விவரமான வேலைக்காரன்!

 

ஓரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் பலே கில்லாடி. வேலைக்காரர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதில் பெயர் பெற்றவர். ஆனால் வேலைக்கு ஏற்ற கூலி கொடுக்க மாட்டார்.

அதே ஊரிலிருந்த தனசேகரன் என்பவன் அவரிடம் ஒரு நாள் வேலை கேட்டுப் போனான்.

அவனிடம் பண்ணையார், “”ஒரு நாளைக்கு நூறு குடம் தண்ணீர் எடுக்க வேண்டும்; நூறு கட்டுப் புல்லு சேகரித்துக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்தால் உனக்கு மூன்று வேளையும் வடை பாயசத்தோடு சாப்பாடு போடுகிறேன்” என்றார்.

தனசேகரன், “”நடுவர் முன்னிலையில் இதைக் கூறி ஒப்புக் கொள்ள வேண்டும்” என்றான்.

பண்ணையாரும் ஒப்புக் கொண்டார். இருவரும் நடுவர் முன் சென்று இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்து கொண்டனர்.

மறுநாள் காலையில், தனசேகரன் சிறிது புல்லை அறுத்து எடுத்துக் கொண்டான். தன்னுடைய சுண்டு விரல் அளவுக்கு அவற்றைச் சிறிது சிறிதாக நறுக்கி, அவற்றைக் கொண்டு மிகச்சிறிய அளவில் நூறு புல்லுக்கட்டுகளைச் செய்தான். அதன் பிறகு ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தான். அதை நூறு குடங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினான். இதைச் செய்து முடித்துவிட்டுப் பண்ணையாரிடம் போய் சாப்பாடு கேட்டான்.

பண்ணையார், வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறானா என்று கவனமுடன் பார்த்தார்.

சிறிது சிறிதாக நூறு புல்லுக் கட்டுகளையும் நூறு குடங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் மட்டுமே இருப்பதையும் பார்த்தார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது!

“”நீ வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை… அதனால் உனக்கு சாப்பாடு கிடையாது” என்றார் பண்ணையார்.

தனசேகரன், நடுவரிடம் சென்று முறையிட்டான்.

நடுவரும் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்துவிட்டு, பண்ணையாரிடம், “”நீர் நூறு கட்டுப் புல் என்றுதான் கூறினீர்… அதன் அளவு குறித்துச் சொல்லவில்லை. அதே போல நூறுகுடம் தண்ணீர் வேண்டும் என்றுதான் சொன்னீர்… அதன் அளவு குறித்தும் ஒப்பந்தத்தில் ஒன்றும் உறுதி செய்யப்படவில்லை! எனவே, ஒப்பந்தப்படி நீர், தனசேகரனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

பண்ணையார் தனது தவறை உணர்ந்தார். வேலைக்காரர்களுக்கு செய்கிற வேலைக்கு ஏற்ற கூலி கொடுப்பதுதான் நல்லது என்பதை உணர்ந்து கொண்டு அன்றிலிருந்து வேலைக்காரர்களுக்கு நியாயமான கூலியைக் கொடுக்கத் தொடங்கினார்.

இனி விடியல் பிறந்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் சென்றான் தனசேகரன்.

- எஸ்.உத்ரா, மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளி, மதுரை.
மார்ச் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
சங்கமம்
அரவிந்தனுடைய கல்யாண வைபோகம் களைகட்ட ஆரம்பிச்சது.. மணமகள்—ஐஸ்வர்யா. முகூர்த்தப் பத்திரிகையும் அடிச்சாச்சி. அடுத்த கட்டமாக ஒரு சுபயோக நாளில் `பொன்னுருக்கல்’ விசேஷத்தை நிச்சயித்தார்கள்.. பிள்ளையின் அப்பா மாதவனுக்கு தன் அப்பன் மேல எரிச்சலான எரிச்சல். அந்த காலத்தில தனக்கு நடந்த மாதிரியே ...
மேலும் கதையை படிக்க...
அக்பர் கோபக்கனல் தெறிக்க சபையில் அமர்ந்திருந்தார். சபையோர் ஒருநாளும் அம்மாதிரி அவரைப் பார்த்ததில்லை.சபைக்கு அக்பரின் மருமகன் வந்திருந்தார். தம் மகளை அனுப்பி வைக்கும்படு அவரிடம் கேட்டுக் கொண்டார் அக்பர். ஆனால், மருமகன் அனுப்பிவைக்க மறுத்துவிட்டார். அக்பர் சொல்லி, யாருமே எதையுமே எப்பொழுதுமே மறுத்ததில்லை. மருமகனின் மறுப்பு, ...
மேலும் கதையை படிக்க...
இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி விட்டதாகத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத்தான் விடிகிறது. வாரத்தின் எல்லா நாட்களுக்கென்றும் ஒரு மனநிலை இருக்கிறது. திங்கள்கிழமைகள் கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
சாத்தான் குளம் என்ற ஓர் ஊரில் உழவர் ஒருவர் இருந்தார். அவர் கடுமையான உழைப்பாளி என்பதால் நல்ல கடுமையான உடல் கட்டும், பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தார். அவரது பெயர் சாத்தப்பன். அவருக்கு என்று ஊரில் இருந்த கொஞ்ச நிலத்தில் ...
மேலும் கதையை படிக்க...
"கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!" என்ற பாடல் சத்தமாக தனது மகிழ்ச்சியை பீட்டரின் வீட்டிற்குள் ஒலி பரப்பிப்கொண்டிருந்தது. கிருஸ்மஸ்ஸுக்கு இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
சங்கமம்
மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!
துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!
சாத்தப்பனும், குண்டோதரன் பேயும்
வ‌ருவாரா மாட்டாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)