சப்தம் வரும் நேரம்

 

வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.

இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. ச‌மைய‌ல‌றையின் பின்ப‌க்கம் இருந்த அறையில் ட‌க், ட‌க் என்று அந்த ச‌ப்த‌ம். ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே அந்த‌ அறையைப் ப‌ய‌ண்ப‌டுத்துவ‌தில்லை. ச‌மீப‌ கால‌மாக‌, அந்த‌ அறையில் ஆள்ந‌ட‌மாட்ட‌ம் இருப்ப‌து கேட்டு அதிர்ச்சியுற்றான்.

“ஏங்க, ஏதாவ‌து காத்து க‌ருப்பா இருக்குமோ ?” என்று ப‌ய‌ந்த‌ ம‌னைவியை, “எதுக்கும் கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ அம்மா வீட்டில் இரு” என்று அனுப்பினான்.

‘எப்படியும் இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது. இருக்கும் நேரமும் மிகக் குறைவே. ஒரே அடி, அடி துல்லியமா தலையில் விழணும்… காத்தாவது கருப்பாவது …’ மனதைத் தயார் படுத்திக் கொண்டான் ந‌ரேன்.

பக்கத்து அறைக்குச் சென்று, சமயலறைக் கதவை மெல்ல சாத்தினான். இரண்டு வழிகள் இந்த அறைக்கு. ஒரு வழியை அடைத்தாயிற்று, மற்றொன்று அந்த அறையில் மற்றொரு புற‌ம் இருந்தது. அங்கு கதவு காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. கீற்று போன்ற‌ வெளிச்ச‌ம் க‌த‌விடுக்கில் தெரிந்த‌து.

‘காத்தாவ‌து க‌ருப்பாவ‌து என்று சொல்லிகிட்டாலும், நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்ட‌து’ ந‌ரேனுக்கு. டொக் டொக் என்ற‌ சப்த‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. மிக‌வும் க‌வ‌ன்த்துட‌ன், சிறிய‌ சப்த‌ம் கூட தான் எழுப்பாம‌ல், ச‌ப்த‌ம் வ‌ந்த‌ திசையை நோக்கி முன்னேறினான்.

கிட்டே நெருங்கி, ஒரே போடு … சில நொடிகளில் ச‌ப்த‌ம் அட‌ங்கி விட்டிருந்த‌து.

“ரொம்ப‌ நாளா டார்ச்ச‌ர் ப‌ண்ணுச்சே அந்த‌ எலி, அது காலி. நீ தைரியமா புற‌ப்ப‌ட்டு வ‌ர‌லாம்” என்று ம‌னைவிக்கு ஃபோன் செய்தான் நரேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
மாப்ள, இந்த வாரம் சனிக்கிழமை சாயந்திரம் நேரம் இருக்குமா ? என்ன‌டா விசேச‌ம் ? நாங்களும் இந்த ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆகுது. உங்க வீட்டுக்கு அத்தன தடவ வந்திட்டோம். வந்து சாப்பிட்டு தொல்லையும் கொடுத்திருக்கோம். இந்த சனிக்கிழமை நேரம் இருந்தா, "சந்துரு குடும்பத்தோட ...
மேலும் கதையை படிக்க...
தினம் பள்ளிக்கூடம் போகும் போதும், விட்டு வரும்போதும், அடுத்த தெருவில், அந்த வீட்டைக் கடக்கையில் மட்டும் சற்று நின்று நிதானித்து தான் செல்வான் சௌந்தர். நன்றாக கடைந்தெடுத்த கரும்அரக்குத் தேக்கில், வழு வழுவென்று வழுக்கைத் தலை போல பள பளத்து, வெளி உத்தரத்தில் ...
மேலும் கதையை படிக்க...
அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி ... உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில். "ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ...
மேலும் கதையை படிக்க...
குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட‌ போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென அறைந்து எச்சரித்தாள் ... "யாருகிட்ட மோதற, தண்ணிய போட்டாலும் தடம் மாறாம இருக்கணும் ?! அவன் தான் மனுஷன் !" என்ற‌வ‌ளை ...
மேலும் கதையை படிக்க...
'நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க' என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன். அந்த அறையில் ஒரு பத்து பதினைந்துபேர், இழுத்து விட்ட மெத்தையில் அமர்ந்து ஆளுக்கு ஒரு தலைகாணி போன்ற முன்டில் சாய்ந்தோ, விழுந்தோ அமர்ந்திருந்தனர். சங்க ...
மேலும் கதையை படிக்க...
எண்ணை வழிந்த முகமும், எடுப்பில்லாத உடையும், வழித்து சீவிய முடியும், கள்ளம் கபடமில்லாத பார்வையுமாய், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சில மாதங்களே ஆன செல்லமுத்து வாழ்வில் இப்படி ஒரு ஏகாந்தம் அடிக்கும் என அவனும் எதிர்பார்க்கவில்லை !!! அவனுடன் வேலை செய்வோருக்கோ, ...
மேலும் கதையை படிக்க...
கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும். போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் ...
மேலும் கதையை படிக்க...
அக்னி நட்சத்திரத்தின் பிரகாசமான ஒரு காலைப் பொழுது. ஆங்காங்கே, ஆடையின்றி எழுந்து நிற்கும் அழகிய செங்கற் கட்டிடங்கள் சில‌. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒவ்வொரு பெயர். அதில் வரிசையாய் அறைகள். தரைகளில் நாசி துளைக்கும் சிமெண்ட் வாசனையும், ஜன்னல்களில் மணக்கும் பெயிண்ட் வாசனையும், ...
மேலும் கதையை படிக்க...
பெய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம். நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள். ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல ...
மேலும் கதையை படிக்க...
"ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்." ... "என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா ? விட்டுட்டீங்களா ?" ... "ஆமா...நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு வருமானத்துக்காகப் பார்த்தா குடும்பம்ல செதஞ்சு போயிடுது.... அதான பார்த்தேன். உங்கள மீறி அவ போயிருவாளா என்ன ?" ... "ஆமா...மத்த ...
மேலும் கதையை படிக்க...
அபார்ட்மென்ட் எண் 26
ஊஞ்சல்
நீங்க தான் ஜட்ஜ் !
அன்புள்ள ஆனந்திக்கு…
பிடித்ததும் பிடிக்காததும்
சென்னைப் பெண்ணும் செல்லமுத்துவும்…
கட்டழகி
அகரம் என்றொரு (கையெழுத்துப்) பத்திரிகை
வீராப்பு
வட்டக் கரிய விழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)