கோபால் பாகவதரின் சமயோசிதம்

 

கோபால் பாகவதர் ஒரு முன்னுக்கு வந்துக் கொண்டு இருக்கும் இளம் ‘கர்னாடிக்’ சங்கீத வித்வான்.

அவருக்கு அவ்வப்போது ஒரு கல்யாணத்திலோ,இல்லை ஒரு ‘ஷஷ்டியப்த பூர்த்திலோ’ இல்லை ஒரு சின்ன சபாவிலோ பாட சான்ஸ் கிடைத்து வந்தது.அவரும் அங்கு எல்லாம் பாடி வந்து கொஞ்சம் சம்பாதித்து வந்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தார்.

வருடத்தில் “சங்கீத சீசன்” இல்லாமல் இருந்து வந்த ஒரு மாசத்தில்,திடீரென்று ஒரு நாள் கோபால் பாகவதருக்கு ரெண்டு மணி நேரம் கச்சேரி பண்ண ‘நாரத கான சபாவில்’ இருந்து அழைப்பு வந்தது.

கோபால் பாகவதருக்கு தாங்க முடியாத சந்தோஷம்.அவர் யோஜனைப் பண்ணீனார்.

’இந்த சபாவுக்கு நிறைய பாட்டு தொ¢ஞ்சவ எல்லாம் வருவா.நாம நன்னா பாடி நிறைய கைத் தட்டல்கள் வாங்கணும்.அப்போ தான் இது போல இன்னும் நிறைய சபாவில் எல்லாம் பாட சான்ஸ் கிடைக்கும்.அங்கே எல்லாம் நாம பாடி வந்து,நிறைய சம்பாதித்து ஒரு பொ¢ய ‘கர்னாடிக்’ வித்வான் என்று பெயர் வாங்க வேண்டும்.அந்த சபாவிலே தரும் சன்மான பணத்லே குறைவா செலவு பண்ண வேணும் அப்ப தான் கையிலே கொஞ்சம் பணம் நிக்கும்’ என்று எண்ணம் இட்டார்.

உடனே அவர் தம்பூரா போட வீட்டில் சும்மா இருந்து வரும் தன்னுடைய எண்பது வயது மாமா வை போனில் கூப்பிட்டு “மாமா,வர எட்டாம் தேதி ‘நாரத கான சபாவிலே’ கச்சேரி பண்ண என்னே கூப்பிட்டு இருக்கா.கச்சேரி சரியா ஆறு மணிக்கு ஆரம்பிக்கணும்.கச்சேரி முடிய எட்டரை ஒன்பது மணி ஆயிடும்.அதனாலே நீங்க ஆத்லே கொஞ்சம் ‘ஹெவியா’’டிபன்’ சாப்பிட்டு வாங்கோ.கச்சேரி முடிஞ்சி நீங்க ஆத்துக்கு வந்து வெறுமனே ஒரு டம்ளர் பாலை குடிச்சுட்டு படுத்துக்குங்கோ”என்று சொன்னதும் மிகவும் சந்தோஷப் பட்டு கோபாலிடம் “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குகோபால்.நீ சொன்னபடியே ‘ஹெவியா’’டிபன்’ சாப்பிட்டு வறேன்.கச்சேரி முடிஞ்சதும் ஆத்துக்கு வந்து வெறும னே ஒரு டம்ளர் பாலை குடிச்சுட்டு படுத்துக்கறேன்” என்று சொல்லி அவர் போனை ‘ஆப்’ பண்ணி னார்.மாமாவுக்கு சந்தோஷம் தாங்க வில்லை.உடனே தன் மணைவி ஜானகியைக் கூப்பிட்டு “கச்சேரி விஷயத்தை” சொன்னார்.

ஜானகியும் மிகவும் சந்தோஷப் பட்டாள்.

‘தம்பூரா போட ‘ப்ரியா’ மாமா கிடைச்சுட்டார்’ என்று சந்தோஷப் பட்டு,சுமாராக வயலின் வாசிக்கும் ஒரு வித்வானையும்,சுமாரான ஒரு மிருதங்க வித்வானையும் அந்த பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணினார் கோபால் பாகவதர்.

வழக்கமாக மத்தியானம் ஒரு ரெண்டு மணி தூங்கும் மாமா,எட்டாம் தேதி அன்றைக்கு தூங்காமல் தன் தம்புராவை எடுத்து வைத்துக் கொண்டு,தூசு தட்டி தம்புராவின் கம்பிகளை எல்லாம் சரி பார்த்துக் கொண்டார்.இதை எல்லாம் செய்து முடித்து விட்டு அவர் மணியைப் பார்த்தார்.அது மூனறை காட்டியது. ’நாம இனிமேல் தூங்கக் கூடாது’ என்று நினைத்து,அவர் ஒரு அரை மணி நேரம் போனதும் தன் மணைவியை அழைத்து “ஜானகி,இன்னைக்கு சாயங்காலம் ஒரு ஐஞ்சரை மணிக்கு நான் கோபால் பாட்டு கச்சேரிக்குப் போகணும்.நீ எனக்கு மூனு அடையும்,தொட்டுக்க அவியலும் பண்ணிடு.நான் சாப்பிட்டு விட்டு கச்சேரிக்குப் போறேன்.கச்சேரி முடிஞ்சதும் ஆத்துக்கு வந்து வெறுமனே பாலைக் குடிச்சுட்டு படுத்துக்கறேன்”என்று சொன்னார்.

சரியாக ஐந்தரை மணிக்கெல்லாம் மாமா அவர் மணைவி செய்து இருந்த கனமான மூனு அடையை,தொட்டுக்க கொடுத்த அவியலுடன் வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு,சூடா ஒரு காபி யும் குடித்து விட்டு,ஒரு ஆட்டோவில் தன் தம்புராவை எடுத்துக் கொண்டு ‘நாரத கான சபா’ வுக்கு சரியாக ஆறு அடிக்க ஐந்து நிமிஷம் முன்னாடி வந்து சேர்ந்தார்.

மற்ற வித்வான்களை எல்லாம் அழைத்துக் கொண்டு ‘நார கான சபாவுக்கு’ ஆறு மணிக்கு முன்னாலேயே வந்து சேர்ந்தார் கோபால் பாகவதர்.அவர் சபா ஹாலில் நுழைந்ததும் அந்த சபாவில் ஏ.ஸி.இருந்ததால் சபா பூராவும் ‘ஜில்’ என்று இருந்தது.கோபாலும் மற்ற வித்வான்களும் வசதியாக உட்கார்ந்துக் கொண்டார்கள்.

சபாவில் நல்ல ரசிகர்கள் கூட்டம் வந்து இருந்தது.கோபால் பாகவதருக்கு சந்தோஷம் தாங்க வில்லை.

அவர் தன் கச்சேரியை சரியாக அறு மணிக்கு ஆரம்பித்தார்.முதலில் சுவாமி பேர்லெ ஒரு பாட் டை பாடி விட்டு,பிறகு ரெண்டு சின்ன பாட்டுகளை பாடி முடித்தார்.

’சபாவில் இருக்கும் ரசிகர் கூட் டம் நமக்கு வெறுமனே சின்ன சின்ன பாட்டு தான் தொ¢யும் என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்களே’என்று நினைத்து கோபால் பாகவதர் அடுத்த பாட்டுக்கு பாட வேண்டிய ஆலாபணையை பாட ஆரம்பித்தார்.மிருதங்க வித்வான் அவர் ஆலாபணையை ரசித்துக் கொண்டு தலையை ஆட்டி வந்தார்.வயலின் வித்வானும் ஆலாபணைக்கு ஏற்ப தன் வயலினை வாசித்துக் கொண்டு இருந்தார்.

கச்சேரி ஆரம்பித்து ஒரு அரை மணி நேரம் ஆகி இருந்ததால் தம்புரா வாசித்துக் கொண்டு இரு ந்த மாமாவுக்கு அந்த சபாவின் ஏ,ஸி.குளிர்ச்சி,’ஹெவியாக டிபன்’ சாப்பிட்ட அசதி,மத்தியானம் தூங்காத இருந்தது எல்லாம் ஒன்று சேர்ந்து அவருக்கு தூக்கம் வந்து விட்டது.

அவர் தன் தலையை தம்புரா மேலேயே வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார்.

’நாம இந்த ஆலாபணையை முழுக்க பாடி விட்டு சபாவுக்கு வந்த ரசிகர்களிடம் கை தட்டுகள் வாங்க வேண்டும்’என்று ஆசை பட்டு விடாமல் ஆலாபணையை தொடர்ந்து பாடிக் கொண்டு இருந்தார் கோபால பாகவதர்.வெறுமனே தலையை ஆட்டி ரசித்துக் கொண்டு இருந்த மிருதங்க வித் வானும்,வயலின் வாசித்துக் கொண்டு இருந்த வித்வானும்,அடிக்கடி ‘பின்னாலே பாருங்க’ ‘பின்னா லே பாருங்க’ என்று கண் ஜாடை காட்டிக் கொண்டு இருந்தார்கள்.ஆனால் கோபால் பாகவதர் விடா மல் ஆலாபணையை பண்ணிக் கொண்டு இருந்தார்.

நேரம் ஆக, ஆக, மிருதங்க வித்வானின் “கண் ஜாடையும்,வயலின் வித்வானின் “கண் ஜாடையும்” அதிகமாகிக் கொண்டு வந்தது.

ஒரு நிமிஷம் கோபால் பாகவருக்கு ஒன்றும் புரியவில்லை.யோஜனைப் பண்ணிக் கொண்டே விடாமல் ஆலாபணையை பண்ணிக் கொண்டு இருந்தார்.பிறகு தன் காதுகளை தீட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்த போது,அவருக்கு “விஷயம்”புரிந்து விட்டது. பின்னாலே இருந்து தம்பூரா ”சத்தமே” வரவில்லை.மாமா தூங்கி விட்டு இருக்கார் போல இருக்கு என்பதை புரிந்துக் கொண்டார் கோபால் பாகவதர்.

தன் தலையை திருப்பிப் பார்த்து மாமாவை “எழுப்பினால்” சபையில் எல்லோரும் கவனித்து விடுவார்களே,தனக்கும் மாமாவுக்கும் அவமானமாக இருக்குமே,என்று நினைத்து கோபால் பாகவதர் “”சமயோசிதமாக”” ஆலாபணையை பாதியிலே நிறுத்தி விட்டு “கௌசல்யா சுப்ரஜா ராமா, பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே” என்கிற சுலோகத்தை “”உரக்க”” பாட ஆரம்பித்தார்.

அந்த சுலோகத்தை மாமா தினமும் காலையிலே கேட்டு பழக்கப் பட்டு இருந்ததால்,அந்த சுலோகத்தை கேட்டதும்,மாமா உட னே முழித்துக் கொண்டு மறுபடியும் “”தம்பூரா”” போட ஆரம்பத்தார்.

சபையிலே இருந்த அத்தனை ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தார்கள்.

தூங்கிக் கொண்டு இருந்த மாமாவை “”எழுப்ப”” கோபால் பாகவதர் “”கையாணட”” விதத்தை எல்லா ரசிகர்ளும் மிகவும் ரசித்தார்கள்.

கோபால் பாகவதர் மறுபடியும் ஆலாபணை தொடர்ந்து பாடி,அதற்கு உண்டான பாட்டையும் பாடி முடித்து விட்டு,அடுத்த பாட்டு பாடுவதற்கு முன்னால் ஒரு ஆயிரம் ரூபாயை “”மீத்த”” ஆசைப் பட்டு தன் எண்பது வயது மாமாவை “”தம்புரா போட”” அழைத்து வந்த “”தவறை”” எண்ணி வருந்திக் கொண்டு இருந்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
‘கனவு’ என்பது ஏழை,பணகாரன்,நல்லவன் கெட்டவன்,ஆண்,பெண்,சின்னவன்,பெரியவன், கிழவன் என்று பாகுபாடு பார்க்காமல் எலோருக்கும் நிறைய சந்தோஷத்தை தருகிறது, காலக்ஷபம் கேட்டு விட்டு வீட்டுக்கு வந்த பெரியவர் தன் கனவில் தான் சொர்க்கத்தில் இருப்பது போல ‘கனவு’ கண்டு சந்தோஷப் படுகிறார்.பத்து நிமிஷம் கூட தன்னோடு ...
மேலும் கதையை படிக்க...
விழுப்புரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் பூஜா.இவளுக்கு இரண்டு அண்ண ன்கள் இருந்தார்கள்.அப்பா ராமன் மின்சார வாரியத்தில் கீழ்நிலை கணக்கராக பணி புரிந்து வந்தார் அம்மா பார்வதி வீட்டை மட்டும் கவனித்து வந்தாள்.அவள் அதிகம் படிக்காததால் வேலைக்கெல்லாம் போகாமல் வீட்டில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஞாயிற்றுக் கிழமை. ஆறு வருடங்களாக வேலைக்குப் போகும் மகனும்,மூனு வருடங்களாக வேலைக்குப் போகும் மகளும் காலை வேளையிலே தான் வீட்டில் ‘ப்ரீ’யாக இருப்பார்கள். நானும்,என் மணைவியும் மற்ற நாட்களில் பேசி வந்த பிள்ளைகளின் ‘கல்யாணப் பேச்சை ஆரம்பித்தோம். “சுந்தர்,உனக்கு இருபத்தி எட்டு வயசாவுது.அம்மா சுதா ...
மேலும் கதையை படிக்க...
“அத்யா நோ தேவ சவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம் பரா துஷ்வப்னியம் ஸுவ விஸ்வானி தேவ சவித: துரிதானி ப்ராஸுவ யத் பத்ரம் தன்மே ஆஸுவா” என்று மந்திரத்தைச் சொல்லி பஞ்ச பாத்திர பாத்திரத்தில் மீதி இருந்து ஜலத்தை கையில் விட்டு,தான் உட்கார்ந்திருந்த இடத்தில் தெளித்து விட்டு, ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-1 வறுமைக் கோட்டிலே வாழ்ந்து வருவதே மிகவும் கஷ்டம்.அந்த வறுமை கோட்டின் கீழே வாழ்ந்து வந்த,வாழ்ந்துக் கொண்டு இருக்கும் குடும்பங்கள் எத்தனையோ உண்டு. அதில் ஒரு குடும்பம் தான் மணி ஐயர் குடும்பம்.அவர் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வந்தார்.பழைய மாம்பலத்தில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கணேசன் கண்ட கனவு பலிக்கலையே…
பூர்வ ஜென்ம வாசனை
யார் சொல்றது நியாயம்ங்க?
நான் துரோகம் பண்ணலே…
தீர்ப்பு உங்கள் கையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)