நீண்டு அகன்ற அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பருத்த ஆலமரம் போல பரந்து விரிந்து காட்சியளித்தது. பல்வகைப் பறவைகள் அதில் வாசம் செய்தன. மன்னிக்கணும், பல்வகை மனிதர்கள் அதில் வசித்து வந்தார்கள்.
முறையே பணி செய்து, போதுமென ஓய்வு பெற்று, அறுபதைக் கடந்த ஜெகந்நாதனும், ராமசாமியும் அங்கு வந்ததிலிருந்து நண்பர்களும் ஆனார்கள்.’ப்லாக் ஈ’இல் நாலாவது மாடியில் ராமசாமியின் வீடு. சில ப்லாக் தள்ளி ‘ஐ’இல் கீழ் தளத்தில் ஜெகன் வீடு. தினம் மாலை ஒருவர் வீடு மாறி ஒருவர் வந்து, சில மணி நேரங்கள் அரட்டை அடித்து விட்டு செல்வது வழக்கம்.
“வாங்க ஜெகன். என்ன இன்னிக்கு கொஞ்சம் லேட்டு” என்று நண்பரை வரவேற்றார் ராமசாமி.
“என்ன தான் தினம் வந்தாலும், சில முறை தவறுதலாய்ப் போயிடுது. இப்ப கூட பாருங்க, ப்லாக் எஃப் போய் கதவ தட்ட, ஒரு பாயம்மா கதவத் தெறக்கறாங்க ! நீங்க அப்படி எல்லாம் இல்லையேனு யோசிச்சா, அப்ப தான் புரியுது ப்லாக் மாத்தி வந்திருக்கேன் என்று” என்று சொல்லி இடி இடி எனச் சிரித்தார் ஜெகன்.
“குசும்பு புடிச்ச கிழவரையா நீர். பாயம்மாவ பாக்கறதுக்காகவே போயிட்டு, என் மேல பழிய போடறீர்” என்று சினம் கொள்வது போல நடித்தார் ராமசாமி.
“நான் பாயம்மாவ பாக்கப் போனது இருக்கட்டும். இந்தக் கதையையும் கேளும். என் நண்பனின் மகன் ஒருவன் பாலாஜி என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியரா சேர்ந்திருக்கான். ஆரம்ப நாட்களில் சில வாரங்கள் கவனித்திருக்கிறான், மாணவர்களில் சிலர் காணாமல் போவதும், புதுமுகங்கள் வருவதையும்.”
“நீர் என்ன சொல்லப் போறீர் என்று புரிந்து விட்டது. என்ன வகுப்பு மாறி வந்து போனார்கள் … சரியா … கண்டுபிடிச்சிட்டேன் பாரும்” என்று பெருமிதம் கொண்டார் ராமசாமி.
“வயசுக்கேத்த பொறுமை எப்ப தான் வரப்போகுதோ உமக்கு. இப்படி குறுக்கே பேசக்கூடாது, அப்புறம் சுவாரஸ்யம் கொறஞ்சு போயிடும், பொறுமையா கேளும்” என்று தொடர்ந்தார் ஜெகன்.
ஒரு நாள், புதுசா வந்த சில முகங்களை, ‘எங்கே இவ்வளவு நாட்கள் காணலை, இப்ப தான் உங்களைப் பார்க்கிறேன்’ என்று கேட்டிருக்கிறான். ஒருவன், ‘நான் இந்த பக்கத்தில் இருக்கும் வெங்கடேஸ்வரா என்ஜினியரிங் கல்லூரிய நம்ம கல்லூரினு நெனச்சுப் போயிட்டேன்’ என்றானாம். மற்றவளோ, நான் அந்தப் பக்கம் இருக்கும் மேரிமாதா என்ஜினியரிங் கல்லூரிக்குப் போயிட்டேன் என்றிருக்கிறாள்.
இவனுக்கோ ஆச்சரியம் தாங்கலை. ‘அப்ப காணாமப் போனவங்க ??!!’ என்று வியந்து கேட்க, ‘அவங்க எல்லோருமே, இதே போல அதே தெருவில் வருசையாய் இருக்கும், ராஜு என்ஜினியரிங் கல்லூரி, விக்ரம் என்ஜினியரிங் கல்லூரி, ஜலால் என்ஜினியரிங் கல்லூரி என்று ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்’ என்றிருக்கின்றனர் கோரஸாய்.
உடனே, தான் சரியான கல்லூரியில் தான் இருக்கிறோமா என ஒருமுறை வெளியே வந்து தகர போர்டைப் பார்த்து உறுதி செய்திருக்கிறான்.” என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, இடி முழக்கச் சிரிப்பைத் தொடர்ந்தார் ஜெகன்.
தொடர்புடைய சிறுகதைகள்
"ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைக் காதலிக்கறேன் என்றும் சொல்றே. இதெல்லாம் நல்லதுக்கில்ல ... ஆமா ... சொல்லிட்டேன்"
கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' ...
மேலும் கதையை படிக்க...
குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென அறைந்து எச்சரித்தாள் ... "யாருகிட்ட மோதற, தண்ணிய போட்டாலும் தடம் மாறாம இருக்கணும் ?! அவன் தான் மனுஷன் !" என்றவளை ...
மேலும் கதையை படிக்க...
"டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா".
Outlook-ல் pop-ஆன "This evening special Dinner" click செய்து, "எவ அவ" என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி.
ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ...
மேலும் கதையை படிக்க...
ஹெட்மாஸ்டர் ஜெயபால் சைக்கிளை விட்டு இறங்க, அவருக்காகக் காத்திருந்த பியூன் சந்துரு, சைக்கிளைப் பிடித்துக் கொண்டார். ஹாண்ட்பாரிலிருந்து கைப் பையை எடுத்துக் கொடுத்து, காலை வணக்கத்தையும் சொல்ல, இரண்டையும் பெற்றுக் கொண்டு தனது அறைக்குச் சென்றார் ஜெயபால்.
மதுரையிலிருந்து நாற்பது, அம்பது கிலோமீட்டர் ...
மேலும் கதையை படிக்க...
சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.
வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் ...
மேலும் கதையை படிக்க...
மாப்ள, இந்த வாரம் சனிக்கிழமை சாயந்திரம் நேரம் இருக்குமா ?
என்னடா விசேசம் ?
நாங்களும் இந்த ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆகுது. உங்க வீட்டுக்கு அத்தன தடவ வந்திட்டோம். வந்து சாப்பிட்டு தொல்லையும் கொடுத்திருக்கோம்.
இந்த சனிக்கிழமை நேரம் இருந்தா, "சந்துரு குடும்பத்தோட ...
மேலும் கதையை படிக்க...
"சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க....." என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி.
"ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப ...
மேலும் கதையை படிக்க...
பெய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம்.
நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள்.
ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும்.
"ஜேம்ஸ், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா ..." என்று இழுத்தாள் ராகினி.
அந்தப் பண்ணாட்டு நிறுவனத்தின் சென்னை கிளைக்கு ஜேம்ஸ் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அந்நிறுவனத்தின் மென்பொருள் ...
மேலும் கதையை படிக்க...
"என்ன தான் ஒரே ஊர்ல இருந்து வேலை செய்தாலும் நாமெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு ? இந்த வீக்கென்ட் நாம எல்லோரும் மீட் பண்ணலாம்" என்று தொலைபேசி, மின்னஞ்சல், டிவிட்டர் என்று கலக்கிக் கொண்டிருந்தனர் கணினியால் இணைந்த நண்பர்கள்.
சனிக்கிழமை, மணி மாலை ...
மேலும் கதையை படிக்க...
எங்கே நிம்மதி… இங்கே ஓர் இடம்…