ஓர் இரவு

 

அப்பொழுது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரம். Group Study என்ற பெயரில் ஒவ்வொருவர் வீடாக மாறி மாறிபடித்தோம்.இல்லை அப்படி சொல்லிக்கொள்வோம். அன்று ரகு வீட்டில் என்று முடிவானது. வழக்கம் போல் இரவு ஒரு கடைக்கு சென்று மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தோம்.

ரகு மற்ற பைய்யன்களை போல Hosteliல் தங்காமல் வீடு எடுத்திருந்தான்.தனி வீடாக இருந்தது. சுற்றிலும் புறம்போக்கு நிலம் தான்.எப்படி தான் அப்படி ஒரு வீடை தேடி பிடித்தான் என்று தெரியவில்லை. ஆள் நடமாட்டம் அதிகம் கிடையாது. தனியாக இருப்பதென்றால் பயம் தான். ஆனால் மூன்று பேர் தங்கி இருந்தார்கள். Compound சுவர் மட்டும் முட்டி அளவுக்கு இருந்தது. அதை பார்க்கும் போது ஏன் அதை கட்டினார்கள் என்று தான் கேட்க தோன்றும்.

மொத்தமாக ஆறு பேர் அன்று இருந்தோம். நான்,சிவா,ரகு,ஹரி,வேனு,சங்கர்.எல்லோரும் வேறு வேறு branch. பிறகு எப்படி Group Study? படிக்கவா செய்தோம். ஒரு மணி வரை அரட்டை அடித்து விட்டு இன்னும் சில விஷயங்கள்.பிறகு தூக்கம்.

அன்றும் அது போல் சாப்பிட்டு விட்டு படிக்க(?) வந்தோம். அது தனி வீடாதலால் கீழே வீட்டை பூட்டி விட்டு மேல மொட்டை மாடி சென்று ஆரம்பித்தொம். முதலில் Cards விளையாடி கொண்டு இருந்தோம். பின்பு சிறிது நேரத்தில் மாற்றி மாற்றி ஓட்ட ஆரம்பித்தார்கள். வகையாக நான் அன்று மாட்டி கொண்டேன்.

(Nivetha matter). சபையில் சில நேர புகழாரம். அதன் பிரகு ரகு வாயை குடுத்து மாட்டினான்.இப்படியாக சில நேரம் சென்று கொண்டிருக்க கீழிருந்து தீடிரென்று கதவை தட்டும் சத்தம்.சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கும்மிருட்டு. சில்லென்று பனி காற்று வேறு. எல்லொருக்கும் சிறிது பயம். Police ஆக இருக்குமொ என்று சந்தேகம். திருட்டு பயம் அந்த இடத்தில் அதிகம் . இரவு ரோந்துக்கு அடிக்கடி வருவார்கள். எங்களிடம் Cards மட்டும் இருந்தால் பரவாயில்லை. இன்னும் சில பூஜை வஸ்துக்கள் இருந்ததால் யோசித்தொம்.

முந்திரிகொட்டை ஹரி தான் முதலில் எட்டி பார்த்தான்.

“டேய் யாருமே இல்லடா?”

எங்களுக்கு ஆச்சர்யம்.

ரகு,”நல்லா பாருடா. யாருமில்லமா கதவு மட்டும் எப்படி ஆடும்?”

ஹரி மீண்டும் கீழே எட்டி பார்த்து..”நல்லா பாத்துட்டேன் டா..யாருமே இல்ல”.

எல்லோருமே எழுந்து விட்டோம்.

வேணு ‘மூச்சா’ என்றான்.

“டேய் ஹரி வா. கீழே போய் பாக்கலாம்” என்று நானும் ஹரியும் கீழே சென்று பார்த்தோம். எல்லோருமே கீழே வந்து விட்டார்கள்.

“ரகு நீ பின்னாடி போய் பாருடா… ஹரியும் சிவாவும் அந்த பக்கம் போங்கடா”. வேணு ஒவ்வொருத்தராய் கைகாட்டி விட்டு என் பின்னாடி வந்து நின்றான்.

என்னமோ நான் தைரியமாக நிற்பது போல் அவனுக்கு தோன்றிருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவோ அவனுக்கு முன்னாடியே எனக்கு ‘சூச்சூ’ வந்து விட்டது. adrenalin கொஞ்சம் ஒவராக சுரந்து விட்டது.

வீட்டை மாற்றி மாற்றி சுத்தி வந்தோம்.

“ஹரி நான் பின்னாடி போய் பாத்தேண்டா. அங்க ஜன்னல தட்டுர மாதிரி சத்தம் கேக்குது டா.”

ஆமாடா ரகு. நானும்தான் sideல பாத்தேன். அங்கேயும் ஜன்னலேன்து சத்தம் வருது டா”.

முன் வாசலில் இப்படி கூடிகொண்டு குசுகுசுத்து கொண்டிருந்தோம். மீன்டும் வாசல் கதவு தட்டும் சத்தம்.

ஹரி,”டேய் பூட்டின வீட்ல எப்படி டா….உல்ல பேய டா?”

“வீடு பாக்கும் போதே சொன்னேன். இவ்ளோ தூரத்தில வேண்டாமுனு. டேய் ஏதாவது தற்கொலை கேஸு வீடுனு நினைக்கிறேன்.”

“சிவா சொல்றது கொரெக்ட் தான். நான் கூட கேள்வி பட்டேன் டா. இது கண்டிப்ப அது வேலை தான்.”

“சீ…விடுங்கடா. ஆவியாவது பிசாசாவுது. கொஞ்சம் யோசிச்சி பேசுங்கடா.”

இப்படி பேசி கொண்டிருக்கும் பொழுதே உள்ளே சாமான் உருட்டும் சத்தம் கேட்டது. ஒரு தம்ளர் விழும் சத்தமும் அதன் பின்பு தண்ணி குடிப்பது போன்ற சத்தமும் கேட்டது.

ஹரி அமைதியாக சொன்னான்.

“மாப்ள..உள்ள திருடன்தான் இருக்கான். ஆளுக்கு ஒரு கட்டை எடுத்துட்டு வாங்க.”

“டேய் வேணு நீ பின் வாசலுக்கு போடா. சிவா அந்த ஜன்னலுகு போ. நானும் ஹரியும் ஒரு தென்னை மட்டையை தேடி பிடித்து எடுத்து கொண்டு முன் வாசலுக்கு வந்தோம். ரகு சாவி எடுத்துகொன்டு திறக்க பக்கத்தில் சென்றான். அப்பொழுதும் தட்டும் சத்தம் கேட்டது.

“டேய் மச்சான் பயமா இருக்கு டா.”

“ரகு பயப்படாம திற டா.திறந்துட்டு விலகிக்க. நாங்க பாத்துக்றோம்.”

நடுங்கி கொண்டே பூட்டில் கையை வைத்தான். தொடர்ந்து இன்னும் சத்தம்.

“க்லுக்”. திறந்துவிட்டு டக் கென்று விலகி கொண்டான்.

நானும் ஹரியும் மட்டையுடன் கையை ஒங்க வீட்டிலிருந்து ஒரு வவ்வாள் வெளியே பறந்து சென்றது. பூட்டிய வீட்டில் மாட்டி கொண்டு கதவில் சிறகை வைத்து அடித்திருக்கிறது. அந்த சத்தம் எங்களுக்கு வேறு மாதிரி கேட்டு விட, அவனனவன் James bond ரேஞ்சுக்கு கிளம்பி விட்டோம்.

வேணு ஓரமாக நின்று கொண்டு முறைத்து பார்த்தான். ஏனொ அவன் பேண்ட் ஈரமாகி இருந்தது.

- ஆகஸ்ட் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு வளைந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். கைய்யில் ஒரு பழைய பை. அருகில் யாரும் இல்லை. எப்பொழுதும் வாய் ஏதோ ஸ்லோகத்தை ...
மேலும் கதையை படிக்க...
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம். உண்டு களைத்த ஒரு மதிய வேளை. ஸ்டிரெந்த் ஆப் மெட்டெரியல்ஸ் என்ற ஏற்கனவே மொக்கையான ஒரு சப்ஜக்டை படு மொக்கையாக்கி தாலாட்டு பாடி கொண்டிருந்தது, கோமளா மேடம். தீடீரென்று அப்பா வந்தார். ஏதோ பேசினார்.. ...
மேலும் கதையை படிக்க...
ஜூன் பத்து என்று நாள் கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் வாரா வாரம் செக் அப் போவது போல் அன்றும் சென்றிருந்தாள். அன்று சனிக்கிழமை . இரவு டிக்கட் புக் செய்யபட்டிருந்தது . அலுவலகத்தில் இருந்து சற்று முன்னதாக புறப்பட வேண்டும் . இதே ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் நடக்கும் ஒரு விசேஷத்திற்காக நண்பன் வீட்டிற்கு அழைக்க சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்ததினால் மெயிலில் அவனை விழித்துவிட்டு அவன் பெற்றோரை அழைப்பதற்காக ஈரோடு பயணமானோம். காலை ஐந்து மணிக்கே ரயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. வாடை காற்று வேறு. ...
மேலும் கதையை படிக்க...
1 மிகவேகமாக அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி கண்ணுக்கு தெரிந்து சுதாரிப்பதற்குள் ‘படார்’ என்று என் மீது இடித்து ஆறடிக்கும் குறையாமல் பறந்து மின்கம்பத்தில் மோதி....... கண் விழித்து பார்த்தேன். உடல் முழுவதும் வேர்த்திருந்தது. கெட்ட கனவு. இருட்டில் கட்டிலை தடவி ...
மேலும் கதையை படிக்க...
ஆச்சி
வாத்தியார் பெரியப்பா
ஒரு பிறப்பும் மறுபிறப்பும்….
இலையுதிர்ந்த மரங்கள்
ஒரு அதிகாலை மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW