இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா

 

இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா சொன்ன ஏமாற்றப்போய் ஏமாந்தவர்கள் கதை

“கேளாய், போஜனே! ஒரு நாள் கையெழுத்து மறையும் நேரம்; மிஸ்டர் விக்கிரமாதித்தர் கடற்கரையில் உட்கார்ந்து, நீலக் கடலைக் குனிந்து முத்தமிடும் நீல வானை நோக்கிக்கொண்டிருக்க, அதுகாலை கையில் ‘டிரான்ஸிஸ்ட’ ருடன் இரு மாணவர்கள் அவரிடம் வந்து, ‘இந்தி டிரான்ஸிஸ்டரை இங்கே வைத்துவிட்டுப் போகிறோம்; கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்கிறீர்களா? கடலில் குளித்துவிட்டு வந்து எடுத்துக்கொள்கிறோம்!’ என்று சொல்ல, ‘அதற்கென்ன, வைத்துவிட்டுப் போங்கள்!’ என்று அவர் சொல்ல, அவர்கள் தங்களுடைய ‘டிரான்ஸிஸ்ட’ரை அவருக்கு அருகே வைத்துவிட்டுப் போவாராயினர்.

அவர்கள் தலை மறைந்த சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ்காரருடன் வந்த யாரோ ஒருவர், ‘காணாமற்போன என்னுடைய டிரான்ஸிஸ்டர் இதுதான், ஐயா! எவ்வளவு பெரிய மனிதர் எப்படிப்பட்ட காரியம் செய்திருக்கிறார், பார்த்தீர்களா?’ என்று விக்கிரமாதித்தரைச் சுட்டிக் காட்டிச் சொல்ல, ‘இந்தக் காலத்தில் பெரிய மனிதராவது, சிறிய மனிதராவது? எல்லாம் வெறும் வேஷம்! திருடுவதையும் திருடிவிட்டு இவர் எவ்வளவு தைரியமாக இங்கேயே உட்கார்ந்திருக்கிறார், பாருங்கள்!’ என்று போலீஸ்காரர் சொல்ல, விக்கிரமாதித்தர் திடுக்கிட்டு, ‘யாரைத் திருடன் என்கிறீர்கள்?’ என்று கேட்க, ‘உங்களைத்தான்! எழுந்து வாருங்கள் ஸ்டேஷனுக்கு!’ என்று போலீஸ்காரர் அவருடைய கையைப் பற்ற, விக்கிரமாதித்தர் எழுந்து, ‘ஏண்டா சிட்டி, ஏண்டா பாதாளம்! நாளை நடக்கப்போகும் மாறுவேடப் போட்டியில் கலந்துகொள்ளப் போகும் நீங்கள் போயும் போயும் என்னிடம் வந்துதானா உங்கள் ஒத்திகையை நடத்திப் பார்க்க வேண்டும்?’ என்று அவன் பற்றிய கையைத் தட்ட, ‘இந்த இருட்டில்கூட அது எப்படித் தெரிந்தது உங்களுக்கு?’ என்று அவர்கள் வியக்க, ‘அதுகூடத் தெரியாவிட்டால் நீங்கள் என்னிடம் வேலை செய்து என்ன பிரயோசனம்? நான் உங்களை வைத்து வேலை வாங்கித் தான் என்ன பிரயோசனம்?’ என்று விக்கிரமாதித்தர் சிரிக்க, அவரை ஏமாற்ற வந்த இருவரும் ஏமாந்து போய்த் திரும்புவாராயினர்.”

இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சுந்தரா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் இந்திரா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க… காண்க…..

- மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
எங்கள் வீட்டுக்கு எதிரில்தான் அந்த மாரியம்மன் மைதானம் இருந்தது. ஒரு பெரிய மனிதருக்கு ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துக் கொடுத்ததன் பயனாக அந்த மைதானத்தை மாரியம்மன் ‘சன்மானமாகப் பெற்றிருந்தாள். சாதாரண மனிதர்களிடமிருந்து எந்தக் காரியத்தைச் சாதித்துக் கொண்டாலும் அந்தப் பெரிய மனிதர் ...
மேலும் கதையை படிக்க...
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பரோபகாரி கதை ‘விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினைந்தாவது கதையாவது: ‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'தயாநிதி, தயாநிதி' என்று ஒரு 'தனி மனிதன்’ தரங்கம்பாடியிலே உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
"காத்தாயி! அந்தப் பக்கிரிப் பயல் போற 'மிடுக்' கைப் பார்த்தியா? மானத்தைப் பார்த்துக்கிட்டு இல்லே அவன் நடக்கிறான்? என்னதான் வாழ்வு வந்தாலும் இப்படியா?" என்று அதிசயித்தவண்ணம், கையிலிருந்த புகையிலையிலிருந்து கொஞ்சம் திருகி எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டான் கண்ணுச்சாமி. வீட்டுக்குள் ஏதோ வேலையாயிருந்த காத்தாயி ...
மேலும் கதையை படிக்க...
அன்றொரு நாள் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிந்த போது, “காலணா இருந்தால் கொடுங்க, ஐயா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். சின்னஞ் சிறு சிறுமி ஒருத்தி எனக்குப்பின்னால் நின்று கொண்டிருந்தாள் அவளைப் பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவள் ...
மேலும் கதையை படிக்க...
சிறுவனாயிருந்தபோதே நான் சிங்கப்பூருக்குப் போய்விட்டேன். காரணம் தாய் தந்தையற்ற அனாதையாயிருந்ததுதான். என்றைக்காவது ஒரு நாள் போயே போய் விடப்போகும் இந்த உயிரின்மீது எனக்கிருந்த ஆசையால்தான் யுத்தத்திற்குப் பயந்து திரும்பவேண்டி வந்தது. சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தபோது எனக்கு எங்கு செல்வதென்றே புரியவில்லை. நகரை ...
மேலும் கதையை படிக்க...
இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா சொன்ன அழகுக் கதை "கேளாய், போஜனே! ‘சிங்காரம்பட்டி, சிங்காரம்பட்டி' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘சிற்சபேசன், சிற்சபேசன்' என்று ஒரு சீரணித் தொண்டர் உண்டு. அந்தத் தொண்டர் ஒரு நாள் மாலை கல்லாத முதியோர் ...
மேலும் கதையை படிக்க...
....கறார் கருப்பையா அன்றும் வழக்கம் போல் சர்க்காரைத் திட்டிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தார். "என்ன சர்க்கார் வேண்டிக் கிடக்கிறது? சுதந்திர சர்க்காராம், சுதந்திர சர்க்கார்; தேசம் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதுமா? தூங்குவதற்குச் சுதந்திரம் வேண்டாமா? இத்தனை மணிக்குத்தான் கடையைத் திறக்க ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம்போல் காலை எட்டு மணிக்கெல்லாம் தம்முடைய 'நர்ஸிங் ஹோ’மிலிருந்த நோயாளிகளைப் பார்வையிடுவதற்காக ஞானப்பிரகாசம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, "இன்னும் எத்தனை நாட்கள்தான் உங்கள் நர்ஸிங் ஹோமையும் வீட்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டாள், அவருடைய மனைவி அற்புதம். "பொழுது விடிந்தால் ...
மேலும் கதையை படிக்க...
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா 'ஊம்.. ஊம்... ஊம்" என்று ஈச்சம் பாயில் படுத்தபடி 'ஊம்' கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு 'உக்கும்...உக்கும்...உக்கும்' என்று குத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி மாரியாயி. முத்தையாவின் முணுமுணுப்பு வரவர ...
மேலும் கதையை படிக்க...
சென்ற வருடம் கைலாசநாதர் கோயிலுக்குச் சென்ற நேயர்கள், அந்தத் தோட்டக்காரக் கிழவனைப் பார்த்திருக்கலாம். அந்த வயோதிகனின் பெயர் காளிமுத்து; வயது அறுபதுக்கு மேலிருக்கும். தளர்ந்து மெலிந்த அவன் சடலத்தில் ஏதோ சஞ்சலம் ஊறிக் கிடந்தது. அந்தச் சஞ்சலத்தின் சாயை, அவனது வாடி ...
மேலும் கதையை படிக்க...
மாறுதல் இல்லை
பரோபகாரி கதை
நடக்காத கதை
மனித யந்திரம்
தங்க வளையல்
இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா
வேதாந்தம்
ஏசு நாதரின் வாக்கு
பதினோராம் அவதாரம்
ரிக்ஷாவாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)