அத மட்டும் ‘கேக்’காதீங்க…!!!

 

“அலோ….. கோதண்டராமன் இருக்காரா ????”

“இல்லியே…கல்யாணராமனும் பட்டாபிராமனும்தான் இருக்காங்க….”

“ஸார்…வெளயாடாதீங்க… கல்யாணராமனெல்லாம் வேண்டாம்…. கோதண்டராமன் இருக்காரா …இல்லையா….?? அத மட்டும் சொல்லுங்க…”

“ஸார்…கோவிச்சுக்காதீங்க….
என்ன நம்பர் வேணும் உங்களுக்கு…???”

“சத்யன் பேக்கரிதானே…..”

“ஆமா…இல்லையில்ல. மறுபடியும் தெளிவா சொல்லுங்க….”

“சத்யன் பேக்கரியான்னு கேட்டேன்….”

“ஸாரி… ஸார்…இது சத்யம் பேக்கரி ஸார்….”

“அத முதல்ல சொல்ல வேண்டியதுதானே…!!!!”

“ஸார்… நீங்க முதல்ல என்ன கேட்டீங்க… கோதண்டராமன் இருக்காரான்னுதானே…!!”

“ஸாரி ஸார்…போன வையுங்க….!!!!”

“ஸார்.ஸார்….இருங்க வச்சிடாதிங்க.!!
உங்களுக்கு என்ன வேணும்….???”

“ஒரு கேக் ஆர்டர் பண்ணனும்….!!!”

“என்ன ஸார் இது…. நாங்க பண்ணாத கேக்கா… என்ன கேக் ஸார்…..?”

“பிறந்தநாள் கேக் ஸார்….!!!”

“உங்களுக்கா….???”

“கிழவனுக்கு என்ன ஸார் பிறந்தநாள் ??”

“ஸார்…அப்படி சொல்லாதீங்க… இப்போல்லாம் அறுபது …எண்பது பிறந்தநாள் கேக்குதான் ஸார் பிச்சுகிட்டு போகுது….

போன மாசம் நூறாவது பொறந்த நாளுக்கு ஒருத்தருக்கு கேக் பண்ணிக்குடுத்தோம்னா பாருங்க….”

“போகட்டும்…..இது என்னோட பேத்திக்கு ஸார்…மூணு வயசு….!!!”

“ஜமாய்ச்சுடலாம்… என்னிக்கு பிறந்த நாள் ??”

“ஆக்சுவலா பாருங்க….குழந்தைக்கு மகம் நட்சத்திரம்…மகத்து குழந்தை ஜகத்த ஆளும்பாங்க…”

“அம்மா கூட மகம்தானே ஸார்….”

“யாரோட அம்மா…உங்கம்மாவா….???”

“கிண்டல் பண்ணாதிங்க ஸார்…. நம்ம ஜெயலலிதா அம்மா ஸார்….”

“ஓ அப்பிடியா….”

“ஆனா நட்சத்திர பிறந்த நாளுக்கெல்லாம் கேக் வெட்ட மாட்டாங்களே…. அர்ச்சனை தான் பண்ணுவாங்க…..!!!!”

“ஆமா …அடுத்த வாரம் …எல்லோரும் திருப்பதி போறோம்…”

“சந்தோஷமா போய்ட்டு வாங்க…..சரி… உங்களுக்கு என்னிக்கு கேக் வேணும்…??”

“வர திங்கட்கிழமை தான் .. பிறந்தநாள்…..எட்டாம் தேதி..!!!!

ஆனா இப்போ சனி..ஞாயிறு தானே பார்ட்டி வைக்க முடியுது.

அதுனால ஆறாம் தேதி சரியா பத்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு கேக் வந்திடணும்…மூணு மணிக்கு பார்ட்டி..!!!!!!!”

“ஸார் ..பத்து மணிக்கு டாண்ணு ரெடியாகிடும்..!!!

சுமார் எத்தனை பேர் வருவாங்க ஸார்…??”

“முப்பது பேருக்கு குறையாது….”

“என்ன கேக்..சாக்லேட்டா… பட்டர் ஸ்காட்ச்…ஆல்மண்ட்…இல்லை ப்ளைய்ன் ஸ்பன்ஞ்சா…??

“அய்யோ.. என் மனைவிக்கு சாக்லெட்னாலே அலர்ஜி. முட்டையில்லாத கேக் இருக்கில்ல…???”

“ஸார்.. பொறந்த நாள் உங்க மனைவிக்கா…???பேத்திக்கா…??

பாவம் ஸார் குழந்தை… அதுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க..

உங்க மனைவிக்கு சின்னதா ஒரு எக்லெஸ் அனுப்பிட்டா போச்சு…!!!”

“ஸார்…. உங்களுக்கு நல்ல மனசு….!!”

“சரி.. எத்தனை கிலோ…??”

“யாரு ஸார் என் பெண்டாட்டியா….??”

“நீங்க நல்லா ஜோக் அடிக்கிறீங்க..கேக்கு ஸார்..கேக்கு..எவ்வளவு கிலோ…??”

“அதான் …சொன்னேனே….முப்பது பேருக்கு…மூணு கிலோ கேக் சரியா இருக்குமா…..??”

“கரெக்ட்டா வரும் …என்ன தீம் ஸார்….???”

“ஆமா…முக்கியமா அதச் சொல்லணுமே…எம்பேத்திக்கு….. விஜய் ரொம்ப பிடிக்கும்….!!”

“ஸார்… விஜய் கேக்கெல்லாம் சரிவராது… நாய்க்குட்டி…பூன இந்தமாதிரி…..!!”

“ஒரு நிமிஷம் ஹோல்டுல போடுங்க…இப்பவே கேட்டு சொல்லிடுறேன்…”

“ஏய்…ஆரு குட்டி…. உனக்கு என்ன கேக் வேண்டும் கண்ணா….???”

“எனக்கு கேக்கே பிடிக்காது… ஐஸ்க்ரீம் தான் வேணும்…!!!”

“ஐஸ்க்ரீம் இல்லாமயா,….?? குட்டிம்மாவுக்கு… பிறந்தநாள் கேக் வெட்டணுமே……என்ன கேக் பிடிக்கும்….????”

“எனக்கு ….எனக்கு…மங்கி கேக்…”

“மங்கி கேக் யாரும் பண்ண மாட்டாங்க கண்ணா…வேற சொல்லு….”

“ம்ம்ம்….முயல்குட்டி…..தாத்தா……
டோரா….டோராதான்….”

“ஓ. அந்த கண்ணெல்லாம் உருட்டி முழிக்குமே..அதுவா…”

“ஆமா தாத்தா… அதேதான்…செம க்யூட் தாத்தா…..!!!”

“அல்லோ….ம் .. கேட்டுட்டேன்….டோரா படமாம்….”

“ஓ …டோராவா… அதைத்தான் எல்லா குழந்தைகளும் விரும்புறாங்க…

போன வாரம் மட்டுமே பத்து டோரா கேக் ஆர்டர் வந்திருக்கும்னா பாத்துக்குங்க…

நிறைய டோரா டிசைன் இருக்கு.. வாட்ஸப்பில அனுப்பறேன்… பேத்திக்கு எது பிடிக்குதுன்னு சொன்னீங்கன்னா போட்றுலாம்….!!!”

“ஸார்… ஒரு நிமிஷம்…டோரா வேண்டாமாம்….டம்போ ….யானக்குட்டிதான் வேணுமாம்…..”

“ஸார்…குழந்தைங்க மாத்தி மாத்தி தான் சொல்லும்.. நாமதான் தீர்மானம் பண்ணனும்..
டோராவா … டம்போவா ….???”

“எம் மருமக டோராவே இருக்கட்டும்னு சொல்லிட்டா… அதுக்கு மேல அப்பீலே கிடையாது..அதுல குரங்கு குட்டி வருதாமே… அதுவும் வேணுமாம்…”

“அதுவும் உண்டு ஸார்….சரி.. குழந்தை பேரு சொல்லுங்க….”

“ஆரத்ரிகா….”

“ஸார்…புரியல…திரும்பி சொல்லுங்க…”

“ஸார்..நேர சொல்றதே கஷ்ட்டமாயிருக்கு…திரும்பி நின்னுட்டு வேற சொல்லச் சொன்னா….”

“ஸார்….ரீபீட் பண்ணுங்கன்றேன்.. ஒவ்வொரு ஸ்பெல்லிங்கா சொல்லுங்க ஸார்…..வாயிலேயே நுழையலையே…..!!!!”

“ஆ..ர..த்…ரி.கா.. எழுதிட்டிங்களா…??”

“தப்பா எடுத்துக்காதீங்க…இப்போ பிறந்தநாள் கேக் ஆர்டர் வந்தாலே கொஞ்சம் நெர்வஸா இருக்கு….!!”

“ஏன் ஸார்….??”

முன்னெல்லாம் ..உமா..ரமா…கலான்னு …ஈஸியா எழுதிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்…

இப்போ எங்கிருந்து ஸார் தேடித்தேடி பேரு வைக்கிறீங்க…???

கேக்குல எழுதவே இடம் பத்தமாட்டேங்குது…
உங்களுக்கே அர்த்தம் புரியுதா…???”

“என்ன இப்படி கேட்டுட்டீங்க…. புதுப்பேருல எவ்வளவு அர்த்தம் இருக்கு தெரியுங்களா….???

ஆரத்ரிகான்னா விளக்குன்னு அர்த்தம்….!!!”

“தீபா….ஜோதி… இதெல்லாம் கூட விளக்குதானே…”

“அதெல்லாம் அவுங்க அப்பா அம்மாவத்தான் கேக்கணும்….”

“மூணு மெழுகுவர்த்தி வச்சிடலாமா.??”

“ம்ம்..அது கூட வேண்டாங்க… பிறந்தநாள் அதுவுமா விளக்க ஏத்துவாங்களா…. அணைப்பாங்களான்னு….???”

“யார் சொன்னாங்க….??? “

“வெளி நாட்டுக்காரன் செய்யறதேல்லாம் நாம கண்ண மூடிட்டு செய்யறோமோன்னு தோணுது.!!!”

“அப்ப…கேக்கே வெட்டக்கூடாது…
மாவிளக்கு போட்டு தீபம் ஏத்தணும்….”

“ஸார் என்ன குழப்பாதீங்க…..”

“நீங்கதான் ஸார் ஆரம்பத்திலிருந்தே குழப்புறீங்க…..!!!

“சரி…கேக்கு வெட்டும்போது ஒரு சின்ன வெடி…பூப்பூவா கொட்டும்…..!!!”

“நல்ல வேளை….சொன்னீங்களே… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… என் தம்பி பேரன் அதக் கேட்டு பயந்துபோய் கேக்கே வெட்ட மாட்டேன்னு ஒரே அழுகை….”

“சரி… பலூன் அனுப்பலாமா…
இல்ல அதுவும் உடையும்னு…. ஏதாவது சென்டி….”

“பலூன் இல்லாத பிறந்த நாளா …???எல்லா கலரும் அனுப்புங்க…..!!!”

“நாங்க மாஜிக் ஷோ கூட சேத்து ஒரு பேக்கேஜ் மாதிரி தர்ரோம் ஸார்….வேணுமா..???”

“எனக்கு மாஜிக் ஷோ பார்க்கணும்னு ரொம்ப நாளாக ஆச.. ஃப்ரீயா வருதுங்களா.???”

“ஃப்ரீயா… ???ஒரு கேக்கு ஆர்டர் பண்ணிட்டு விட்டா… யான மேல அம்பாரி வரணும்பீங்க போலயே….எல்லாம சேத்து பத்தாயிரம் டோட்டலா ஆகும்….”

“வேணாம் ஸார்… வெறும் கேக்..பலுன்… போதும்…”

“ஓக்கே… ஆர்டர் எழுதிக்கிறேன்…. ..முதல்லேந்து சொல்லுங்க….

“பேரு…..??”

“திருச்சிற்றம்பலம்…!!”

“வெறுப்பேத்தாதீங்க ஸார்…நா கேக்குறதெல்லாம் குழந்தையைப் பத்தின விவரம்… கேக் ஆர்டருக்கு….”

“சாரி ஸார்…கேளுங்க….!!”
“பேரு…..”
“ஆரத்ரிகா…”
“வயசு…”
“மூணு….”
“என்ன கேக்கு ஸார்..??”
“சாக்லேட்….”
“கிலோ…..??”
“மூணு….!!”“

தீம்..???”

“டோரா ….”

“Date of delivery..”
“6 th ..காலைல பத்துமணி…”
“போன் நம்பர்…??”

“956*** *****”

“அட்ரஸ் சொல்லுங்க…..”

“25, மெயின் அவென்யூ , அசோக் நகர் நகர்…. சென்னை….”

“ஸார்.. ஸார்….திரும்ப சொல்லுங்க….”

“ஸ்பெல்லிங்கோடவா….??”

“மொத்தம் ஆறாயிரத்து ஐநூறு …”

“என்ன ஸார் ஜோக்கா…???

2500 ன்னுதானே சொன்னீங்க…???”

“இல்ல ஸார்… இதுவே கம்மி….கேக்கு 2500 …. Bangalore to Chennai flight charge 3000…”

“ஸார்… என்னாச்சு உங்களுக்கு… நல்லாத்தானே பேசிட்டிருந்தீங்க..???”

“நீங்க போன் பண்ணது பெங்களூர் சத்யம் பேக்கரி ஸார்…

விட்டா அமெரிக்காலேர்ந்து ஆர்டர் பண்ணுவீங்க போலயே…!!!!

உங்களால பாருங்க… மூணு.. நாலு…கஸ்ட்டமர் எனக்கு போயிருப்பாங்க..,”

“ஸாரி ஸார்…நா முதல்ல என்ன கேட்டேன்… கோதண்டராமன் இருக்காரான்னுதானே…

“ஐய்யோ…முதல்லேர்ந்தா. ???…தாங்காதுடா சாமி.. முதல்ல போன கட் பண்ணுங்க….

இந்த மொபைல் வந்தாலும் வந்தது…எவன் எங்கேர்ந்து பண்றான்னு ஒரு எழவும் புரியல…”

“கவலப் படாதீங்க ஸார்..எங்க சம்பந்தி பெங்களூர்ல தான் இருக்காரு..

அடுத்த மாசம் அவருக்கு எழுபதாவது பொறந்த நாள்..தடபுடலாக பண்ணப் போறாரு…கேக்கு உங்களுக்குத்தான் ஸார்…. “

ஸார்…. ஸார்… என்ன பேச்சு மூச்சையே காணம்…??” 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை மணி 8.00... ‘கடுவன்பூனை...டிராகுலா...முசுடு.. பிரம்ம ராட்சசன்’ எல்லா திருநாமங்களும் அந்த கம்பெனியைப் பொறுத்தவரை ஒருவரைத்தான் குறிக்கும்.. கம்பெனியின் MD வீரராகவன்தான் அந்த திருநாமங்களுக்கு சொந்தக்காரர்... இன்றைக்கு அவர் வழக்கத்தைவிட அதிக கோபத்தில் இருந்தார்.. ஒரே மகன் சரண்..அவனை எப்படியும் மருத்துவராக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்.. காலையில் ...
மேலும் கதையை படிக்க...
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட விபத்து...!!! பெசன்ட் நகரிலிருக்கும் அஷ்ட லட்சுமி கோவிலுக்கு போவதற்காக பெசன்ட் அவின்யூவில் இளங்கோ பைக்கை ஒடிக்கவும், எதிரில் ராங் சைடில் வந்த ஆட்டோ ஒன்று மோதுவது போல வர, இளங்கோ நிலை தடுமாறி மீடியனில் பைக்கை மோதவும், மங்கை ...
மேலும் கதையை படிக்க...
"செல்வம் அண்ணா ! சீக்கிரம் வண்டிய எடுங்க.. வகுப்புக்கு நேரமாகுது….போன வாரமே நானு போறதுக்குக்குள்ள பாடம் ஆரம்பிச்சிட்டாங்க… இனிமே லேட்டாக வந்தா வகுப்ப மிஸ் பண்ண வேண்டியதுதான்னு சொல்லிட்டாங்க…..” "ஒரு நிமிஷம் வெயிட் பண்ணும்மா….தாத்தா பாத்ரூமில இருக்காரு….இப்ப வந்திடுவாரு…” "இந்த தாத்தா ஏன் எப்பவும் கிளம்பற ...
மேலும் கதையை படிக்க...
சேலம் பாரத ரத்னா MGR பஸ் நிலையத்தை அடையும் பஸ்கள் எல்லாமே மந்திரித்து விட்ட கோழி மாதிரி நேராக கற்பகம் மெஸ்ஸின் முன்னால் வந்து நின்றுவிடும். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு செல்லும் பெரும்பாலான பஸ்கள் சேலம் பஸ் நிறுத்ததைத் தாண்டி செல்லாமல் இருக்க ...
மேலும் கதையை படிக்க...
“வாழைக்காய் பஜ்ஜியால உனக்கு பெரிய கண்டம் வர இருக்கு “ன்னு ஜோசியரே சொல்லியிருந்தாலும் சுந்தரம் நம்பியிருக்க மாட்டார்!! இத்தனைக்கும் சுந்தரத்துக்கு சாப்பாட்டில் சபலமே கிடையாது ! ஆனால் உலகத்திலேயே ஒரே விஷயத்துக்காக சொத்தெல்லாம் எழுதி வைப்பார் என்றால் அது பஜ்ஜிக்காகத் தானிருக்கும்! அதிலும் குறிப்பாக வாழக்காய் ...
மேலும் கதையை படிக்க...
"நெக்ஸ்ட்…..!!” தன் முன்னால் இருந்த அழைப்பு மணியின் பொத்தானை அமுக்கினாள் டாக்டர்..மனோன்மணி .. MBBS..MD..(Gynecologist)…. அவளுடைய ரிஸப்ஷனிஸ்ட் பாத்திமா அடுத்த பேஷன்ட்டின் ஃபைலைக் கொண்டு வைத்துவிட்டு…’ நியூ என்ட்ரி’ "என்று சொல்லி விட்டுப் போனாள்… ஃபைலைத் திறந்து பேரைப் படிக்கும் போதே… "நான் உள்ளே வரலாமா டாக்டர் ...
மேலும் கதையை படிக்க...
"டேய் ! கசுமாலம் ! எந்திரிடா ! மவனே இன்னிக்கு எங்கையாலதான் உனக்கு சாவு ! செய்யறதெல்லாம் அக்குறும்பு !" எட்டி ஒரு உதை விட்டான் முத்து ….. "ஐயோ …. அம்மா .. அம்மா …" ஐந்து வயது பாலாஜி மிரண்டு போய் எழுந்து ...
மேலும் கதையை படிக்க...
கதாநாயகியை, ‘வீட்டை விட்டு வெளியே போ' என்கிறான் கணவன். "நா ஏன் போகணும்.போக வேண்டியது நீயும். உன் அம்மாவும்.!!” "என்னது..நீயா. அவ்வளவு திமிரா.??” அவளை அடிக்க கை ஓங்குகிறான் அவன்..! "த்ஸ்ஸ்ஸ்.!” பக்கத்திலிருந்து உச்சு கொட்டும் சப்தம். நாலு பக்கமும் திரும்பி பார்த்தேன் . நான் மட்டும்தான். கணவர் மும்முரமாய் பேப்பர் ...
மேலும் கதையை படிக்க...
”பாபு ! கார் கண்ணாடியை கொஞ்சம் இறக்குப்பா!” ”இதோ மேடம்…..!!!” ஆழ்வார் பேட்டை சிக்னலில் பைரவியின் ஹோண்டா நின்று கொண்டிருந்தது! ஒரு சின்னப் பெண் பரட்டைத் தலையுடன் , கையை நீட்டிக்கொண்டு வண்டுக்கண்களை உருட்டி ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல ‘ என்று கானக்குயில் சுசிலாவை மிஞ்சும் ...
மேலும் கதையை படிக்க...
"பத்து பொருத்தமும் பொருந்தியிருக்கு !!! இது மாதிரி தினப் பொருத்தம், கணப்பொருத்தம் எல்லாம் அமையறது லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் !!!” சிவஞானம் ஜோசியர் அடிச்சு சொல்லிவிட்டார் …. தேவானையின் அப்பா எவ்வளவு கொடுத்தாரோ தெரியல…. லட்சத்தல ஒருத்தனா என்ன மாட்டிவிட்டு அவர் போய் விட்டார்…..!!! தேவானைக்கும் எனக்கும் இருக்கும் ஒரே ...
மேலும் கதையை படிக்க...
பூமராங்…(எறிவளைதடு)..!
பொன் மணித்துளிகள்…!!!
தனிமையிலே இனிமை காண முடியுமா…?
நெல்லுக்கு இறைத்த நீர்..!!!
கல்லும் கதை சொல்லும்!!!
தாய்மை எனப்படுவது..!
நாணயம்
செல்லப் பல்லி..!
எல்லாமே சங்கீதம் தான்!!!
ஆஹா!! என்ன பொருத்தம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)