என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 17,003 
 

பாகிஸ்தானில் தற்சமயம் பரிதாபத்துக்குரிய இந்திய அணிக்கும் புஜபலபராக்கிரம். இம்ரான்கான் அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் யுத்தத்தை பேரறிஞர் பெர்னார்ட்ஷா பார்த்திருந்தால் இப்படித்தான் குரூரமாக விமர்சனம் செய்திருப்பார்.

“பதினோரு முட்டாள்கள் (பாகிஸ்தான் அணி) விளையாடுகிறார்கள். அதைப் பதினோரு முட்டாள்கள் (இந்திய அணி ) விளையாடாமல் வெட்டியாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.”

“இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் மீது படையெடுத்த முகலாய மன்னர்கள் யார் யார்?” என்ற கேள்வியை ஒரு சரித்திர மாணவனைக் கேட்டால் அவனும் தயங்காமல் “பாபர், அக்பர், இம்ரான்கான், ஸாகீர் அப்பாஸ், முதாஸர் நஸர்” என்று அடுக்கிக் கொண்டே போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .

கத்தியின்றி ரத்தமின்றி வெறும் பந்தையும் மட்டையையும் வைத்து நடந்த இந்த ஆறு பானிபட்’ யுத்தங்களில், காவஸ்கரின் குழு காட்டிய புறமுதுகு , தொலைக்காட்சியின் வாயிலாக நமக்கு அம்பலப்படுத்தப்பட்டது. கிரிக்கெட்டோ, ஹாக்கியோ எந்த விளையாட்டாக இருந்தாலும் நாம் உதைபடப் ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை போவது சர்வ நிச்சயம் என்கிற பட்சத்தில்…. பேசாமல் இந்திய அணி’ என்று ஒன்றைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டு கிரிக்கெட், ஹாக்கி, புட்பால், கபடி, பல்லாங்குழி போன்ற எந்த விளையாட்டுக்கும் தேர்வு செய்த இந்த அணியையே அனுப்பினால் அட்லீஸ்ட்’ செலவாவது மிச்சமாகும்… எதற்கு அனாவசியமாக தனித்தனியாக டீம்கள்?

பின்னால் வரப்போகிற புயலுக்கு முன் அமைதியாக லாகூரில்’ நடந்த முதல் டெஸ்ட் மாட்ச் சுபமாக டிராவில் முடிந்தது. இரண்டாவதாக நடந்த கராச்சி’ டெஸ்ட்டில் நாம் கபளீகரம் செய்யப்பட்டோம். லஞ்ச் – இடைவேளை டீ – இடைவேளை அல்லது டிரிங்க்ஸ்’ போன்ற – ஸாகீர் அப்பாஸ்’ மைதானத்தில் இல்லாத – நேரங்களைத் தவிர மற்ற சமயங்களில் அவரை அவுட் செய்வது துர்லபமாயிற்று. இந்திரஜித் வீசிய அஸ்திரத்தில் கட்டுண்டு மயங்கிக் கிடந்த இலக்குமணனைப் போல கபில்தேவ்’ ஏனோ செயலிழந்து காணப்பட்டார்.

ஸாகீர் அப்பாஸின் யானைப் பசிக்கு மதன்லால் தான் சோளப் பொரி . பந்தை’ மெதுவாக வீசுகிறார் என்ற ஒரே அறிகுறியை வைத்துத்தான் தோஷி’யை ஸ்பின் – பெளலர்’ என்று கூறலாம். மற்றபடி ஸாகீர் அப்பாஸைப் பொறுத்தவரை தோஷிக்கும் மதன்லாலுக்கும் வித்தியாசம் கிடையாது. மதன்லால் ஓடிவந்து பந்தை வீசுகிறார். ‘தோஷி’ நிதானமாக நடந்து வந்து வீசுகிறார், அவ்வளவுதான்.

தோஷி, விஸ்வநாத் போன்றவர்கள் இன்னமும் இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணி பார்ப்பதற்கு ஏதோ வயோதிகர்களைப் போஷிக்கும் புனர் வாழ்வு சங்கமாகத் தோற்றமளிக்கிறது.

கபில் தேவையும் மதன்லாலையும் வயோதிகக் கணவனாகப் பாவித்து ஒத்துழைக்க மறுத்த பிட்ச்’ (pitch) இம்ரான்கானின் ஆசை நாயகியாக மாறியது. லாகூர் டெஸ்ட்டுக்கும் கராச்சி டெஸ்ட்டுக்கும் இடையே இருந்த சில நாட்களில் இம்ரான்கான்’ பீம புஷ்டி’ லேகியத்தைக் காலையும் மாலையும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டிருக்க வேண்டும். மனிதர் ருத்திர தாண்டவம் ஆடினார். நமது கிரிக்கெட், இம்ரான் கானிடம் தறிகெட்டுப் போனது.

காவஸ்கர், விஸ்வநாத், வெங்க்சர்க்கார் …. ஒவ்வொரு நாயன்மார்களாக வந்து வந்து சென்று அறுபத்தி மூவர் உற்சவம் நடத்தினார்கள். கராச்சியில் நமக்கு டெபாஸிட்டே’ போய்விட்டது.

பைசலாபாதில் மறுபடியும் ஒரு மரண அடி. பாகிஸ்தானிலும் ஒரு ஹைதராபாத் இருக்கிறதாம். பூகோளம் தெரியாதவர்களுக்கு இது ஒன்றுதான் வித்தியாசமான விஷயம். ஸ்ரீகாந்த் முதல் பந்திலேயே பாகிஸ்தான் சேகரித்த மொத்த ரன்களையும் எடுக்க எங்களையா வயோதிகர்கள் சங்கம்னு சொன்ன…

ஒரே போடுதான்… சிக்ஸர் மாதிரி பறந்துருவே!

காவஸ்கர் னைத்து வீசுகிறார். இம்ரான்கான் ஸ்ரீகாந்தை மழலையாகப் வித்து மிட்டாய்’ கொடுத்து ஏமாற்றிவிட்டார். நமது ஸ்ரீகாந்த் பீல்டிங்கில் சூரப்புலி…. பந்தைப் பிடித்தவுடன் தை இருந்த இடத்திலிருந்து பெளலரிடம் வீசாமல் பந்தோடு வரிடம் ஓடிச்சென்று பந்தைக் கொடுத்து பெளலரிடம் ‘ரசீது ரங்கிக் கொள்ளும் அளவுக்கு ஸ்ரீகாந்திடம் பணிவு இருக்கிறது….

தே பாணியில் ஒரு ரன் அவுட்டும் செய்துவிட்டார்! அது சரி, விஸ்வநாத் ஏன் இப்படி ஓய்வு பெற்று விலகாமல் ழிச்சாட்டியம் செய்கிறார்….? கல்தோன்றி மண் தோன்றாத லத்தில் பிரமாதமாக விளையாடினார் என்ற ஒரே காரணத்துக்காக ன்னுமா குழுவில் வைத்துக்கொள்வது?

கிரிக்கெட்டை முட்டாள்கள் விளையாட்டுனு நான் சீரியஸாதான் சொன்னேன். வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கறவங்களையும் சேத்துதான்..!

‘ஐயா, விஸ்வநாத் அவர்களே! கற்பூரத்தை அணைத்துக் கூறுகிறோம். நம்புங்கள். நீங்கள் விலகும் காலம் வந்துவிட்டது. இந்திய அணி பீல்டிங் செய்யும் நேரங்களில் கிர்மானியின்’ அருகில் ‘மப்பாக’ நின்று கொண்டு நீங்கள் செய்யும் ‘ராம’ ஜபத்தை வீட்டில் இருந்து கொண்டு செய்யுங்கள். சில சமயங்களில் உங்களைத் தொலைக்காட்சியில் பெர்னார்ட்ஷா பார்க்கும் பொழுது மூப்பால் தளர்ந்த யயாதி’ மன்னனின் நினைவு வருகிறது.

இவ்வளவு துயரத்துக்கும் மத்தியில் வாராது வந்த மாமணியைப் போல வந்து ஓரளவு நமது மானம் காத்த மகாத்மா ‘மொகீந்தர் அமர்நாத் !

இந்த அழகில் நாம் கிரிக்கெட் விளையாட வெஸ்ட் இண்டீஸ் வேறு செல்லப் போகிறோம். இங்காவது பரவாயில்லை, ஒரு இம்ரான்கான்! மேற்கு இந்தியரிடம் நான்கு அதிவேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இம்ரான்கானோடு ஒப்பிடுகையில் அந்த நால்வரும் இம்ரான் கானின் ‘மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குச் சமமானவர்கள். இம்ரான்கான் பந்து வீச்சுப் புயல்’ என்றால், மேற்கு இந்தியர் நால்வருடைய பந்து வீச்சு, ஊழிக்காற்று.

“ஒருவேளை பாகிஸ்தானியர்கள் கொடுத்த மரண அடியை ‘வெஸ்ட் இண்டீஸ்’ குழுவினரும் நமக்குக் கொடுக்க ஆரம்பித்தால் இருக்கவே இருக்கிறது கைவசம் நாம் வெற்றி வாகை சூட ஒரு வழி.”

இந்திய அணியில் சிலுக்கு ஸ்மிதாவுக்கு ஒரு இடம் கொடுப்போம். சிலுக்கு ஸ்மிதாவின் கவர்ச்சியில் மயங்கி மெய்மறந்து ஸாகீர் அப்பாஸ் நிற்கும்போது சுலபமாக அவுட் செய்துவிடலாம். சிலுக்கு ஸ்மிதாவின் நினைவில் நிலைதடுமாறி இம்ரான்கான் மெதுவாக வீசும் பந்துகளை வெளுத்து வாங்குவோம்.

காவஸ்கர், கபில்தேவ் ஆடிச் சாதிக்க முடியாததை, சிலுக்கு ஸ்மிதாவின் கவர்ச்சி ஆட்டம் சாதிக்கும் – கவர்ச்சி மயமேவ ஜெயதே!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *