“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற பாடு இருக்கே, ஆதாங்க என்னால தாங்க முடியல!
“நான் அவளைத் தொடும் அடுத்த நொடியில்… என்னிடமிருந்து விலகி ஓடிறாள்“
இருங்க அவள் பேரைச் சொல்லையே, அதாங்க “சின்னப்பொண்ணு ”
“போங்க எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு, ஓரே வீட்டுல இருந்துகிட்டு. அடிக்கடி சேரக்கூடாதுன்னு சொன்னா யாருக்குத்தான் கோபம் வராதுங்க.”.
கோபத்தோடு கவலையும் கூடிகிட்டே போச்சு”
“ வீட்டிற்குள் நான் அவளை துரத்துவதும், அவள் விலகி ஓடுவதும். அவளுக்கு வேண்டுமானால், அது சுவாராஸ்யமாக இருக்கலாம், என்னால முடியல, அலுத்து போச்சு, ஒரு நாளா? இரண்டு நாளா… காலம் முழுக்க இதுதான்டா, ஒனக்குன்னா” நீங்களே சொல்லுங்க…இது நியாமா?.
இந்த கண்ணாமூச்சு விளையாட்டுக்கு ஒரு வழி கிடைத்தால் நன்றாக இருக்குமே, யாரைக் கேட்டால்…… என்று வெகுநேரம் யோசித்தேன். அப்போது எனக்கு “காலா” நினைவுக்கு வந்தார்.
“அப்புறமென்ன எடுத்தேன் ஓட்டம்…அவரிடம் சரணாகதி”
“குருவே “நாளெல்லாம் அவளுடன் கூடி சுகிக்க வேண்டும்” அதற்கு தங்கள் ஆசி வழங்க வேண்டும் ” தலை வணங்கி நின்றேன். வணங்கிய தலை நிமிர்ந்த போது..”குருவின் கண்கள் கோவைபழமாய் சிவந்திருந்தன.
“ அடேய் அற்ப பதரே…. கைக்கட்டி நிற்பவனே, அசை எழலாம், பேராசைக் கூடாதுடா? ”
கூடும் நேரமென்பது…. கட்டுப்பாட்டுடன் கண்ணியமாய் கடைப்பிடிக்க வேண்டியது. அதை தாறுமாறாய் கடைப்பிடித்தால் நீ கெட்டு விடுவாய், நீ கெட்டு விடுவதுடன் மட்டுமல்ல இயற்கைக்கு துன்பத்தை ஏற்படுத்தி விடுவாயடா”
“உன் பேராசை நிறைவேறாது….. ஆனால் ஆசையை மட்டும் வேண்டுமானால் நிறைவேற்ற ஆசி வழங்குகிறேன்… ஓர் நாளில் சிலமுறை மட்டுமே அதுவும் சிறிது நேரம் மட்டுமே சுகித்திருப்பாய்… ”ததாஸ்து” என்று ஆசி வழங்கினார்.
“வணங்கினேன் குருவே, தங்கள் ஆசி என்பாக்கியம்”என்று சொல்லிவிட்டு …..காலாவின் கட்டளையை நிறைவேற்ற கூடல் ஆசையோடு வேகமெடுத்தேன் ஆதாங்க “கடிகாரத்தின் பெரிய முள்ளான “ பெரிய பையன்“.
தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார்.
”அடே, அடே, வாப்பா இராஜேஷ்” என உள்ளே கூப்பிட்டு போனார்.
என்ன அங்கிள் வெளியே போகலையா? என்று கேட்டான் இராஜேஷ். அதற்கு ” வெயில் கொளுத்தறதால வீட்டை ...
மேலும் கதையை படிக்க...
காலை தினசரிகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தொழிலதிபர்; வேணுகோபாலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு தினசரியில் அவரது கம்பெனி உற்பத்தி திறனில் குறைந்த விட்டதாகவும், இதனால் பங்கு சந்தையில் கம்பெனி பங்குகளின் விலைகளும் சரியும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததே அதற்கு காரணம்.
மனதுக்குள் குறித்துக் கொண்டார்….. ...
மேலும் கதையை படிக்க...
”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு வைராக்கியமாய் இருந்த புண்ணியகோட்டிக்கு வந்த து சோதனை!
”பேய் காற்றுடன், பேய் மழையும் சுழற்றியடிக்க அவனின் வைராக்கியம் மழையில் கரைந்து வேறுவழியில்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன.
அந்த மாட்டிடம் இருந்து பால் கறந்து ஊருக்கெல்லாம் அளந்து கொடுத்து தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வது அவனது வாடிக்கை.
அப்படி வியாபாரம் செய்து ...
மேலும் கதையை படிக்க...
சங்கரன் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளா முகமோ அதைவிட பிரகாசமாய் இருந்தது. அவருக்கு சரி. சர்மிளாவுக்கு என்ன?மீனுவுக்கு முகத்தில் பயம் ஒட்டிக் கொண்டது.காரணம், மாமியாருக்கு... மாமியார் வருவதாய் தகவல்மாமியாரே குடைச்சல்., இதில் மாமியாருக்கு மாமியாரா, ஐயோ வேண்டவே வேண்டாம் ...
மேலும் கதையை படிக்க...
“இராமாயி, கதவை நல்லா முடிக்கோ!, யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!” எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லக்கண்ணு
”ஏனுங்கோ, அமாவாசை இருட்டுல எங்கே போறீங்க?”
”அமாவாசை இருட்டுதானே, நம்ம தொழிலுக்கு தோதா இருக்கும், அதான், சந்திரபுரிக்கு போறேன், அங்க போனா ஏதாச்சும் தேறும்” எனக் கிளம்பினான்.
”ஏன்தான் ...
மேலும் கதையை படிக்க...
“என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீயே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்... அதே புன்னகைதான்.
அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
“மிஸ்டர் ஷியாம், புதுசா நம்ம விளம்பர கம்பெனிக்கு சேர்ந்திருக்கீங்க, அதனால, நாம எடுக்கப் போற விளம்பரப் படத்துக்கான மாடலைப் போட்டோ எடுக்கணும். அதுக்கு ஐடியா வேணுமின்னா நம்ம சீனிவாசனைக் கேட்டுக்கோங்க” என்றார் நிறுவனத்தின் எம்.டி.
”ஐடியாவா? அவரிடமா? பத்தாவது படிச்சிட்டு காமிரா புடிச்சிட்டா, ...
மேலும் கதையை படிக்க...
ஒங்களை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டது எவ்வளுவு தப்புன்னு "இப்பத்தான் புரியுது" முகம் சிவக்க மாலா கத்தினாள்.
இங்க மட்டும் என்னா வாழுதாம், அதேதான் நீ என்னிக்கு வாழ்க்கைல வந்தியோ, அன்னில இருந்தே எனக்கு நரகம்தான்.
பி.பி எகிற குதித்தான் கணேசன்.
கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க, டிப்ன ...
மேலும் கதையை படிக்க...
“காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் உழைச்சு ஓடா தேயறோம்” மினிஸ்டர்; காட்டன்ல சட்டை போட்டுக்கிட்டு, துளியும் கசங்காம கார்ல வந்துட்டு போற முதலாளிக்கு நம்ம கஷ்டம் இன்னா தெரியும்” ஒரு பணியாளர் இன்னொரு பணியாளாரிடம் பேசிக்கொண்டிருந்ததை….. தொழில் நிறுவனத்தைச் சுற்றி பார்த்துக் ...
மேலும் கதையை படிக்க...
கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை
மிக்க நன்றி
ரசித்தேன்.