சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் -
‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்க மும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர்.
அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று -
ஏணிமரத்தின் மீது ஏறி சுவரில் ஆணி அடிக்கிறான் ஒருவன். மற்றொருவன் கீழே நின்று ஏணிமரததைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
சற்றுநேரம் அதிகமாகவே, கீழே நிற்பவன் அவனை “ஆணி இறங்கவில்லையா? கான்கிரீட் சுவரா? – ” என்ன? என்று கேட்கவே,
“மண் சுவர்தான். விரைவில் அடித்து விடுகிறேன்.” என்று சொல்வி, மீண்டும் வேகமாகச் சுத்தியால் அடிக்க ஆரம்பித்தான்.
ஏணியைப் பிடித்துக்கொண்டிருந்தவன், நன்றாக மேலே பார்த்துவிட்டு “கொண்டையை சுவரில் வைத்துக் கூர்ப்பக்கமாக சுத்தியால் அடிக்கிறாயே” என்று கோபித்தான். அதற்கு அவன் சிந்தித்துவிட்டு சொன்னான். “என்மேல் தப்பில்லை, ஆணி கம்பெனிக்காரன் கூர் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டைலையும் கொண்டை இருக்கவேண்டிய இடத்தில் கூர்மையையும் சிந்திக்காமல் வைத்துவிட்டான், சுவற்றில் இது எப்படி இறங்கும்” என்றான்.
அதற்குக் கீழே இருப்பவன் சொன்னான் “ஆணிக் கம்பெனிக்காரன் மீதும் தப்பில்லை, இந்த ஆணி எதிர்ச் சுவரில் அடிக்கிற ஆணி – ” என்று கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு பின்பு நன்றாக சிந்தித்து போய்ச் “இந்த சுவருக்கான ஆணியை வாங்கிக்கொண்டு வா” என்று அனுப்பினான்.
எப்படி? குறுக்குவழிச் சிந்தனைகள் பலவற்றுக்கு இது ஒன்று போதுமானது.
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள்.
பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி லாபம் எனக் கையெழுத்திட்டு - கடை நடந்து கொண்டிருக்கிறது.
மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். ...
மேலும் கதையை படிக்க...
ஐப்பசி கார்த்திகை அடைமழை பெய்து ஒய்ந்தது. அடுந்து மார்கழியில், ஓணான் கொடி ஒன்று முளைத்த வேகத்தில் பக்கத்திலுள்ள பனைமரத்தின்மேல் பற்றிப் படர்ந்து வளைந்து வளைந்து மேலே சென்று ஓங்கிப் படர்ந்தது.
தை மாதத்தில், பனைமரத்து மட்டைகளையும் ஒரு சுற்றுச்சுற்றி மேலும் வளைந்து வளர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
இட்லி, சட்னி, வேட்டி சட்டை
1982இல் தமிழக மந்திரி சபையில் இராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்தி கட்டாய பாடம் ஆக்கப்பட்டது. அதற்குத் தமிழ்நாடு முழுதும் கொதித்து எழுந்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் பெரியார் பல்லாரிச் சிறையில் இருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
“அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி என்பது இதன் பொருள்.
இரவு 11 மணி அடித்தும் உறங்காமல் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்த கணவனைப் பார்த்து, “ஏன் இப்படிப் புரண்டு புரண்டு ...
மேலும் கதையை படிக்க...
ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி—வெளியூருக்குப் புறப்பட்டனர்.
வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம்—திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.
இருவரும் யோசித்தார்கள். நம் இருவருக்கும் பூணூல்தான் இருக்கிறதே. இந்த ஊரிலே நம்மை யார் அடையாளம் கண்டு பிடிப்பது—திருமண வீட்டிலே போய்ச் சாப்பிடலாமே, சாப்பிட்டுவிட்டே ...
மேலும் கதையை படிக்க...
1929ல், அதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம்.
எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித் திருந்த எதிர்ப்பு நோட்டீசுகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் ...
மேலும் கதையை படிக்க...
வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஒடும்போது, அதில் அடித்துச் செல்லப்பட்ட நரி ஒன்று, “ஐயோ உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று சத்தமிட்டுக் கொண்டே போனது.
கரையின் அருகிலிருந்த ஒரு குடியானவன் அது கேட்டு ‘ஐயோ, பாவம்’ என்று இரங்கி நீந்திப் போய் நரியைப் ...
மேலும் கதையை படிக்க...
நாயை வளர்த்தான் வண்ணான். துணிகளைத் திருடாமல் காவல் காத்துவந்தது அது. ஒரு சமயம் திருட வந்தவனைக் கண்டு குலைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். இப்படியிருக்க.
சில நாட்களுக்குப் பின்,
வேறொரு ...
மேலும் கதையை படிக்க...
அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்கள் மேல் கருணை காட்டுமாறு அரசனை மிகவும் மன்றாடி வேண்டினர்.
மறுநாள் அரசன் குடிமக்கள் அனைவரையும் அழைத்து, “தாங்கள் கோரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்தேன். இன்று முதல் ...
மேலும் கதையை படிக்க...
ஒர் ஊரிலே பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வந்து வழிபாடு நடத்தினர். வேண்டுதலை நிறைவேற்ற மொட்டையடித்துக் கொண்டனர்.
அவர்களில் ஒருவன், தன் குடும்பத்துடன் மொட்டை அடித்துக்கொண்டு, திருவிழாவையும் கண்டுகளித்துவிட்டு ஊர் திரும்பினான். வழியிலே ...
மேலும் கதையை படிக்க...
முதலாளிக்குத் திறமை இல்லை!
மொட்டைத் தலைக்கு சுங்கம் உண்டா?