ஆவி வரும் நேரம்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 26,974 
 

நேரம் 4.20 ஆனது. பள்ளிக்கூடத்தில் மணி ஒலித்தது. அது பணக்கார வீட்டு பசங்க படிக்கிற ஸ்கூல். அதுனால ஸ்கூலுக்கு வெளிய பெத்தவங்க எல்லாம் கார வச்சுக்கிட்டு தங்களோட பிள்ளைகளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. நம்ம கதையோட ஹீரோ சந்துரு தன்னோட முதுகுப்பைய போட்டும் போடாமலும் கால் தரையில படுதானு கூட தெரியாம அவ்ளோ வேகமா ஓடி வந்தாரு. இத்தனை கார்களுக்கு மத்தியிலே ஒரே ஒரு ஆட்டோ. ப்பாம் பூ. . .பூ (ஆட்டோ ஒலிபெருக்கி). ஆரவாரமாக ஆட்டோவில் வந்து அமர்ந்தாரு சந்துரு.

சந்துரு : டேய் ரமேஷ் வேகமா வாடா. இன்னைக்கி வெள்ளிக்கிழமை. கிரிக்கெட் விளையாட போகணும் டா.

ரமேஷ் : இந்தா வந்துட்டேன் டா. ஆட்டோவ உன் இடது கையால பிடிச்சு நிப்பாட்டி வை டா.

சந்துரு : எதுக்கு டா 5 நிமிஷம் லேட்டு??

ரமேஷ் : நம்ம கிளாஸ்ல திவ்யா இருக்கால,, அவ கிட்ட கடலை போட்டுட்டு இருந்தேன் டா.

சந்துரு : சரி சரி. நிப்பாட்டு உன் புராணத்த.

ரமேஷ் : டேய், நான் அவ சொன்னத முழுசா சொல்லிக்கிறேன் டா.

சந்துரு : நீ எதையும் சொல்ல வேண்டாம், வர வர பொண்ணுங்கள பத்தி பேசுனாலே பிடிக்கல டா.

ரமேஷ் : ? ? ? ? . . . . . . ?

சந்துரு : அண்ணா, ஆட்டோவ கிளப்புங்க.

ஆட்டோகாரர் : ரைட் தம்பி.

ம். இப்போ சொல்றேன் இந்த ஹீரோக்கள பத்தி. ‘சமாதிபுரம்’ னு ஒரு குக்கிராமத்தில கிராம நிர்வாக அலுவலரோட(குமார்) மகன் தான் சந்துரு., அவங்க அம்மா இல்லத்தரசி. அந்த கிராமத்துல இருக்குற ஒரு பெரிய மில் ல மேனேஜரா(சக்தி) இருக்குறவரோட மகன் தான் இந்த ரமேஷ்.,, இவனோட அம்மாவும் இல்லத்தரசி தான். இப்போ தெரியுதா., இவங்க ஏன் இந்த ஸ்கூல்ல படிக்கிறாங்கனு.

சமாதிபுரத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 16 கி.மீ. பள்ளியிலிருந்து ஆட்டோ ஊரை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. இன்னும் 5 கி.மீ. மட்டுமே இருக்கும் நிலையில் ஆட்டோ ஆடத்தொடங்கியது. சட்டென்று ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து முன்சக்கரத்தை பார்த்தார் ஓட்டுநர்.

ஆட்டோகாரர் : தம்பியா டயர் பஞ்சர் ஆயிடுச்சு, இங்கயே உக்காந்துருங்க. நான் போயி ஒர்க் ஷாப் காரர கூட்டிட்டு வாரேன்.

சந்துரு : ஓ நோ. நாங்க இன்னைக்கி கிரிக்கெட் விளையாட போகணும்., என்ன அண்ணா உங்க ஆட்டோ. சரி ஓகே போயிட்டு வாங்க.

ரமேஷ் : டேய் உங்கப்பா கிட்ட சொல்லி ஒரு கார் வாங்குடா. ஆட்டோல லாம் வர முடியல. நடு முதுகுத்தண்டு நட்டுக்கிச்சு.

சந்துரு : சரி டா. மழை வர மாதிரி இருக்கு. அதோ அந்த பங்களா க்கு போகலாம் டா.

ரமேஷ் : அய்யோ,, அந்த பங்களா வா? வேணான் டா.

சந்துரு : டேய் பயந்தாங்குலி நீ இங்கயே இரு. நான் போறேன்.

ரமேஷ் : டேய் சந்துரு, டேய் டேய், திவ்யா என்ன சொன்னானு தெரியுமா??

சந்துரு : என்ன டா சொன்னா???

ரமேஷ் : சொல்ல முடியாது போடா.

(ரமேஷ் ஆட்டோவை நோக்கி ஓடினான், மழை கொட்டத் தொடங்கியது, சந்துரு அந்த பங்களாவை நோக்கி விரைந்தான், ரமேஷ் ஆட்டோவின் திரைகளை இழுத்து மூடினான்.)

ரமேஷின் பேச்சை கேளாமல் பாதி தூரம் தனியே வந்த சந்துருவுக்கு மனதில் இலேசான பயம். சாரல் மழையில் ஆட்டோவின் திரைகளை இழுத்து மூடிக்கொண்டு மனதில் ஒருவித பயத்துடன் உள்ளே பதுங்கியிருந்தான்.

ஆட்டோகாரர் : அண்ணாச்சி கோட்டைபுரம் பக்கத்துல நம்ம ஆட்டோ ஒன்னு பஞ்சர் ஆயிடுச்சு.

கடைக்காரர் : ஸ்டெப்னிய எடுத்து மாட்ட வேண்டியதுதான.

ஆட்டோகாரர் : நம்மகிட்ட ஸ்டெப்னி, கெட்டிச்சட்னி லாம் கிடையாது அண்ணாச்சி.

கடைக்காரர் : உங்கூர் காரங்களுக்கு இந்த காமெடி _________ க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. கொஞ்ச நேரம் பொறுங்க, தம்பி வெளிய போயிருக்கான், வந்தவுடனே கடைய ஒப்படைச்சுட்டு வறேன்.

ஆட்டோகாரர் : சரிங்க அண்ணாச்சி

(சிறிது நேரம் கழித்து, கடையில வேலை பார்க்கும் பையன் வந்துவிட்டான். ஆட்டோகாரரும் கடைக்காரரும் கொட்டும் மழையில் டிவிஸ் 50 யில் கிளம்பினார்கள்.)

மணி 6.05 ஆனது, பின்னர் ஆட்டோ இருக்கும் இடத்திற்கு வந்தனர். பஞ்சர் பார்க்கப்பட்டது.

கடைக்காரர் : ஒன்லி ஹன்ட்ரெட்(100) ரூபிஸ் தாங்க.

ஆட்டோகாரர் : பிப்டி பிப்டி ஒகே வா?

கடைக்காரர் : பிப்டி பிப்டி யா, அப்படினா? ? ? ?

ஆட்டோகாரர் : இப்போ அம்பது தான் இருக்கு. பேலன்ஸ் அம்பத என் வீட்டுக்காரி கிட்ட இட்லி சாப்ட வரும்போது கழிச்சுகலாம்.

கடைக்காரர் : போயா யோவ். இனிமேல் பஞ்சர் கிஞ்சர் னு கூப்பிடு., இந்த மழைக்குள்ள வந்தன்ல என்ன செருப்பால அடிக்கனும்.

(புலம்பிக்கிட்டே கிளம்பிட்டாரு கடைக்காரரு, இவ்ளோ நேரம் ஆட்டோ பஞ்சரா போன பீலிங்ல இருந்த ஆட்டோகாரருக்கு இப்ப தான் பசங்க ஞாபகம் வருது.)

ஆட்டோகாரர் : டேய் பசங்களா எங்கடா இருக்கீங்க?

(கேட்டுக்கிட்டே ஆட்டோ திரைய விலக்கி பாக்காரு., அப்போ அவருக்கு மொபைல் ல கால் வருது. எதிரே சந்துரு வாய்ஸ்.)

சந்துரு : அண்ணா நான் சந்துரு. என்ன காப்பாத்துங்க. பிலீஸ்.

(அழைப்பு துண்டிக்கப்பட்டது)

ஆட்டோகாரர் : டேய் தம்பி இப்ப எங்கடா இருக்க? ஹலோ ஹலோ…

(செய்வதறியாது திகைத்த ஆட்டோகாரருக்கு கண்ணில் தோன்றிய காட்சியால் சிறிது சந்தோஷம், எதிரே ரமேஷ் ஓடி வந்து கொண்டிருந்தான்.)

ஆட்டோகாரர் : டேய் ரமேஷ், அவன எங்கடா?

ரமேஷ் : என் பேச்ச கேக்காம அவன் அந்த பங்களாக்கு போயிட்டான்.

ஆட்டோகாரர் : சரி, வாடா தம்பி. அவன போயி பாக்கலாம்.

(மழை குறையத்தொடங்கியது, ஆட்டோகாரரும் ரமேஷும் பங்களாவை நோக்கி ஆட்டோவில் பயணித்தனர். இவர்கள் பங்களாவில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே சந்துரு பங்களாவின் படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான்.)

சந்துரு : ஹலோ மிஸ்டர் ரமேஷ் எப்புடி தைரியமா உள்ள போயிட்டு வந்தேன் பாத்தயா.

ரமேஷ் : டேய் இதுக்குள்ள பேய் பிசாசு எல்லாம் இருக்குனு திவ்யா தான் டா சொன்னா.

சந்துரு : அய்யோ இந்த சயின்ஸ் காலத்துல போயி பேயி பிசாசு எல்லாம் நம்பிட்டு இருப்பயா, வாடா போலாம்.

ஆட்டோகாரர் : என்ன தம்பி கொஞ்ச நேரத்துல அண்ணன கலட்டி மாட்டிட்டயே., சரி வாங்க பா தம்பியா போகலாம், ரெம்ப லேட் ஆச்சு.

(ஆட்டோ இயங்கத்தொடங்கியது, இடையில் எங்கும் நிற்கவில்லை. மணி 7.00 ஆனது. வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். )

(ஊரிலேயே இவர்களது வீடும், மில் வைத்திருக்கும் பண்ணையார் வீடும் தான் மெச்சு வீடு. இவரது(பண்ணையார்) மில்லில் மட்டும் 6 மணிக்கி வேலை முடிந்தும் 8 மணி வரை வேலை இருக்கும். எட்டு மணி ஆனதும் வரிசையாக வேலை பார்ப்பவர்கள் கேட்டின் அருகில் வந்து கொண்டிருந்தனர். அங்கு வேலை பார்ப்பவர்களில் 10ல் 8 பேர் இளவட்ட பெண்கள் தாம். மில்லின் நுழைவாயிலில் ஒரு போர்டு. “இங்கு குழந்தை தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு அமர்த்தப்படவில்லை”. அதற்கு மாறாக “கன்னிப் பெண்கள் மட்டும் தான் இங்கு பணியில் உள்ளனர்” என வைத்திருக்கலாம். பண்ணையாருக்கு ஒரே ஒரு மகள் தாம். அவள் பிறந்து 1 வருடம் தான் ஆகியிருக்கிறது. தனது மில் கேட்டின் அருகே நாற்காலியை போட்டுக்கொண்டு வச்ச கண் வாங்காமல் பெண்களை பார்த்துக்கொண்டிருப்பார். அவரைக் கேட்க யாரும் இல்லை என்கிற தைரியம்.)

பணிப்பெண் சங்கீதா : இந்தாங்க ஐடி கார்டு

காவலாள்(வாட்ஸ்மேன்) : ம். ஐடி கார்டு ஓகே. அந்த கூடைய இப்படி குடு., இது என்ன பேண்டேஜ் துணி.?

பணிப்பெண் சங்கீதா : அம்மாவுக்கு கால் ல அடி பட்டுருச்சு. அதாங்க கட்டு போட எடுத்துட்டு போறேன்.

காவலாள்(வாட்ஸ்மேன்) : இதோட ரேட் 55 ரூபா வரும். உன்னோட கூலில கழிச்சுகலாம். கிளம்பு.

பணிப்பெண் சங்கீதா : வேண்டாங்க சார். என்ன மன்னிச்சுடுங்க. இனிமேல் இந்த தப்ப பண்ண மாட்டேன்.

(அவளின் உண்மையான காரணத்தை புரிந்து கொண்ட பண்ணையார் அவளை அழைத்தார்)

பணிப்பெண் சங்கீதா : ஐயா சொல்லுங்கய்யா

பண்ணையார் : ஏம்மா. இத எடுத்துட்டு போ. உன் கூலில பிடிக்க மாட்டாங்க.

பணிப்பெண் சங்கீதா : ரெம்ப நன்றிங்கய்யா

பண்ணையார் : 3 நாள் கழிச்சு நம்ம தோட்டத்துக்கு வந்துரு. இப்ப போ.

பணிப்பெண் சங்கீதா : சரிய்யா. வாறேன்.

(இவ்வாறாக இங்கு நடக்கும் கொடுமைகளை சொல்லி மாளாது. இது ஒருபுறம் இருக்க ஆட்டோகாரர் சுகுமாரின் மனைவி அக்டோபர் மாத குளிரில் ஆவி பறக்க சுடச்சுட இட்லி அவித்துக்கொண்டிருந்தார். சுகுமாருக்கு ஒரே யோசனை. சந்துருக்கு ஒன்றும் ஆகவில்லை, அப்பறம் எதுக்கு அழுதுகிட்டே போன் போட்டான்??. யோசனையோடு வாசனையான இட்லியை வாயில் எடுத்து போட்டார்.)

(சுகுமாரின் மனைவி பெயர் பங்கஜம். இவர்களும் சமாதிபுரத்தை சார்ந்தவர்களே. திருமணம் முடிந்து 16 வருஷமாக சுகுமாருக்கு பங்கஜம் குழந்தை., பங்கஜத்திற்கு சுகுமார் தான் குழந்தை. இங்கு இட்லி சாப்பிட கூட்டம் அலைமோதும். பங்கஜத்தின் கை பக்குவம் அப்படி.)

சித்ரா : இந்தா பங்கஜம் இதுல ஒரு 10 இட்லி வை.

பங்கஜம் : இப்ப தானம்மா 4 இட்லி வாங்கிட்டு போனேங்க. இது யாருக்கு?

சித்ரா : இதுவும் சந்துருக்கு தான். இன்னைக்கு என்னனே தெரியல. வந்ததுல இருந்து சாப்டுகிட்டே இருக்கான்.

சுகுமார் : பங்கஜம், அம்மாக்கு பஸ்ட்டு இட்லிய குடு.

(சங்கீதா, வீட்டிற்குள் நுழைகிறாள். சங்கீதாவின் அம்மா பெயர் சாந்தி. சிறு வயதிலே காதலித்தவனால் ஏமாற்றி கைவிடப்பட்டவள்.)

சாந்தி : வயிறு வலி எப்புடி டி இருக்கு???

சங்கீதா : இப்போ பரவா இல்லம்மா.

சாந்தி : சரி வீட்டுக்கு பின்னாடி போயி கைய கால்ல அழம்பிட்டு வா. சாப்டலாம்.

(சங்கீதாவும் அவளது அம்மாவும் உணவு அருந்துகின்றனர். மில்லில் நடந்ததை சங்கீதா தன் அம்மாவிடம் கூறுகிறாள்.)

சாந்தி : அடிப்பாவி மவளே, இனிமேல் நீ அங்க போக வேண்டான் டி. என் வாழ்க்கைய ஒருத்தன் கெடுத்தது போதாதா.

(சரி என்பது போல தலையாட்டி நெஞ்சில் சோகத்தோடு பாயில் துயில் காண்கிறாள் சங்கீதா.)

(இராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் . . . என பாடல் ஒலிக்க பண்ணையாரின் தோட்டத்து வீட்டில், விலைமாதுகளுடன் உல்லாசமாக இருக்கிறார் பண்ணையார்.)

(சந்துருவின் வீட்டில் அவன் சாப்டுவதை பார்த்து பெருமூச்சு விடுகிறாள் தாய் சித்ரா)

அன்றிரவு 12 மணி. ஊரே நிசப்தமாக இருக்க, பங்கஜத்தின் வீட்டில் மட்டும் சத்தம்.

பங்கஜம் : நம்மலுக்கு ஆட்டோ மட்டும் தான் ஓட்டத்தெரியும். நான் இவ்ளோ கஷ்டப் படுறனே கொஞ்சம் எந்திரிச்சு வந்து பாத்திரங்கள கழுவி குடுத்தா என்ன.

(சந்துருவின் வீட்டிற்கு வெளியே ஏதோ கோர உருவம் சுற்றிக்கொண்டிருந்தது.)

நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா., பக்கத்துல. . . என ஒரு பாடல் சத்தம். அந்த கோர உருவம் பின்னாடி திரும்பி பார்க்க வயர்மேன் ஒருவர் போனை எடுத்து பேசினார். பின்னர் தனது வண்டியை நிறுத்திவிட்டு மின்மாற்றியின்(டிரான்ஸ்பார்ம்) மீது ஏறுகிறார்.

பொழுது விடிகிறது. சந்துரு தெருவில் நிறைய கூட்டம். ஆனால் சந்துரு மட்டும் நன்றாக உறங்கி கொண்டிருக்கின்றான்.

அந்தத்தெரு முனையில் உள்ள டீக்கடையில் தீபாவளியை (நவம்பர் 10, 2015) முன்னிட்டு இன்று முதல் தீபாவளி வரை ஒரு வடை வாங்கினால், இன்னொரு வடை இலவசம் என்று பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் கூட்டம்.

குமார் : யோவ் குட்டி எந்திரியா.

சந்துரு : டாட் போங்க, இன்னைக்கு லீவ் தான., கொஞ்ச நேரம் தூங்கிகறேன். ப்லீஸ்.

குமார் : ஆங்கிலத்துல என்கிட்ட பேசாதனு சொல்லிருக்கன்ல.

சந்துரு : சரி பா. போங்க.

குமார் : சரி சரி. எந்திரிச்சு குளிச்சுட்டு வேகமா வா. நீ நான் அம்மா எல்லாரும் இன்னைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம்.

சந்துரு : சரி பா.

வீட்டு வேலைக்காரன் : அய்யா உங்கள பாக்க பஞ்சாயத்து தலைவரும் அவரு மகனும் வந்துருகாங்க.

குமார் : சரி அவங்கள நம்ம வீட்டு முகப்புக்கூடத்துல உக்கார வை. நான் வறேன்.

பஞ்சாயத்து தலைவர் : அய்யா வணக்கமுங்க.

குமார் : வாங்க ஸ்ரீனிவாசன்., என்ன சாப்டுறேங்க???

பஞ்சாயத்து தலைவர் : அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்கய்யா. இவன் என் மகன் தான். பத்தாப்பு வரைய படிச்சுருக்கான். அகவை(வயது) 22 ஆகுது. இவனுக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும்.

குமார் : அப்படியா ஆகட்டும். உன் பேரு என்ன பா?

முத்துகிருஷ்ணன் : ஐயா முத்துகிருஷ்ணன் ங்க.

குமார் : சரி பா. நம்ம தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத்துறைல பதிஞ்சுருக்கயா?

முத்துக்கிருஷ்ணன் : ம். பதிஞ்சுருக்கேன் ஐயா.

குமார் : சரி சரி. இந்த மாசம் தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலருக்கான எழுத்துத்தேர்வு அறிவிப்பு வெளியிட போகுது. அதுக்கு பத்து தான் குறைஞ்ச பட்ச கல்வித்தகுதி. உனக்கு வயசு 21 முடிஞ்சுருச்சுல. அந்த தேர்வுக்கு விண்ணப்பிச்சு வை. ஆறுல இருந்து பத்து வரைய இருக்குற புத்தகங்களா படி. தேர்வு எழுது. அரசாங்க வேலைக்கு போ. ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுகோ. இந்த தேர்வ நீ மட்டும் எழுதல. உங்கூட சேர்ந்து பத்து இலட்சத்துக்கும் அதிகமானவங்க எழுதுவாங்க. தோராயமா 800 காலிப்பணியிடம் தான் இருக்கும்.

பஞ்சாயத்து தலைவர் : அரசாங்க வேலை எம்புள்ளைக்குலாம் கிடைக்குமாய்யா????????

குமார் : நம்மலோட குடும்ப கஷ்டத்த மனசுல வச்சு படிக்க சொல்லுங்க. தேர்வுல வெற்றி ஆகுற மாதிரி கனவு காணுங்க. கடவுள் மேல நம்பிக்கை வைங்க. வேலை கண்டிப்பா கிடைக்கும். அவன ஏத்தி விடலனாலும் பரவா இல்ல., இப்டி நம்பிக்கையில்லாம பேசி இறக்கி விட்றாதீங்க.

பஞ்சாயத்து தலைவர் : அப்போ நான் போய்ட்டு வாறேன் யா.

முத்துகிருஷ்ணன் : நானும் போய்ட்டு வாறேன் ஐயா.

குமார் : ம். வாங்க.

(அவர்கள் சென்றவுடன் சந்துரு அறைக்கு குமார் வந்தார்.)

குமார் : சித்து, இங்க வா, இவன் என்ன பண்ணி வச்சுருக்கான்னு பாரு… சித்து யேய் சித்து.

சித்ரா : ம். ஒரு நிமிஷம் ங்க. அடுப்புல பால் இருக்கு.

குமார் : ? ? ?

.சித்ரா : அட ஏன் இப்டி கத்துறேங்க.??

குமார் : அவன் அறைக்குள்ள பாரு.

(சந்துருவின் அறையில் இருந்த மீன் தொட்டியில் உள்ள மீன்கள் பரிதாபகரமாக இறந்து கிடந்தது. வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.)

சந்துரு : நீ அவன என்ன னு கேளு. நான் போயி யாருனு பாத்துட்டு வறேன்.

சித்ரா : டேய் எந்திரிச்சு குளிக்க போ. டைம் ஆச்சு; முத்தையா, சந்துரு ரூம கிளீன் பண்ணீரு.

முத்தையா(வேலைக்காரன்) : சரிங்கம்மா. . .

(வீட்டு வாயிற்படியில் ஆட்டோ சுகுமார் நிற்கிறான்)

சுகுமார் : அய்யா ஆட்டோ எடுத்துட்டு வந்துட்டேன். போகலாமாய்யா???

குமார் : ஒரு 10 நிமிஷம் சுகுமாரு. சந்துரு இப்ப தான் குளிக்க போறான். வா உள்ள வந்து உக்காரு.

சுகுமார் : சரிங்கய்யா.

குமார் : சித்ரா, சந்துரு வேகமா வாங்க. காலதாமதம் ஆயிருச்சு.

சந்துரு : இந்தா வந்துட்டேன் பா.

குமார் : குட்டி, மீன் தொட்டில இருந்த மீன்லாம் எப்புடி டா செத்துச்சு.???

சந்துரு : என்ன பா சொல்றேங்க. என்னோட மீன்லாம் செத்துப்போச்சா????

சித்ரா : ஏங்க நல்ல காரியத்துக்கு போகும்போது அபசகுணமா பேசிட்டு இருக்கேங்க.

குமார் : சரி வாங்க போகலாம். சுகு ஆட்டோவ போயி எடு.

(ஆட்டோ அவர்கள் ஊரை விட்டு தாண்டியது.)

சந்துரு : அப்பா நம்ம எங்க பா போறோம்???

குமார் : தீபாவளிக்கு துணி எடுக்க போறோம் டா.

சந்துரு : ஐ ஜாலி.

(பண்ணையார், மில்லுக்கு வந்ததும் வராததுமாய் சங்கீதாவை தேடுகிறார்.)

பண்ணையார் : யோவ் மேனேஜரே

சக்தி : சார், சொல்லுங்க சார்.

பண்ணையார் : இன்னைக்கி எத்தனை பேருயா லீவு???

சக்தி : சங்கீதா மட்டும் தான் சார் லீவு.

பண்ணையார் : தீபாவளி வரைய யாரையும் லீவு போட விடக்கூடாதுனு சொல்லிருக்கன்ல.

சக்தி : அந்த பொண்ணு எதுக்கு லீவு போட்டுச்சுனு ஒரு தகவலும் தெரியல சார்.

பண்ணையார் : சரி சரி அவ வீட்டுக்கு ஆள அனுப்பி பாத்துட்டு வர சொல்லு.

சக்தி : கண்ணன், சங்கீதா வீடு வரைய போயிட்டு வாங்க.

கண்ணன் : ஒகே சார்.

(கண்ணன் பண்ணையாரின் மில்லில் பணியாளர்கள் ஊர்தி ஓட்டும் ஓட்டுநர். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பான். பல பெண்கள் இவன் அழகில் மயங்கி தங்களுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், கண்ணனுக்கு இதுவரை யார் மீதும் காதல் வரவில்லை. கண்ணன், சங்கீதா வீட்டை அடைகிறான். அங்கு கண்ணன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது.)

.சங்கீதாவின் அம்மா சாந்தி விஷத்தை குடிக்க முற்படுகிறாள். ஆனால், கண்ணன் தக்க சமயத்தில் அதை தட்டி விட்டான். விஷ பாட்டில் கீழே விழும் சத்தம் கேட்டு சங்கீதா கண் விழித்தாள்.

கண்ணன் : அம்மா என்ன காரியம் பண்றேங்க.

சங்கீதா : அம்மா என்ன ஆச்சு. கண்ணன், நீங்க எப்படி இங்க.?

கண்ணன், வீட்டில் நடந்தவற்றை சங்கீதாவிடமும், மில்லில் நடந்ததை இருவரிடமும் பங்கிட்டு கொள்கிறான்.

கண்ணன் : அதெல்லாம் இருக்கட்டும். தற்கொலை பண்ற அளவுக்கு என்னமா கஷ்டம்???

அத ஏம்பா கேக்குற னு மில்லுல நேத்து நடந்தது எல்லாத்தையும் சங்கீதாவின் தாயார் கண்ணனிடம் சொல்கிறாள்.

கண்ணன் : சரிம்மா. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். உங்க பொண்ண என்ன நம்பி அனுப்பி வைங்க.

(அன்றிலிருந்து கண்ணனின் அரவனைப்பில் மிகவும் பாதுகாப்பாக சங்கீதா வேலை பார்த்து வருகிறாள். சந்துரு தன் அப்பாவுடன் சென்று ஜவுளி எடுத்துவிட்டு ஒரு புது காரும் தீபாவளி பரிசா வாங்கிட்டு வந்துருக்கான். அட பொம்ம கார் இல்லைங்க. உண்மையான காரு தான். விலை 550000/- ரூபாயாம்.)

அன்று தீபாவளி., சந்துருவும் ரமேஷும் விடியற்காலை 6 மணிக்கெல்லாம் பட்டாசுகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு சென்றனர். சங்கீதாவின் அம்மாவிற்கு மனதில் ஒரு ஆசை. அடுத்த தீபாவளி தன் மகளுக்கு தலை தீபாவளியா தான் இருக்கனும் னு நினைச்சுகிட்டே “ஏய் சங்கீதா எந்திரிச்சுட்டு இந்த காப்பிய குடி” என அவளை எழுப்பினாள். பின்னர் சிறிது நேரம் கழித்து கண்ணன் கையில் ஸ்வீட் மற்றும் புது துணியோடு சங்கீதா வீட்டிற்கு வந்தான். பங்கஜத்தின் இட்லி கடையில் “டமார் டுமார் பட்டாசுகள் இங்கு கிடைக்கும்” என போர்டு வைக்கப்பட்டிருந்தது. சிறுசுகளும் பெருசுகளும் பங்கஜம் கடைக்கு முன் கூட்டமாக பட்டாசு வாங்க நின்றனர். இவ்வாறு ஊரே சந்தோஷமாக இருக்க கண்களில் சோகத்தோடு ஆலமரத்தின் அடியில் முத்துகிருஷ்ணன் அமர்ந்திருந்தான். தீடிரென்று அந்த பக்கம், 37 வருஷம் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு சென்ற குருசாமி வந்துகொண்டிருந்தார்.

குருசாமி : எதுக்கு பா தம்பி இங்க வந்து சோகமா உக்காந்துருக்க

முத்துகிருஷ்ணன் : சாமி, நாளைக்கு கிராம நிர்வாக அலுவலர் தேர்வு இருக்கு. நான் அதுல தேர்வாகி வேலைக்கு போனா தான் என் குடும்ப கஷ்டம் தீரும்.

குருசாமி : நேற்று என்பது கனவு, நாளை என்பது வரவு. ஆனால் இன்று மட்டுமே உனது. அதுனால நேரத்த வீணாக்காம ஐயப்பன் மேல பாரத்த போட்டுட்டு போயி படி. நாளைக்கு நல்லபடியா தேர்வு எழுது. அடுத்த வாரம் இதே நாள் (17.11.2015) அதிகாலையில ஒரு துளசி மாலை, ஒரு உருத்திராட்ச மாலை வாங்கிட்டு நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குற விநாயகர் கோவிலுக்கு வந்துரு.

குருசாமி கிளம்பிட்டாரு, முத்துகிருஷ்ணனும் தீபாவளிய கொண்டாடாம படிக்க கிளம்பிட்டான்.

அடுத்த நாள் காலையில் சூரியன் தலைகுணிந்து பார்க்க, இவன் சூரியனை தலை நிமிர்ந்து பார்த்தான். மனதில் ஒரு வித இன்பம் குடிகொள்ள தேர்வு எழுதும் பள்ளியை நோக்கிச்சென்று தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் அருமையாக பதிலளிக்கிறான்.

பண்ணையாரின் லீலைகள் சிறிது சிறிதாக குறையத்தொடங்கின. அட நம்ம கதையோட கிளைமேக்ஸ்க்கு வந்துட்டோம். எல்லா படத்துலயும் நாடகத்துலயும் கிளைமேக்ஸ்ல கெட்டவங்கலாம் திருந்திருவாங்க. நம்ம கதை மட்டும் என்ன விதிவிலக்கா. ஒரு வாரம் கழிகிறது. சுவாமியே சரணம் ஐயப்பா., சுவாமியே சரணம் ஐயப்பா., சுவாமியே சரணம் ஐயப்பா., என ஊரெங்கும் சரண கோஷம் கேட்க கையில் மாலையுடன் குளித்து முடித்து குருசாமியிடம் வந்து மாலை போட்டுக்கொண்டான். சுவாமியே சரணம் ஐயப்பா., கன்னி சாமியாக இன்று முதல் ஒரு மண்டல காலம் ஊரை வலம் வர போகிறான்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.,

.அன்று மதியம் அரசுத்தேர்வு முடிவுகள் வந்தது. முத்துகிருஷ்ணன் நல்ல மதிப்பெண் பெற்று கிராம நிர்வாக அலுவலரானான். சங்கீதாவுக்கும் கண்ணனுக்கும் தை மாதம் திருமணம் நிச்சயமானது. சுகுமாருக்கும் பங்கஜத்திற்கும் முருகப்பெருமானை போல ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பங்கஜத்தின் இட்லி கடை, அபிநவ் டிபன் சென்டர் ஆனது.

ஊர்க்காரர் : கடையில ஒரு ஏசி போட்டா நல்லா இருக்குமே.

நான் : அட ஏசி தான. காசா பணமா போட்டுருவோம்.,

அபிநவ் டிபன் சென்டரில் 35000 மதிக்கத்தக்க ஏசி மாட்டப்பட்டது. சுகுமார் ஆட்டோவை விற்றுவிட்டு ஆம்னி கார் வாங்கிவிட்டார். கிராம நிர்வாக அலுவலரான முத்துகிருஷ்ணன் விரைவில் திருமணம் முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்ணையாரின் தோட்டத்து வீடு இடிக்கப்பட்டு கிணறு தோண்டப்பட்டது. அவரது மில்லில் அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டது. சந்துரு பயிலும் பள்ளியில் கட்டணங்கள் குறைக்கப்பட்டு அனைத்து தரப்பினரும் பயிலும் வகையில் உருவாக்கப்பட்டது.

உங்களோட மைன்ட் வாய்ஸ கேட்ச் பண்ணிட்டேன். ஆவி வரும் நேரம் னு போட்ட தலைப்புக்கும் இந்த கதைக்கும் சம்பந்தமே இல்லனு யாரும் நினைக்க வேண்டாம். இருக்கு சம்பந்தம் இருக்கு. இந்த கதையோட மேல போயி பாருங்க. ஒரு இடத்துல ‘ஆவி’ னு சொல்லிருப்பேன். நீங்க நினச்சது சரி தான். பங்கஜம் இட்லி அவிக்கும் போது வர ஆவி தான் நம்ம கதையோட தலைப்புல உள்ள ஆவி.

அப்போ,

1.ஆட்டோ சுகுமாருக்கு கால் பண்ணது யாரு? ? ?

2.சந்துரு வீட்டுக்கு வெளிய இருந்த அந்த கோர உருவம் என்னது? ? ? ?

3.திவ்யா அந்த பங்களாவ பத்தி சொன்னது பொய்யா? ? ? ? ?

4.சந்துரு ரூம் ல இருந்த மீன்லாம் எப்படி செத்துபோச்சு? ? ? ? ? ?

5.என்னைக்கும் இல்லாம சந்துரு எப்படி அத்தன இட்லி சாப்டான்? ? ? ? ? ?

6.மின்மாற்றியின் மீது ஏறிய வயர்மேனுக்கு என்னாச்சு? ? ? ?

-ஆவி வரும்.(உங்களைத்தேடி)

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஆவி வரும் நேரம்

  1. Itha nanga yosikavathu senjom but nenga… Mathavangala paratta mudiyalenalum parava illa kasda padra mathiri pesathenga ethuvum oru muyarchi than engala porutha varai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *