நாய் வளர்த்த திருடன் கதை

 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன நாய் வளர்த்த திருடன் கதை

“மறுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பத்தொன்பதாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘தாலியறுத்தான் பட்டி, தாலியறுத்தான் பட்டி’ என்று ஒரு பட்டி உண்டு. அந்தப் பட்டியிலே ‘கன்னக்கோல் கந்தப்பன், கன்னக்கோல் கந்தப்பன்’ என்று ஒரு திருடன் உண்டு. அந்தத் திருடனாகப்பட்டவன் ‘கறுப்பன், கறுப்பன்’ என்று ஒரு நாயை வளர்த்து வந்தான். அது அவனை விட்டு ஒரு கணம்கூடப் பிரியாது; அதே மாதிரி அவனும் அதை விட்டு ஒரு கணம் கூடப் பிரியமாட்டான். ஆனால், திருடப்போகும்போது மட்டும் அவன் அதைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போவதில்லை; தன்னைத் தொடர்ந்து வந்தாலும் அதை விரட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டுத்தான் போவான்.

இப்படியாகத்தானே கந்தப்பனும், கறுப்பனும் இருந்து வருங்காலையில், ஒரு நாள் இரவு அவன் வழக்கம்போல் திருடப் போக, நாயும் வழக்கம்போல் அவனைத் தொடர்ந்து போக, ‘போடா கறுப்பா, போ!’ என்று அவனும் அதை வழக்கம்போல் விரட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டுப் போவானாயினன்.

போன இடத்தில் அவன் தன் வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வீடு திரும்ப, அது காலை போலீசார் இருவர் அவனைப் பார்த்து விட, அவர்களைக் கண்டதும் அவன் பாய்ந்து ஓட, அவனைத் தொடர்ந்து அவர்களும் பாய்ந்து ஓடுவாராயினர்.

சந்து பொந்து, மூலை முடுக்கெல்லாம் புகுந்து புகுந்து ஓடிய கந்தப்பன், கடைசியாக ஒரு புதருக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ள, போலீசார் அவனைக் காணாமல் நின்று சுற்றுமுற்றும் பார்க்க, அதுகாலை கந்தப்பனைத் தேடிக் கொண்டு வந்த கறுப்பனாகப்பட்டது அவன் பதுங்கிக் கொண்டிருந்த புதரை எப்படியோ கண்டுபிடித்து, வாலை ‘ஆட்டு, ஆட்டு’ என்று ஆட்டிக்கொண்டே அதைச் சுற்றிச் சுற்றி வர, அதைப் பார்த்த போலீஸ்காரர்களில் ஒருவன், ‘அந்த நாய் கந்தப்பனின் நாய்போல இல்லையா?’ என்று தன்னுடன் வந்திருந்த இன்னொரு போலீஸ்காரனைக் கேட்க, ‘ஆமாம், அவனுடைய நாயேதான்!’ என்று அவன் சொல்ல, ‘அப்படியானால் சந்தேகமேயில்லை; அவன் அங்கேதான் இருக்கிறான்!’ என்று இருவரும் அந்தப் புதரை நோக்கிப் பாய்ந்து செல்ல, ‘என் சோற்றைத் தின்று வளர்ந்த நாய், கடைசியில் என்னையே காட்டிக் கொடுத்துவிட்டதே!’ என்று கந்தப்பன் பொருமிக் கொண்டே மீண்டும் அங்கிருந்து ஓட எத்தனிக்க, அதற்குள் போலீசார் அவனை வளைத்துப் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்வாராயினர்.’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘நாய் வளர்த்தது யார் குற்றம்? திருடனின் குற்றமா, நாயின் குற்றமா?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘திருடனின் குற்றந்தான்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு… என்றவாறு… என்றவாறு…

- மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
தீபாவளிக்கு முதல் நாள் வந்திருந்த 'தீபாவளி மலர்'களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தீபா, அவற்றில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தைக் கண்டதும் 'களுக்' கென்று சிரித்து விட்டாள். காரணம் அந்த விளம்பரத்தில் அவளும் அவளுடன் நடித்த அமர்நாத்தும் ஒருவரை யொருவர் அணைத்தபடி நின்று ...
மேலும் கதையை படிக்க...
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன நஞ்சுண்டகண்டன் கதை "விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பன்னிரண்டாவது கதையாவது: ‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! நகரத்துக்குப் புதியவர்கள் யாராவது வந்து, 'எந்தத் தெரு எங்கே ...
மேலும் கதையை படிக்க...
25 ஜனவரி 1965 பின் இரவு; மணி மூன்று அல்லது மூன்றரைதான் இருக்கும். 'மூன்றாவது ஷிப்ட்' வேலை முடிந்து, நான் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சில்லென்று வீசிய காற்று, பாடாமலே என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தது. 'நடக்கட்டும் நடக்கட்டும், ...
மேலும் கதையை படிக்க...
எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா சொன்ன கார்மோகினியின் கதை "கேளாய் போஜனே! ஒரு நாள் காலை கடற்கரைச் சாலை வழியாக எங்கள் விக்கிரமாதித்தர் தம்முடைய காரில் தன்னந் தனியாக வந்துகொண்டிருந்தகாலை, கன்னி ஒருத்தி ஓடோடியும் வந்து காரை நிறுத்தச் சொல்ல, அவர் நிறுத்தி, ...
மேலும் கதையை படிக்க...
இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன பாதாளக் கதை இரண்டாம் நாள் காலை போஜனாகப்பட்டவர் பல்லைத் தேய்க்காமலே காபி குடித்துவிட்டு, காலைப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டுப் புரட்டிப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் குளித்து, ‘அடுத்த வீட்டுக்காரன் பூஜை செய்கிறானே!' என்பதற்காகத் தானும் ...
மேலும் கதையை படிக்க...
மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம் சொன்ன கோபாலன் கதை மூன்றாவது நாள் காலை போஜனாகப்பட்டவர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருத்துக் கொண்டே வந்த தம் தொந்தியைக் கவலையுடன் தடவிக் கொடுத்தவாறு உட்கார்ந்திருக்க, அதுகாலை யாரோ ஒரு பிச்சைக்காரன் 'என்னைப் பார்த்தீர்களா?’ என்பதுபோல் ...
மேலும் கதையை படிக்க...
முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச் சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பஸ்நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ‘நாக்கை வரட்டுகிறது; எங்கேயாவது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தேவலையே ‘ ‘ என்று சுற்று ...
மேலும் கதையை படிக்க...
......யார் வீட்டுக் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலும் சரி, "ராஜா!" என்று தம் மகனை உடனே அழைத்து விடுவார் ரங்கநாதம்-அன்றும் அப்படித்தான் நடந்தது. "ராஜா!" "ஏன் அப்பா!" "எதிர்வீட்டு ராதையைப் பார்த்தாயா?" "இதென்ன அப்பா! உங்களுக்கு வேறு வேலை ஒன்று மில்லையா? எப்போது பார்த்தாலும் இவளைப் பார்த்தாயா, அவளைப் ...
மேலும் கதையை படிக்க...
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணின் கதை "விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினேழாவது கதையாவது: ‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'வேலப்பன் சாவடி, வேலப்பன் சாவடி' என்று ...
மேலும் கதையை படிக்க...
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன முகமூடித் திருடர் கதை "விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபத்து மூன்றாவது கதையாவது: ‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'பஞ்சாபகேசன், பஞ்சாபகேசன்' ன்னு ஒரு பாங்கர் ...
மேலும் கதையை படிக்க...
குப்பையிலே குருக்கத்தி
நஞ்சுண்டகண்டன் கதை
கண்டெடுத்த நாட்குறிப்பிலிருந்து…
எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா
இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா
மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம்
இரக்கம்
மிஸ் நளாயினி-1950
பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணின் கதை
முகமூடித் திருடர் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)