விளையாட்டின்போது காலில் அடிபட்டு புசுபுசு வென்று வீங்கி விட, டாக்டரிடம் சென்று காட்டினேன். அமுக்கி பார்த்து விட்டு ஒரு பெரிய மாத்திரையை எடுத்து தந்தார்.
இருங்க, தண்ணி கொண்டு வரேன், என்று போனவர் போனவர் தான். எங்கள் ஊர் சிறிய டவுன் ஆனதால் இங்கே டாக்டர், கம்பவுண்டர், பியூன் எல்லாமே இவர்
ஒருவர் தான்.
கைவசமிருந்த பாட்டில் தண்ணீரை வைத்து, பிரயாசையுடன் அந்த மாத்திரை விழுங்கினேன். இத்தனை பெரிய மாத்திரை இதுவரை பார்த்ததே இல்லை.
ஒரு வழியாக சிரமத்துடன் தொண்டையிலிருந்து அது கீழே இறங்கவும், ஒரு பிளாஷ்டிக் குவளையில் தண்ணீருடன் வந்தார் டாக்டர்.
இதிலேய அந்த மாத்திரை போட்டு நல்லாக் கரைஞ்சதுக்கபுறம் அந்த சொல்யூஷனை வச்சு காலிலே ஒத்தடம் கொடுங்க என்றார்.
- ஷேக் சிந்தா மதார் (22-8-12)
தொடர்புடைய சிறுகதைகள்
‘மண்டை உடைத்துக்கொண்டு சண்டை போடுகிறவர்கள்தான் அன்பான தம்பதிகள்’ என்று ஆண்டவனே சொன்னாலும், அவன் வாயில் தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல் எவ்வளவு என்று பார்க்கத் தோன்றும். அப்படி யிருக்க, சண்டையில் மண்டை உடைத்துக் கொண்ட ஒரு ஜோடியை அன்பான ஜோடி என்று ‘பாபா ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு இருக்கும் தொந்தரவுகளிலேயே பெரும் தொந்தரவு படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவதுதான். எனக்கு பத்து வயதாக இருந்திருந்தால் இதைப்பற்றி நான் வருந்தியிருக்கமாட்டேன். உங்களுக்கும் இது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் எனக்கு இந்த ஏப்ரல் வந்தால் முப்பத்தி நான்கு வயது முடிகிறது.
தொட்டில்பழக்கம் சுடுகாடு ...
மேலும் கதையை படிக்க...
எதைச் செய்யச் சொன்னாலும் “இது கஷ்டமாயிருக்கிறது” என்று சொல்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். என் பொறுமையின் அடித்தளம் வரை சென்று கெஞ்சினாலும்,என் கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தினாலும் அவள் பேச்சிலிருந்து மாறுவதாக தெரியவில்லை. தொலைபேசி அழைப்பை துண்டித்து விடுவதால் என்னிடம் இருந்து தப்பித்துக் ...
மேலும் கதையை படிக்க...
இடுப்பில் ஒரு உதைவிட்டான் சங்கரன். சின்னிக்கு உடம்பு சிலிர்த்தது. உதை விழுந்த இடத்தை வருடிக் கொண்டாள். மெல்லச் சிரித்தாள். நட்ட நடு ரோட்டில் ஆபீஸ் போகிற அவசரத்தில், ஒரு பெண் தனக்குத் தானே சிரித்துக் கொள்வதை பஸ் ஸ்டாண்டின் கண்கள் உறுத்துப் ...
மேலும் கதையை படிக்க...
டமாருக்கு நாய்கள் என்றாலே ஆவாது. நைட்டு சரக்கடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு வரும்போது இருட்டில் தெருவில் தூங்கும் சொறிநாய்களை மிதித்துவிடுவான். ஒரு குடிகாரனுக்கு இதற்கு கூட உரிமையில்லையா என்ன? உயிரே போய்விட்டது போல அந்த நாய்கள் 'வாள் வாளென்று' கத்தி அதனாலேயே அவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
உணர்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்