Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பொங்கல் இனாம் !

 

“என்ன! பொங்கல் இனாமா? பொங்கல் இனாமும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே… போ! வேற வேலையே கிடையாதுபோல இருக்கு உங்களுக்கெல்லாம்! ஒரு தம்பிடி கூடக் கொடுக்க மாட்டேன்! ஆமா! ஏன் நிற்கிறே இன்னம்? போக மாட்டே?” என்று நடேசய்யர் தம் பற்களை நறநறவென்று கடித் தார். பொங்கல் இனாம் கேட்ட தபால்காரர் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்.

இயற்கையில் தாராள சிந்தை உடைய நடேசய்யர் தபால்காரரி டம் அவ்வளவு நிர்தாட்சண்ய மாக நடந்துகொண்டது எனக்கு ஆச்சரியத்தையே அளித்தது. “ஏன் ஸார், பொங்கல் இனாம் கேட்டதற்காகத் தபால்காரரை அப்படிக் கோபித்துக்கொண்டீர் கள்?” என்று விசாரித்தேன்.

“பொங்கல் இனாம் கொடுக்கிற பழக்கத்தையே அடியோடு எடுத் துடணும், ஸார்! முக்கியமாகத் தபால்காரர்களுக்குப் பொங்கல் இனாமே கொடுக்கப்படாது! அதனாலே எவ்வளவோ ஆபத்து நேரிடுகிறது! என் சொந்தக் கதை யையே சொல்றேன் கேளுங்க” என்று சொல்லத் தொடங்கினார் நடேசய்யர்.

“நான் ஒரு கம்பெனியிலே முன்னே வேலை பார்த்துண்டிருந் தேன். சம்பளம் 50 ரூபாய். பொங் கல் சமயத்திலே முதலாளிக்கு ஒரு லெட்டர் எழுதினேன், அப்போ அவர் பம்பாய் போயிருந் தார். ‘பத்து வருஷம் வேலை பார்த்தும் 50 ரூபாய்க்கு மேலே சம்பளம் உயர மாட்டேங்கிறதே! இந்தப் பணத்தை வச்சிண்டு நான் எப்படி என் பெரிய குடும் பத்தைக் காப்பாற்ற முடியும்? என் உண்மையான உழைப்பிலே உங்களுக்கு மதிப்பு இருந்ததுன்னா என் சம்பளத்தை நூறு ரூபாயா பண்ணிப்பிடணும்! இல்லேன்னா வேலையை ராஜினாமா செய்யத் தயாரா இருக்கேன்’ அப்படீன்னு எழுதிப் போட்டேன்.”

“அடடே! அப்புறம்..?”

“இரண்டு நாள் ஆகியும் பதில் வரலே. உடனே, ‘உங்ககிட்டே வேலை செய்யறதைவிட ஒரு கழுதைகிட்ட வேலை செய்யலாம்’ அப்படின்னு கடுமையா ஒரு லெட்டர் எழுதிப் போட்டுட்டு, கூடவே என் ராஜினாமாவையும் அனுப்பிச்சுட்டேன்…”

“ஐயோ! அப்புறம்..?”

“மூணு நாள் கழிச்சுத் தபால்காரன் ஒரு கடுதாசியைக் கொண்டு வந்து கொடுத்தான். பிரிச்சுப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது. ‘உன் உழைப்பை மெச்சி உனக்கு இனிமே மாசம் நூறு ரூபாய் சம்பளம் போட்டுத் தரப் போகிறேன்’ அப்படீன்னு முதலாளி எழுதியிருந்தார்…”

“ராஜினாமாவைப் பார்த்து பயந்துட்டாரா?”

“அதான் இல்லே! நான் முதல்லே எழுதினேன் பாருங்கோ ஒரு லெட்டர், அதுக்கான பதில் தான் இது. ஆனா, தபால்காரன் என்கிட்டே உடனே கொண்டு வந்து கொடுக்கலே! அது கிடைச் சிருந்தா நான் ராஜினாமா லெட் டரை எழுதியிருக்கவே மாட் டேன்… எனக்கு உத்தியோகமும் போயிருக்காது!”

“லெட்டரை ஏன் உடனே கொண்டு வந்து கொடுக்கலியாம் தபால்காரன்?”

“என்னை வந்து வீட்டிலே தேடியிருக்கான். நான் இல்லே. வீட்டிலே கொடுத்துட்டுப் போயி ருக்கப்படாதோ? கொடுக்கலே! என்கிட்டே நேரிலே கொடுக்க ணும்னு வச்சிண்டிருந்திருக்கான். நேரிலே என்கிட்ட லெட்டரைக் கொடுத்துட்டு, அப்படியே பொங்கல் இனாம் வாங்கிண்டு போகணும்னு எண்ணம் அவனுக்கு! கடைசியிலே என்ன ஆச்சு..?”

“உங்க உத்தியோகம் போச்சு!” 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்புள்ள தங்கவேலு, பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிட மிருந்து ஒரு சேதியும் வராததைப் பற்றி நீ ஆச்சரியப்பட்டிருக்கலாம். சென்ற பத்து வருஷங்களாக நான் இந்தியாவிலேயே இல்லை. போலீஸ§க்குப் பயந்து, தலைமறை வாக ரங்கூனில் இருந்தேன். நேற்றுதான் ...
மேலும் கதையை படிக்க...
குழந்தைக்கு நாமம் !
"கணேசய்யர்வாள், எனக்கென்னவோ உங்களிடத்திலே ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டுடுத்து, சார்!" இப்படி என்னிடம் வந்து சொன்னவர், எங்கள் ஆபீஸில் வேலை பார்த்து வந்த குமாஸ்தா குருசாமி. அவரோடு நான் பழகி யதே இல்லை என்றாலும், அவருக் குப் பணக் கஷ்டம் இருந்தது என்று ...
மேலும் கதையை படிக்க...
ஜனவரி முதல் தேதியன்று என் புது டைரியில் நான் இரண்டொரு குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த சமயம், "ஸார்" என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கணேசய்யர்! வருஷ ஆரம்பத்தில் நண் பர்கள் ஒருவருக்கொருவர் ஆசி கூறும் சம்பிரதாயப் படி, "புது வருஷம் ...
மேலும் கதையை படிக்க...
அவன் தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத பாதையில் நடந்துகொண்டிருந்தான். இந்தப் பாதை முன்பு சாதாரணமாகப் புழங்கிக்கொண்டிருந்த சாலையாக இருந்திருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. செடி கொடிகள் முழங்காலுக்குக் கொஞ்சம் கீழான உயரத்தில் நெருக்கமாக வளர்ந்து நடப்பதற்குச் சிரமமாக இருந்தது. வேறு ஏதேனும் நல்ல ...
மேலும் கதையை படிக்க...
எதிர்பாராதது !
குழந்தைக்கு நாமம் !
புது வருஷத் தீர்மானம் !
வனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)