Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நல்ல டாக்டர்

 

டாக்டர், என் ஒடம்பை செக் பண்ணுங்கோ”

என்னப்பா ஆச்சு?

நடந்தா கூடவே வருது டாக்டர்!

எதுப்பா?

ஒடம்புதான் டாக்டர்

அப்படியா?

அப்புறம்

கண்ணு மூடுனா தூக்கமா வருது டாக்டர்

கண்ணு துறந்தா

பார்க்கறதெல்லாம் பளிச்சுன்னு தெரியுது டாக்டர்

அப்படியா? என்னை தெரியுதா?

நல்லாவே தெரியுது டாக்டர்

சரி, யோசிக்க வேண்டிய விஷயம்தான்

காலைல பத்து இட்லி சாப்பிட்டா கூட மத்தியானம் ஒரு மணிக்கு பசி எடுக்குது டாக்டர்

பத்து இட்லி சாப்பிட்டுமா?

ஆமாம் டாக்டர் !

அடடே, விநோதமா இருக்கே

மத்தியாணம் இன்னா சாப்பிடுறீங்க

ஒரு வாழைஇலைல, சோறு, பொரியல் வறுவல், அப்பளம் ஊறுகாய் வைச்சு சாப்பிடுவேன்.

இவ்வளுவும் சாப்பிட்டு விட்டு என்ன செய்வீங்க?

சாப்பிட்டவுடன் தூக்கம் வரும், தூங்கிடுவேன் டாக்டர்

எப்ப எழுந்திருப்பீங்க ?

சாயுங்காலம் ஒரு ஆறு மணிக்கு எழுந்திருச்சு ஒரு டிகிரி காப்பி சாப்பிட்டு, கூடவே நொறுக்கு தீனியா முறுக்கு, தட்டை இதெல்லாம் சாப்பிடுவேன்.

சாப்பிட்டுட்டு என்ன செய்வீங்க..

தொலைக்காட்சியில சமையல் ரெசிபில்லாம் பார்ப்பேன் டாக்டர்

பார்த்துட்டு என்ன பண்ணுவீங்க

பார்த்த்தெல்லாம் செய்து கொடுன்னு மனைவிகிட்டே கேட்பேன்.

அவங்க செய்து கொடுப்பாங்களா?

”ஓ” செய்து கொடுப்பாங்க டாக்டர்.

வயசு என்ன ஆச்சு?

”ஐம்பத்தாறு” டாக்டர்

என்ன வேலை செய்றீங்க?

டாக்டர், அப்ப, காலையில எழுந்திருக்கிறது, குளிக்கிறது, பல் தேய்க்கிறது, சாப்பிடுறது, தூங்கறது” இதெல்லாம் வேலையில்லையா டாக்டர்

ஆமாம்..ஆமாம்.. அதெல்லாம் பெரிய வேலையாச்சே, கரெக்ட் நீங்க செய்யறது.

குட், பேஷன்ட்ன்னா இப்படித்தான் இருக்கணும்

நீங்க ஒரு எம்.ஆர்.ஐ, எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் இதெல்லாம் எடுக்கணும். கவுண்டர்ல ஒரு ஐயாயிரத்தைக் கட்டிடுங்க. மத்ததை ரிசல்ட் பார்த்த தும் என்ன வியாதின்னு சொல்லிடலாம்“

சரி டாக்டர்… வெளியே கிளம்பினார். பேஷன்ட்.

நர்ஸ், அந்த பேஷன்ட்டோட முழு விவரத்தையும் சேகரிச்சு வைச்சுக்கோ

இனிமே அந்த பேஷன்ட்டுக்கு ”நாந்தான் ”பேமிலி டாக்டர்” என்றார்

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பேஷன்ட்…இந்த ஏரியாவிலேயே..இவர்தான் நல்ல டாக்டர் என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்கு கிளம்பினார். 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை கேளுங்கள்: பொறுப்பு சரியாய் ஆறுமணிக்கு வந்தவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக ஜாடையாய்க் கூறியும் அவன் வராத்து, அவன்மீது நம்பிக்கை இழக்கச் செய்ததுடன், பொறப்பில்லாதவன் எனவும் நினைக்க வேண்டியதாயிற்று ஜானுவிற்கு. மணி ஏழாகிவிட்டிருந்த்து. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
“அந்த தெரு கடைக்கோடியில்  உள்ள ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் பதின்மவயது பையன்கள். அந்த ஆறு பேர்களில் முத்துமாணிக்கமும்  இருந்தான். “இன்னைக்கு மழை வரமாதிரி இருக்குடா” என்றான் “மழை வராதுடா….இது பாலுவின் பதில்… அந்த கூட்டத்தில்  இருவருமே எதிரெதினாவர்கள். முத்துமாணிக்கம் பாசீட்டீவ்வா ...
மேலும் கதையை படிக்க...
சங்கரன் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளா முகமோ அதைவிட பிரகாசமாய் இருந்தது. அவருக்கு சரி. சர்மிளாவுக்கு என்ன?மீனுவுக்கு முகத்தில் பயம் ஒட்டிக் கொண்டது.காரணம், மாமியாருக்கு... மாமியார் வருவதாய் தகவல்மாமியாரே குடைச்சல்., இதில் மாமியாருக்கு மாமியாரா, ஐயோ வேண்டவே வேண்டாம் ...
மேலும் கதையை படிக்க...
“என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீயே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்... அதே புன்னகைதான். அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
கிழக்கு திசையில் இருந்து ஒருவனும், மேற்கு திசையில் இருந்து ஒருவனும் அடர்ந்த காட்டின் ஒற்றையடி பாதையில் நடந்து வந்து, ஓர் இடத்தில் சந்தித்து கொண்டனர். "என்னப்பா?, இங்கே ஒரு துறவியின் குடில் இருக்கிறதாமே, ஒனக்கு தெரியுமா? என கிழக்கு திசையில் இருந்து வந்தவன் ...
மேலும் கதையை படிக்க...
பொறுப்பு
பந்தயம்
கதை
மகிழ்ச்சி
உபதேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)