில் செல்பவர்களுக்கு அல்ல; சுற்றுப் பாதையில் வருவோர்களுக்கே கிடைக்கின்றன.

அதன் மானேஜர் வீட்டின் முகப்பில், முன்பெல் லாம் பெரிய நாய் ஒன்று கட்டிக் கிடக்கும். கரடி போன்ற உருவம். நிறமும் அப்படியே. இப்பொழுது, அந்த நாயை அங்குக் காணோம்! காரணம், யுத்தத்துக்கு முன்னால், அவருக்குக் கடன் அதிகமாக இருந்ததாம். அதனால் கடன்காரர் தொந்தரவும் அதிகம். வீட்டுக்குள் யாராவது நுழைந்தால், நாய் குரைக்க ஆரம்பித்துவிடும். (சில சமயங்களில் கடித்துவிடுவதும் உண்டாம்!) ஆகையால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்குள் நுழைவ தற்கே அஞ்சி, வந்த வழியே திரும்பிவிடுவார்களாம். ஆனால், யுத்தம் வந்த பிறகோ , அந்த நாய் அங்கே இருப்பது தொந்தரவாய்ப் போய்விட்டதாம். ஏனென்றால், காகிதக் கூட்டுக்குள் ஐம்பது, நூறு என்று வைத்து, வீடு தேடி ரகசியமாகக் கொடுக்க வருபவர்களுக்கு, உபசரணை செய்ய வேண்டாமா? அதனால் தான், நாய்க்கு அங்கே வேலை இல்லை!

புதிதாக உத்தியோகம் பெற்ற ஒருவரிடம் லஞ்சம் கொடுக்க ஒருவன் வந்தான். அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். வந்தவன் ஏமாற்றத்துடன் போய் விட்டான். அவன் தலை மறைந்தவுடன், அந்த ஆபீஸி லுள்ள சகோரக் குமாஸ்தாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து லஞ்சத்தை மறுத்த குமாஸ்தாவை ‘கிடுக்கித் தாக்குதல்’, செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

‘என்னங்காணும், கொண்டுவந்து ஒரு மனுஷன் கொடுக்கிறான். வேண்டாம் என்று சொல்லிவிட்டீரே! ரொம்ப அழகாயிருக்கிறது. பரம்பரையாய் நடந்து வரு வதை வீணாய்க் கெடுக்கப் பார்க்கிறீரே! எங்கள் பிழைப்பி லெல்லாம் மண்ணைப்போடத் தீர்மானித்துவிட்டீரோ?’ என்று சரமாரியாகப் பொழிந்துவிட்டார்களாம்.

இந்த நிகழ்ச்சியை அந்த லஞ்சம் வாங்காதவர், தமது நண்பர் ஒருவரிடம் கூறினார்.

இதைக் கேட்ட அவரது நண்பர், “அப்படித்தா னப்பா இருக்க வேண்டும். நீ ரொம்ப நல்லவனப்பா” என்று மெச்சினார்.

ஆனால், அதற்குள் அவர், “நான் என்ன செய்வது? உத்தியோகம் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள்ளேயா லஞ்சம் வாங்குவது? இன்னும் கொஞ்ச நாளாகட்டும் என்று இருந்தேன். அதற்குள்ளேயே இந்தப் பயல்கள், இப்படி எரிந்து விழுகிறான்களே!’ என்று வருத்தப்பட்டாராம்!

ஒரு பத்திரிகை சம்மந்தமான வேலை ஒன்று, நடக்க வேண்டியதிருந்தது. பத்திரிகை மானேஜர், அந்த வேலையை முடிப்பதற்கு உதவி செய்யும்படியாக, அது சம்மந்தமான உத்தியோகஸ்தரைக் கேட்டுக்கொண்டார். அவரும் முடித்துத் தருவதாக வாயளவில் சொன்னாரே தவிர, செய்கையில் காட்டாதிருந்தார்.

வாய்ப் பேச்சில் மசியமாட்டார் போல் தோன்றிய தால், பத்திரிகை மானேஜர், தம் கையில் வைத்திருந்த பத்திரிகையை, அவர் கண்ணுக்குத் தெரியும்படி புரட்டிக் வரியில்லா வருமானம் கொண்டேயிருந்தார். உத்தியோகஸ்தரின் கண்பார்வை மானேஜர் செய்கையில் விழுந்தது. உடனே, ” இதுதானா நீங்கள் வெளியிடும் பத்திரிகை? இங்கே கொண்டாரும். (புரட்டிப் பார்த்துவிட்டு) அடடா ! நன்றாயிருக்கிறதே! நான் படித்துவிட்டுத் தரட்டுமா” என்றார். இவரும் ‘சரி’ என்றார்.

பத்திரிகை கை மாறியது; கண்சாடை நடந்தது; காரியம் முடிந்தது. பத்திரிகையா லஞ்சமாகக் கொடுக்கப் பட்டது? அதுதானில்லை. அதற்குள்ளே இருந்த ஒரு பச்சை நோட்டுத்தான் அப்படிச் செய்தது.

சாதாரண விஷயங்களில் கூட, இந்த ரகசிய சன்மான’ த்தைக் காணலாம்.

“மத்தியானப்பூசை ஆகி, கதவு திருக்காப்பிட்டாய் விட்டது. இனி, இப்பொழுது திறக்கமாட்டோம்”

என்கிறார் கோயில் அர்ச்சகர்.

“அடடே, அப்படி யெல்லாம் சொல்லக் கூடாது. ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறோம். அவசியம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சாயங்கால வண்டி யிலேயே ஊருக்குப் போக வேண்டும்” என்கிறார் குடும்ப சமேதராக வந்த அயலூர்வாசி. “அப்படியானால் மூன்று அர்ச்சனைகள் பண்ண வேண்டும். அர்ச்சனை ஒன்றுக்கு இரண்டணா” என்று நிபந்தனை போடுகிறார், வழக்கமாக ஓர் அணா வாங்கும் அர்ச்சகர்.

வந்தவர், “அதற்காக என்ன? இவ்வளவு தூரம் வந்து சுவாமி தரிசனம் செய்யாமலா போவது? சரி” என்று பணத்தைக் கொடுக்கிறார். கதவு திறக்கிறது. அர்ச்சகர் அன்பொழுகப் பேசி, கடைசியில் சன்மானமும் பெறுகிறார்!

ஓர் ஊரிலிருந்து, மற்றோர் ஊருக்கு இரவு நேரத் தில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு வண்டிக்காரர்கள் சென்றார்கள் . நடுவே, ஓர் ஊரைத் தாண்டிப் போக வேண்டியதிருந்தது. அந்த ஊரில் பாதுகாப்பு அதிகம். ஊர்க்காப்பு சங்க அங்கத்தினர்கள் மும்முரமாக வேலை நடத்திவந்தனர்; அவர்கள் வண்டிக்காரர்களை, “நீங்கள் இரவில் வண்டிகளை இங்கேயே அவிழ்த்துப் போட்டு விட்டு, நாளைக் காலையில் தான் போகவேண்டும்” என்று தடுத்தனர்.

அங்கு, திருட்டு அதிகமாய் இருந்ததால், திருடின சாமான்களை, இரவில் வண்டிகளில் ஏற்றிச் சென்றுவிடு வார்கள் என்ற சந்தேகத்தாலேயே அப்படிச் செய்தனர். வண்டிக்காரர்கள் எவ்வளவோ மன்றாடினார்கள்; பயனில்லை. கடைசியில் ஒரு வண்டிக்காரன் , “என்ன சாமி, நாங்கள் என்ன பண்ணுவது? இரவு பூராவும் வீணாய்ப் போய்விடுகிறது. சம்பளத்துக்குக் காவல் காப்பவர்களாக இருந்தாலும் ஓரணா இரண்டணாக் கொடுத்துச் சரிக்கட்டிப்பிடலாம். உங்களுக்கு நாங்க என்னத்தைக் கொடுக்கிறது? இல்லை, கொடுத்தாத்தான் வாங்குவீங்களா?” என்றானாம்.

உண்மையிலே , லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஆபத்தான சமாச்சாரந்தான். லஞ்சம் கொடுப்பவன், ‘இவர் வாங்குவாரா? அல்லது கோபித்துக்கொள்வாரா?’ என்று ஏங்குகிறான். வாங்குபவனோ, ‘மேலே தெரிந்து விட்டால் வேலை போய்விடுமே !’ என்று பயப்படுகிறான்.

ஆனால் என்ன பயமாயிருந்தாலும், லஞ்சம் பெருகி வளர்வதைப் பார்த்தால், தைரியசாலிகள் பெருகுகிறார்கள் என்றே எண்ண வேண்டியதிருக்கிறது!

குமாஸ்தாவாக இருந்தால், அந்த ஆபீஸிலுள்ள பியூனைக் கேட்டு லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. மானேஜராயிருந்தால், அவருடைய கார் டிரைவரைக் கேட்க வேண்டியதிருக்கிறது. பெரிய அதிகாரியாக விருந்தால், இதற்கு முன் அவர் லஞ்சம் வாங்கிய துண்டா என்று அவருடைய பூர்வ சரித்திரத்தை அறிய வேண்டியதிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒருவர், ஒரு கூட்டத்தில் லஞ்சத்தைப் பற்றிப் பிரமாதமாகப் பேசி, “லஞ்சம் வாங்குவது மிகவும் மோசமாகும். அது, அயோக்கியர்கள் செய்யும் வேலை” என்று முடித்தாராம். கூட்டம் முடிந்தும் அநேகர் இவருடைய பேச்சுக்கு மெச்சி, மேடை மீது வந்து கை கொடுத்தனராம்.

“இப்படிக் கை கொடுத்தவர்கள் எல்லாம் இரண்டு கையாலும் லஞ்சம் வாங்கித் தின்று கொழுத்தவர்கள்” என்றார், எனது நண்பர்.

“ஏன், கை கொடுக்கும் போதே, அவர்கள் லஞ்சம் வாங்குபவர்கள் என்று, அவர்கள் கைகளே சொல்லி விட்டனவோ?” என்று கேட்டேன்.

“இல்லை. இவர்களெல்லாம் லஞ்சம் வாங்காத பரம யோக்கியர்கள் என்று, கூட்டத்தில், இருந்தவர்கள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். அதனால் தான் இப்படி முந்திக் கொண்டு கை கொடுக்க மேடைக்கு வந்தனர். இவர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே!” என்றார்.

கை கொடுக்கும் போதே, என் நண்பர், இவர்களைக் கையோடு பிடித்துவிட்டார். ஆனாலும், விட்டுவிட்டாரே ! ஆமாம், அவரால் என்ன செய்யமுடியும், மனச் சாட்சியை விற்பவர்களுடன்?

- வாழ்க்கை விநோதம் (நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு: நவம்பர், 1965, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
'இனிது, இனிது, ஏகாந்தம் இனிது' என்பார்கள். ஆனால், என்னை வந்து ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி கண்டு, இது விஷயமாக அபிப்பிராயம் கேட்டால், நான் இதை முழுமனதுடன் மறுப்பேன்! பாருங்களேன். சினிமா, பீச், கடைவீதி எந்த இடத்துக்குச் செல்லவேண்டுமானாலும் துணைவேண்டிய திருக்கிறது. ...
மேலும் கதையை படிக்க...
பல மேதாவிகளின் வாழ்க்கையிலே, சில விநோ தங்கள் காணப்படுகின்றன. அவர்கள் விசித்திரமான இரட்டை வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்க ளுடைய மேதையைக் காட்டும் செயல்கள் மட்டில் அவர் களிடம் வெளிப்பட்டிராவிட்டால், அவர்களின் சில விசித்திர நடவடிக்கைகளைக் கண்டு, அவர்களை ஜனங் தள் அநேகமாய்ப் ...
மேலும் கதையை படிக்க...
மேடைமீது ஏறிப் பிரசங்க மாரி பொழிபவர் களைப் பார்க்கும் போதெல்லாம், எனக்கு ஓர் ஆசை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவர்கள் மேலல்ல! அவர்கள் மாதிரி நானும் மேடைமீது ஏறிப் பேசு வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த ஆசை ஏற்பட்டதோடு நின்றதா? வளரவும் ...
மேலும் கதையை படிக்க...
ரோஜாச்செடி
பூம்புதூர் பெரிய பட்டணமும் அல்ல; சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான ஓர் ஊர். அந்த ஊரில் பாரதி சிறுவர் சங்கம்' என்று ஒரு சங்கம் இருக்கிறது. அந்தச் சங்கம் சில சங்கங்களைப் போல் தூங்குமூஞ்சிச் சங்கமாக இருப்பதில்லை. எப்போதும் சுறுசுறுப் பாக ...
மேலும் கதையை படிக்க...
பணத்திலே, மனிதனுக்கு ஆசை வேண்டியது தான். ஆனால், சிலருக்கு அளவு கடந்த பணப்பித்து இருக்கிறதே, அது மகா மோசம். பணத்திலே அப்படிப் பேராசை கொண்டிருப்பவனுக்குச் சந்தோஷமே கிடைப்பதில்லை. ஏனென்றால், சந்தோஷத்தை அவன் அடைய முடியாதபடி அவனுக்கும் சந்தோஷத்துக்கும் நடுவிலே, வேலியாக நின்று, ...
மேலும் கதையை படிக்க...
இளவரசி சாவித்திரி அவளுடைய தந்தை முன் நின்று கொண்டிருந்தாள். மெல்லிய கொடி போல அவள் அழகாக இருந்தாலும், அவளது மனம் உறுதியாக இருந்தது. முகத் தில் பிடிவாதம் தெரிந்தது. இந்த மாதிரி சமயங்களில் அவ ளது தந்தை வளைந்து கொடுத்துவிடுவார். "தந்தையே, நினைவிருக்கிறதா? ...
மேலும் கதையை படிக்க...
"ட்ரிண், ட்ரிண், ட்ரிண்ண்..." கடியாரமல்ல, டெலிபோன் தான் இப்படிச் சப்தம் போடுகிறது. மத்தியானம் மணி ஒன்றரை யானதால், யாருமே ஆபீஸில் இல்லை. டிபனுக்குப் போய்விட்டார்கள். மானேஜருக்கு டிபன் கொண்டுவந்த துரைசாமி மட்டுமே நின்றுகொண்டிருந்தான். டெலிபோன் சத்தம் போடு வதைக் கண்டதும் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் ...
மேலும் கதையை படிக்க...
“என்னடா, இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஒரு இடத்துக்கும் போகல்லியா?" "போகத்தான் வேணும். ஆனால்..." "என்ன, ஆனால் என்று இழுக்கிறாய்?" "இன்றோடு 25 நாட்களாச்சு. இன்னும் வண்ணான் சலவை கொண்டுவந்த பாடில்லை." "வண்ணான் வரவில்லையென்றால் சும்மா இருந்தால் வந்துவிடுவானா? நீ உரக்கப் பாட ஆரம்பியேன். வண்ணான் வந்துவிடுகிறான்!" இந்த மாதிரி என்னைக் ...
மேலும் கதையை படிக்க...
நல்ல நண்பர்கள்
(தமிழக அரசினர் பரிசு பெற்ற புத்தகம்) மாலை நேரம்: மணி நான்கு இருக்கும். வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று. அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து தலையைக் குனிந்தபடியே ...
மேலும் கதையை படிக்க...
வித்தைப் பாம்பு
அணிந்துரை - சி.சுப்பிரமணியம் மொழி, நாகரிகம் , கலை முதலியவற்றில் பெரிதும் ஒற்றுமை யுடையவர்கள் தென் பகுதி மக்கள். சரித்திர காலத்திற்கு முன் பிருந்தே இவ்வொருமைப்பாடு வேரூன்றி இருந்தது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவ்வொற்றுமை உணர்ச்சி குறைந்து போய்விட்டது. காலம் செய்த ...
மேலும் கதையை படிக்க...
அன்பின் பெருக்கு
மேதாவிகள் பித்து
மேடைப் பேச்சு
ரோஜாச்செடி
பணப்பித்து
யமனை வென்றவள்
டெலிபோன் ஏமாற்றம்
சலவைத் தொழிலாளி
நல்ல நண்பர்கள்
வித்தைப் பாம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)