Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உயிருள்ள வரை உ(ப்பு)மா

 

”ஆ” அம்மாவென அலறினான்” எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில் …என்ன விழுந்த த்தோ… ஸ்மார்ட் போனில்… இலாகவமாய் விரல்களால் விளையாடினாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம்….. சைரன் ஒலி கேட்டது. ஏதோ, ஆம்புலன்ஸ் என்று பார்த்தால் போலிஸ் ஜீப் … காலோரம் உரசியபடியே நின்றது.

”ஏன்டா ! ராஸ்கல்!” பஸ் ஸ்டாப்பில நிக்குற பொம்பள புள்ளைகளை டீஸ் பன்றீயா? ஏறுடா வண்டியில” மிரட்டினார் சப்-இன்ஸ்பெக்டர்.

”ஸார் ! நா என்ன தப்பு செய்தேன்?”

”ஸ்டேஷனுக்கு வா சொல்றேன்.. கொத்தாக சட்டையைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினார்.

காலையில்தான் அயர்ன் பண்ண இஸ்திரி கடைக்கார்ரிடம் கொடுத்து..கையோடு வாங்கி போட்ட ஷர்ட் கசங்கியது. அது கூட பரவாயில்லே

காரணமே இல்லாமல் மனசைக் கலங்கடித்து விட்டாரே ! காரணம் என்னவாயிருக்கும்… யோசித்து கொண்டிருக்கும் போதே… ”மிஸ், மேடம், வர்றீங்களா? இந்த ராஸ்கல்தானே!” உறுதி செய்து கொண்டார்.

அப்பொழுதுதான் முழுதாய் அவளைப் பார்த்தான். “ச்சும்மா அரிஞ்சு வைச்ச ஆப்பிளை பிரிட்ஜில் வைத்து அப்போதுதான் எடுத்து வெளியே எடுத்து வைத்த து போல ஜிவ்வென்றிருந்தாள்.

”ஸார் ! நா எதிர்க்க பஸ் ஸ்டாப்பில நிற்குறபோது… இவர் என்னை கிண்டல் செய்தார். என்றாள்.

”ஐயோ, ஸார், நான் அம்மா”ன்னுதான் அலறினேன். கால்ல முள் குத்திக்கிச்சி ” என்றான்.

”ஏன்டா! மவுண்ட் ரோடுல ஏதுடா? முள்… முள்ளாய் நெஞ்சில் குத்தினார்.

ஜீப் கிளம்பும்போது… ”மேடம்! நீங்க ஆட்டோவுல ஸ்டேஷன் வந்திடுங்கோ… ஸ்டேட்மென்ட் வாங்கணும்.

ஸ்டேஸனில் நீளமான பெஞ்சில்… ஒரு ஓரமாய் உட்காரவைத்து… ”ஸாருக்கு… வேலை ஏதாச்சிலும் இருக்கா ? இல்லே இதுதான் வேலையா?”

”ஸார் !, நான் வேலைத் தேடிகிட்டு இருக்கேன்”

”அப்ப, சைட் அடிக்கறதும் ஒரு வேலைங்கறீயா?

எப்படி பேசினாலும்… கேட் போடுற ஆசாமிகிட்ட வய திறக்க கூடாதுன்னு… அமைதியாயிருந்தான்.

”என்ன மௌன விரதமா ,? ஸாமீ வாய துறக்காதோ?”

நினைச்சேன்… காலையிலேயே காலண்டர்ல தேதி கிழிக்கும்போதே…இன்னைக்கு சந்திராஷ்டம்ன்னு ஆதனால கஷ்டமன்னு போட்டிருந்த து.

”நெசமாயிடுச்சே”

ஆட்டோவில் வந்திறங்கியவளுக்கு ராஜஉபசாரம்….”வாங்க..மேடம், ஒக்காருங்க….ஏட்டய்யா, ரெண்டு கூல் டிரிங்கஸ்”சொல்லுங்க என்றார்

பராவாயில்லையே! விசாரணைகு வர்றவங்களுக்கு கூல் டிரிங்கஸ்லாம் தர்றாங்களே!.. நாக்கு அப்போதே அவனுக்க இனித்த து.

கூல்டிரிங்ஸ் வந்த து… ஸ்டரா போட்டு ஒண்ணு… சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒண்ணு… ஏட்டய்யா அவளுக்கு அன்பாய் வழங்கினார்.

கூல்டிரிங்ஸ் குடித்து விட்டு ஸார் விட்டுடாதீங்… வெள்ளைத்தாளில்… எழுதி..எழுதி…. பேப்பர் தீர்ந்த பின்… பரிட்சைக்கு எழுதும் மாணவி போல… பேப்பரைக் கேட்டு.கேட்டு எழுதினாள். கடைசியில் கையெழுத்தும் போட்டு கொடுத்தாள்.

”ஸார் ! மேடம் என்ன கம்ப்ளையின்ட் கொடுத்திருக்காங்கன்னு” தெரிஞ்சுக்கலமா?

தெரிஞ்சுக்கணுமா ? நீ பஸ் ஸ்டேன்ட் வந்து நின்னது முதல் இப்ப வரைக்கும் விலாவரியா ஒண்ணு விடாமா எழுதிக் கொடுத்துருக்காங்க. நிச்சயமா மூணு மாசம்தான்ஃ

கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தன.

”ஏட்டய்யா ! இந்த ஆளை லாக்கப்ல வை” குரல் கொடுக்க ,ஏட்டு… ”வாய்யா, மன்மத ராசா” கூப்பிட எழுந்து நடக்க ஆரம்பித்தான்… காலை அழுத்தி வைக்க முடியாமல் சாய்த்து சாய்த்து நடந்தான்.

சாய்வான பார்வை பார்த்து சைட் அடித்த தாக கம்ப்ளெயின்ட் கொடுத்த பைங்கிளி… ”சப்-இன்ஸ்பெக்டர் ஸார், ஒரு நிமிஷம்ன்னு கிட்டே போய் மெதுவாக ஏதோ சொன்னாள்.

”ஏட்டு, அந்த ஆளை வெளியெ விடு…”டேய், இனி அங்கன, இங்கன பார்த்தேன் தொலைச்சிடுப்பூடுவேன்” என்று வெளியே அனுப்பினார்.

வெளியேறும் போது…”பைங்ளி பார்த்த து.

”ஸார், தப்பா நினைச்சுக்காதீங்க, ஏதோ என் காதில தப்பா விழுந்துட்டுது.

”என்ன விழந்த து?”

”ச்சீ! போங்க வெட்கமாயிருகு”

”என்ன !”அம்மா” என்றுதானே அலறினேன்.

அவ காதுல என்னவா விழுந்திருக்கும். அராய்ச்சியில் மனம் அலைபாய் ”மிஸ்டர் இந்த கனவெல்லாம் வேண்டாம்” அதட்டினாள்.

”சரி மேடம், நா கிளம்புறேன்”

”எங்க கிளம்பறீங்க, ஒங்ளால ஆட்டோ செலவு இப்ப போறதுக்கு ஆட்டோ செலவு குடுத்திட்டு வேணா போங்க… வேணுமின்னா ஷேர் பண்ணிட்டு நீங் றங்க வேண்டிய இடத்தில இறங்கிக்கோங்க” என்றாள்.

”கூப்பிட்டவுடன் வருவது அந்த கண்ணன் கூட இல்லே” இந்த ஆட்டோதான்” கமெண்ட் அடிக்க ..”களுக்கென சிரித்தாள்.

ஆட்டோவில் இன்னும் இரண்டு பேர் ஏற… இறுக்கி..நெருக்கி உட்கார்ந்தார்கள்.

”தூரத்தில் ”அம்மா”வென்று அலறியதற்கு பனிஷ்மெட்… பக்கத்தில உரசுவது பொல உட்காருவதற்கு..”? யோசித்தான். ஆட்டோ பறந்து இறங் வேண்டிய இடத்தில் இறங்கினான்.

“உறாய் ! கைக்காட்டி விட்டு பறந்தாள் பைங்கிளி”

மாலை வீட்டில்… டேய், நாளைக்கு நாம பொண்ணு பார்க்க போறோம்” என்றாள் அம்மா.

மறுநாள் தடபுடலாய் கிளம்பி… பெண் வீட்டைத் தேடிப் போய்… பெண் பார்க்கும் படலத்தில் பார்த்தால்… ”கம்ப்ளெயின்ட் கொடுத்த பைங்கிளி” ””ஆ”அம்மா”வென அலறினான்.

”என்னடா ஆச்சு ? அம்மான்னு அலறுகிற”ன்னு அம்மா டேடக, ஒண்ணுமில்லேம்மா சமாளித்து… ஒரு வழியாய்…சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு… ”என்னம்மா? மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா? ன்னு அவளோட அப்பா கேட்டார்.

”அப்பா ! கொஞ்சம் பேப்பர் கொடுங்க! ” என்றாள்.

”ஐயோ, மறுபடியும் கம்ப்ளயிண்டா? உள்ளுக்குள் கலக்கம்.

பேப்பரில் எழுத ஆரம்பித்தாள். ஐயோ இது ஒரு வகையான கிறுக்குத்தனமோ.. கிறுக்கி பார்ப்பதில் எ ன்ன ஆனந்தமோ கலங்கினான்.

ஒரு வழியாய் காகித த்தை கையில் கொடுத்தாள் ..அதில் அவளுக்கு என்னவெல்லாம் தெரியாது என்பதைப் பட்டியலிட்டிருந்தாள்.

”தெரியும்ன் என்பதாய்…கடைசியாய் ஒரே வார்த்தை…அது எனக்கு செய்ய தெரியும் ..உப்புமா! இப்படிக்கு… உமா” என்ற கையெழுத்திட்டிருந்த து.

”ஐயோ, அப்பா ! என்று இப்போது அலறினான்.

”என்னடா ஆச்சு! அப்பா அலறினார்.

”இல்லேப்பா… பொண்ணுகு சமையல் எதுமே செய்ய தெரியாதாம்… உப்புமா மட்டும் நல்லா கிண்டுமாம்” என்றான்.

“உறா…உறா..உறா..”அந்த வீடே அதிரும்படி சிரித்தார் அப்பா. டேய் இது குடும்ப தோஷம்மடா, ஒங் அம்மாவும் இதே கேஸ்தான் கல்யாணத்தப்ப.

”சரி கட்டிக்க, இதுதான்டா பேர் சொல்லும் பிள்ளைம்பாங்க” என்றார்.

”இதோ பாருங்க…டிபன் பாக்ஸல உப்புமாதான் இருக்கு… உயிருள்ள வரை… உமா கட்டிக் கொடுத்த உப்புமாதான்… வாழ்க்கைன்னு ஆயிடுச்சு… அதுக்காக நான் கலங்கிட்டேனா? இல்லேயே, டேக் இட் ஈஸி” என்று ஜாலியாக பஸ்ஸில் பயணித்தபடி வேலைக்கு போய்க் கொண்டிருந்தான் இக்கதையின் கதாநாயகன்.. சங்கர். 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை கேளுங்கள்: https://youtu.be/YfBTUAOdslM பசுமை நிறைந்த அழகிய கிராமம். புழுதி பறக்கும் மண்சாலை வசதி இருந்தது. புழுதி பறக்கும் மண்சாலையைத் தாண்டினால் சிறிய மலைக்குன்று ஒன்று இருந்தது. அந்தக் குன்றின் மேலே ஏறுவதற்கு சரியான பாதை இல்லை! பாதையில்லாததால். மலைக்குன்றில் மனித நடமாட்டம் இல்லாமல் அமைதியாய் ...
மேலும் கதையை படிக்க...
“காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் உழைச்சு ஓடா தேயறோம்” மினிஸ்டர்; காட்டன்ல சட்டை போட்டுக்கிட்டு, துளியும் கசங்காம கார்ல வந்துட்டு போற முதலாளிக்கு நம்ம கஷ்டம் இன்னா தெரியும்” ஒரு பணியாளர் இன்னொரு பணியாளாரிடம் பேசிக்கொண்டிருந்ததை….. தொழில் நிறுவனத்தைச் சுற்றி பார்த்துக் ...
மேலும் கதையை படிக்க...
முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும். நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல் வரவும். பிட் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. கூட்டம் நடத்தும் அரங்கில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த து. தலைமை விருந்தினராக “டெங்கு மன்ன ன்64-ஆம் கொசு” கம்பீரமாக மூக்கை ...
மேலும் கதையை படிக்க...
கிழக்கு திசையில் இருந்து ஒருவனும், மேற்கு திசையில் இருந்து ஒருவனும் அடர்ந்த காட்டின் ஒற்றையடி பாதையில் நடந்து வந்து, ஓர் இடத்தில் சந்தித்து கொண்டனர். "என்னப்பா?, இங்கே ஒரு துறவியின் குடில் இருக்கிறதாமே, ஒனக்கு தெரியுமா? என கிழக்கு திசையில் இருந்து வந்தவன் ...
மேலும் கதையை படிக்க...
“சிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார்“ “தம்பூரா இசையோடு “நாராயணா, நாராயணா, நாராயண” நாரதரின் குரல் ஒலிக்கிறது சிவபெருமான் தியானத்திலிருந்து எழவில்லை “விடாமல் தம்பூராவை மீட்டிக் கொண்டிருக்கிறார்..கடைசியில் கண் விழிக்கிறார் சிவபெருமான். “என்ன நாரதரே சேதி எதுவும் உண்டோ?“ “ஐயனே! நீங்கள் இந்த இடத்தில் தொடர்ந்து தியானத்தில் இருக்க வேண்டுமென்றால், இருப்பிட ...
மேலும் கதையை படிக்க...
அன்னமும் காகமும்
புன்னகை
டெங்கு மன்னன் 64-ம் கொசு இராஜ்யம்
உபதேசம்
ஐயனுக்கே ஆதார் !

உயிருள்ள வரை உ(ப்பு)மா மீது 2 கருத்துக்கள்

  1. Rathinavelu says:

    உப்பு சப்பு இல்லாத தப்பு மா

  2. தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதற்கு மிக்க நன்றி. வளரும் எழுத்தாளர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும் என்பதே என் மேலான கருத்தாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)