குசும்பு – ஒரு பக்க கதை

 

வைதேகி, கடலில் நான் கட்டிய பாலத்தை பார். அதில் ஆர்ப்பரித்து மோதும் அலைகள் எவ்வளவு அழகாக காட்சியளிக்கின்றன என்று இராமன் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு போகும்போது சீதா தேவியிடம் பாலத்தை காட்டி சொன்னதாக ரகுவம்சத்தில் மகாகவி காளிதாசன் எழுதியிருக்கிறார்.

இராமர் பாலம் பற்றிய ஆதாரம் இராமாயணம் தவிர வேறு எதாவது காவியத்தில் இருக்கிறதா?

சந்தேகம் தெளிதல் நிகழ்ச்சியில் ஆன்மிக உபாசகர் கிரிதர ஸ்வாமியிடம் யாரோ கேட்ட கேள்விக்கு பதில் கூறி விட்டு அடுத்து .. என்று கூட்டத்தை பார்த்தார்.

எந்த கேள்விகேட்டாலும் அடுத்த வினாடியே டக்கென்று வில்லிருந்து அம்பு புறப்படுவது போல அவர் வாயிலிருந்து பதில் வரும்.

அவரை எப்படியாவது மடக்கி பதில் சொல்ல முடியாமல் விழிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் காத்து கொண்டிருந்த கேசவன்

”ஸ்வாமி, பிரமாண்ட உருவத்திலிருக்கும் விநாயகருக்கு மிகச்சிறிய உருவமாக இருக்கும் மூஞ்சுறு வாகனம் என்கிறார்கள். சிறிய மூஞ்சுறு அவ்வளவு பெரிய விநாயகரை எப்படித்தாங்கும்? என்று குறும்பாக கேட்டான்.

அதைகேட்டு புன்முறுவல் பூத்த கிரித ஸ்வாமி. அடுத்த விநாடியே சொன்னார். பாரம் ஏற்றிய பத்து டன் லாரியை ஒரு சாண் உயரத்திலிருக்கிற ஜாக்கி எப்படித் தாங்கி தூக்கி நிறுத்துகிறதோ அது மாதிரி தான் இதுவும்.

கேசவன் வாயடைத்து போனான்.

-நீரஜா (ஜனவரி 2014 )

நன்றி: குமுதம் &

(வாரமலர்) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஜனகரை சந்தேகித்த முனிவர்!
கலை வளமும் கடவுள் பக்தியும் கொண்ட மிதிலை நகரை ஜனக மகாராஜா நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார். ஜனகர் கல்வி கேள்விகளில் தேர்ந்த மேதை. ஞானப் பண்டிதரான இவர், தம் பிரஜைகளிடம் ஏற்றத் தாழ்வு பாராமல், சரிசமமாக பாவித்தவர். இருப்பினும் ஜனகர், ...
மேலும் கதையை படிக்க...
இயக்குநரைப் பார்த்துக் கேட்டார் இசையமைப்பாளர் ராம், ‘’ஏன் சார், கண்டிப்பா ஒரு ரீமிக்ஸ் பாட்டு வேணுமா..?’’ ‘’ஆமா..இப்ப ட்ரெண்ட் அதுதானே..? புரொடியூசரும் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டாரே’’ ‘சரி…போட்டாப் போச்சு’’ என்று வேண்டா வெறுப்பாக அந்தப் பாட்டை ரீ மிக்ஸ் செய்யத் துவங்கினான். ‘’பழைய பாட்டும் இடையிடையே ...
மேலும் கதையை படிக்க...
வீதியில கழுதை ஒன்னு கால்ல அடிபட்டு வந்திட்டு இருந்தது. அந்த வழியா வந்த எண்ணெய் ஆட்டுக்கின்ற செக்கன் ஒருவன் அடிபட்ட கழுதைய பார்த்தான். ஐயோ! பாவமன்னு அந்தக் கழுதையின் கால்ல, துணியை எண்ணெய்ல்ல நனைச்சி கட்டி விட்டான். கால் கட்டுப்போடப்பட்ட பிறகு கழுதை சந்தோசத்துல ...
மேலும் கதையை படிக்க...
குமார், சேகர் இருவரும் உள்ளூர் நாலகத்தில் சந்தித்தபோது ”வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு குமார். சொந்தமா ஜெராக்ஸ் கடை வைக்கலாம்னு பார்க்கிறேன். நீ பாதி பணம் போடறதா இருந்தா உன்னையும் பார்ட்னரா சேர்த்துக்கறேன்” என்றான் சேகர். சரி என்றான் குமார். சேகர் ஆர்வத்துடன் ...
மேலும் கதையை படிக்க...
புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் ...
மேலும் கதையை படிக்க...
ஜனகரை சந்தேகித்த முனிவர்!
என்ன டிபன் சரோஜா..? – ஒரு பக்க கதை
தவறு யார்மேல் உள்ளது? – ஒரு பக்க கதை
சின்னத்தனம் – ஒரு பக்க கதை
நீங்கதான் கடவுள் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)