அந்த பையன் சொன்னது உண்மையா இருக்குமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 46,163 
 

மூன்று ‘ப்லாக்கில்’, பத்து அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் 180 ‘ப்லாட்டு’கள் இருந்தது.

அதில் ஒரு ‘ப்லாட்’டில் வசித்து வந்தார் ராமசாமி.

அவர் மணைவி இறந்து போய் பத்து வருடங்கள் ஆகி விட்டது.அவர் மகனும் மகளும் வெளி நாட்டில் பிரஜைகள் ஆகி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துக் கொண்டு இருந்தார் கள்.அவர்கள் சொந்த ஊருக்கு வந்து தனியாக வசித்து வரும் அப்பாவை பார்க்க வருவதே இல்லை.

ராமசாமிக்கு வயது எழுபத்தைந்து ஆகி இருந்த்து.

அவருக்கு தனக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் தனியாகவே செய்து வந்தார்.அதனால் அவருக்கு தள்ளாமை அதிகமாக இருந்து வந்தது.’இந்த வேலேயே குறைக்கலாமா,அந்த வேலேயே குறைக்கலாமா என்று அவர் மனம் ஆசைப் படும்.ஆனால் அவரால் எந்த வேலையையும் குறைக்க முடியவில்லை.

ஐம்பது வயதில் இருந்தே அவர் தலையில் இருந்து வந்த ‘சொட்டை’ கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் ஆகி,இப்போது அவர் தலை பூராவும் வழுக்கை ஆகி விட்டு இருந்தது.தன் தலையிலே கொஞ்சமாவது மயிர் வரட்டுமே,என்று நினைத்து வழக்கமாக ‘மருந்து மாத்திரை’ வாங்கும் ’மெடிக்கல் ஷாப்பில்’ இருந்து ஒசத்தியான ‘ஹேர் ஆயிலை’ வாங்கி தடவிக் கொண்டு வந்தார்.அவர் துரதிர்ஷ்டம் அவர் தலையிலே முடியே வளறவே இல்லை.அவருக்கு சந்தேகமாகவே இருந்தது.

காலையில் எழுந்து அவர் பல தேய்க்க கண்ணாடி முன்னால் நின்றுக் கொண்டு அவர் முகத்தை அவர் பார்க்கும் போது அவருக்கே அவரை பார்க்க அருவருப்பாக இருந்தது. தலையிலே ஒரு மயிர் கூட இல்லே,ஆனா தாடி மீசை மட்டும் வளர்ந்து அவரை இன்னும் கிழவனாக காட்டி கொண்டு இருந்தது.’ஷேவிங்க் பண்ணித் தோலைக்கணுமா’ என்று அலுத்துக் கொள்ளுவார்.

அலுத்துக் கொண்டே பல்லைத் தேய்ந்து விட்டு ‘கிடு’’கிடு’ என்று ‘ஷேவிங்கை’ பண்ணிக் கொள்ளுவார். மீண்டும் கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்த போது,அவர் காது ஓரத்திலும் புருவ த்திலும்,மூக்கு நுனியிலும் வெள்ளை மயிர் தொங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும் வெறுப்பு அடைந்து ஒரு சிறிய கத்தி¡¢க்கோலால் அவற்றை எடுத்து முடிப்பார்.

சாயங்கால வேளைகளில் அந்த கட்டிடத்தில் இருந்த ‘பெரிசு’கள் எல்லோரும் ஒன்றாக உட்கார் ந்துக் கொண்டு ஒரு அரை மணி பேசி வருவது வழக்கம்.
ராமசாமியும் அதில் கலந்துக் கொள்வார்.

ஒருவர் அரசியல் விவகாரத்தைப் பற்றி தனக்கு தொ¢ந்த விஷயத்தை பேசுவார்.ஒருவர் சினிமாந நடிகர், நடிகைகளைப் பற்றின ‘கிசு’ ‘கிசு’பற்றி பேசுவார்.இன்னொருவர் அவர் சார்ந்த கட்சியை பற்றீன செய்திகள் பற்றி பேசி வருவார்.ராமசாமி வெறுமனே கேட்டுக் கொண்டு இருப்பார்.ஒரு அரை மணியோ முக்கால் மணியோ பேசின பிறகு எல்லோரும் கிளம்பிப் போய் விடுவார்கள்.

வழக்கமாக ‘பெரிசு’கள் மற்றும் கலந்துக் கொள்ளும் அந்த ‘மீட்டிங்கில்’ அன்று ரெண்டு இருபது வயது வாலிபர்கள் வந்து இருந்தார்கள்.

ராமசாமிக்கு ரொம்ப நாட்களாக இருந்த தன் சந்தேகத்தை கேட்கலாம் என்று நினைத்து அவர் “நான் என் தலைக்கு நான் தினமும் ரொம்ப ஒசத்தியான ‘தேர் ஆயிலை’ தடவி வறேன்.ஆனா ஒரு முடி கூட வளரது இல்லே.ஆனா நான் ஒன்னும் தடவாம இருக்கிற என் தாடி,மீசை ரெண்டு நாள்ளே வளந்துடுது.காது மூக்கு,புருவம் இதிலே ஒரு வாரத்லே முடிவளந்துடுது, அது ஏங்க”என்று கேட்டு எல்லோரையும் பார்த்து கொண்டு இருந்தார்.

எல்லா ‘பெரிசு’களுக்கும் அவரை போலவே தாடி மீசை வளர்ந்துக் கொண்டு இருந்தது.காது, மூக்கு,புருவம் இவற்றில் முடி வளர்ந்து வந்துக் கொண்டு இருந்தது.
யாரும் பதில் ஒன்றும் சொல்ல வில்லை.சும்மா இருந்தர்கள்.

எழுந்து நின்று கொண்டு ஓட தயராக இருந்த ஒரு பையன் “அது ஒன்னும் இல்லே பெரியவரே, நீங்க தினமும் உங்க தலைக்கு தடவி வர ஒசத்தியான ‘தேர் ஆயில்’,உங்க தலையிலே தங்காம,வழிஞ்சு உங்க,புருவங்களிலும்,காதுகளேயும்,மூக்கிலேயும்,கன்னத்திலும் விழுந்திடுது.அதனால் தான் அங்கே எல்லாம் முடி முளைக்குது”என்று சொல்லி விட்டு ஓடிப் போய் விட்டான்.

பெரியவர் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.வேறே விஷயங்கள் எல்லாம் பேசி விட்டு,நேரம் ஆகி விடவே,எல்லா ‘பெரிசு’களும் எழுந்து போய் விட்டார்கள்.
ராமசமியும் எழுந்து தன் ‘ப்லாட்டுக்கு’ வந்து விட்டார்.

வீட்டுக்கு வந்து ‘அந்த பையன் சொன்னது உண்மையாக இருக்குமோ’ என்று நினைத்துக் அடுத்த நாளில் இருந்து தலைக்கு எண்ணை தடவுவதை நிறுத்தி விட்டார்.

ஆனால் அவர் தாடி,மீசை,புருவம்,காதுகளின் ஓரம்,மூக்கின் துவாரங்கள் இவற்றில் வளர்ந்துக் கொண்டு இருந்த முடி முன்னம் வளர்ந்து வந்த படியே தான் வளர்ந்துக் கொண்டு இருந்தது!!!.

ஒரு வித்தியாசமும் தெரியவில்லை ராமசாமிக்கு!!.

‘எண்னை தடவினாலும் ஒரே அழகு தான்,தடவாட்டாலும் ஒரே அழகு தான்’ என்று புலம்பிக் கொண்டே தன் வாழ் நாளை கழித்து வந்தார் ராமசாமி.

அவர் “”புலம்பல்”” ஓய யாராவது ஒரு வழி சொல்லுங்களேன். ‘ப்ளீஸ்’??

அவர் தினமும் தனியா செஞ்சு வற வேலேலே ஒன்னு குறையுமே!.

ராமசாமி சந்தோஷப் படுவார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *