மீண்டும் ஒரு ப்ரியா

 

கரு நிற நீர்வீழ்ச்சி போல் தறையில் வீழ்ந்து கிடந்தது தார்சாலை…இரவு 10 மணி…என்னை போலவே அந்த பேருந்தும் வெறுமையாகவே இருந்தது..இந்த இருபது நிமிட பயணத்திற்க்குள் நான்கு வருட கல்லூரி நினைவுகளுக்குள் நீந்தியே வந்துவிட்டேன்….ஆமாங்க என் கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சு…இனி கலாட்டா இல்ல…கூத்து இல்ல…ம்ம்ம் அந்த காதலும் இல்ல..இந்த நாலு வருசத்துல முலுசா சம்பாதிச்சது ஒரு முப்பது முப்பத்தஞ்சி நட்புகளை தான்..ம்ம்ம் எல்லாம் முடிஞ்சிபோச்…

ஊருக்கு போகனும்…அதுக்குத்தான் இப்ப கோயம்பேடு போயிட்ருக்கன்…டஜன் டஜனாக மக்களை உள்ளும்-வெளியும் தள்ளிக் கொண்டிருந்தது பேருந்து நிலையம்…எல்லா கைகளிலும் வாட்டர் பாட்டில் அல்லது அலைபேசி(கள்)…

கிருஷ்ணகிரி..ஓசூர்..பாண்டி…பாண்டி…விழுப்புரம்…கடலூர்…திண்டிவனம் என ஊர்களை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தனர்…நம்ம ஊர் பக்கம் செல்லும் பேருந்துகளை ஒரு வழியாக தேடிப் பிடித்ததில்..நின்று கொண்டிருந்தது ரெண்டே ரெண்டு தான்..சரி போறதுதான் போறோம்…அந்த புது வண்டிலதான் போவோமேன்னு ஏரியாச்சு…ஒன்னும் கூட்டம்லாம் இல்ல…

வழக்கம் போல் பக்கத்து சீட்டில் பெருசு-வழக்கத்திற்க்கு மாறாக முன் சீட்டில் ஃபிகர்…நீல நிற டீ-சர்ட்…அப்பாவோடத்தான் வந்தா..ஆனா அவர் நாலு சீட் முன்னாடி…எடம் இல்ல போல….பரவாயில்ல என் டார்லிங் சமந்தா அளவுக்கு இல்லனாலும் ஏதோ இருந்தா..ச்ச சுமாரா அழகா இருக்கா..அதுவும் சென்னை எப்டியும் பத்து பதினஞ்சி பாய் ஃப்ரெண்ட்சு இருப்பானுங்க என எதை எதையோ முணுமுணுத்தது மனசு..

வேகம் பிடித்தது பேருந்து..என் எண்ணங்களும் தான்…சென்னையை தாண்டியாச்…டிக்கெட்டும் போட்டாச்…அடுத்து என்ன லைட் ஆஃப்

எனக்கு தூக்கம் வரல…இருளில் நகர்ந்து கொண்டிருந்த நிழல்களை பார்த்துக் கொண்டே நகர்ந்தது நேரம்..

மணி 12ஐ தாண்டி ஓடிக் கொண்டிருந்தது..இஞ்சின் சத்தத்திற்கு இடையிடையே உச்ச்..உச்ச்….யாரோ எதற்க்கோ முனகுவது போன்றதொரு சத்தம் என்னை தொந்தரவு செய்தது…பெரியவர் ஒருவர் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார் அவரா இருக்குமோ…இல்ல பின் சைடு பச்ச கொழந்தய வெச்சிருக்குற பெண்ணா ? சரி நாம தூக்கத்தை வர வெப்போம்னு கண்ண மூடிக்கிட்டு கொஞ்ச நேரமிருந்தன்…மீண்டும் மீண்டும் அந்த உச்’…என்னை வெறுப்பேத்தியது

இங்கு யாரோ பக்கத்தில்தான்..சீட்டிலிருந்து சற்று நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்….ஆமாம் அவ தான்…அந்த சத்தம் அவகிட்டேந்துதான்..அந்த முன் சீட் பெண் தான்…

என்னவா இருக்கும்…மூட்டை பூச்சியா இருக்குமா ? இல்ல எதும் ஒடம்பு சரியில்லையா..ச்ச ச்ச பார்த்தா நல்லாத்தான இருக்கா

திரும்ப திரும்ப…உச்’ சத்தம்…இப்போது ஒரு பக்கமாக ஒருக்களித்து கொண்டு…ஏதோ என்னிடம் பேச வருவது போலவே சிணுங்கிக் கொண்டிருந்தாள்

ம்ம்ம் நீண்ட நேர யோசனைக்கு பிறகு அலைபேசியை இயக்கி..அதன் வெளிச்சத்தை…அவளின் உச்’சிற்கு பதிலாக்கினேன்…சட்டென திரும்பியவள்..இதற்க்குத்தான் இத்தனை நேரமாய் காத்திருந்தது போல்…அவள் அலைபேசியில் எதையோ தட்டச்சி எனக்கு தெரிவது போல் காட்டினாள்..திரையில் இருந்தது hai

எனக்கொன்றும் புரியவில்லை…இப்படியொரு இரவில்..அப்படியொரு பெண்ணிற்க்கு என்னிடம் பேச என்ன இருக்க போகிறது..?

சரி என்னதான் பாத்துடுவோமே…முன் சீட்டில் சாய்ந்து..அவளுக்கு மட்டும் கேட்கும் அளவான குரலில் ஹாய் என்றேன்…

பக்கத்து சீட் பெருசு…குறட்டையில் ரிதமிக் ஆர்கஸ்ட்ராவே நடத்திக் கொண்டிருந்தது…

அவள் காதில் கண்டிப்பாய் விழுந்திருக்கும்..ஆனால் இன்னும் ஒன்னும் ரியாக்ஷன் இல்ல..இப்ப என்னால முடியல

ச்ச இந்த பொண்ணுங்களே இப்டிதான்…ஒருத்தன கெளப்பி விட்டுட்டு போயிடுவாளுக…நாங்க இப்டி பொலம்பனும்

என்னதான் கல்லூரியில் எத்தனையோ பெண்களுடன் பேசிருக்கன்…பழகிருக்கன்..கடல போட்ருக்கன்..ஆனா இந்த நடு ராத்திரில வந்த hai இந்த பாடு படுத்துகிறது…

அவ என்னதான் பண்றான்னு பார்க்கலாமேன்னு…பேக்க எடுக்குற மாதிரி எந்திருச்சி…பார்த்தா அந்த புள்ள தூங்கிடுச்சி….

ம்ம்ம் அவ எதுக்குதான் என்னதான் என்ட்ட பேச வந்தா…தெரிஞ்சே ஆகனும்…ஏதோ ஒரு தைரியம் எனக்குள்…டேய் ‘அவள எழுப்புடா’ன்னுது

ஜன்னல் பக்கம் தான் அவள் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்..ஜன்னல் கேப்பில் லைட்டா கை விட்டு கையில் கிள்ளினால் போதும்…எந்திருச்சிருவா…பாத்துக்கலாம்

வழக்கமாக ஆடும் கைகள் இப்போது தைரியமாகவே இருந்தது…லாவகமாக கைகளை இயக்கி..முன் சீட்டிற்க்கு சென்றேன்

கை கையை தேடியது…ஆனால் தவறிப் போய் அவள் கைகளுக்கு அருகிலிருந்த மார்புகளை லைட்டா தொட்டுவிட்டது

மிரட்சியில் கைகளை வெடுக்கென உருவிக் கொண்டேன்.. நட்டுக் கொண்டன…….’முடிகள்’

அவளும் எழுந்துவிட்டாள்…ச்ச ஏண்டா ஏன்…அவள் என்ன செய்யப் போகிறாள் என்ற பயத்தை விட அந்த தொடுதல் தந்த கிறக்கமே மிக்கிருந்தது

இப்டி ஆயிடுச்சே..அவள் என்ன பண்ணுவான்னு பெஸ்ட் கேஸ்..ஒர்ஸ்ட் கேஸ் எல்லாம் மூளை ஆராய்ந்தது

1) சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பி..அவ அப்பா என் கழுத்தை பிடித்து பஸ்லேர்ந்து எறக்கி விடுவது
2) எதையும் வெளியே சொல்லாம..எங்கிட்ட மீண்டும் பேசாமல் அப்டியே செல்வது

அவள் என்ன செய்ய போகிறாள் என்ற ஆவல்.அதாங்க பயம் தாங்கமுடியல

கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு..அவள் அலைபேசியை எடுத்து..மீண்டும் எதோ ஒத்தினாள்

dai ennada loosu? :)

லூசா…இப்படி சம்பத்தமில்லாத கேள்வி(பதில்) என்னை ஆச்சரியப்படுத்தியது

சரி இது வேற யாருக்காவது இருக்கும்..வெயிட் பண்ணுவோம்னு காத்திருந்தேன்..இல்ல யாருக்கும் அனுப்பல…அது எனக்குத்தான்

இப்போது அந்த சேதியை அழித்துவிட்டு..8056533228 என்ற நம்பரை டைப்பினாள்…

என்னடா இது…கத வேற மாதிரி போகுது…என்ன பொண்ணுடா இவ

என் கை தவறாவே பட்டிருந்தாலும்…ஒரு பொண்னு இப்டியா நடந்துக்குவா..பசங்கள முன்ன பின்ன பாத்திருக்கவே மாட்டாளோ

எப்டியோ நாம தப்பிச்சா சரி…அவ நெம்பரை போனில் சேமித்துக் கொண்டு

extremly sorry pa என்று மெசேஜை தட்டினேன்

k da…no worries என ரொம்ப ரிலாக்சாவே பதில் வந்தது

பிறகு ஊரென்னா…அப்பா என்ன பண்றாரு…அண்ணன் தம்பி இருக்கானுங்களா..ஒரே கடல கடலதான்..

அவ பேர உங்ககிட்ட சொல்டனா என்ன..இல்லல்ல…இவ பேரும் ப்ரியாவாம் :)

இந்த கிளுகிளுப்புளயே ஊர் வந்து சேந்தாச்சு…குட்டி தூக்கம் போட்டு எந்திருச்ச்ப்போ

3 message received

அவகிட்டேர்ந்துதான்…

dai rcharge me fr 50 rs da urgent

ஆஹா சனியன் சட பிண்ண ஆரம்பிச்சிடுச்சே..பொட்டு வெச்சு பூ வெக்காம போவாதே ரைட்டு…priya3னு சேமித்திருந்ததை LOLனு மாத்திட்டன்

LOLனா என்னன்னு கேக்குறீங்களா…தெரியல..அதாங்க…லோலாயி :)  

மீண்டும் ஒரு ப்ரியா மீது ஒரு கருத்து

  1. nithi says:

    நல்ல லோலாய்…………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)