எப்போது புத்தி வரும்?

 

நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த பதினாறாம் நாள் சடங்கு முடிந்த அன்று, அவரது விழக்கறிஞர் அவரது இல்லத்திற்கு வந்து, அவருக்குள்ள 24 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஆளுக்கு 12 ஏக்கர் வீதம் எழுதி வைத்திருக்கிறார் என்றும், அவற்றிற் குரிய ஆதரவுகளை இரு மனைவிகளிடமும் பிரித்துக் கொடுத்தார். அவரது பெரிய வீட்டைமட்டும் இளம் மனைவிக்கு எழுதி வைத்து இருக்கிறார் என்று கூறி, அந்த ஆதரவை மட்டும் இளம்மனைவியிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார் வழக்கறிஞர். அவ்வளவுதான்,

அடுத்த நாள் பெரிய மனைவி காமாட்சியம்மாளைச் சேரிந்தவர்கள் தான்தான் முதல் மனைவி; இந்த வீடு எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்றும், தனக்குப் பின்தான் இளம்மனைவிக்குப் போய்ச் சேரவேண்டும் என்றும் கூறி வழக்குத் தொடரச் செய்தார்கள். இளம் மனைவி மீனாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள் எதிர் வழக்காடினார்கள். நான்கு ஆண்டுகள் முடிந்தும் வழக்கு முடியவில்லை. காமாட்சியம்மாளுக்கு நான்கு ஏக்கர் நிலமும், மீனாட்சியம்மாளுக்கு மூன்று ஏக்கர் நிலமும் செலவானது. ஐந்தாம் ஆண்டில், “இறந்துபோன கணவன் உயில் எழுதி வைத்திருப்பதால் இளம்மனைவி மீனாட்சி யம்மாளுக்கே வீடு சொந்தம்” எனத் தீர்ப்பாகி விட்டது.

சும்மா விடுவார்களா காமாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள், “அவ்வீடு பரம்பரையாக வந்த வீடாதலால் நீலமேகம் பிள்ளைக்கு உயில் எழுதிவைக்க உரிமை யில்லை” என்று கூறி மேல் முறையீடு செய்தார்கள். வழக்கு மூன்று ஆண்டுகள் நடைபெற்றன. மேலும் இரண்டிரண்டு நஞ்சை நிலங்கள், கோர்ட்டு செலவிற்கும், வீட்டு செலவிற்கும், கூட்டாளிகளின் செலவிற்கும், இருவர்க்கும் செலவாயின.

இளம் மனைவி மீனாட்சியம்மாள் தன் சிறிய தாயாரை அனுப்பி, மூத்த மனைவி காமாட்சியம்மாளைப் பார்க்க விரும்புவதாக சொல்வி அனுப்பினாள். காமாட்சி யம்மாள் ஒடோடி வந்து தன் சக்களத்தியிடம் “என்னடி செய்தி” எனக் கேட்டாள். இளையவள் தன் கையிலிருந்த ஒரு நாளிதழைக் கொடுத்து, “அக்காள்! இதைப் படித்துப் சார்!” என்றாள்.

அந்த இதழில் வெளிவந்திருந்த செய்தி இதுதான்.

“இலண்டனில் ஒருவன் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அவன் கைக்குட்டைதவறிப் போப் கீழே விழந்து விட்டது. பின்னால் வந்தவன் அதை எடுத்து வைத்துக் கொண்டான். முன்னால் வந்த ஒருவன், “அது தன் கைக்குட்டை கொடு” எனக் கேட்டான். பின்னால் வந்தவனோ “கீழே கிடந்த கைக் குட்டையை நான்தான் கண்டெடுத்தேன். எனக்குத்தான் சொந்தம்” எனக் கூறினான். இருவரும் நீதிமன்றம் சென்று வழக்காடினார்கள். வழக்கிற்கு இருவருடைய சட்டைகளும், கால்சிராய்களும் விற்று செலவாகி விட்டன. ஆனால் கைக்குட்டை யாருக்குச் சொந்தம் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று இருந்தது.
காமாட்சியம்மாள், மீனாட்சியம்மாளிடம் கேட்டான், “என்னடி செய்வது” என்று,

மீனாட்சி : அக்கா! உனக்கு 6 ஏக்கர் நிலம் போச்சு; எனக்கு 5 ஏக்கர் நிலம் போச்சு இன்னும் வீடு யாருக்குச் சொந்தம் என்று முடிவாகவில்லை. நாம் மீதம் இருக்கும் நிலத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

காமாட்சி : அதற்கு என்னடி செய்வது?

மீனாட்சி : எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வீட்டின் நடுவில் ஒரு சுவர் எழுப்பி, நீ மேல் பாகத்தில் இரு நான் கீழ்பாகத்தில் இருக்கிறேன். அவரவர் நிலத்தை வைத்து அவரவர் சுகமாக வாழலாம்.

காமாட்சி : உன் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை; நான் ஒப்ப மாட்டேன்.

மீனாட்சி : அக்கா பிடிவாதம் பிடிக்காதே இன்னும் வழக்காடிக் கொண்டிருந்தால் இருக்கின்ற நிலமும் போய்விடுமே!

காமாட்சி : என் யோசனைப்படி நடப்பதானால் மட்டுமே இதற்கு சம்மதிப்பேன்.

மீனாட்சி : உன் யோசனை என்ன? காமாட்சி : வீட்டைப் பங்குபோடுவது கூடாது; நடுவில் சுவர் எழுப்புவதும் கூடாது. நம் இருவர்க்கும் மிஞ்சியிருக்கிற “ஏக்கர் நஞ்சை நிலத்தை ஒன்றாக வைத்துக் கொண்டு, நாம் இருவரும் ஒன்றாக சமைத்து உண்டு, ஒன்றாகவே இந்த வீட்டில் சேர்ந்திருந்து வாழவேண்டும் என்பதுதான் என் யோசனை.

மீனாட்சி : அக்கா! நீ ஏன் இதை முன்னதாகவே சொல்லவில்லை?

அதற்கு காமாட்சி, “எனக்கு இப்போதுதானே புத்தி வந்தது” என்றாள்.

கதை முடிந்தது. இவர்களுக்கு இப்பொழுதாவது புத்தி வந்து இருக்கிறது. நீதிமன்றங்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நம்மவரில் சிலருக்கு எப்போது புத்திவரும்.

- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று. மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்? நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று ...
மேலும் கதையை படிக்க...
வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஒடும்போது, அதில் அடித்துச் செல்லப்பட்ட நரி ஒன்று, “ஐயோ உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று சத்தமிட்டுக் கொண்டே போனது. கரையின் அருகிலிருந்த ஒரு குடியானவன் அது கேட்டு ‘ஐயோ, பாவம்’ என்று இரங்கி நீந்திப் போய் நரியைப் ...
மேலும் கதையை படிக்க...
மாதர் சங்கத்தில் பல பெண்கள் ஒன்றுகூடி சமையல் குறிப்புப் பற்றி அளவளாவினர். அப்போது, ஒவ்வொரு பெண்ணும் தத்தம் வீட்டில் புதுப் புதுப் பலகாரங்கள் செய்தது பற்றிக் கலந்துரையாடினர். அதிலே ஒரு பெண், “இன்றுதான் நான் சுத்தமான நெய்யிலே முருக்குச் சுட்டேன். மிகமிக அருமையாக இருந்தது” ...
மேலும் கதையை படிக்க...
பெரிய கடைவீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் மற்றொருவன் சென்று குறுக்கிட்டு, என்னவோ கேட்டான். அவர் நின்று, ‘பளிர்’ என்று அவன் கன்னத் தில் ஓங்கி அறைந்தார். அதைக்கண்ட மற்றவர்கள், ‘ஏன் ஐயா, அவரை அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘இவன் என்ன சாதி? ...
மேலும் கதையை படிக்க...
பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள். பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி லாபம் எனக் கையெழுத்திட்டு - கடை நடந்து கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை மாட்டிக் குளத்திலே மீன் பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான். குளத்தின் ஒரத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த தவசி, அவன்மேல் இரக்கம் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஒநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன : கிளி : ஒநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க? ஒநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன். கிளி : ஏன் வேறு ...
மேலும் கதையை படிக்க...
ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர் காஞ்சிபுரம் நாயனா பிள்ளை, பிடில் கோவிந்தசாமி பிள்ளை, மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை, கஞ்சிரா தக்ஷனா மூர்த்தி பிள்ளை, கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை, இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது - அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு ...
மேலும் கதையை படிக்க...
செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம். மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது. நரி - "காக்கா காக்கா - உன் குரல் எவ்வளவு அழகாக - இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது. காகம் ...
மேலும் கதையை படிக்க...
நான் ஒருமுறை பெங்களுர் சென்றிருந்தபோது, 95 வயதைத் தாண்டிய ‘சர். விசுவேசுவர ஐயா’ அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு கன்னட நண்பரின் துணையோடு பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம், என்னைப் “பொதுத் தொண்டு செய்பவர்” என்று நண்பர் அறிமுகப்படுத்தி ...
மேலும் கதையை படிக்க...
எது அறிவு?
உலகம் போச்சு
முறுக்கு சுட்டவள்
பெண் கேட்டல்!
முதலாளிக்குத் திறமை இல்லை!
கரையேறுதல்
கிளியும் ஓநாயும்
அக்கால இசையறிவு
செட்டியாரும் காகமும்
பொதுத் தொண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)