” உங்களை ரவுண்ட் அப் செஞ்சிருக்கோம். வெளியே வந்துடுங்க. இல்லாட்டி ஃபயரிங் செய்ய வேண்டியிருக்கும்”
“வேளச்சேரி பேங்க் ராப்ரி, தாம்பரம் காலேஜ் பொண்ணு ரேப் அண்ட் மர்டருக்காக உங்க நாலு பேரையும் அரெஸ்ட் செய்ய ஆர்டர் இருக்கு. நீங்க கோ-ஆப்ரேட் செய்யலைண்ணா என்கவுண்ட்டர் செய்வோம்”
“அசிஸ்டெண்ட் கமிஷனர் பேசறேன். உங்க உயிருக்கு நான் க்யாரண்டி. கம் அவுட்”
“பாஸ், போலீஸ் அட்டாக்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நாம ஆரம்பிச்சுடலாமா”
“…………”
“வேண்டாம். ரொம்ப குறைவான போலீஸ்காரங்கதான் வெளியே இருக்காங்க. நாம ஈஸியா தப்பிக்க நிறைய சான்ஸ் இருக்கு”
“பின்னாடி இருக்கிற கதவுக்கு பக்கத்தில் யாரும் இல்லை அது வழியா தப்பிக்கலாமா?”
“சார்..அவங்க வேற ஏதோ ஒரு ப்ளான்ல இருக்காங்க போல இருக்கு. சரண்டர் ஆகச் சொல்லி இன்னொரு தடவை சொல்லலாமா”
”ம்ம்ம்ம். செய்யுங்க”
“பாஸ், பின்னாடி இருக்கிற கதவையும் பூட்டிட்டாங்க”
“இன்னும் பத்து எண்ண போறோம். அதுக்குள்ள சரண்டர் ஆகிடுங்க”
“கவுண்ட் ஸ்டார்ட்ஸ் நவ்”
“ரவி, நீ பின்னாடி கதவுக்கு போ. பிரசாத் அந்த ஜன்னல் வழியா பாரு”
“டென்”
“நைன்”
“பாஸ் சரண்டர் ஆகிடலாமா?”
“என் கூட இருக்கிறவங்க இருக்கலாம். சரண்டர் ஆகிறவங்க ஆகலாம்”
“செவன்”
“சிக்ஸ்”
“எல்லோரும் பொசிஷன்ல ரெடியா இருங்க. வி வில் ஃபயர் நவ்”
“ஃபோர்”
“த்ரீ”
“இதுக்கு மேல வேற வழியில்லை..போலீஸ் சுட ஆரம்பிக்க போறாங்க. நாமும் சுடுவோம்”
“டூ”
“ரெடி”
“ஒன்”
“ஃபயர்ர்ர்ர்ர்ர்……..”
டுமீல், டமார், டிஷ்யூம்….டுமீல்
“அம்மா”
தொப்…குப்…தப்
“சனி, ஞாயிறு ஆனா போதும் மனுஷன் வீட்ல இருக்க முடியறதில்லை… பிஞ்சுல பழுத்ததுக”
குப்…தப்…குப்
“எங்கேயாச்சும் போய் விளையாடுங்கன்னு சொன்னா கேக்குறீங்களா நாலு மொத்து மொத்துனாத்தான் அடங்குறீங்க”
- ஜூன் 26, 2012
தொடர்புடைய சிறுகதைகள்
அலுவலகத்தை விட்டு கிளம்பும் போதுதான் மின்னஞ்சல் வந்திருந்தது. அடுத்த நாள் காலையில் மேனஜருடன் மீட்டிங். மேனஜருக்கு இது வாடிக்கையாகிவிட்டது. மறுநாள் காலை சரியாக ஒன்பது மணிக்கு மீட்டிங் என்று முந்தின நாள் மாலை ஏழு மணிக்கு மின்னஞ்சலை அனுப்புவார். ஏழு மணிக்கு ...
மேலும் கதையை படிக்க...
பெண்கள் வரிசையாக போதை தலைக்கேறி சாலையில் விழுந்து கிடப்பதை பார்த்ததுண்டா? ப்பூ இது ஒரு மேட்டரா என்பவர்கள் ஆண் விபச்சாரன்களை(இலக்கணப்படி இது சரியான வார்த்தைதானே?) விலை பேசி அழைத்துச் செல்லும் பெண்களை பார்த்ததுண்டா? இதுவும் ப்பூ மேட்டர் என்பவர்கள் இதற்கு மேல் ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ”
“சேஷாத்ரி இருக்காருங்களா?”
“ஆமா...பேசறேன்..நீங்க?”
“ஸ்டேஷன்ல இருந்து பேசறோம். உங்க பையன் பாலாஜியை இங்க வெச்சிருக்கோம் வந்து கூட்டிட்டு போங்க”
“எந்த ஸ்டேஷன்? எதுக்கு சார்”
“எஸ்.ஐ நேர்ல பேசணும்ன்னு சொல்லுறாரு வாங்க சார்”
“சார் நாங்க நல்ல ஃபேமிலி”
“அதை இங்க வந்து சொல்லுங்க சார்”
“ஹலோ...சார்...சார்”
***
“என்னங்க ஆச்சு?”
”உம்பையனை போலீஸ் ஸ்டேஷனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
மூன்று நாள் தாடியோடு அலுவலகம் வந்திருந்த ரங்கநாதனுக்கு அவனது மேலாளர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. இன்ப அதிர்ச்சிதான். இரண்டு வார காலத்திற்கு ரங்கநாதன் ஃப்ரான்ஸ் போய் வர வேண்டுமாம். கேட்ட வினாடியில் இதயம் உச்சந்தலைக்கும் அடிவயிற்றுக்கும் குத்தாட்டம் போட்டது. அத்தனை குஜால்களுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
“அய்யோ! இப்போ பி.வி.ஆறுமுகம் க்ளாஸ்டா”
“பேப்பர் கொடுப்பானா?”
“இன்னும் திருத்தி இருக்க மாட்டான். அவன்கிட்ட ட்யூஷன் போற பசங்க பேப்பரை மட்டும் திருத்திட்டானாம்”
“அங்கப்பனுக்கு தொண்ணூத்தி நாலு மார்க்”
“நமக்கு எல்லாம் நாப்பது அம்பதுதாண்டா போடுவான்”
“வவுறன் வந்துட்டான். யாரையாச்சும் கூப்ட்டு மொத்துவான் பாரு”
“வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அய்யா”
“ம்ம்..உக்காருங்க”
“நேத்து நடத்துன வெப்பவியல் ...
மேலும் கதையை படிக்க...
சரக்கடித்தவர்களிடம் சிக்கிக் கொண்டவனின் கதை
குஜால் தேசத்தில் சிக்கிக் கொண்ட ரங்கநாதன்