அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். நம்மூர்க்காரங்க மூனு பேரும், வெள்ளைக்காரங்க நாலு பேரும். இந்த காம்பினேஷன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் சம்பந்தப்பட்ட அலுவலக மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை
) அதே தான் !
‘இப்ப என்ன சொல்லிட்டேனு இவ்ளோ கோபப்படறான். திடீர்னு டென்ஷனாகிட்டான்’ என்று நினைத்திருந்தான் மூர்த்தி.
வெள்ளைக்காரர்கள் ஆளாளுக்குப் பார்த்துக் கொண்டனர்.
மூச்சு ஏற இறங்க, காற்றோடு கலந்த குரலில் “அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த ப்ரோக்ராம் ஈஸியா தகர்த்திடலாம்னு சொல்றீங்க. இத டிஸைன் பண்ணதே நான் தான். யாரும் உள்ள புகுந்து உடைக்க முடியாது. முடிஞ்சா தகர்த்திக் காட்டுங்க. ஆங்…” என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.
இந்தியர்ளோடு வேலை செய்வது தான் கடினமோ ?! இதே வெள்ளைக்காரர்கள் என்றால், பேசவும் செய்வாங்க, கேட்கவும் செய்வாங்க. தாமரை இலை நீராய் இல்லாமல், நம்ம ஆளுங்க ஏன் இப்படி எல்லாத்தையும் பெர்சனலா சொன்ன மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள் !
“சாஃப்ட்வேர் என்னிக்கு ரிலீஸ் பண்றோம் !” என்றான் ராபர்ட்.
“ரிலீஸ் டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். மூர்த்தி சொல்வதும் சரி தான், எதுக்கும் இன்னொரு ரௌண்ட் டெஸ்டிங் பண்ணிடுங்க” என்றாள் கேத்தி.
“சரவணன் என்ன பெரிய ஆளா ? அவர் ப்ரோக்ராம்ல சிறு குறை இருக்குனு சொன்னா, தாங்க முடியலையே ! ஒன்னு சரி செய்கிறேன்னு சொல்லனும். இல்லேன்னா நீ சரி பண்ணிக் கொடுனு சொல்லனும். அதவிட்டுட்டு ஏன் இப்படி மீட்டிங்கில் எறிந்து விழணும். நல்ல வேளை ‘நக்கீரன்’ மாதிரி கேத்தி வந்து, தப்பு தப்பு தான்னு சொல்லி காப்பாத்தினாங்க ! ” என்று வெளியே வந்து புலம்பினான் மூர்த்தி தன் நண்பன் அனீஷிடம்.
“இன்னிக்கு நேத்து கதையா. அவன் போக்கிலேயே போவோம். பாரு, நீ கூட தான் பெர்சனலா எடுத்துக்கற … பரவால்ல விடுங்க பாஸு” என்று அனீஷ் மூர்த்தியைத் தேற்றினான்.
***
“ராபர்ட், நீங்க இப்ப தான் இன்டர்ன்ஷிப் முடிச்சிட்டு இங்க சேர்ந்திருக்கீங்க. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனா இந்தப் பசங்க எத்தனை வருஷமா இருக்காங்கனு தெரியுமா ? இவங்க அடிச்சிகறாங்களேனு, தயவு செய்து உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணலாம் என்று மட்டும் நெனைக்காதீங்க. நல்ல வேளை மீட்டிங்கில் அமைதி காத்தீர்கள்.”
“என்ன இருந்தாலும், ஒரே அலுவலகத்துக்குள்ள இப்படி இவங்க அடிச்சிக்கறது கம்பெனி வளர்ச்சியை பாதிக்கும்” என்றான் ராபர்ட்.
“இந்தியர்கள் எப்பவுமே உணர்ச்சி பூர்வமானவர்கள். அவங்க போக்கிலேயே விட்டு தான் போகணும். கம்பெனியுடைய வளர்ச்சி அவங்களுடைய வளர்ச்சி தான். இதையும் அவங்க கிட்ட சொன்னா, அதுக்கும் அடிச்சிகுவாங்களோ என்னவோ. பரவால்ல விடுங்க பாஸு…” என்று கண்கள் சுருக்கிச் சிரித்து, தன் இளைய தலைமுறையைத் தேற்றினாள் கேத்தி.
தொடர்புடைய சிறுகதைகள்
"ஊரெல்லாம் ஷோக்கா கீதுபா" என்கிற பாஷையை குப்பத்தில் கூட கேட்கமுடிவதில்லை. அல்ட்ரா மாடர்ன் தமிழுக்கு மாறியிருந்தனர் அனைவரும்.
தன்னைப் போலவே சர்வ சாதரணமாக ஆங்காங்கே அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டம் ரிடர்ன் இந்தியர்கள். கையில் மினரல் வாட்டருடன் உலாவுவதைப் பார்க்கும்போதே தெரிந்தது சந்தீப்புக்கு.
மனைவியும் ...
மேலும் கதையை படிக்க...
வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.
இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. சமையலறையின் பின்பக்கம் இருந்த அறையில் டக், டக் என்று அந்த சப்தம். ரொம்ப நாட்களாகவே அந்த அறையைப் பயண்படுத்துவதில்லை. சமீப ...
மேலும் கதையை படிக்க...
"இந்த நேரம் என்று கிடையாது. ராப்பகலா யாருமே அந்தப் பக்கம் போறதே கெடையாது தங்கச்சீ ! செல வருசம் முன்ன, உன்ன மாதிரி வயசுப் பய புள்ளைக நாலஞ்சு, இப்படித்தேன், நாங்க சொல்றதக் கேட்காம, எங்கள ஒரு மாதிரி பாத்துபுட்டு, 'அட ...
மேலும் கதையை படிக்க...
அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி ...
உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில்.
"ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ...
மேலும் கதையை படிக்க...
பெய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம்.
நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள்.
ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் குட்டி ஆட்டோவில் சுற்றி எங்கிலும் தட்டி. ஆளுயரத்தில் அரசியல் தலைவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நடப்பது போல் படங்கள். பின்சீட்டில் மைக்செட்டுக்கு வேண்டிய சாமான்கள், இருபுறம் தெருபார்த்து உறுமும் குழாய்கள். ஆட்டோவை சேகர் ஓட்ட, பக்கத்தில் தங்கராசு.
"அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, உங்கள் ...
மேலும் கதையை படிக்க...
குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென அறைந்து எச்சரித்தாள் ... "யாருகிட்ட மோதற, தண்ணிய போட்டாலும் தடம் மாறாம இருக்கணும் ?! அவன் தான் மனுஷன் !" என்றவளை ...
மேலும் கதையை படிக்க...
அக்னி நட்சத்திரத்தின் பிரகாசமான ஒரு காலைப் பொழுது. ஆங்காங்கே, ஆடையின்றி எழுந்து நிற்கும் அழகிய செங்கற் கட்டிடங்கள் சில. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒவ்வொரு பெயர். அதில் வரிசையாய் அறைகள். தரைகளில் நாசி துளைக்கும் சிமெண்ட் வாசனையும், ஜன்னல்களில் மணக்கும் பெயிண்ட் வாசனையும், ...
மேலும் கதையை படிக்க...
சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.
வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் ...
மேலும் கதையை படிக்க...
மெல்ல அடிமேல் அடிவைத்து முன்னேறி, தலையில் இருந்த துண்டால், லபக்கென்று அந்தக் கோழியின் தலையில் போட்டு அமுக்கிப் பிடித்தான் மாயாண்டி.
கோழியைத் தூக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான். 'நல்ல வேளை யாரும் பார்க்கலை' என்று திரும்பு முன், அவன் தலையைச் ...
மேலும் கதையை படிக்க...
சொல்லிட்டீங்கள்ல, செஞ்சிருவோம் !
அகரம் என்றொரு (கையெழுத்துப்) பத்திரிகை