Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அந்த ஃபாரினர் தான்!

 

“சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல‌ எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க…..” என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி.

“ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப வாங்கின ?” என்று கேட்டுக் கொண்டிருந்த சக டெவலப்பர் யாழினியிடம், “கொஞ்சம் பொறு, அச்சச்சோ குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது, இரு, அதுக்கு தீனி போட்டுட்டு வர்றேன்” என்று ஓடினாள் அருள்மொழி.

“இன்னும் கொஞ்ச நேரத்தில க்ளையன்ட் ஆன்லைனில் வந்திருவான். அதுக்குள்ள ஃபிக்ஸ் பண்ணுங்க. இந்த நேரத்தில டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் செக் பண்ணி… என்ன வர்ஷினி, கமான், பீ மோர் ப்ரொடக்டிவ்…” என்று வர்ஷினிக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தான் ப்ராஜக்ட் லீட் செழியன்.

ர‌யில் நின்ற‌தொரு நிலைய‌த்தின் ப‌ர‌ப‌ர‌ப்பில் இருந்த‌து அந்த மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு கிளை அலுவ‌ல‌க‌ம். சர் சர்ரென்று கார்களும் வேன்களும் செல்லும் பெரு நகரத்தின் பிரதான தெருவில் இருந்தது. அலுவலகத்தினுள் ஆங்காங்கே இடுப்புய‌ர தடுப்புகளில், ஆறுக்கு ஆறில், ஆளாளுக்கு இட‌ம். எல் வ‌டிவ‌ மேசைக‌ள். வெண்திரைக் க‌ணிணிக‌ள், கிறுக்கிப் ப‌ர‌ப்பிய‌ வெள்ளைத் தாள்க‌ள், சித‌றி கிட‌க்கும் பேனாக்க‌ள், தொலைபேசி, ஆங்காங்கே இருவர் மூவராய் நின்று உரையாடல், தளத்திற்கு ஒரு காஃபி ஏரியா, ரெஸ்ட்ரூம்ஸ் என‌ ச‌ர்வ‌தேச தரத்திற்கு இருந்த‌து.

“இந்தாங்க சார் நீங்க கேட்ட ஃபோட்டோ காப்பி” என்று திலீபன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் பார்த்தான் செழியன்.

“க்ரேட்… இந்தாங்க கலைச்செல்வி, இவர் இன்னிக்கு இன்டர்வியூவிற்கு வருகிறார். ரெஸ்யூம ஏற்கனவே ஈமெயில் உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறேன். எதுக்கும் கையில் காப்பி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்ப நேரம் இருக்கோ, அவருக்கு கால் பண்ணி அப்ப வரச் சொல்லுங்க. இஃப் ஹி இஸ் டெக்னிக்க‌லி ஸ்கில்ட், லெட் மீ நோ” என்றுவிட்டு அடுத்த‌ ப்ராஜ‌க்ட் டீமுட‌ன் ஐக்கிய‌மானான் செழிய‌ன்.

“எப்ப‌வும் செழிய‌ன் தானே இன்ட‌ர்வியூ ப‌ண்ணுவார். இன்னிக்கு என்ன‌ க‌லைச்செல்வி ?!” என்று கேள்விக‌ள் சில‌ர் ம‌ன‌ங்க‌ளில் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து.

ப்ராஜ‌க்ட் ஸ்டேட்ட‌ஸ், டெய்லி மீட்டிங், வீக்லி மீட்டிங், ரிசோர்ஸ் அஸைன்மென்ட், க்ளைய‌ன்ட் மீட்டிங், மேனேஜ்மென்ட் அப்டேட்ஸ் என்று ச‌தா சுழ‌லும் செழிய‌ன், அந்த‌ கார்ப்ப‌ரேட் அலுவ‌ல‌க‌த்தின் ஒரு உய‌ர் ப‌த‌வியில் இருந்தான்.

இந்த‌ நேர‌த்தில் செழிய‌னுக்கு இணையாக‌ வேறு ஒருவ‌ர் இன்ட‌ர்வியூவிற்கு வ‌ரும் செய்தி, அதுவும் ஒரு வெள்ளைக்கார‌ர் வ‌ருகிறார் என்ற செய்தி, ஏஸி குளிராய் அலுவ‌ல‌க‌த்திற்குள் ப‌ர‌விய‌து.

சாம்பார் சாதம், ரசம், ஃப்ரைட் ரைஸ், லெமன் ரைஸ் என்று கதம்ப மனம் கூடத்தில் மிதக்க, கூட்டாஞ்சோற்றை நினைவூட்டும் ம‌திய‌ உண‌வில், ஆளாளுக்கு இதே அர‌ட்டைக் க‌ச்சேரி தான்.

“மாப்ள, செழியன வேற இடத்துக்கு மாற்றபோறாங்களாம். அதுல கொஞ்சம் அப்செட் ஆகி, ‘க‌டுமையா உழைச்சதுக்கு இந்த பலன் போதும், கொஞ்ச‌ நாள் ரெஸ்ட் எடுக்க‌ப் போறன்’னு க்ளோஸா இருக்கவங்க கிட்ட சொல்றாராம்.” என்றான் ர‌வி.

“அதெல்லாம் இருக்காதுடா, ஏதாவது மேனேஜ்மென்ட் ப்ராப்ளம் இருக்கும்.” என்றாள் த‌மிழ‌ர‌சி.

“வர்றவன் எப்படிப்பட்டவனோ ?” என்று க‌வ‌லை கொண்டாள் ச‌ங்கீதா.

“யாரு வ‌ந்தா என்னா. நாம‌ வேலைய‌ செய்ய‌ப் போறோம், ச‌ம்ப‌ள‌த்த‌ வாங்க‌ப் போறோம். எதுக்கு க‌வ‌லைப்ப‌ட்டுகிட்டு” என்று வாயில் வ‌ழிந்த‌ ர‌ச‌த்தை உறிஞ்சிக் கொண்டே சொன்னான் ஆறுமுக‌ம்.

“என்னது செழியன் வேலைய விடப்போறாரா ? அவர் அளவிற்கு அடுத்து யாரு தான் இங்க இருக்கா ?” என்றான் வழக்கம் போல லேட்டா அலுவலகம் வந்து அரட்டையில் கலந்து கொண்ட ப‌ழ‌னி.

“அதான் இன்னிக்கு ஒருத்தர காலையில இன்டர்வியூ பண்ணாங்களே, அந்த ஃபாரினர் தான் !” என்றாள் ம‌னோன்ம‌ணி சற்றும் யோசிக்காமல்.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் இருந்த அந்த அலுவலகத்தில் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக் கொண்ட‌ன‌ர். ச‌ற்றைக்கெல்லாம் நிலைமை உண‌ர்ந்து, அனைவரும் சிரித்த‌ சிரிப்பொலி அத்த‌ள‌த்தையே உலுக்கிய‌து. 

தொடர்புடைய சிறுகதைகள்
ஹெட்மாஸ்டர் ஜெயபால் சைக்கிளை விட்டு இறங்க, அவருக்காகக் காத்திருந்த பியூன் சந்துரு, சைக்கிளைப் பிடித்துக் கொண்டார். ஹாண்ட்பாரிலிருந்து கைப் பையை எடுத்துக் கொடுத்து, காலை வணக்கத்தையும் சொல்ல, இரண்டையும் பெற்றுக் கொண்டு தனது அறைக்குச் சென்றார் ஜெயபால். மதுரையிலிருந்து நாற்பது, அம்பது கிலோமீட்டர் ...
மேலும் கதையை படிக்க...
பெய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம். நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள். ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல ...
மேலும் கதையை படிக்க...
'ஆஹா, எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ப்புப் ப‌ண்ணிட்டோம். இத்த‌ன‌ பேர‌க் கூப்பிட்டு, அக்காவுக்கு ஒரு போன் கூட‌ போட்டு சொல்ல‌லையே !' என‌ வ‌ழ‌க்க‌ம் போல‌ என் ம‌ற‌தியை நினைத்து வ‌ருந்தினேன். மதுரையில் இருந்த வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க என்ற நினைப்பே இல்லாமல், கூடப் ...
மேலும் கதையை படிக்க...
"இதுவரைக்கும் படிச்சதெல்லாம் சும்மா தான். இனிமேல் தான் கவனமா இருக்கணும். எப்படியாவது இங்க சீட் வாங்கிறனும். என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு. கௌன்ஸிலிங்ல தைரியமா பேசு. எதுவும் தெரியாதுனு சொல்லாதே. என்ன சரியா ?" அம்மாவும், அப்பாவும், இருபுறம் இருந்து மத்தளம் வாசிக்க, பொறுமையாகக் ...
மேலும் கதையை படிக்க...
"எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி வாங்கியாந்து ஆத்தா கையில குடுத்துரு" என்றாள் மெடிக்க‌ல் ஷாப்பிலிருந்து செல்வி. "என்னப்பூ ஏகாம்பரம், கொஞ்ச நாளா சீமைக்கு போயிட்டு வந்து ஆளே மாறி ...
மேலும் கதையை படிக்க...
எங்கே நிம்மதி… இங்கே ஓர் இடம்…
வீராப்பு
லெச்சுமி அக்கா
கல்விச் செல்வம்
தங்கக் கலசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)