திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதியது:
என்னைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒருவருக்கு வரப்போகும் கஷ்ட நஷ்டங்களை அவருடைய ஜாதகத்தைப் பார்த்து விவரமாக என்னால் தெரிவிக்கக் கூடும். அநேக பெரிய மனிதர்களிடமிருந்து நற்சாட்சிப் பத்திரங்கள் பெற்றிருக்கிறேன்.
தாங்கள் ஒரு பெரிய முதலாளி என்று கேள்விப்பட்டு உங்களுக்கு இதை எழுதலானேன். உங்கள் ஜாதகத்தை உடனே அனுப்பி வையுங்கள். பலன்களைத் தெரிவிக்கிறேன்.
இப்படிக்கு,
வேலுசாமி ஜோஸ்யர்.
***
வேலுசாமிக்கு, திவான் பகதூர் குண்டப்பாவின் காரியதரிசி பஞ்சநதம் எழுதியது;
உங்கள் கடிதத்தை என் எசமானரிடம் காண்பித்தேன். தம் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்க அவர் விரும்பவில்லை.
இப்படிக்கு,
பஞ்சநதம்.
***
திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதிக்கொண்டது:
தங்கள் நண்பர் ஒருவர் மூலமாகக் கிடைத்த தங்கள் ஜாதகத்தை நான் பரிசோதித்துப் பார்த்தேன். சில எதிர்பாராத கஷ்டங்கள் தங்களுக்கு நேரிடக் கூடும் என்று தெரிகிறது. நீங்கள் விரும்பினால், உடனே தங்கள் ஜாதக பலன்களை விவரமாக எழுதியனுப்புகிறேன்.
கஷ்டங்களை நிவர்த்தி செய்ய எங்கள் காளியம்மன் தாயத்து உத்தரவாதமளிக்கக்கூடியது. பலன்களுக்காக ரூ.50-ம், தாயத்துக்காக ரூ.25-ம் உடனே அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
வேலுசாமி ஜோஸ்யர்.
***
வேலுசாமிக்கு, திவான் பகதூர் குண்டப்பா அவர்களின் காரியதரிசி பஞ்சநதம் எழுதியது:
உங்களைப் போன்ற ஜோஸ்யர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து போகிறவரல்ல எங்கள் முதலாளி. ஆகவே, உங்கள் ஜோஸ்யத்தையும், தாயத்தையும் நீரே வைத்துக்கொள்ளும்.
பஞ்சநதம்.
***
திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, வேலுசாமி எழுதியது:
தங்கள் காரியதரிசியின் கடிதம் பார்த்தேன். தங்களுக்குப் போட்டியாகத் தொழில் நடத்தும் சில விரோதிகள் உங்களுக்கு வரப் போகும் கஷ்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மிக ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஜாதக பலன்களுக்கு மட்டுமே ரூ.100 தருவதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கே தங்கள் ஜாதக பலன்களை அனுப்பி வைக்கிறேன். நிற்க. நான் தங்களுக்குக் கொடுத்த சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்.
வேலுசாமி ஜோஸ்யர்.
***
அகில இந்திய ஜோஸ்யப் புகழ் வேலுசாமிக்கு குண்டப்பா அனுப்பிய அவசரத் தந்தி:
சற்று முன் தங்களுக்கு ரூ.200 தந்தி மணியார்டர் செய்திருக்கிறேன். என் ஜாதக பலன்களைத் தயவுசெய்து என் விரோதிகளுக்குத் தெரிவித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். காளியம்மன் தாயத்தை உடனே அனுப்பவும்.
குண்டப்பா.
- ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. (இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.
தொடர்புடைய சிறுகதைகள்
"என்ன! பொங்கல் இனாமா? பொங்கல் இனாமும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே... போ! வேற வேலையே கிடையாதுபோல இருக்கு உங்களுக்கெல்லாம்! ஒரு தம்பிடி கூடக் கொடுக்க மாட்டேன்! ஆமா! ஏன் நிற்கிறே இன்னம்? போக மாட்டே?" என்று நடேசய்யர் தம் பற்களை நறநறவென்று ...
மேலும் கதையை படிக்க...
"அத்திம்பேரே!" என்று உரக்கக் கூப்பிட்டுக்கொண்டே மிகுந்த குதூகலத்துடன் ஓடி வந்தான், என் மைத்துனன் வைத்தி.
"போன காரியம் என்னடா ஆயிற்று? காயா, பழமா?" என்று நான் ஆவலோடு கேட்டேன்.
"பழம்தான், அத்திம்பேரே! ராமாமிர்தம் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தைப் பார்த்ததும் செட்டியாருக்கு ரொம்பத் திருப்தி! நாளைக்கே ...
மேலும் கதையை படிக்க...
"யார் அது?" என்று அதட்டிய ஒரு குரலைக் கேட்டு நடராஜன் அப்படியே திடுக்கிட்டு நின்றான். சில விநாடிகளில், புதர்களுக்குப் பின் ஒளிந்திருந்த பத்து முரடர்கள் திடீர் என்று வெளியே வந்து, நடராஜனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பெரிய குண்டாந்தடி ...
மேலும் கதையை படிக்க...
அவன் தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத பாதையில் நடந்துகொண்டிருந்தான். இந்தப் பாதை முன்பு சாதாரணமாகப் புழங்கிக்கொண்டிருந்த சாலையாக இருந்திருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. செடி கொடிகள் முழங்காலுக்குக் கொஞ்சம் கீழான உயரத்தில் நெருக்கமாக வளர்ந்து நடப்பதற்குச் சிரமமாக இருந்தது. வேறு ஏதேனும் நல்ல ...
மேலும் கதையை படிக்க...
"யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்காங்க, ஸார்! மிஸ் இந்திராவாம்; வேலை வேணுமாம், நம்ம ஆபீஸில்" என்று பியூன் வந்து தெரிவித்ததும், மானேஜர் குண்டுராவ், "ஐயையோ! ஒரு தடவை அனுபவப்பட்டது போதும்! இனிமேல் நம்ம ஆபீஸில் எந்த ஸ்திரீயையும் வேலைக்கு வைத்துக் கொள்ள ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள தங்கவேலு,
பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிட மிருந்து ஒரு சேதியும் வராததைப் பற்றி நீ ஆச்சரியப்பட்டிருக்கலாம். சென்ற பத்து வருஷங்களாக நான் இந்தியாவிலேயே இல்லை. போலீஸ§க்குப் பயந்து, தலைமறை வாக ரங்கூனில் இருந்தேன். நேற்றுதான் ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஆசாமியிடம் எனக்கென்னவோ சந்தேகம்தான் முதலில் உண்டாயிற்று. 'சர்வ சாதாரணமாக எங்கே கண்டாலும் மண்டிக்கிடக்கும் புல்லிலிருந்து நல்ல பாலைத் தயாரிக்க முடியும்' என்று அந்த ஆசாமி சொல்லும்போது, எப்படிச் சந்தேகம் உண்டாகாமல் இருக்கும்?
"அப்படி உங்களால் புல்லிலிருந்து பால் தயாரிக்கமுடியுமானால், இப்பொழுதே உணவு ...
மேலும் கதையை படிக்க...
"கணேசய்யர்வாள், எனக்கென்னவோ உங்களிடத்திலே ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டுடுத்து, சார்!"
இப்படி என்னிடம் வந்து சொன்னவர், எங்கள் ஆபீஸில் வேலை பார்த்து வந்த குமாஸ்தா குருசாமி. அவரோடு நான் பழகி யதே இல்லை என்றாலும், அவருக் குப் பணக் கஷ்டம் இருந்தது என்று ...
மேலும் கதையை படிக்க...
ஜனவரி முதல் தேதியன்று என் புது டைரியில் நான் இரண்டொரு குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த சமயம், "ஸார்" என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கணேசய்யர்! வருஷ ஆரம்பத்தில் நண் பர்கள் ஒருவருக்கொருவர் ஆசி கூறும் சம்பிரதாயப் படி, "புது வருஷம் ...
மேலும் கதையை படிக்க...
"இந்தாருங்கோ, உங்களைத் தானே! இந்த க்ஷணமே பக்கத்து வீட்டுக்காரர் கிட்டே போய், அவர் சம்சாரம் பண்ற அக்கிரமத்தைப் பற்றிச் சொல்லிச் சண்டை போட்டுட்டு வாங்கோ! இல்லாத போனா இந்த வீட்டிலே என்னாலே அரை நிமிஷம்கூடக் குடித்தனம் பண்ண முடியாது!" என்று மங்களம் ...
மேலும் கதையை படிக்க...
அதிர்ஷ்டசாலி! – ஒரு பக்க கதை
இப்படியும் நடக்குமா? – ஒரு பக்க கதை
பெயர் மாற்றம்! – ஒரு பக்க கதை
எதிர்பாராதது ! – ஒரு பக்க கதை
புல்லிலிருந்து பால்! – ஒரு பக்க கதை
பயங்கர மனிதன்! – ஒரு பக்க கதை