மேடைப் பேச்சு

 

மேடைமீது ஏறிப் பிரசங்க மாரி பொழிபவர் களைப் பார்க்கும் போதெல்லாம், எனக்கு ஓர் ஆசை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அவர்கள் மேலல்ல! அவர்கள் மாதிரி நானும் மேடைமீது ஏறிப் பேசு வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த ஆசை ஏற்பட்டதோடு நின்றதா? வளரவும் ஆரம்பித்து விட்டது ! எவ்வளவோ அடக்கி அடக்கித்தான் பார்த்தேன். ஆனால் அந்த ஆசையை அடக்கவே முடியவில்லை. ‘ஸ்பிரிங்’கை எவ்வளவுக் கெவ்வளவு கீழ் நோக்கி அழுத்துகிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு தானே மேலே தூக்கி அடிக்க ஆரம்பிக்கிறது? அது போலவே பீரிக்கொண்டு வந்துவிடும் போல ஆகி விட்டது. இதற்கு ஒரு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

நல்லவேளையில், எங்கள் சங்கத்தின் ஆண்டு விழா வந்தது. அந்தச் சங்கத்தில் எனக்குக் காரியதரிசி உத்தியோகம். (கௌரவ உத்தியோகந்தான். சம்பள மில்லை.) ஆண்டு விழாவில் பெரிய பெரிய பிரசங்கிகளெல்லாம் வந்து பேசும்படி ஏற்பாடு செய்தோம். அழைப்புக்கள் அச்சடிக்கப்பட்டன. நிகழ்ச்சி முறையில் அந்தப் பிரசங்கிகள் பெயரோடு, என் பெயரையும் சேர்த்து அச்சடித்துவிட்டேன்!

ஆனால் இந்த நிகழ்ச்சி முறை, ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணிவிட்டது. சங்கத்தின் தலைவர், உபதலை வர், பொக்கிஷதார் எல்லோரும் சேர்ந்து எனது செய் கையைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பெரியவர்களுடைய பக்கத்திலே, மேடைமீது ஏறிப் பேசியே அறியாத என் பெயரை அச்சடித்ததோடு அல் லாமல், மற்ற உத்தியோகஸ்தர்களின் அனுமதியையும் நான் பெறவில்லை என்பதுதான் அவர்களுடைய கோபத் துக்குக் காரணம்.

தலைவர், நிகழ்ச்சி முறையிலிருந்து என் பெயரை அடித்துவிடவேண்டும் என்றாராம். உபதலைவர், “அப்படி அடித்தால் நன்றாக இராது. அழைப்புக் கெட்டுவிடும். வேறு அச்சடித்தால் தான் தேவலை” என்றாராம். பொக் கிஷதாரோ, “வேறு அழைப்பு அச்சடிப்பது கூடாது; பொருளாதார நிலைமை சரியில்லை” என்றாராம். கடைசி யில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். தலைவரிடம் கொடுக்கும் நிகழ்ச்சி முறையில் மட்டும், எனது பெயரை மையால் அடித்துவிடுவது என்பதுதான் அவர்களின் முடிவு.

இது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் ஆத்திரத் தையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் ஒன்றாக உண் டாக்கிவிட்டது. அடுத்த வருஷம் காரியதரிசியாக இருக் கிறோமோ இல்லையோ , இந்த வருஷமே பேசி ஆசை யைத் தீர்த்துக்கொண்டு விடலாம்’ என்றல்லவா எண்ணி யிருந்தேன். இப்படிக் கெடுத்துவிட்டார்களே, என்ன செய்வது?

ஆனாலும், ஆண்டு விழாவில் இதற்காகவா அழுது கொண்டேயிருப்பது? காரியதரிசியின் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

சிலர் பேசி முடித்தார்கள். கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர், திடீரென்று, என் பெயரைச் சொல்லி என்னைப் பேசும்படி பணித்தார்.

இதைக் கேட்டதும், எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. என் பெயரைத்தான் அடித்துவிட்டதாகச் சொன்னார்களே! அப்புறம் எப்படி என்னைத் தலைவர் கூப்பிட்டார்?

ஆனாலும், இதைப் பற்றி அப்பொழுது யோசிப்ப தில் பயனில்லை என்று தலைவர் கட்டளைப்படி பேச மேடைக்கு வந்துவிட்டேன். உடனே சங்கத் தலைவரும், கூட்டத் தலைவரின் பக்கத்தில் வந்து, “அடடா, இவர், பேச சந்தர்ப்பம் இல்லை என்றார். இவர் பெயரை அடிப் பதற்குப் பதில், மேலே உள்ளவரின் பெயரையல்லவா அடித்துவிட்டோம், அவசரத்தில்!” என்று சொன்னது காதில் விழுந்தது.

ஆனாலும், கூட்டத் தலைவர், “பரவாயில்லை. இவரே தாம் மேடைக்கு வந்துவிட்டாரே” என்று அவர் காதுக் குள் பதில் சொல்லிவிட்டார்.

நான் மேடைமீது ஏறியதும், சந்தர்ப்பம் கிடைத் ததை நினைத்துச் சந்தோஷப்பட்டேன் என்றா நினைக்கிறீர்கள்? அதுதானில்லை. சந்தோஷம் வரவேமாட் டேன் என்று மறுத்துவிட்டது. கைகள், கால்கள் எல்லாம், கையும் களவுமாக அகப்பட்ட திருடனுடை யவை போல கிடு, கிடு’ என்று ஆட ஆரம்பித்துவிட்டன; மேலெல்லாம் வியர்த்துவிட்டது. இவ்வளவு சிரமப்பட்டும், வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளியே வரவில்லை. சோடாப் புட்டியில் குண்டு அடைத்துக்கொள் வதுபோல, தொண்டையை ஏதோ அடைத்துவிட்டது. தொண்டையைக் கனைத்துக் கனைத்துப் பார்த்தேன். கடைசியாக, கண்மூடி போட்ட குதிரையைப் போல நேரே பார்த்துக்கொண்டே நாலைந்து வார்த்தைகளைச் சிரமப்பட்டு, வெளியே கொண்டுவந்தேன். அவை களிலும் சில பாதியோடு நின்றுவிட்டன; சில திருப்பித் திருப்பி வந்துவிட்டன.

ஒரு வழியாக எனது சிற்றுரை’யை முடித்துக் கொண்டேன். கீழே வந்து உட்கார்ந்துங்கூட விடாமல் சுமார் ஒரு மணி நேரம் வரை என் கை கால் ஆட்டம் நின்றபாடில்லை.

இந்த மாதிரி, நாலுபேருக்கு நடுவில் என்னை மேடைமீது நிற்கவைத்து, அவமானம் செய்த தலைவர் மீது, எனக்குக் கோபம் வராமல் இருக்க முடியுமா? நிகழ்ச்சியில் முன் இருந்தபடியே இருந்திருந்தாலாவது தமிழ்ப் பண்டிதரிடம் ஏற்கெனவே எழுதி வாங்கி வைத் திருந்த விஷயத்தை, மனப்பாடம் செய்து தைரியமாக, கைகால் அசையாது, ஒப்பித்திருக்கமாட்டேனா? இப் படித் திடீரென்று பேசச் சொன்னால் எப்படிப் பேசு வது? இதுதான் என்னுடைய பேச்சு மட்டமாகப் போனதற்கு முதல் காரணம்; முக்கிய காரணமும் அது தான். இல்லாவிட்டால் அந்தத் தமிழ்ப் பண்டிதருடைய நடையும், கருத்தும் எப்படி இருக்கும் தெரியுமா!

இதிலிருந்து நான் எங்களூரில் பேசுவதே இல்லை. காரணம், என்னை யாரும் பேசுவதற்கு அழைக்கவில்லை என்பதுதான்.

இந்தச் சம்பவத்தால் நான் மனம் உடைந்துவிட் டேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லோரும் எடுத்தவுடனேயே ஜவாஹர்லாலைப் போல நன்றாகப் பேசி விட முடியுமா? அப்படியே பேசிவிட்டாலும் தான் ஸர். சாப்ரூ போன்ற ஒருவர் வந்து, நம்முடைய பேச்சைப் போற்றித் தட்டிக் கொடுத்து, முத்தமும் கொடுப்பார் என்று எதிர் பார்க்க முடியுமா?

சர்ச்சில் துரை, பார்லிமெண்டில் அங்கத்தினரான புதிது. அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தா ராம். சர்ச்சிலின் அறை சாத்தப்பட்டிருந்தது. சர்ச்சில் வீட்டில் இல்லை என்று நினைத்து, நண்பர் திரும்பிப் போக ஆரம்பித்தார். அப்பொழுது சர்ச்சிலினுடைய அறையிலிருந்து ஒரு குரல் கிளம்பியது! அந்தக் குரல் இந்த நண்பரைக் கூப்பிடவில்லை. பின்னர் என்ன செய்தது தெரியுமா?

“நான், இந்தப் பார்லிமெண்டுக்குள் நுழையும் போது உங்கள் முன் பேசப்போகின்றேன் என்று நினைக் கவேயில்லை, ஆனால் …” என்றுதான் ‘நெட்டுரு’ச் செய்துகொண்டிருந்ததாம்!

“சந்தேகமில்லை, இது சர்ச்சிலின் குரல் தான்” என்று நண்பர் கண்டுகொண்டாராம். அது ஒரு காலம். ஆனால், பிற்காலத்தில், பேச்சிலே பெரிய சூரர் எனப் பெயரெடுத்துவிட்டார்.

இந்த மாதிரி, பெரிய பேச்சாளர்களில் எத்தனை பேர் ஆரம்ப காலத்தில் இருந்திருப்பார்கள்! சிலர், கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிப் பழகி இருக்கலாம். சிலர் தாமே எழுதிப் படித்துவிட்டு, கூட்டத்தில் ஒப்பித் திருக்கலாம். இன்னும் சிலர், என்னைப்போல யாரிட மாவது எழுதி வாங்கி, மனப்பாடம் செய்திருக்கலாம். அல்லது, அந்தக் காலத்துப் பத்திரிகைகளில் வந்த, தலைவர்களின் பேச்சுக்களைப் படித்துவிட்டு, பேசும்போது அவைகளை வலிந்து புகுத்தியாவது தமது பிரசங்கத்தைப் பெருமைப்படுத்தியிருக்கலாம்.

சிலர், சாதாரணக் கூட்டத்தில், சண்டமாருத மாகப் பேசுவார்கள். ஆனால் பெரிய கூட்டத்தைக் கண்டால், பேச வரவே வராது. வேறு சிலர், சாதா ரணத் தலைவராக இருந்தால் வெகு ஜோராக வெளுத்து வாங்குவார்கள். மிகப் பெரிய மனிதர் தலைவராக இருந்துவிட்டால், நாக்கு எழவே எழாது!

‘பேச்சுப் பேச்சென்னும், பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி’ என்பார்களே, அது போலத்தான்!

ஊரில், கொஞ்சம் பெரிய மனிதராக இருப்பார் ஒருவர். அந்த ஊரிலே, ‘பாரதி விழா’ கொண்டாடு கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரைப் பேசும்படி கேட்டுக்கொண் டிருக்கமாட்டார்கள். இருந் தாலும், அவர் பாரதியாரைப் பற்றி, ஏதேதோ எழுதிச் சேர்த்துப் பாடம் செய்துகொண்டு கூட்டத்திலும் ஆஜராகிவிடுவார்.

“பெரிய மனிதர் வந்துவிட்டாரே, பேசச் சொல் லாமல் என்ன செய்வது?” என்று அவரைப் பேசும்படி யாகத் தலைவர் கேட்டுக்கொள்வார். அவரும் எழுந் திருந்து, கூட்டத்தாரைப் பார்த்து, ”நானும், உங்களைப் போலப் பிரசங்கம் கேட்டுவிட்டுப் போகத்தான் வந்தேன். ஆனால் தலைவரவர்கள் என்னைப் பேசும்படி கட்டளையிட்டுவிட்டார்கள்” என்று சொல்லிவிட்டு ஏற்கெனவே படித்து வைத்திருந்த தயார்ப் பாடத்தை நாசுக்காக ஒப்பிக்க ஆரம்பித்துவிடுவார்!

சிலர், பேசுவது கூட்டத்தாருக்குப் பிடிக்காது. இந்த அதிருப்தியை, அவர்கள் எழுந்துபோவதிலும் சத்தம் போடுவதிலும் காண்பிப்பார்கள். பிரசங்கியார், இதைப் புரிந்து கொள்ளாது, மேலும் பேச ஆரம்பித்து விடுவார். சிலர் உடனே கைதட்டுவார்கள். நல்லது, கெட்டது இரண்டுக்குமே கைதட்டுவதால், பிரசங்கியார், தம்மை உற்சாகப்படுத்துகிறார்களாக்கும் என்று நினைத்து, மேலும் விஸ்தாரமாகப் பேசிக்கொண்டேயிருப்பார். கடைசியில் ‘உஸ், உஸ்’ என்று கூட்டத்தில் சப்தம் எழுந்தவுடனேதான், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.

இந்தமாதிரி , இன்னும் எவ்வளவோ கஷ்டங்கள். இவைகளெல்லாம் சகஜந்தான். இதற்காகப் பயந்து என்னைப் போன்றவர்கள் பேசாமலேயே இருந்துவிட முடியுமா? பேசிப் பேசிப் பழகினால், தானாகவே பேச வந்துவிடுகிறது. ஏன், ஒரு காலத்தில் நான் பெரிய பிரசங்கியாகக்கூடாதா என்ன?

முதல் தடவை, கோர்ட்டில் ஆஜராகும் போது திணறிப்போன மகாத்மா காந்திதானே, பிற்காலத்தில் உலகக் கோர்ட்டில், இந்தியா தரப்பில் ஆஜராகி வாதாடி வெற்றியும் பெற்றார்!

- வாழ்க்கை விநோதம் (நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு: நவம்பர், 1965, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
அஸ்தினாபுரத்து அரசனின் பெயர் பரீட்சித்து. அவன் வேட்டையாடுவதிலே மிகவும் வல்லவன். வேட்டையாடும் போது உள்ளக் கிளர்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் என்பதற்காக மட் டுமே அவன் வேட்டையாடுவதில்லை. காட்டுப் பகுதியில் வாழும் மக்கள் நலமாக, மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி வந்தான். ஒருநாள் ...
மேலும் கதையை படிக்க...
கரியால் வாழ்ந்து, ஜனங்களை ஏற்றிக்கொண்டு, நான்கு சக்கரங்களுடன் செல்லும் ஓர் உருவம் கரிக்கார் என்பது உலகறிந்த விஷயம். இந்தக் கார்கள் அதிக மாக உற்பத்தியானதற்குக் காரணம் ஹிட்லர்தான் என் றால் பொய்யாகாது. "என்ன ஐயா, ஹிட்லர் கரிக்கார் உற்பத்தி செய் யும் தொழிற்சாலை ...
மேலும் கதையை படிக்க...
பணத்திலே, மனிதனுக்கு ஆசை வேண்டியது தான். ஆனால், சிலருக்கு அளவு கடந்த பணப்பித்து இருக்கிறதே, அது மகா மோசம். பணத்திலே அப்படிப் பேராசை கொண்டிருப்பவனுக்குச் சந்தோஷமே கிடைப்பதில்லை. ஏனென்றால், சந்தோஷத்தை அவன் அடைய முடியாதபடி அவனுக்கும் சந்தோஷத்துக்கும் நடுவிலே, வேலியாக நின்று, ...
மேலும் கதையை படிக்க...
மான்குட்டி
(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும். குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். ...
மேலும் கதையை படிக்க...
நல்ல நண்பர்கள்
(தமிழக அரசினர் பரிசு பெற்ற புத்தகம்) மாலை நேரம்: மணி நான்கு இருக்கும். வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று. அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து தலையைக் குனிந்தபடியே ...
மேலும் கதையை படிக்க...
"இன்றைக்கு என்ன, திங்கட்கிழமையா? அடடா, 71 முதல் 9 வரை ராகுகாலம் அல்லவா? இந்த நேரத் திலே இந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்கப்படாது'' என்று நம் நாட்டில் எத்தனையோ பேர் சொல்லுகிறார்கள். ராகு காலத்தைப் போலவே, எமகண்டம், கரிநாள் முதலியவைகளெல்லாம் அநேகருக்குப் ...
மேலும் கதையை படிக்க...
ஓர் அம்மா ஒட்டகமும் சோனா என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், சுட்டுப் பொசுக்கும் மஞ்சள் நிற மணல் பளபளத்தது. திடீரென்று சோனா நின்றது; மணலில் பாதங் ...
மேலும் கதையை படிக்க...
வெகு காலத்திற்கு முன்பு அயோத்தியில் தெளம்யர் என்று ஒரு குரு இருந்தார். அவரது குருகுலத்தில் பல மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்களில் ஒருவன் உபமன்யு. உபமன்யு வும் மற்ற மாணவர்களும் தங்கள் குருவுடன் கிராமத்தின் எல்லையிலிருந்த ஆசிரமத்தில் வாழ்ந்துவந்தனர். குருகுலத்தின் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ...
மேலும் கதையை படிக்க...
இளவரசி சாவித்திரி அவளுடைய தந்தை முன் நின்று கொண்டிருந்தாள். மெல்லிய கொடி போல அவள் அழகாக இருந்தாலும், அவளது மனம் உறுதியாக இருந்தது. முகத் தில் பிடிவாதம் தெரிந்தது. இந்த மாதிரி சமயங்களில் அவ ளது தந்தை வளைந்து கொடுத்துவிடுவார். "தந்தையே, நினைவிருக்கிறதா? ...
மேலும் கதையை படிக்க...
ரோஜாச்செடி
பூம்புதூர் பெரிய பட்டணமும் அல்ல; சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான ஓர் ஊர். அந்த ஊரில் பாரதி சிறுவர் சங்கம்' என்று ஒரு சங்கம் இருக்கிறது. அந்தச் சங்கம் சில சங்கங்களைப் போல் தூங்குமூஞ்சிச் சங்கமாக இருப்பதில்லை. எப்போதும் சுறுசுறுப் பாக ...
மேலும் கதையை படிக்க...
ஏழு நாள் எச்சரிக்கை
கரிக்கார்
பணப்பித்து
மான்குட்டி
நல்ல நண்பர்கள்
வெள்ளைக்காரரும் வெள்ளிக்கிழமையும்
சோனாவின் பயணம்
உபமன்யு கற்ற பாடம்
யமனை வென்றவள்
ரோஜாச்செடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)