தமிழ்நாட்டில் அதிகமாக தவறு செய்த ஒரு அரசியல்வாதியை உயிருடன் எமதூதர்கள் மேலுலகுக்கு அழைத்து செல்கின்றனர். விசாரணை நாள் வந்தது. எமன் தனது அரியனையில் கம்பீரத்தடன் அமர்கிறார்.
“ம் இன்று என்ன வழக்கு”
சித்ரகுப்தன் தலைதாழ்ந்து பவ்யமாக கூறுகிறார்.
“எமதர்மரே, இதோ இந்த மனிதன், தமிழ் மொழியை காக்கிறேன் என்ற பெயரில் பல தவறுகளை செய்துவிட்டான்”
“என்னென்ன தவறுகளை செய்திருக்கிறான்”
“98 சினிமா பேனர்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன, 120 கட்அவுட்கள் சாய்க்கப்பட்டுள்ளன, 14 சினிமா திரைகள் பிளேடு போடப்பட்டுள்ளன”
“பிளேடு என்றால் என்ன சித்ரகுப்தா”
“அது ஒரு கூரிய ஆயுதம் அரசே”
“சரி மேலும் கூறு”
“22 சினிமா தயாரிப்பாளர்கள் கடத்தப்பட்டனர், சினிமா எதிர்ப்புp பேரணிகள் என்ற பெயரில் டிராபிக் செய்ததில் 2 கர்ப்பிணிப் வெண்கள் உயிரை விட்டுள்ளனர் மற்றும் கலவர நேரங்களில் 8 ஆண்கள் உயிரை விட்டுள்ளனர்
“நிறுத்து சித்ரகுப்தா, என்ன எல்லாம் சினிமா சினிமா என்றே வருகிறது. தமிழ் மொழிக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது சித்ரகுப்தா”
“அரசே அதை நான் இவரிடம் பலமுறை கேட்டுவிட்டேன். ஒவ்வொரு முறையும் என்னை குழப்புகிறார். என்னை குழப்பிய வகையில் எழுத்து வேலை பெண்டிங் நிறைய உள்ளது. ஆகவே தாங்கள் இந்த வழக்கில் நேரடியாக ஆஜராகி உடனடி முடிவெடுத்து தண்டனை வழங்க வேண்டும்.”
“சரி இன்றிலிருந்து இந்த மனிதன் சுத்தமான தமிழ் மொழியிலேயே பேச வேண்டும். மாற்று மொழியை உபயோகித்துப் பேசினால், எண்ணெய் சட்டியில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடு”
“உங்கள் கட்டளை அரசே”
அரசியல்வாதியை எமதூதர்கள் பூமிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர்.
அரசியல்வாதி நேராக தன் வீட்டுக்குச் சென்றார். ஒரு கத்தியை எடுத்து தனது நாக்கை வெட்டிக் கொண்டார்
தொடர்புடைய சிறுகதைகள்
தி.மு. : காதலி கடிதத்தில்
உங்களை முதன் முதலில் பார்த்தபோது அது இளம் பச்சையா கரும் பச்சையா என்று தெரியவில்லை. எனக்கு எல்லாமே புதியதாகவும், இளமையானதாகவும், அதிகாலை பனித்துளியைப்போல் பிரெஷ்ஷாகவும், தெரிந்தது. என் கண்களை இமைக்க முடியாமல் போனதற்கு காரணம் கண்டுபிடிக்க ...
மேலும் கதையை படிக்க...
பரிதாபகரமாக பார்க்கப்படும் ஒரு பார்வைக்குப்பின்னர் பயங்கரத்தை பார்ப்பது இதுவே முதல் முறை....
அவனை சிறு வயதில் பார்த்த போது அவன் கண்களில் பரிதாபகரமான சிறு ஒளி தெரிந்தது. என்மீது பரிதாபமே இல்லையா என்பது போல் ஒரு பார்வை பார்ப்பான். அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக எதையோ ...
மேலும் கதையை படிக்க...
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும் என்று தோன்றவில்லை. வெகு சிரமமான அந்தகாரியத்தில் கடந்த ஒரு மணி நேரமாக கட்டாயத்தின் பேரில் ஈடுபட்டிருந்தார்கள். கடவுள் என்று ஒருவர் ...
மேலும் கதையை படிக்க...
இருவர் மட்டும் அங்கிருந்த அனைத்துக் கட்டுக் காவல்களையும் பொருட்படுத்தாமல் அத்துமீறி தப்பிச் செல்ல துணிவுடன் முடிவெடுத்தனர். அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. விஷயத்தை மதியம் வாக்கில் கேள்விப்பட்டு துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெகுநேரமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ஜன்னல் கம்பிகளுக்கு அந்தப்பக்கமாக இருந்து கொண்டு. இவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்து விட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கத்தின் படி அது உண்மைதான் என்று என்னால் குத்துமதிப்பாக கூற முடியும். இறந்து போன அந்த மனிதருடன் ...
மேலும் கதையை படிக்க...
ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான். அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல பெயர் எடுத்துள்ளான். இந்த நல்ல பெயர் என்ற ஒன்று இருக்கிறதே அதை வைத்துக் கொண்டு சவரம் கூட செய்ய முடியாது. ...
மேலும் கதையை படிக்க...
அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது.
“யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக் காட்டு”
ஒருநாள், தேவாலயத்தின் வெளியே, காம்பவுண்ட் சுவர் ஓரமாக ஒன்றுக்கு போய்க் கொண்டிருந்த அந்த சிறுவன் ஒரு நிமிடம் ஒன்றுக்கு போவதை நிறுத்திவிட்டு அந்த ...
மேலும் கதையை படிக்க...
இன்று
அவர் கூறினார்.
"சார்.... இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக.... இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள் ரசிச்சு கேட்கிறாங்களே அதுல சந்தோஷம் அதிகமா??...
எனக்கு பகீர் என்றது.
"உங்களுக்கு ஏழரை சனி பார்த்து நடந்து ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலை 5 மணிக்கு எனக்கு விழிப்பு வருகிறதென்றால் (நான் விரும்பாவிட்டாலும்) அதற்கு காரணம் அந்த சென்ட்வாசனைதான். நாசிக்குள் சென்று அடைத்துக் கொள்ளும், மூச்சு விட முடியாமல் விழித்துப் பார்த்தால். என் நண்பன் தனது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இரண்டாவது முறையாக (சென்டில்) ...
மேலும் கதையை படிக்க...
மிரட்டலான பார்வையுடன் அவர் இப்படிக் கூறியிருந்தார்.
"வடை சுடுவதற்கு சட்டியில் எண்ணெய்யை ஊற்றினால் அது காய்வதற்கு முன்னதாக என் பொண்ணு என் வீட்டில் இருக்கணும், அப்படி ஒரு மாப்பிள்ளைதான் எனக்கு வேண்டும்"
பெற்ற பெண்ணின் மீது மானாவாரியாக பாசம் வைத்திருக்கும் தந்தையை நினைக்கையில் பெருமிதமாகத்தான் ...
மேலும் கதையை படிக்க...
திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்
ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை
இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்