Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

வயசானால் அப்படித்தான்!

 

ஒரு முதியவர் டாக்டரிடம் சென்றார்.

“சொல்லுங்க பெரியவரே, என்ன பண்ணுது உங்களுக்கு?” என்றார் டாக்டர்.

“கண்ணு முன்னால பூச்சி பறக்கற மாதிரி இருக்கு, டாக்டர்!”

“அப்படியா! உங்களுக்கு என்ன, இப்போ 70, 75 வயசு இருக்குமா? அதான் காரணம்! வயசாவதன் அடை-யாளம்தான் இது!” என்றார் டாக்டர்.

“என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆக மாட்டேங்குது டாக்டர்!”

“இதுகூட வயசாவதன் அடையாளம்-தான்!”

“முதுகு ரொம்ப வலிக்குது!”

“கரெக்ட்! வயசாகுதில்லியா, இந்த மாதிரி பிராப்ளமெல்லாம் வரத்தான் செய்யும்!”

“கை, காலெல்லாம் ரொம்பக் குடைச்-சலா இருக்கு, டாக்டர்!”

“சிம்பிள்! உங்க வயசுதான் இதுக்கும் காரணம்!”

முதியவர் கடுப்பாகிவிட்டார். “என்ன டாக்டர், எதைச் சொன்னாலும் வய-சாகுது, வயசாகுதுன்னே சொல்லிட்டிருக்-கீங்க. உங்களால என்னைக் குணப்-படுத்த முடியுமா, முடியாதா… சொல்-லுங்க! நான் வேற டாக்டர்கிட்டேயாவது காண்பிச்சுக்கறேன்!” என்று சீறினார்.

“சட்டுனு உணர்ச்சிவசப்பட்டு எமோஷன-லாயிடறீங்களே, இதுகூட வயசாவதன் அடையாளம்தான் பெரிய-வரே!” என்றார் டாக்டர் சிரித்துக்-கொண்டே.

- 26th செப்டம்பர் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆறு வயதுப் பையன் அம்ருத், கோடை விடுமுறையில் தன் பெற்றோருடன் தீம் பார்க்குக்குப் போனான். ரோலர் கோஸ்டரைப் பார்த்ததும், அதில் ஏறிச் சுற்ற வேண்டும் என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டான். ''வேண்டாம்டா! நீ குழந்தை. பயப்படுவே!'' என்றனர் பெற்றோர். அவன் கேட்கவில்லை. அடம்பிடித்தான். 'சரி'யென ...
மேலும் கதையை படிக்க...
இளங்கன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)