Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கார்டு மாறிப்போச்சி!

 

புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தார் ராம்குமார். நண்பர், உறவினர் கூட்டத்தைக் கூட்டிப் பெரிய விருந்து கொடுத்தார். வந்தவர்களும் வயிறார உண்டு, பரிசுப் பொருட்களும் வாழ்த்து அட்டைகளும் அளித்துச் சென்றார்கள்.

பிறகு, சாவகாசமாக அவற்றையெல்லாம் பிரித்துப் பார்த்துக்கொண்டு இருந்த ராம்குமார், ஒரு வாழ்த்து அட்டையைப் பிரித்துப் படித்ததும் திடுக்கிட் டார்.

‘உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! கடவுள் உங்களுக்கு மன நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கட்டும்!’ என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. கீழே குணசேகரன் என்ற கையெழுத்து.

ராம்குமார் உடனே குணசேகரனை செல்போனில் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னார்.

உடனே, ‘ஐயையோ!’ என்று அலறிவிட்டார் குணசேகரன்.

”குணா, ஏன் பதறுகிறீர்கள்? உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா? நீங்கள் என்ன, வேண்டுமென்றா எனக்கு இந்த கார்டைத் தந்திருப்பீர்கள்! ஏதோ கை தவறுதலாக

கார்டு மாறியிருக்கும். டேக் இட் ஈஸி!” என்றார்.

”ஐயோ! நான் அதற்காக வருந்தவில்லை. நான் இன்றைக்கு இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். ஒன்று, உங்கள் வீட்டு கிரஹப்பிரவேசம். மற்றொன்று, நண்பர் பிரகாஷின் மனைவியின் இறுதிச் சடங்கு. அவருக்குத் தர வேண்டிய கார்டு உங்களுக்கு வந்துவிட்டது. அதுகூடப் பரவாயில்லை. ‘உங்களின் நீண்ட நாள் கனவு இன்று பலித்திருக்கிறது. உங்களின் தீவிர முயற்சியாலேயே இது கைகூடி இருக்கிறது. வாழ்த்துக்கள்!’ என்று உங்களுக்குத் தர இருந்த கார்டை அவருக்குக் கொடுத்துத் தொலைத்துவிட்டேனே!” என்றார் குணசேகரன்.

- 06th ஆகஸ்ட் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
மதிகெட்டான்பட்டியின் அராஜகப் பேர்வழிகள் அத்தனை தப்பு தண்டாக்களையும் செய்துவிட்டு, ஊர் பூசாரியிடம் போய், தாங்கள் செய்த தப்பை விலாவாரியாகச் சொல்லி, 'ஐயோ! இப்படிச் செய்துவிட்டேனே!' என்று வருந்திக் குமைவார்கள். அவர் எண்பது வயது முதியவர். பழுத்த பழம். அவருக்கு இதனால் பெரிய தலைவலியாகிவிட்டது. ஊர் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு குட்டிப் பையன் சம்மர் கோர்ஸில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக அப்பாவுடன் நீச்சல் குளத்துக்குப் போனான். அப்பா அந்த கோர்ஸ் பற்றிய விவரங்களையும், பயிற்சி நேரம், கட்டணம் பற்றியும் அதன் நிர்வாகியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, பையன் ஆர்வ மிகுதியில் அந்த நீச்சல் குளத்தைச் ...
மேலும் கதையை படிக்க...
கீழே விழுந்துட்டேங்க!
ஏலியன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)