எனக்கும் ரெண்டும் வேணாம்…நான்…

 

எட்டாவது படிக்கும் போது ரமாவுக்கு ‘மலோ¢யா ஜுரம்’ அடுத்தடுத்து ரெண்டு தடவையாக யாக வந்ததால் அவன் வருடாந்திர பரிக்ஷகளை எழுத முடியவில்லை.அதனால் அவளை அவள் பெற்றோர்கள் மறுபடியும் எட்டாவது சேர்த்து படிக்க வைத்தார்கள்.

ரமாவின் அம்மா பார்வதி MBBS படித்து விட்டு ஒரு டாக்டராக (doctor) வேலை செய்து வந்தாள். ரமாவின் அப்பா ராமசாமி Law படிப்பு படித்து விட்டு ஒரு சட்ட வல்லுனராக வேலை செய்து வந்தார்.வேலையில் இருந்து இருவரும் தினமும் வீட்டிற்கு வர மணி எட்டாகி விடும்.

இருவரும் தினமும் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருப்பதால்,வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் ராமசாமியின் அப்பாவும் அம்மாவும் கவனித்துக் கொண்டு வந்தார்கள்.

இருவருக்கும் பேத்தி ரமா பேர்லே ரொம்ப ஆசை.செல்லமும் கூட.

பள்ளிகூடம் முடிந்து ரமா வீட்டுக்கு வந்ததும்,அவளுக்கு கா·பி ‘டி·பன்’ கொடுத்து விட்டு ‘டீவி’யில் பழைய காலத்து தமழ் சினிமாக்காளைப் பார்த்து வருவார்கள்.ரமாவும் ‘டி·பனை’ சாப்பிட்டுக் கொண்டு அந்த சினிமாவைப் பார்த்து வந்தாள்.ஆயா ரமாவைப் பார்த்து “ரமா,எங்களுக்கு வேலே ஒன்னும் இல்லே.நாங்க சினிமா பாத்து கிட்டு இருக்கோம்.நீ படிக்கற பொண்ணு.சினிமா பாத்தது போதும்.போய் உன் பாடங்களைப் படி”என்று மூன்று தடவை அதட்டி சொன்ன பிற்பாடு தான் ரமா வேண்டா வெறுப்பாக ‘டீவி’ பார்ப்பதை விட்டு விட்டு அவள் பாடங்களைப் படிக்கப் போவாள்.

ரமா ‘ட்வெல்த்’ பாஸ் பண்ணும் போது அவளுக்கு வயது பத்தொன்பது ஆகி விட்டது.

ராமசாமியும்,பார்வதியும் ரமா தமிழ் ‘மீடியத்தில்’ ‘ட்வெல்த்’ படித்து இருந்ததால்,அவள் ஆங்கிலம் சரளமாக படிக்க, பேசத் தெரிய வேண்டும் என்பதற்காக அவளை BA.சேர்த்து படிக்க வைத்தார்கள்.

ரமா ரெண்டு வருஷம் BA படித்து பாஸ் பண்ணினாள்.

அவளுக்கு வயது 22 ஐ நெருங்கிக் கொண்டு இருந்தது.

அவளுக்கு வருடாந்திர லீவு விட்டு இருந்தார்கள்.

பார்வதி ரமாவை MBBS சேர்ந்து படிச்சு தன்னைப் போல ஒரு’ டாக்டராக்க’ விரும்பினாள். ஆனால் ராமசாமிக்கோ ரமா Law படிப்பு படித்து விட்டு தன்னைப் போல ஒரு ‘லாயராக்க’ விரும்பி னார்.
இருவரும் மாறி மாறி அவரகள் ஆசையை ரமாவிடம் அடிக்கடி சொல்லி வந்தார்கள்.

ரமாவும் மறுப்பு ஒன்றும் சொல்லாமல் இருவா¢டமும் “சா¢””சா¢” என்று சொல்லி வந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

பார்வதியின் அண்ணனும்,அண்ணியும் அவர்கள் வீட்டிற்கு மதிய உணவுக்கு வந்து இருந்தார்கள்.

மதிய உணவு முடிந்த பிறகு எல்லோரும் சோ·பாவில் உட்கார்ந்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.பேச்சின் இடையே ராமாவை பற்றின பேச்சு வந்தது.

“என்ன ரமா,நீ BA பாஸ் பண்ணி முடிச்சுட்டே.மேலே என்ன படிக்கப் போறே”என்று கேட்டாள் பார்வதியின் அண்ணி.

உடனே பார்வதி “நான் ரமாவை MBBS சேர்ந்து படிக்க வச்சு என்னைப் போல ஒரு டாக்டரா க்க ஆசைப் படறேன்” என்று சொல்லி முடிக்கவில்லை ராமசாமி “இல்லே,இல்லே,நான் ரமாவை Law படிப்பு படிக்க வச்சு என்னைப் போல ஒரு ‘லாயராக்க’ ஆசைப் படறேன்” என்று சொன்னார்.

பார்வதியின் அண்ணி ரமாவைப் பார்த்து “என்ன ரமா,அம்மா ஆசைப் படறது போல,நீ ஒரு Doctor படிப்பு படிக்கப் போறயா,இல்லே அப்பா ஆசைப் படறது Law படிக்கப் போறயா.உனக்கு எதிலே ஆசை” என்று கேட்டாள்.

ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை.

ரமா பட்டென்று ”எனக்கு ரெண்டு வேணாம்.நான் ஒரு “Daughter- in- Law” ஆக ஆசைப் படறேன்” என்று சொன்னதும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம்-13 | அத்தியாயம் -14 | அத்தியாயம் -15 ”இந்த ப்ராப்லெத்தை சால்வ் பண்ண என்ன பண்ணலாம்ன்னு தான் யோசிச்சுக் கிட்டு இருந்தேன்”என்ரான் நடராஜன்.சற்று நேரம் கழித்து “நான் ஒரு ‘டூ வீலர்’ வாங்கிக் கிட்டா என்னங்க,நான் அதிலே சௌகரியமா ஆ·பீஸ் நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 அனந்த கிருஷ்ணன் MA, BL படித்து விட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு முண்ணனி வழக்கறிஞராக வேலைப் பார்த்து வந்தார்.அவா¢டம் ரெண்டு ஜூனியர் வக்கில்கள் வேலை செய்து வந்தார்கள். அனந்த கிருஷணன் காலையிலே எழுத்து குளித்து ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 “நான் சந்தேகப் பட்டது சரியா போச்சுங்க.அந்த வேலைக்காரி அம்மா தான் திருடிக்கிட்டுபோய் இருப்பாங்க. அவங்களுக்கு பதினெட்டு வயசிலும்,இருபது வயசிலும் ரெண்டு பையன்ங்க இருக்காங்கன்னு அந்த அம்மா எனக்கு வூட்டு வேலைக்கு வந்த அன்னைக்கு சொன்னாங்க.வரட்டும் இன்னைக்கு ...
மேலும் கதையை படிக்க...
பாகம்-1 லதாவும் ரவியும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து காதலித்து வந்தார்கள்.ஒருவரை மற்றொ ருவர் நன்றாகப் புரிந்துக் கொண்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேன்டும் என்று நினைத்து இரண்டு வருஷம் காதலித்த பின்பு தான் கல்யாணம் ஒரு நாள் பண்ணிக் கொண்டார்கள்.அடுத்த ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் - 3 அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த ராஜ்ஜைப் பார்த்து அங்கு இருந்த டாக்டர் “உங்க அப்பா உடம்பு ரொம்ப மோசம் ஆகி,இப்ப தான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் ...
மேலும் கதையை படிக்க...
குழந்தை
காலம் ரொம்ப மாறிப் போயிடுத்து…
குழந்தை
என்னாலேயே முடியலையே..அவனால் எப்படி..
சேற்றில் மலர்ந்த செந்தாமரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW